World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : ஆப்கானிஸ்தான்

Afghan troops kill two more US soldiers in Kandahar

ஆப்கானிய துருப்புக்கள் காந்தகாரில் இன்னும் இரு அமெரிக்க சிப்பாய்களைக் கொன்றனர்

By Patrick Martin
2 March 2012
Back to screen version

வியாழக்கிழமையன்று ஆப்கானிஸ்தானில் இன்னும் இரண்டு அமெரிக்கச் சிப்பாய்கள், ஆப்கானிய சிப்பாய்களாலும்,  ஒரு ஆப்கானிய சிவிலியப் பயிற்சியாளராலும் சுட்டுக் கொல்லப்பட்டனர்; நாடு முழுவதும் பக்ரம் அமெரிக்க விமானத் தளத்தில் குர்ரான் பிரதிகள் எரிக்கப்பட்ட பின் நடக்கும் எழுச்சி அலையையொட்டி கடந்த பத்து நாட்களில் இது மூன்றாவது அத்தகைய நிகழ்வு ஆகும்.

சரியான சூழலைப் பற்றி மாறுபட்ட தகவல்கள் வந்துள்ளபோதிலும், செய்தி ஊடகத் தகவல்கள் ஒரு ஆப்கானிய சிப்பாயும் ஒரு சிவிலிய ஆப்கானிய எழுத்தறிவு தரும் ஆசிரியரும் அமெரிக்கச் சிப்பாய்கள் மீது துப்பாக்கச்சூடு நடத்தினர் என்றும், இரு அமெரிக்கச் சிப்பாய்கள் கொல்லப்பட்டனர், நான்கு பேர் காயமுற்றனர் என்பதில் உடன்பட்டுள்ளன. இரு ஆப்கானியரும் தப்பி ஓடினார்கள், ஆனால் ஹெலிகாப்டர்கள் அவர்களைத் துரத்தி வேட்டையாடின; பின்னர் அவர்கள் கொல்லப்பட்டனர்.

 

இந்த ஆப்கானிய சிப்பாய் ஒரு பிளட்டூன் சிறு பிரிவிற்குத் தலைவர், அமெரிக்கச் சிப்பாய்களுடன் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தவர் என்று நியூ யோர்க் டைம்ஸ் தகவல் கொடுத்துள்ளது. இன்னும் ஒரு ஆப்கானிய சிப்பாயும் கொல்லப்பட்டார்; அனால் அமெரிக்கர்கள் மீதான தாக்குதலில் சேர்ந்திருந்தாரா அல்லது ஆரம்ப துப்பாக்கிச் சண்டையில் ஆப்கானியர்களால் கொல்லப்பட்டாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

இந்த நிகழ்ச்சி உள்ளூர் நேரம் அதிகாலை 2.30க்கு நடைபெற்றது; தெற்கு ஆப்கானிஸ்தானில், காந்தகார் மாநிலத்தில் சங்சார் கிராமத்திற்கு அருகே உள்ள ஒரு கூட்டு ஆப்கானிய-நேட்டோ தளத்தில் இது நிகழ்ந்தது. இவ்விடம் நீண்டகாலமாகவே தாலிபான்களுடன் அடையாளம் காணப்படுவது; குழுவின் தலைவர் முல்லா முகம்மத் ஒமர் தன் இஸ்லாமிய மத உபதேசகர் என்னும் வாழ்க்கைப் போக்கை இங்குத்தான் தொடங்கினார்.

ஆப்கானிய ஜனாதிபதி கர்சாய்க்கு மன்னிப்புக் கடிதம் குர்ரான் எரிப்பு நிகழ்விற்குப் பின் எழுதியது ஆப்கானிஸ்தானில் நிலைமைச் சற்று பதட்டம் இல்லாமல் செய்துள்ளது என்று அறிவித்த சில மணி நேரத்திற்குள் இந்தத் துப்பாக்கிச் சண்டை நடந்தது.

ABC News  க்குக் கொடுத்த பேட்டி ஒன்றில், குடியரசுக் கட்சி ஜனாதிபதி வேட்பாளர்கள் மன்னிப்புக் கோரியதைக் குறைகூறியதற்கு ஒபாமா அது குறித்து உயிர்களைக் காப்பாற்றவும், அங்கிருக்கும் நம் துருப்புக்கள் இன்னும் ஆபத்தில் இருத்தப்படாமல் இருப்பதற்குத் தேவை என்று பாதுகாத்துக் கூறினார். ஆப்கானிஸ்தானிலுள்ள அமெரிக்கத் தளபதிகளின் பரிந்துரைகளின் பேரில் அவர் அவ்வாறு எழுதியதாகவும் தெரிவித்தார்.

2008ம் ஆண்டில் ஈராக் போருக்கு எதிர்ப்பாளி என்று போலித்தனமாகக் காட்டிக் கொண்டதில் ஓரளவேனும் ஒபாமா தேர்ந்தெடுக்கப்பட்டதற்குக் காரணம் ஆகும். ஆனால் புதன்கிழமை இரவு வெள்ளை மாளிகையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஈராக் மற்றும் ஆப்கானியப் போர்களை அமெரிக்க இராணுவத்தின் வெற்றிகள் என்று ஜனாதிபதி கருத்துக் கூறினார். ஈராக்கிய மூத்த படையினர்கள் 78 பேரை அவர் கௌரவப்படுத்தினார்; அவர்களில் சிலர் ஆப்கானிஸ்தானில் செயல்பட உள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் கடந்த வாரம் நடந்த நிகழ்வுகளை மறைமுகமாகக் குறிப்பிட்ட ஒபாமா, பெரும்பாலான ஆப்கானியத் துருப்புக்கள் நாம் கொடுக்கும் பயிற்சி, பங்காளித்துவம் ஆகியவற்றை வரவேற்றுள்ளனர், அவற்றால் நன்மை அடைந்துள்ளனர். சற்று சிந்தித்துப்பார்த்தால், ஈராக்கில் இவ்வாறு நடந்ததும் உண்மையே எனத் தெரியவரும் என்றார். அமெரிக்கத் தலையீட்டின் விளைவு, 2014 இறுதிக்குள் ஆப்கானியர்கள் தங்கள் நாட்டைப் பாதுகாப்பாக ஈராக்கியர்கள் போல் வைத்துக் கொள்ளும் திறனைப் பெற்றுவிடுவர் என்று அவர் கூறினார்.

உண்மையில் பெப்ருவரி 22ம் திகதியில் இருந்து குர்ரான் எரிப்புக்கள் தொடர்பாக வெடித்துள்ள முதல் வெகுஜன எதிர்ப்புக்கள் தோன்றியதில் இருந்து ஆப்கானிஸ்தான் முழுவதும் படர்ந்துள்ள அரசியல் நெருக்கடி ஒபாமா நிர்வாகத்திற்கு பெரும் சங்கடமாகும்; நீடித்த அமெரிக்க-நேட்டோ ஆக்கிரமிப்பிற்கும் சங்கடமாகும்; இது இப்பொழுது அதன் 11வது ஆண்டில் உள்ளது.

இரண்டு எதிர்ப்புக்களும், பச்சை நீலத்தின் மேல் தொடர்ந்து தாக்குவதும்ஆப்கானிய சிப்பாய்கள் அமெரிக்கச் சிப்பாய்கள் மீது என்று அமெரிக்க இராணுவத்தின் சொல்லாட்சியில்தங்களை இஸ்லாமிய அடிப்படைவாத தாலிபன் ஆட்சியில் இருந்து விடுதலை செய்ததாகக் கூறப்படும் ஏகாதிபத்திய சக்திகள் மீது ஆப்கானிய மக்கள் கொண்டிருக்கும் உண்மையான மனப்பான்மையைத்தான் காட்டுகின்றன.

தாலிபனுக்கு மிக விரோதமாக இருக்கும் பகுதிகளில்கூட, தாஜிக்குகள், உஜ்பெக்குகள் மற்றும் ஹஜாராக்கள் போன்ற பஷ்டுன் இல்லாத மக்கள் வசிக்கும் இடங்களில், ஆர்ப்பாட்டக்காரர்கள் அமெரிக்க மற்றும் நேட்டோப் படைகள் அகற்றப்பட வேண்டும் என்று குரல் கொடுத்து, ஜனாதிபதி ஹமித் கர்சாய் உடைய கைப்பாவை அரசாங்கத்தையும் கண்டித்துள்ளனர்.

குறைந்தப்பட்சம் மூன்று ஆயுதமேந்திய தாக்குதல்களில் ஒன்றிலேனும், இரண்டு அமெரிக்க அதிகாரிகள், ஒரு கேர்னல், ஒரு மேஜரை ஆப்கானிய உள்துறை அமைச்சரகத்தின் தலைமையகத்திற்குள் மரணதண்டனை கொடுப்பது போல் கொல்லப்பட்டதில், துப்பாக்கிச் சூடு நடத்தியவர் ஒரு தாஜிக் ஆவார்; இவர் ஓர் உளவுத்துறைப்பணி டிரைவர் ஆவார்; அமெரிக்கர்கள் குர்ரான் எதிர்ப்புக்களைக் கேலி செய்த கருத்துக்கள் மற்றும் குர்ரானையேகூட என்று வெளிப்படையாக இருக்கையில் அவர் பெரும் சீற்றம் உற்றார்.

மூன்று நிகழ்வுகளில் முதலாவது கிழக்கு ஆப்கானிஸ்தானில் நங்கரர் மாநிலத்தில் ஒரு ஒதுங்கியிருந்த அமெரிக்க-ஆப்கானிய இராணுவத் தளத்தில் நடந்தது. அமெரிக்கத் துருப்புக்கள் மீது ஒரு ஆப்கானியச் சிப்பாய் சுடத் தலைப்பட்டு இருவரைக் கொன்றார்; இது குர்ரான் எரிப்பு குறித்துத் தளத்திற்கு வெளியே நடந்த எதிர்ப்பின்போது நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டு, எந்த ஆபத்தையும் எதிர்கொள்ளாமல் அவர் தப்பித்துவிட்டார்.

மற்றொன்றில், ஆறு அமெரிக்கச் சிறப்புப் படையினர் வடக்கு ஆப்கானிஸ்தானில் குண்டுஸிலுள்ள அமெரிக்க நேட்டோ தளத்தில் எதிர்ப்பாளர்கள் வீசிய கையெறிகுண்டில் காயமுற்றனர். திங்களன்று ஒரு தற்கொலைக் கார்க் குண்டுத் தாக்குதல் குறைந்தப்பட்சம் 9 ஆப்கானியர்களை கிழக்கு ஆப்கானிஸ்தானில் ஜலாலாபாத்திலுள்ள நேட்டோ விமானத் தளத்தின் நுழைவாயிலில் கொன்றது. இதில் ஒரு சிப்பாய், இரண்டு பாதுகாப்புக் காவலர்கள், ஆறு குடிமக்கள் மற்றும் இரண்டு தாக்கியவர்கள் ஆகியோர் அடங்குவர். நான்கு நேட்டோத் துருப்பினரும் காயமுற்றனர்.

காபூலில் ஆப்கானிய அமைச்சரகத்திற்குள் நடந்த கொலைகள் மிக வெளிப்படையான பாதுகாப்பு மீறல்கள் ஆகும்; ஏனெனில் இந்த பாதுகாப்பான அறை மிக நம்பிக்கைக்கு உகந்த ஆப்கானிய உளவுத்துறை அதிகாரிகளைத் தவிர மற்றவர்கள் வர அனுமதி இல்லாத இடம் என்று கருதப்பட்டது.

ஒரு செய்தி ஊடகத் தகவலின்படி, அமெரிக்க நேட்டோப் படைகள் ஆப்கானிய அதிகாரிகளுடன் நடத்தும் மேற்பார்வைக் கூட்டங்களில் ஆயுதமேந்திய காவலர்களை நிறுத்தத் தொடங்கிவிட்டன. இது இரு ஆக்கிரமிப்புப் படைகளுக்கும் அவற்றின் கைப்பாவைச் சக்திகளுக்கும் இடையே உறவுகள் முற்றிலும் கிட்டத்தட்ட முறிந்துள்ளதற்குத்தான் அடையாளம் ஆகும். மற்ற ஆலோசகர்களும் தங்கள் மேற்பார்வையை தொலைக்காட்சி, மின்னஞ்சல் தொடர்புடன் வரம்பு கட்டிக் கொண்டதாகத் தகவல்கள் கூறுகின்றன.

McClatchy News Service ஆப்கானியத் துருப்புக்களுக்கும் அவற்றின் அமெரிக்கப் பயிற்சியாளர்களுக்கும் இடையே பெருகும் அழுத்தங்களை மேற்கோளிட்டுள்ளது: ஆப்கானியர்கள் எங்களை வெறுக்கின்றனர், நாங்கள் அவர்கள் மீது நம்பிக்கை கொள்ளவில்லை. அவர்கள் அருகில் இருக்கும்போது பாதுகாப்பாகவும் உணரவில்லை என்று ஒரு அமெரிக்க அதிகாரி McClatchy இடம் கூறினார். ஆப்கானியத் துருப்புக்கள் மொத்தம் 12 அமெரிக்க இராணுவத்தினரை இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து கொன்றுள்ளனர்; அதில் 6 பேர் இந்த வாரம் கொல்லப்பட்டனர்.

 

இதேபோல், லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் மற்றொரு பெயரிடப்படாத இராணுவ ஆதாரத்தை, ஒரு அமெரிக்க ஜெனரல் இத்தகைய கொலைகள் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கத் தலையீட்டிற்கான மதிப்பை பென்டகன் மற்றும் வெள்ளை மாளிகையின் உயர் வட்டங்களில் கூட குறைமதிப்புற்கு உட்படுத்துகிறது என்று கூறியதாக மேற்கோளிட்டுள்ளது. பலரும் கேட்கின்றனர், நீங்கள் உதவுவதாகக்கூறும் சிப்பாய்கள் உங்களைக் கொல்லும்போது நீங்கள் இங்கு இன்னமும் என்ன செய்கிறீர்கள் எனக் கேட்பதாக அவர் டைம்ஸிடம் கூறினார்.

மொத்தத்தில் ஆப்கானியத் துருப்புக்கள் 2007 முதல் 45 நிகழ்வுகளில் 70 அமெரிக்கச் சிப்பாய்களைக் கொன்றுள்ளனர்; இதில் பாதிக்கு மேல் 2009 வசந்தக் காலத்தில் ஆப்கானியப் போர் முயற்சி அமெரிக்காவால் விரிவாக்கப்படும் என்று ஒபாமா உத்தரவிட்டபின் நடந்துள்ளன. அமெரிக்க இராணுவ விசாரணையாளர்கள் கருத்துப்படி, இத்தாக்குதல்களில் பெரும்பாலானவை அமெரிக்கர்கள் நடந்து கொள்ளும் முறையினால் சீற்றம் அடைந்துள்ள தனிப்பட்ட சிப்பாய்களின் செயல்களே ஒழிய, தாலிபன் ஊடுருவிகளால் அல்ல.

கர்சாயிடம் ஒபாமா மன்னிப்புக் கேட்டதற்கு வாஷிங்டனில் அரசியல் விளைவு அமெரிக்காவிற்கும் பாக்கிஸ்தானுக்கும் இடையே நீடித்த நெருக்கடியையும் விரிவாக்கியுள்ளது; பாக்கிஸ்தான் ஆப்கானிஸ்தானத்திற்குச் செல்லும் அமெரிக்க அளிப்பு வாகனங்களை கடந்த நவம்பர் 24ல் இருந்து தடுத்து நிறுத்திவிட்டது; அப்பொழுது 24 பாக்கிஸ்தானிய சிப்பாய்கள் அமெரிக்க ஏவுகணையினால் படுகொலை செய்யப்பட்டனர்; வாஷிங்டன் அது ஒரு தவறான அடையாளக் கண்டுபிடிப்பினால் ஏற்பட்டது என்றாலும் பாக்கிஸ்தான் பெரும் சீற்றம் அடைந்து இவ்வாறு செய்துள்ளது.

பெப்ருவரி மாதம் உயர்மட்டத் தொடர்புகள் மீண்டும் தொடங்கின; அமெரிக்க மத்திய கட்டுப்பாட்டின் தலைவரான மேஜர் ஜெனரல் ஜேம்ஸ் மாட்டிஸ் உயர்மட்டப் பாக்கிஸ்தானியத் தளபதிகளுடன் பேச்சுக்களை நடத்தப் பாக்கிஸ்தானுக்குச் சென்றிருந்தார். இதைத்தொடர்ந்து CIA  இயக்குனர் டேவிட் பெட்ரீயசும் பாக்கிஸ்தானிய உளவுத்துறைத் தலைவர்களும் பேச்சுக்களை நடத்தினர்; அதன்பின் கடந்த வாரம் ஒரு பகலுணவுக் கூட்டம் வெளிவிவகாரச் செயலர் ஹில்லாரி கிளின்டனுக்கும் பாக்கிஸ்தானிய வெளியுறவு மந்திரி ஹினா ரப்பானிக்கும் இடையே லண்டனில் சோமாலியா நிலைமை பற்றிய ஒரு சர்வதேசக் கூட்டத்தின் புறத்தே நடைபெற்றது.

அமெரிக்காவும் பாக்கிஸ்தானும் மீண்டும் பணிகளைத் தொடரத் தயாராகிவிட்டன என்று கிளின்டன் அறிவித்தார்; ஒபாமா விரைவில் நீண்டகாலமாக இருக்கும் அரச அலுவலகத்தின் பரிந்துரையான அமெரிக்கா நவம்பர் 26 கொலைகள் பற்றி ஒரு முறையான மன்னிப்புக்கேட்கும், அதற்கு ஈடாக பாக்கிஸ்தான் பொருட்கள் அளிப்புப் பாதைகளை மீண்டும் திறக்கும் என்பது இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. இது இப்பொழுது தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது; ஏனெனில் ஒபாமா குறைந்தப்பட்சம் இந்த மாதமேனும் அமெரிக்க அனுப்பும் வாடிக்கையான, பொருளற்ற ஏகாதிபத்தியக் கொடுமைகளைப் பற்றி வருத்தம் தெரிவிக்கும் தொகுப்பைத் தீர்த்துவிட்டார் போலும்.