WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள் :
மத்திய கிழக்கு
ஈரான் மீதான போருக்கு அமெரிக்கா, பிரிட்டன் தயாரிப்புக்களை முடுக்கிவிடுகின்றன
By
Bill Van Auken
28 February 2012
use
this version to print | Send
feedback
அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் இராணுவக் கட்டுப்பாடுகள் கூடுதலான
நிதியைக்கோரி, ஈரானுக்கு எதிராக எதிர்பார்க்கப்படும்
பேர்சிய
வளைகுடாப் போர்த் தயாரிப்பிற்காக ஆயுதங்களையும் படைகளையும் அதிகரித்து,
தயாரிப்புக்களை முடுக்கிவிட்டுள்ளன.
வோல்
ஸ்ட்ரீட் ஜேர்னல்
கருத்துப்படி, அப்பிராந்தியத்தில் அமெரிக்க இராணுவச் செயற்பாடுகளை மேற்பார்வையிடும்
மத்திய கட்டுப்பாட்டின் வேண்டுகோளின்படி செயல்பட்டு, 100 மில்லியன் டொலர்கள் போர்த்
தயாரிப்புக்களை விரைவுபடுத்துவதற்கு நிதி மறு-ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்று
கோரியுள்ளது.
இத்தயாரிப்புக்கள் ஹோர்முஸ் ஜலசந்தி உலகின் ஏற்றுமதி எண்ணெய்
அனுப்பப்படும் மொத்தத்தில் 20 சதவிகிதம் செல்லும் கடல்வழியான இந்த ஜலசந்தி
மூடப்படும் என்னும் ஈரானிய அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்கான இத்தயாரிப்புக்களைப்
பாதுகாப்பு நடவடிக்கைகள் என்று விளித்துள்ளது. அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பா
சுமத்தியுள்ள வணிகத் தடைகள், பொருளாதாரத்
தடைகள் ஆகியவற்றிற்கு ஈரானின் அச்சுறுத்தல் விடையிறுப்பாக வந்துள்ளது; அத்தடைகளை
அந்நாடு ஒரு முற்றுகைக்கு ஒப்பானது என்று கருதுகிறது; மேலும் நாடு வெளிப்படையாக
இஸ்ரேலியக் குண்டுத் தாக்குதல் என்னும் அச்சறுத்தலையும் எதிர்நோக்கியுள்ளது.
“புதிய
வெடிமருந்துகள் நிறைந்த சுரங்கக் கண்டுபிடிப்பு, அவற்றை அகற்றும் கருவிகளை
முன்கூட்டியே நிலைநிறுத்துதல், மற்றும் கண்காணிப்புத் திறன்களை விரிவாக்குதல் என்று
ஜலசந்தியிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மேற்கொள்வதற்கான திட்டங்களை
காங்கிரஸிடம் தெரிவித்துவிட்டது”
என்று ஜேர்னல்
கூறுகிறது.
“கப்பல்களில்
இருக்கும் ஆயுத முறைகளை விரைவில் மாற்றம் செய்யவும் இராணுவம் விரும்புகிறது,
இதையொட்டி அவைகள் ஈரானியரின் வேகமாகத் தாக்கும் படகுகளுக்கு எதிராகப்
பயன்படுத்தப்பட முடியும், மற்றும் கரையில் இருந்து ஏவப்படும் க்ரூஸ் ஏவுகணைகளையும்
எதிர்க்கலாம் என்று பாதுகாப்பு அதிகாரிகள் கூறினர்.”
பென்டகனுடைய திட்டத்தின் கீழ் அமெரிக்கப் போர்க் கப்பல்கள்,
டாங்குகள் எதிர்ப்பு ஆயுதங்கள், விரைவாகத் தாக்கும் திறனுடைய இயந்திரத்
துப்பாக்கிகள் மற்றும் ஈரானிய கடற்படையில் சிறிய வேகப் படகுகளுக்கு எதிராகப்
பயன்படுத்த இலேசான ஆயுதங்களாலும் பொருத்தப்படும். இவைகள் பெருகியமுறையில் ஆளற்ற
ட்ரோன்களின் ஆதரவைப் பெற்றிருக்கும்.
“ஐக்கிய
அரபு எமிரேட்டுக்களில் நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க சிறப்புச் செயற்பாட்டுக்
குழுக்கள், ஈரான் ஜலசந்தியை மூட முற்பட்டால் அங்கு நடக்கும் எத்தகைய இராணுவ
நடவடிக்கையிலும் பங்கு பெறும்”
என்றும் ஜேர்னல்
தகவல் கொடுத்துள்ளது.
அமெரிக்கா ஏற்கனவே அது பாரசீக வளைகுடாப் பகுதியில் நிறுத்தியுள்ள
விமானத் தளமுடைய போர்க் கப்பல்கள் குழுக்களின் எண்ணிக்கையை இருமடங்காக்கியுள்ளது—USS
Abraham Lincoln, USS Carl Vinson
என்னும் இரு பெரும் கப்பல்களையும் நிலைப்பாடு கொள்ள வைத்துள்ளது.
அரேபிய தீபகற்பத்தில் இருந்து செயற்படக்கூடிய கணிசமான எண்ணிக்கையிலான போர்
விமானங்களையும் அது கொண்டுள்ளது: இதைத்தவிர ஆப்கானிஸ்தான் மற்றும் குவைத் ஆகியவைகள்
ஈரானிய எல்லைகளை ஒட்டி பல்லாயிரக்கணக்கான துருப்புக்களையும் நிறுத்தியுள்ளது.
“இப்புதிய
போர்த் தயாரிப்புக்கள் எந்த அளவிற்கு போர்த் திட்டமிடுபவர்கள் ஈரானுடன் மோதல்
என்னும் வாய்ப்பிற்கு உரித்தான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர் என்பதைக்
காட்டுகிறது; அதே நேரத்தில் உயர்மட்ட வெள்ளை மாளிகை மற்றும் பாதுகாப்புத் துறைத்
தலைவர்கள் போர் பற்றிய பேச்சைக் குறைத்து மற்ற விருப்புரிமைகள் பற்றிப்
பேசுகின்றனர்”
என்று ஜேர்னல்
எழுதியுள்ளது.
ஜேர்னலில்
வந்துள்ள தகவல் வளைகுடாப் பகுதியில் இராணுவ நிலைப்பாடு இலையுதிர் காலத்திற்குள்
முறையாக இருக்க வேண்டும் என்று பென்டகன் விரும்புவதைச் சுட்டிக்காட்டுகிறது;
அப்பொழுது பென்டகன் திட்டமிடுவோர் ஈரான் மீது ஒரு தூண்டுதலற்ற இராணுவத் தாக்குலை
இஸ்ரேல் தொடக்கும்
என்று எதிர்பார்க்கின்றனர்.
உயர்மட்டப் பேச்சுக்கள் ஈரான் பற்றி வாஷிங்டனுக்கும் இஸ்ரேலுக்கும்
இடையே அடுத்த சில நாட்களுக்கு திட்டமிடப்பட்டுள்ளது; இஸ்ரேலின் பாதுகாப்பு மந்திரி
எகுட் பாரக் திங்களன்று இஸ்ரேலை விட்டுப் புறப்பட்டு அமெரிக்க அதிகாரிகளுடன் இரு
நாள் பேச்சுக்களுக்காகச் சென்றுள்ளார். இஸ்ரேலியப் பிரதம மந்திரி பெஞ்சமின்
நெத்தென்யாகு
மார்ச் 5ம் திகதி ஒபாமாவுடன் பேச்சுக்களை நடத்த உள்ளார்.
பென்டகன் ஜனவரி மாதம் 82 மில்லியன் டொலர்கள்
“அதன்
மரபார்ந்த நிலவறைத் தகர்க்கும் குண்டை முன்னேற்றுவிக்கவும், 30,000 பவுண்டுகள்
பெரும் வெடிக்கிடங்கு தகர்ப்பானிற்காகக் கேட்டுள்ளதைத் தொடர்ந்து ஈரானுடன்
எதிர்பார்க்கும் போருக்குத் தற்போதைய
கூடுதல் நிதியைக் கோரும் நடவடிக்கை வந்துள்ளது”
என்று செய்தித்தாள் குறிப்பிடுகிறது.
“பெரும்
வெடிக்கிடங்குத் துளைப்பான் ஈரான் அதன் மிக உணர்வுமிக்க அணுசக்தி வளர்ச்சித்
திட்டங்களைக் காப்பதற்காகப் பயன்படுத்தும் நிலவறைகளை தகர்க்கும் வகையில்
வடிவமைக்கப்பட்டுள்ளது.”
இஸ்ரேலுக்கு இந்த 30,000 பவுண்டு ஆயுதங்களை அளிக்கலாமா, அவை 5,000
பவுண்டு
Guided Bomb Unit 28 (GBU28)
நிலவறைத் தகர்ப்புக்களைவிட கணிசமான சக்தி வாய்ந்தவை ஆயிற்றே என்பது குறித்துச்
சூடான விவாதங்கள் இருப்பதாகக் குறிப்புக்கள் வந்துள்ளன. கடந்த ஆண்டு ஒபாமா
நிர்வாகம் சியோனிச
அரசிற்கு அவற்றை மாற்றியிருந்தது.
நியூ யோர்க்
டைம்ஸின்
தலைமை வாஷிங்டன் நிருபரான டேவிட் சாங்கர், அமெரிக்க ஆளும் உயரடுக்கு நடைமுறையின்
பிரிவுகளுக்குள் பெருகும் போர் முரசு முழக்கத்தைப் பற்றி ஞாயிறன்று சுருக்கமாகக்
கூறினார்.
“சிரிய
எழுச்சியாளர்களுக்கு ஆயுதங்களை அளியுங்கள்! அதேபோல் இதை நாம் செய்கையில்
இஸ்ரேலியர்களுக்கு அவர்கள் தேவைப்படும் கருவிகளைக் கொடுங்கள்—நிலவறைத்
தகர்ப்புக்கள், எரிபொருள் அளிக்கும் விமானங்கள் என்று; இதையொட்டி ஈரானின்
அணுச்சக்தி நிலையங்களைத் தாக்க அவர்கள் முடிவெடுத்தால், அவர்கள் அவற்றை முதல்
தடவையே பெறுவர்.”
வாஷிங்டன் சிரியாவில் கொண்டுள்ள இலக்குகள் ஈரானை வலுவிழக்கச்
செய்து,
“ஆட்சி
மாற்றத்திற்கும்”
தயார் செய்யும் என்பதை ஒப்புக் கொண்ட சாங்கர், தொடர்ந்து கூறினார்:
“இந்நாட்களில்
வெள்ளை மாளிகைக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுவாகக் கேட்கப்படும் வாதம் அசாத்
அரசாங்கம் விழுந்துவிட்டால், ஈரான் ஆயுதங்களை ஹெஸ்மோராவிற்கும் ஹமாஸிற்கும்
கொடுக்கும் வாய்ப்பு பெரும் சேதப்படும்—அதன்
செல்வாக்கு அதையொட்டி இற்றுப் போய்விடும். இதேபோல் ஈரான் அணுவாயுதத்திறன்
விளிம்பில் நிற்கும் முயற்சிகள் ஒரு சில
GBU31
நிலவறைத் தகர்ப்புக் கருவிகளைப் பயன்படுத்துவதின் மூலம் தகர்க்கப்பட்டுவிடலாம்;
அவைதான் அந்நாடு இஸ்ரேல், சௌதி அரேபியா ஆகியவற்றிற்குச் சவால் விடுத்து
பிராந்தியத்தின் பெரும் சக்தி என்று வரவேண்டும் என்னும் நம்பிக்கையைத்
தள்ளிப்போட்டுவிடும்.”
வேறுவிதமாகக் கூறினால், ஈரான் எப்படியும் அணுவாயுதங்களைத்
தயாரித்துவிடும் என்னும் மிகையான எச்சரிப்புக்களுக்குப் பின், உண்மை என்ன என்றால்,
அமெரிக்க ஏகாதிபத்தியமும் அதன் நட்பு நாடுகளும் ஈரானுக்கு எதிரான பொருளாதார,
அரசியல், இராணுவ ஆக்கிரோஷத்தைக் காட்டும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன; அதன்
நோக்கம் அந்நாடு பிராந்திய சக்தியாக வெளிப்பட்டு பேர்சிய வளைகுடா மற்றும் மத்திய
ஆசியாவில் எரிசக்திச் செழிப்பு உடைய பகுதிகளின் மீது வாஷிங்டனின் மேலாதிக்கத்தை
சவால் விடும் திறன் பெருகுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்பதாகும்.
அணுவாயுதப் பிரச்சினை இப்பிராந்தியத்தில் ஒரு புதிய போர்த்
தயாரிப்பிற்குப் போலிக் காரணமாகப் பயன்படுத்தப்படுகிறது; இவ்வகையில்தான் அமெரிக்கா
2003ல் ஈராக் மீது படையெடுப்பதற்கு முன்
“பேரழிவு
தரும் ஆயுதங்கள்”
என்ற போலிக் காரணத்தைப் பயன்படுத்தியது.
ஒரு தசாப்தத்திற்கு முன் ஈராக்கில் நடந்தது போல், சர்வதேச
அணுச்சக்தி அமைப்பின் ஆய்வு ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பிற்குத் தயார் செய்யும்
பதிலியாக உள்ளது. ஈராக்கைப் போலவே, அமெரிக்கா, இஸ்ரேல், மேற்கு ஐரோப்பிய
உளவுத்துறைகளின் திரித்தலுக்கு உட்படும்
IAEA,
ஈரான் முடியாததைச் செய்ய வேண்டும் என்று கோருகிறது—அதாவது
ஒரு எதிர்மறை நிகழ்வை நிரூபிக்க வேண்டும், அது அணுவாயுதங்களைத் தயாரிப்பதில்
ஈடுபடவில்லை என நிரூபிக்க வேண்டும் என்கிறது. பாக்தாத்திற்கு எதிரான செயற்பாடுகளில்
இருந்தது போலவே
IAEA
தன்னுடைய ஆணைகளுக்கு ஈரான் கட்டுப்பட வேண்டும் என்ற வகையில் அதைத்
தூண்டிவிடுகிறது; இத்தகைய நிலைப்பாடு அணுசக்தி பரவா உடன்படிக்கையில்
கையெழுத்திட்டுள்ள நாடுகளுக்குத் தேவையே இல்லை.
இவ்வகையில்
IAEA
கடந்த வெள்ளியன்று ஓர் அறிக்கையை வெளியிட்டு அணு ஆராய்ச்சி
நிலையத்தில் இருந்து ஒரு சிறு அளவு யுரேனிய உலோகம் காணவில்லை என்று
வலியுறுத்தியுள்ளது. இது அணுகுண்டு தயாரிப்பதற்குத் தேவையானதை விடமிகவும் குறைந்த
அளவில் உள்ளது; ஈரான் யுரேனிய அடர்த்தியை அதிகரித்துவிட்டது, ஆயுதங்கள் தயாரிக்கும்
தரத்திற்கு இல்லை என்றாலும், அணுச்சக்தி எரிபொருள் பயன்படுத்தி எரிபொருள் தயாரிக்க
என; இது உடன்பாட்டின்படி மிகவும் சட்டப்பூர்வமானதுதான்.
ஈரானுக்குத் தான் அனுப்பிய குழு பார்ச்சின் இராணுவ வளாகம் என
தெஹ்ரானுக்கு
தென்கிழக்கே கிட்டத்தட்ட 18 மைல்கள் தூரத்தில் உள்ளதைப் பார்ப்பதற்கு
அனுமதிக்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டியுளது.
IAEA
ஐ அமெரிக்கா பல முறை நிலையத்தை ஆய்வு செய்யக் கோருமாறு
தூண்டிவிட்டுள்ளது; இது அணுசக்தி இல்லா நிலையம் ஆகும்; எந்த அமைப்பின்
மேற்பார்வைக்கும் உட்பட்டிருக்கவில்லை. அங்குள்ள நிலவறை ஒன்று வெடிப்புத்தன்மையுடைய
தூண்டுகோல்களை அணுவாயுதக் குண்டுகளை இயக்கப் பயன்படுத்துவதாக ஈரான் மீது வாஷிங்டன்
குற்றம் சாட்டியது; 2004 முதல் 2006 வரை ஈரான் அவற்றைப் பார்வையிட ஆய்வாளர்களை
அனுமதித்தது. அப்படி ஏதும் இல்லை என்றுதான் ஆய்வாளர்கள் கண்டனர்.
நாட்டின் அணுச்சக்தித் திட்டம் சமாதான நோக்கங்களுக்குத்தான் என்று
பலமுறையும் வலியுறுத்திவரும் ஈரானிய அதிகாரிகள்
தெஹ்ரானுக்கு
அனுப்பப்பட்ட
IAEA
குழு நிறுவனத்திற்கும்
தெஹ்ரானுக்கும்
இடையே தொடர்ந்த ஒத்துழைப்பிற்கு ஒரு
“வடிவமைப்பு”
பற்றி பேச்சுக்களை நடத்த வந்தது என்றனர்; அதில் அணுவாயுத
ஆய்வாளர்கள் இல்லை என்றும் அதற்கு பார்ச்சின் நிலையத்தில் நுழைவதற்கு வேண்டுகோள்
விடும் அதிகாரமும் இல்லை என்று கூறினர்.
இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா
இரண்டுமே இந்த அறிக்கையை ஒரு போலிக் காரணமாகப் பற்றி எடுத்து ஈரான் மீது அழுத்தத்தை
அதிகரித்தன.
“இஸ்ரேலின்
மதிப்பீடுகள் துல்லியமானவை என்பதற்கு இது கூடுதலான நிரூபணத்தைத் தருகிறது, ஈரான்
அதன் அணுவாயுதத் திட்டத்தைத் தடையின்றித் தொடர்கிறது”
என்று நெத்தென்யாகு
ஓர் அறிக்கையை வெளியிட்டார். இஸ்ரேலே அணுவாயுதப் பரவா உடன்படிக்கையில் கையெழுத்திட
மறுத்துவிட்டது, எந்த
IAEA
மேற்பார்வையையும் தன் அணு நிலையங்கள் மீது அனுமதிக்கவும் இல்லை. அது
கிட்டத்தட்ட 400 அணு ஆயுதங்களைத் தயாரித்திருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
“ஈரானின்
நடவடிக்கைகள் அதன் அணுசக்தித் திட்டம் சமாதானத்திற்கு என்று சர்வதேச சமூகத்தை
நம்பவைப்பதில் தோற்றுவிட்டது என்பதை நிரூபிக்கின்றன”
என்று வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் டாமி வியடர் கூறினார். அமெரிக்க மற்றும்
மேற்கு ஐரோப்பிய அழுத்தத்திற்கு ஈரான் இணங்கினால் ஒழிய,
“சர்வதேசச்
சமூகத்தில் இருந்து அது தனிமைப்படுத்தப்படுவது தொடர்ந்து வளர்ச்சியுறும்”
என்றும் அவர் சேர்த்துக் கொண்டார்.
இதற்கிடையில், ஒரு நாட்டுவெறித் தலைப்பான
“ஈரானுடனான
பிரிட்டனின் போர்த்திட்டம்”
என்ற தலைப்பில் ரூப்பெர்ட் மர்டோக்கின்
Sunday Sun
பெயரிடப்படாத பிரித்தானிய
“பாதுகாப்புத்
தலைவர்கள்”
“போர்
வெடிக்குமா என்பது பிரச்சினை அல்ல, எப்பொழுது வெடிக்கும் என்பதுதான் பிரச்சினை—18
முதல் 24 மாதங்கள் கால அவகாசமாக இருக்கலாம்”
என்று கூறியதாக மேற்கோளிட்டுள்ளது.
ஈரான் மீதான தாக்குதல் தயாரிப்பு பற்றி செய்தித்தாள்,
“பிரித்தானியா
அப்பிராந்தியத்தில் நம் வலுவான நட்பு நாடான ஐக்கிய அரபு எமிரேட்டுக்களுக்கு ஒரு
காலாட் படைப் பிரிவை அனுப்பிவைக்கும்”
என்ற தகவலைக் கொடுத்துள்ளது.
Sun மேலும் கூறுகிறது:
“போர்த்
திட்டத்தின்படி, ஒரு இரண்டாவது நீர்மூழ்கிக் கப்பல், தொமஹாக் க்ரூஸ் ஏவுகணைக்
நிறைந்தவை அங்கு நிலைநிறுத்தப்படும். அதன்பின்
RAF,
டைபூன், டோர்னடோ ஜெட்டுக்களை
ஏற்கனவே கட்டார், ஓமன், பஹ்ரைன், ஐக்கிய அரபு எமிரேட்டுக்களில் இருக்கும்
ஹெலிகாப்டர், மற்றும் போக்குவரத்து விமான பணிக்குழுக்களை வலுப்படுத்த அனுப்பும்.”
இச்செய்தித்தாள் ஒரு மூத்த
Whitehall
அதிகாரி,
“பாதுகாப்பு
அமைச்சரகத்தில் திட்டமிடுபவர்கள் இந்த ஆண்டுத்
தொடக்கத்தில்
கூடுதல் உந்துதலுடன் செயல்பட்டனர். ஆட்சி அதன் அணுவாயுத விழைவுகளைத் தொடரும் வரை
மோதல் தவிர்க்க முடியாதது”
எனக்கூறியதாக மேற்கோளிட்டுள்ளது. |