WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள் :
அவுஸ்திரேலியா &
தென்பசுபிக்
New
political turmoil over post of Australian foreign minister
ஆஸ்திரேலிய வெளியுறவு மந்திரிப் பதவி
குறித்து
புதிய அரசியல் கொந்தளிப்பு
By
James Cogan
1 March 2012
ஒரே
வாரத்திற்குள் இரண்டாவது முறையாக ஆஸ்திரேலிய வெளியுறவு மந்திரிப் பதவியை யார்
கொண்டிருக்கிறார் என்னும் வினாவைச் சுற்றிப் பூசல் எழுந்துள்ளது: இது தொழிற் கட்சி
அரசாங்கத்தை மற்றொரு பகிரங்க நெருக்கடியில் ஆழ்த்தியுள்ளது.
திங்கள்
பிற்பகல் பிரதம மந்திரி ஜூலியா கில்லார்ட் ஒரு காலியாக இருக்கும் செனட் பதவி
மற்றும் வெளியுறவு மந்திரிப் பதவியை ஓய்வூபெற்ற நியூ சௌத் வேல்ஸ் மாநிலத்தில்
பிரிமியர் (தலைமை அமைச்சர்) பாப் காருக்குக் கொடுத்தார். ஆனால் கருவூலப்
பொறுப்பாளரும் துணைப் பிரதம மந்திரியுமான வேன் ஸ்வான் விரைவில் காரை அழைத்து, அவர்
கான்பெர்ராவிற்கு விமானத்தில் புறப்பட இருக்கையில், தான் கூட்டாட்சி அரசாங்கத்தில்
சேர இருப்பதை அறிவிக்க இருக்கையில், பதவியளிப்பைத் திரும்பப் பெற்றுக் கொண்டார்.
இந்த
விசித்திரமான நிகழ்வுகள் ஜூன் 2010ல் பிரதம மந்திரி பதவியில் இருந்து தான் அகற்றிய
கெவின் ருட்டின் சவாலைத் தோற்கடித்த சில மணிநேரத்திற்குள் நடைபெற்றது; ருட்டோ
வெளியுறவு மந்திரிப் பதவியை பெப்ருவரி 22ம் திகதி இராஜிநாமா செய்துவிட்டார்.
கில்லார்டின் வெற்றிக்குப் பின், ருட் அகற்றப்பட்டதற்கு முக்கிய ஏற்பாடு
செய்தவர்களில் ஒருவரான செனட்டர் மார்க் அர்பிப் எதிர்பாராமல் தன் இராஜிநாமாவை
அறிவித்து, காருக்குக் கொடுக்கப்படுவதாக இருந்த காலி இடத்தைத் தோற்றுவித்தார்.
தலைமையிடம்
குறித்த வாக்குப் பதிவை உடனடியாகத் தொடர்ந்து, அனைத்துப் புறத்தினரும் கட்சி
இப்பொழுது ஒன்றுபட்டு லிபரல்-நேஷனல் எதிர்ப்பை அடுத்த தேர்தலில் தோற்கடிக்கும்
என்று அறிவித்தனர். தன்னுடைய புதிய அரசியல் தோற்றத்தை, ஒரு வலுவான நம்பிக்கையான
தலைவர் என்ற தோற்றத்தைக் காட்டுவதற்கு கில்லார்ட் ஒரு செய்தியாளர் கூட்டத்தை
நடத்தினார். இவை அனைத்தும் காரின் நியமனத்தால் ஏற்பட்ட பிளவுகளால் விரைவில்
தகர்ந்து போயின; மேலும் என்ன நடந்தது என்ற வினாவிற்கு கில்லார்டின் தவிர்ப்புத்
தன்மையுடைய மறுப்புக்களால் அதிகமாக்கப்பட்டன.
செவ்வாய்
காலையில் தன்னுடைய முந்தைய தினக் காரைக் குறித்த விவாதங்களை விவரித்திருந்த ஒரு
ஆஸ்திரேலியக் கட்டுரையின் பொருளுரை
“முற்றிலும்
உண்மை அல்ல”
என்று உறுதியாக அறிவித்தார். ஆனால் பாராளுமன்றத்தில் ஒரு மூத்த
தொழிற் கட்சி மந்திரியான ஆன்டனி ஆல்பனீஸ், ருட்டிற்கு ஆதரவு கொடுத்திருந்தவர், கார்
வெளியுறவு மந்திரிப் பதவி ஏற்றுக்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளார் எனச்
சான்றுகளில் பதிவு செய்தார். பாராளுமன்றத்தில் பொய் சொல்லி அகப்பட்டுக் கொண்டால்
எந்த அரசியல்வாதியும் இராஜிநாமா செய்யவேண்டும் என்பதை நன்கு அறிந்திருந்த
கில்லார்ட் எதிர்த்தரப்பினர் வினா எழுப்பியபோது தன் முந்தைய உறுதியான மறுப்பை
மீண்டும் கூற மறுத்துவிட்டார்.
கில்லார்டின் நிலைப்பாடு இதையொட்டி மோசமாயிற்று. ஆஸ்திரேலியனின்
கருத்துப்படி செவ்வாய் பிற்பகல் செய்தித்தாள் அவரை காலியாக இருக்கும் செனட் மற்றும்
வெளியுறவு மந்திரிப் பதவிக்கு அழைப்பு விடுக்கப்பட்டாரா என நேரடியாகக்
கேட்கப்பட்டதற்கு பாப் கார்,
“ஆம்”
என்று கூறியிருந்தார். அந்த அறிக்கையை கார் அன்று பின்னர்
திருத்திக் கொண்டார்; ஆனால் தொழிற் கட்சியின் கசிவுகள் கில்லார்ட் அழைத்திருந்தார்
என்பதை உறுதிபடுத்தின. ஆஸ்திரேலியனிடம் இரு முக்கிய காபினெட் ஆதரவாளர்களான
முன்னாள் தொழிற் கட்சி தலைவர் சைமன் க்ரீன் மற்றும் பாதுகாப்பு மந்திரி ஸ்டீபன்
ஸ்மித் காரின் நியமனம் ஏற்கத்தக்கதில்லை என்று கூறியவுடன் அழைப்பு திரும்பி
வாங்கப்பட்டது என்று கூறப்பட்டது; ஏனெனில் ஸ்மித் அப்பதவியை விரும்பியிருந்தார்.
இந்த முழு
விவகாரமும் பிரதம மந்திரிப் பதவியின் மீது கில்லார்ட் கொண்டிருக்கும் நலிந்த
பிடிப்பைத்தான் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. திங்களன்று தொழிற் கட்சி பாராளுமன்ற
உட்குழுவில் ருட்டை 71க்கு 31 என்ற வாக்குக் கணக்கில் தோற்கடித்தபின், அவர் தன் சக
மந்திரிகளுடைய
“வலுவான”
ஆதரவைக்
கொண்டிருப்பதாக அறிவித்தார். ஒரு நாளைக்குப் பின், ஆஸ்திரேலியன் பைனான்சியல்
ரிவ்யுவைச் சார்ந்த ஜெப் கிட்னி அத்தினத்தை அவர் தொழிற் கட்சி தலைவரான பிறகு,
“பாராளுமன்றத்தில்
அவருடைய மிக மோசமான நாள் எனக் கூறவியலும்”
என்று விவரித்தார்.
“கார்
விவகாரம் ஒரு புதிய இழிந்த குப்பைத் தன்மையை ஏற்படுத்திதவிட்டது, இதில்
கில்லார்ட்தான் முக்கிய பாதிப்பாளர்”
என்று அவர் எழுதினார்.
மற்றவர்களுடைய கையில் சற்றே கைப்பாவை நிலையை விட அதிகமானதைத்தான் கில்லார்ட்
கொண்டிருக்கிறார் என்பது அம்பலமாயிற்று; பிறருடைய உத்தரவின் பேரில் தன்
கருத்துக்களை மாற்றிக் கொள்கிறார், செயல்களைப் புரிகிறார்.
கில்லார்ட்
காருக்குக் கொடுத்த அழைப்பு திடீரென திரும்பப் பெறப்பட்டது ஜூன் 2010ல் நடைபெற்ற
ஜனநாயக-விரோத நிகழ்வுகளைத்தான் நினைவுபடுத்துகிறது; அப்பொழுது அவர் கட்சியின்
உட்பிளவுக்குழுத் தலைவர்களால் முன்னோடியில்லாத அரசியல் ஆட்சி மாற்றத்தில் ருட்டை
அகற்றிப் பிரதம மந்திரியாக ஆக்கப்பட்டிருந்தார். கடந்த வாரம் ருட் வெளியிட்ட
அறிக்கைகளின்படி, இன்னும் நான்கு மாதங்களுக்கு அவருடைய தலைமைக்கு எந்தவித சவாலும்
நடத்தப்படக்கூடாது என்று ஜூன் 23, 2010 மாலை தானும் கில்லார்டும் உடன்பட்டதாகத்
தெரிவிக்கப்பட்டது. பத்து நிமிஷங்களுக்குப் பிறகு கில்லார்ட் அவருடைய அலுவலகத்தில்
நுழைந்து தலைமை மாற்றம் குறித்த சவால் மறுநாள் தொடக்கப்படும் என அறிவித்தார்.
பெப்ருவரி 28 அன்று
WSWS
கேட்டபடி,
“அவர்
ருட்டின் அலுவலகத்தை விட்டு நீங்கியபின் அவர் யாருடன் பேசினார்? தன் மனத்தை அவர்
மாற்றிக் கொள்ளுவதற்கு என்ன கூறப்பட்டது?
இதே
வினாக்கள்தான் பாப் காரை வெளியுறவு மந்திரியாக நியமிக்கும் அவருடைய திட்டம்
பற்றியும் எழுகின்றன. கில்லார்டின் அழைப்பைப் பின்வாங்கி ஸ்வான் தொலைப்பேசித்
தொடர்பைக் கொள்ள வகுத்ததற்கு யாரால், எப்பொழுது என்ன கூறப்பட்டது?
ஆஸ்திரேலிய
செய்தி ஊடகத்தில் கார் விவகாரம் கில்லார்ட்-ருட் போட்டிபோல் அளிக்கப்படுகிறது, ஏதோ
தனிநபர் ஆளுமை பற்றிய விவகாரம் போல். ஆனால் கார் நியமனம் ஸ்மித்தின் விழைவுகளால்
தடுக்கப்பட்டது என்ற கூற்றிற்கு நம்பகத்தன்மை இல்லை; எப்படி 2010ல் ருட்டை
கில்லார்ட் செயலற்ற தலைமை முறைச் செயற்பாட்டின் காரணமாக அகற்றினார் என்று
கூறுவதுபோல்தான் இதுவும். தன் மந்திரி சபையைத் தன் விருப்பப்படி
தேர்ந்தெடுத்துக்கொள்ளும் முழுச் சிறப்பு உரிமை கில்லார்டிற்கு உண்டு. ஆனால் செய்தி
ஊடகத் தகவல்களின்படி, அவர் நியமனம் செய்ய விரும்பிய கார் வெளியுறவு மந்திரிப்
பதவிக்கு என்பது முற்றிலும் தனிப்பட்ட காரணங்களை ஒட்டி அவருடைய முக்கியமான
ஆதரவாளர்களால் நிராகரிக்கப்பட்டுவிட்டது.
ஆளுமைத்தன
மோதல்களை வலியுறுத்துவது என்பது 2010 ஆட்சி மாற்றத்தின் மையத்திலிருந்த வெளியுறவுக்
கொள்கைகளை மறைக்கத்தான் உதவியது; இது அதற்குப் பின் 20 மாதங்களில்
தீவிரமடைந்துள்ளது. ஆஸ்திரேலிய ஆளும் வர்க்கம் நீண்டகாலமாக அதன் மூலோபாய நட்பு
நாடான அமெரிக்காவிற்கும், தற்பொழுது ஆஸ்திரேலியாவின் மிகப் பெரிய வணிகப் பங்காளியான
சீனாவிற்கும் இடையே ஏற்பட்டுள்ள பெருகிய அழுத்தங்களை ஒட்டி ஓர் அடிப்படையான
சங்கடத்தை எதிர்கொண்டிருக்கிறது.
அமெரிக்காவுடன் உடன்பாட்டிற்கு முற்றிலும் ஈடுபாட்டைக் கொண்டிருந்த ருட், அதே
நேரத்தில் அழுத்தங்களைக் குறைப்பதற்காக சீனா பூகோள அரசியல் நலன்களைச் சற்று
ஏற்குமாறு வாஷிங்டனுக்கு ஊக்கம் கொடுத்தார். ஆனால் சீனாவுடன் இயைந்து செல்லுவதற்கு
ஒபாமா நிர்வாகம் தயாராக இல்லை. அது தன்னுடைய ராஜதந்திர முறை, மூலோபாய அழுத்தங்களை
அப்பிராந்தியம் முழுவதும் தீவிரப்படுத்தி தன் செல்வாக்கிற்கு போட்டித்திறன் எனக்
கருதும் சீனாவை குறைமதிப்பிற்கு உட்படுத்த முயல்கிறது.
வாஷிங்டனுடன் நெருக்கமான உறவுகளைக் கொண்டிருக்கும் ஒரு சில உட்பிளவுச்
செல்வாக்காளர்களால் ருட் அகற்றப்பட்டார். விக்கிலீக்ஸில் அமெரிக்கத் தூதரகத்தில்
“பாதுகாப்பான
ஆதாரம்”
என்று அம்பலப்படுத்தப்பட்ட மார்க் அரிப், ஒரு முக்கிய பங்கை இதில் கொண்டிருந்தார்.
பிரதம மந்திரியானவுடன் கில்லார்ட் ஒபாமா நிர்வாகத்துடன் இணைந்த வகையில்தான்
உடனடியாகச் செயல்படத் தொடங்கினார். கடந்த நவம்பர் மாதம் கான்பெர்ராவிற்கு ஜனாதிபதி
ஒபாமா வருகை புரிந்தபோது, அவர் அமெரிக்க மரைன்கள் டார்வினில் தளம் கொள்ளுவர்
என்றும் ஆஸ்திரேலிய வான், கடற்படைத் தளங்கள் அமெரிக்க இராணுவத்திற்குத்
திறந்துவிடப்படும் என்றும் அறிவித்தார்.
ஆனால்
கில்லார்ட் பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளபடி, வெளிநாட்டுக் கொள்கையில் அவருக்கு
உரிய தேர்ச்சி கிடையாது. அதுதான் கார் நியமனத்தில் வெளிப்பட்டுள்ளது. அவர்
ஆஸ்திரேலிய-அமெரிக்க உடன்பாட்டில் தீவிர ஈடுபாடு கொண்டிருந்தாலும், அவருடைய வலைத்
தளங்கள் வெளிப்படுத்தியுள்ளது போல் காரின் நிலைப்பாடு ஒபாமா நிர்வாகத்திடம்
ருட்டினுடையதை விடக் கூடுதலான இணக்கத்தைக் காட்டவில்லை.
கடந்த
நவம்பர் மாதம் ஒபாமா-கில்லர்ட் அறிக்கையைத் தொடர்ந்து கார் வலைத் தளத்தில்
எழுதினார்:
“மிகச்
சிந்தனை உணர்வுடன் கூடிய அமெரிக்கக் கொள்கை பசிபிக் பகுதியில் பெருகிய சீனப் பங்கை
ஏற்றுக் கொண்டு, அதையொட்டி இருக்கும் விதிகளையும், நிபந்தனைகளையும் பற்றிப்
பேச்சுவார்த்தை நடத்தும்....இந்நாட்டின் தேசிய நலனை ஒட்டி அமெரிக்காவிற்கும்
சீனாவிற்கும் இடைய ஒரு சமாதான வழியில் பசிபிக் இருப்பதைக் காண்பதுதான் சிறப்பு
என்பது வெளிப்படை. ஆஸ்திரேலிய மண்ணில் அமெரிக்க இராணுவம் நிலைப்பாடு கொள்ளுதல்
என்பது, இங்கு நிரந்தரமாக இருக்கக் கூடாது. அது ஆஸ்திரேலியாவை ஒரு ஒகினாவா போல்
செய்துவிடும். அவர்கள் வந்து போவதையோ, கப்பல்கள் வருவதோ தவறு இல்லை, அவைகள்
அணுவாயுதங்களை வைத்திருந்தாலும், வைத்திருக்காவிட்டாலும். அதுதான் உடன்பாடு
என்பதின் பொருள். உடன்பாட்டுப் பங்காளிகள்தான் நாம்; ஆனால் மன்னிப்பு ஏதும் கோர
வேண்டிய தேவை இல்லாமல், விமானத் தளத்தைக் கொண்ட ஒரு போர்க்கப்பல் அல்ல.”
டிசம்பர்
1ம் திகதி கார் எழுதினார்:
“சீனாவின்
விழைவுகள் மற்றும் அமெரிக்கத் தேசிய நலன்களுக்கு இடையே சமாதானமான இணக்கம் என்பதை
இலக்காக நாம் கொண்டிருக்கிறோமா? மரைன்கள் வடக்குப் பகுதியில் மாறி மாறி வருவர்
என்னும் அறிவிப்பை அமெரிக்க ஜனாதிபதியின் சீனாவைத் தாக்கிய விந்தையான உரை நேரத்தில்
எதற்காக அறிவிக்க அனுமதித்தோம்? இத்தகைய வெளியுறவுக் கொள்கை முடிவுகளை யார்
எடுக்கின்றனர், எத்தகைய விவாதங்கள் நடைபெறுகின்றன? ... சீனாவைக் கட்டுப்படுத்த
வேண்டும் என்பதற்காக திகைப்புடன் நடைபெறும் செயல்களில் நம் அரசாங்கம்
அமெரிக்கர்களுடன் இணக்கம் காட்டுவது என்னும் பெரிய தவறைச் செய்து விட்டது போல்
தோன்றுகிறது.”
இந்நிகழ்வுகளில் ஒரு பொது இழை ஓடுகிறது; 2010 ஆட்சி மாற்றத்தில் இருந்து காருக்குக்
கொடுத்த அழைப்பு திரும்பப் பெறப்பட்டது வரை. தொழிற் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள
கொந்தளிப்பு—இது
நாட்டின் மிகப் பழைய அரசியல் கட்சி ஆகும்—தன்
அரசியல் மற்றும் இராணுவ ஒப்பந்தத்தை அமெரிக்காவுடன் கொண்டுள்ள நிலையில், சீனாவுடன்
இதன் பெருகிய பொருளாதார நிலைப்பாடு இருக்கையில் ஆஸ்திரேலிய ஏகாதிபத்தியத்தின் தீவிர
சங்கடத்தைத்தான் பிரதிபிலிக்கிறது. இந்த நெருக்கடி வரவிருக்கும் காலத்தில்
அமெரிக்க-சீன அழுத்தங்க்கள் தீவிரமாகும்போது இன்னும் மோசமாகத்தான் போகும். |