WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா
:
பிரான்ஸ்
French President Sarkozy’s re-election bid appeals to extreme
right
பிரெஞ்சு ஜனாதிபதி
சார்க்கோசியின்
மீண்டும் பங்குபெறும்
முயற்சி தீவிர வலதிற்கு முறையிடுகிறது
By Pierre Mabut
29 February 2012
பெப்ருவரி
15ம்
திகதி,
வலதுசாரி பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசி உத்தியோகபூர்வமாக ஏப்ரல் மாதம்
நடக்கவிருக்கும் தேர்தலில் தான் மீண்டும் போட்டியிடப்போவதை அறிவித்தார்.
பெப்ருவரி மாதம்
OpinionWay
நடத்திய சமீபத்தி கருத்துக்கணிப்பில் அவர் சோசலிஸ்ட் கட்சியின்
(PS)
வேட்பாளர் பிரான்சுவா ஹோலண்டிற்கு அருகே நெருங்கி வருவதைக் காட்டுகிறது;
பிந்தையவர்
29
சதவிகிதமும் சார்க்கோசி
23
சதவிகித ஆதரவைக் கொண்டுள்ளனர்.
நவ பாசிசத் தேசிய முன்னணியின் Marine Le Pen
மூன்றாவது இடத்தில்
16.5
சதவிகிதத்தைப் பெற்று நிற்கிறார்.
ஹோலண்டுடன் இரண்டாம்
சுற்றுத் தேர்தல்களில் சார்க்கோசி
16
சதவிகித வித்தியாசத்தில்
42
க்கு
58
சதவிகிதம் என்ற வகையில் தோல்வி அடைவார் என்று காட்டுகின்றன;
ஆனால் இந்த இடைவெளி கடந்த வாரம் இரு புள்ளிகள் குறைவாயின.
தனது மீண்டும்-தேர்தலில்
பங்குபெறும் முயற்சிக்கு சார்க்கோசி ஜேர்மனிய சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெலுடைய
ஆதரவைப் பெற்றுள்ளார்;
அவருடன் இணைந்து இவர் கிரேக்கம்,
இத்தாலி உட்பட,
பல ஐரோப்பிய நாடுகளில் சிக்கன நடவடிக்கைகளைச் சுமத்தவும் தொழில்நுட்பவாதிகளின்
அரசாங்கத்தைச் சுமத்தவும் செயல்பட்டுள்ளார்.
மேர்க்கெல் அறிவித்தார்:
“ஒவ்வொரு
மட்டத்திலும் நான் சார்க்கோசிக்கு ஆதரவு கொடுப்பேன்,
ஏனெனில் நாங்கள் ஒரே அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்….
நம்முடைய
நண்பர்களின் கட்சிகளுக்கு ஆதரவைக் கொடுப்பது இயல்பே ஆகும்.”
பிரித்தானியாவின்
கன்சர்வேடிவ் பிரதம மந்திரி டேவிட் காமெரோன் இதே உணர்வைத்தான் எதிரொலித்துள்ளார்.
மேர்க்கெல் சார்க்கோசியுடன் கட்டமைத்த உத்வேகத்தைத் தொடர்ந்து ஐரோப்பா மீது
ஐரோப்பிய நிதிய உறுதிப்பாட்டுக் கருவியின் மூலம் சமூகச் சிக்கனங்களைச் சுமத்தவும்,
ஒவ்வொரு நாட்டில் அரசியல் அமைப்பிலும் சேர்ப்பதற்கு வாக்களிப்பதற்காக வரவு-செலவுத்
திட்டப் பற்றாக்குறைகள் அகற்றப்பட வேண்டும் என்னும்
“தங்க
விதியையும்”
சுமத்தவும் விரும்புகிறார்.
ஹோலண்டும்
PS
உம் மாநில வரவு-செலவுத்
திட்டங்களிலும் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரங்களிலும் ஆழ்ந்த வெட்டுக்கள்
வரவேண்டும் என்று ஆதரவு கொடுக்கையில்,
சார்க்கோசியின் ஆழ்ந்த செல்வாக்கற்ற சான்றுகளுடன் ஒதுக்கி வைத்துக் கொள்வது என்பது
இழிந்த முயற்சியாகும்.
“தங்க
விதி என்பது….
நாமும் அதே இலக்கைத் தொடர்கிறோம் என்று நான் நம்ப விரும்புகிறேன்,
அதாவது பொதுக் கடன் மீது முழுக் கட்டுப்பாட்டைக் கொள்வது என;
ஆனால் அதை அடைவதற்கு அதே பாதையை நாங்கள் முன்வைக்கவில்லை”
என்றார் அவர்.
இத்தகைய ஆழ்ந்த செல்வாக்கற்ற தன்மையைக் கடப்பதற்கு,
சார்க்கோசி வெற்றுத்தன
ஜனரஞ்சகக் கருத்துக்களையும் முறையீடுகளையும் வலதுசாரி உணர்வைப் பெறும் நோக்கத்துடன்
முயல்கிறார்.
பெப்ருவரி
19ம்
திகதி அவர் மார்சேயில் முதல் பிரச்சார அணிவகுப்பின்போது,
தான்
“மக்களின்
வேட்பாளர்”
என்று அறிவித்தார்.
லீல்லில் அவர்
“தனது
உழைப்பில் வாழ விரும்பும் பிரான்சின் சார்பில் நான் பேச விரும்புகிறேன்”
என்றார்.
தான் பிரான்ஸின் தொழிலாளர்களுடைய வேட்பாளர் என்னும் சார்க்கோசியின் கூற்று,
அவருடைய வேட்புத் தன்மையை மீட்பதற்கு எதற்கும் உதவாது;
அதுவும் அவருடைய ஆழ்ந்த தொழிலாளர்-விரோதப்
போக்குச் சான்று இருக்கும் நிலையில்.
2008
ஆண்டு நிதிய நெருக்கடியின் விளைவுகளில் இருந்து ஆளும் வர்க்கத்தைக் காப்பாற்ற
வங்கிகளுக்கும் தொழில்துறைக்கும் தொழிலாளர்கள் இழப்பில் பிணை எடுப்புக்களைக்
கொடுத்த வகையில் சார்க்கோசி செயற்பட்டார். வங்கிகளுக்கு நூற்றுக்கணக்கான
பில்லியன்கள் மற்றும் டஜன் கணக்கான ஆலைகளை முட வழிவகை செய்த கார்த்தொழில் பிணை
எடுப்பிற்கு பில்லியன்களைக் கொடுத்ததின் மூலமும் சார்க்கோசி தொழிலாளர்களின் வேலைகள்
மற்றும் ஊதியங்களுக்கு எதிரான தாக்குதல்களை மேற்பார்வை இட்டுள்ளார். இவருடைய பதவி
வரைக்காலத்தில் 1.33 மில்லியன் தொழிலாளர்கள் வேலைகளை இழந்துள்ளனர்; அதில்
தொழில்துறையில் இழக்கப்பட்ட 500,000 வேலைகளும் அடங்கும். ஓய்வூதியங்கள் பலமுறை
பெரும் மக்கள் எதிர்ப்புக்கள், வெகுஜன ஆர்ப்பாட்டங்களை மீறி வெட்டுப்பட்டுவிட்டன.
அதே நேரத்தில் சார்க்கோசி பிரான்ஸை நேட்டோவின் கட்டுப்பாட்டு அமைப்பின் கீழ்
மீண்டும் ஒருங்கிணைத்து, பகிரங்கமாக ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் அமெரிக்காவின்
போர்களுக்கும் ஆதரவைக் கொடுத்தார். இதன்பின் லிபியாவிற்கு எதிராக 300 மில்லியன்
ஈரோக்கள், 50,000 உயிர்கள் இழக்கப்பட்ட தன்மையைக் கொண்டிருந்த, லிபியாவிற்கு எதிரான
ஏகாதிபத்தியப் போர் ஒன்றையும் தொடக்கினார். சந்தைப் பறிமாற்ற விகிதங்களில் 2010
பிரெஞ்சு இராணுவ வரவு-செலவுத் திட்டம் 65 பில்லியன் ஈரோக்களாக இருந்தது. இது
அமெரிக்கா, சீனாவிற்கு அடுத்து உலகின் மூன்றாம் பெரிய இராணுவ வரவு-செலவுத்
திட்டமாகும்.
ஜனநாயக உரிமைகள் மீதும் சார்க்கோசி ஆழ்ந்த தாக்குதல்களை நடத்தியுள்ளார். 2011
ஆண்டில் மிக அதிக அளவிற்கு 33,000 குடியேறியவர்கள் நாட்டை விட்டு
வெளியேற்றப்பட்டனர்; இதைத்தவிர, சார்க்கோசி பர்க்காவிற்குத் தடை, இனவழியில்
ரோமாக்களை இலக்கு கொண்டு நாடுகடத்தியது ஆகிய சட்டவிரோதச் செயல்களையும்
செய்துள்ளார்.
தீவிர வலது தேசிய முன்னணியின் (FN)
வாக்காளர்களின் ஆதரவைப் பெற வேண்டும் என்னும் சார்க்கோசியின் முழு உணர்வுடன் கூடிய
மூலோபாயத்தை இது பிரதிபலிக்கிறது; தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தில் இப்பொழுது அவர்
தொடரும் நவ பாசிச உணர்விற்கு முறையீடு செய்தல் என்னும் மூலோபாயம் என்பதை இது
பிரதிபலிக்கிறது.
ஆயினும்கூட, சார்க்கோசி
FN
ஐ ஈர்க்கும் திட்டமிட்ட சைகைகளைத்தான் தொடர்ந்து கொடுக்கிறார். தேர்ந்தெடுத்தால்
தான் எப்படி செயற்பட உள்ளேன் என்பதை விளக்குகையில் சார்க்கோசி தன் பிற்போக்குத்தன,
தந்தை நிலையில் இருந்து கொடுக்கப்படும் முறையீடுகளான
“பணி”,
“பொறுப்பு”
மற்றும்
“அதிகாரம்”
ஆகியவற்றைப் பற்றி விவரித்தார்; அவைதான் அவருடைய 2007 தேர்தல் பிரச்சாரத்திலும்
ஆதிக்கம் கொண்டிருந்தன. பெப்ருவரி 10ந் திகதி
Figaro Magazine
க்குக் கொடுத்த பேட்டி ஒன்றில், அவர்,
“தொழிலாளர் பிரிவுச்
செலவினங்களைக் குறைக்கும் அனைத்தும், முயற்சிக்கு வெகுமதி, தகுதிக்கு வெகுமதி,
அரசின் தர்மத்துடன் வேறுபாடுகளைக் களைதல், ஆகியவைகளை முறையாகத் தொடர்ந்து
செயல்படுத்தப்பட வேண்டும்”
என்றார்.
தேர்ந்தெடுக்கப்பட்டால்,
“அரசியலமைப்புத்
தடுப்புக்கள்”
என்று அவர் மாற்றுவடிவத்தில் குறிப்பிடும் பொதுசன கருத்து வாக்கெடுப்பைக்
கூடுதலாகப் பயன்படுத்த இருப்பதாக மார்சேயில் அவர் அறிவித்தார். இதற்கு அவர் இரு
உதாரணங்களைக் கொடுத்தார்: வேலையின்மை மற்றும் குடியேறுவோர் பிரச்சினைகள். இரண்டுமே
வலதுசாரி, தொழிலாளர் எதிர்ப்பு உணர்வைத் தூண்டும் இலக்குகளாகப் பயன்படுத்தப்படும்.
வேலை இல்லாதவர்கள் ஏதேனும் வேலைப்பயிற்சி பெறும் கட்டாயம், மற்றும் முதல் வேலையை
ஏற்றல், இல்லாவிடில் அனைத்து பொதுநல உதவியும் மறுக்கப்படல் என்பது பற்றியும் ஒரு
வாக்கெடுப்பை சார்க்கோசி விரும்புகிறார்.
பெப்ருவரி 22ந் திகதியன்று, ஒரு தொலைக்காட்சி நிலையத்திற்குக் கொடுத்த பேட்டியில்,
சார்க்கோசி குறைந்தப்பட்ச பொதுநல உதவியான (RSA - 418
யூரோக்கள் மாதத்திற்கு ஒரு
வயது வந்தவருக்கு) நீண்டக்காலம் வேலையில் இல்லாதவர்களுக்குக் கொடுத்தல் என்பற்கு
எதிராக வலதுசாரி எதிர்ப்புக் கருத்துக்களுக்கு ஆதரவு கொடுக்கும் வகையில் தன்
தாக்குதலைகளை தொழிலாள வர்க்கத்தின் மீது கொண்டார். அப்படி வேலையில் இல்லாதவர்கள்
சமூக சேவையைக் கட்டாயமாக வாரத்திற்கு 3 மணி நேரம் செய்ய வேண்டும், அதற்கு
குறைந்தப்பட்ச ஊதியமான மணிக்கு ஒன்பது யூரோக்களைப் பெற வேண்டும் என்று அவர் அழைப்பு
விடுத்துள்ளார். இத்திட்டத்தை ஒட்டி ஒரு மில்லியன் வேலையில் இல்லாதவர்கள்
பாதிக்கப்படுவர்.
“உழைப்பிற்கு
அதிக வெகுமதி வேண்டும், அரசாங்கத்திடம் உதவி பெறுபவர்களுக்கு அல்ல”
என்று சார்க்கோசி உபதேசித்தார்.
சார்க்கோசி நிர்வாகத்தின் உயர்மட்ட அதிகாரிகளும் குறியீட்டு முறையில் குடியேற்ற
எதிர்ப்பு உணர்வு வகையிலான முறையீடுகளைச் செய்கின்றனர்; உதாரணமாக உள்துறை மந்திரி
Claude
Gueant
பெப்ருவரி 4ம் திகதி
“எல்லா நாகரிகங்களும் சம மதிப்பு உடையவை
அல்ல”
என்று கூறினார்
சட்ட மன்றத் தேர்தல்களில்
FN
பதவியை அடைவதை எளிதாக்கவும்
தான் முயற்சிக்கப்போவதாக சார்க்கோசி அறிவித்துள்ளார்; இது ஜனாதிபதித்
தேர்தல்களுக்குப் பின் ஜூன் 2012 ல் வருகிறது. அவருடைய மார்சேய் உரையில், அவர்
“விகிதாசாரப்
பிரதிநிதித்துவத்தை ஒட்டிய”
முறையை முன்வைத்துள்ளார்;
“இதனால்
அனைத்து முக்கிய அரசியல் போக்குகளுக்கும் பிரதிநிதிகள் கிடைக்கும். |