WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் :
முன்னோக்கு
A global
slide into depression
மந்தநிலைமைக்குள் ஓர் உலகளாவிய சறுக்கல்
Andre Damon
22 June 2012
தற்போது
2008
வசந்தகாலத்தில் லெஹ்மன் பிரதர்ஸ்
பொறிவு ஏற்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு நெருக்கமாக வந்திருக்கிறது.
கடந்த சில மாத சம்பவங்கள்,
அதை தொடர்ந்து ஏற்பட்ட
நிதியியல் பொறிவிலிருந்து எழுந்த நெருக்கடியின் இரண்டு அடிப்படை அம்சங்களை
அடிக்கோடிடுகிறது: 1)
அது தற்காலிகமானதல்ல,
உள்பரவி நிற்பதாக உள்ளது;
2) அது உலகின் ஒவ்வொரு
நாட்டையும் பாதிக்கும் விதத்தில்,
உலகளாவியது.
உலகளவில் ஒருங்கிணைந்த
முதலாளித்துவம் ஓர் உலகளாவிய ஒருங்கிணைந்த பேரழிவை ஏற்படுத்தி உள்ளது.
இந்த பகுப்பாய்வை
உறுதிப்படுத்தும் விதமாக இந்த வாரம் தொடர்ச்சியாக பல பொருளாதார புள்ளிவிபரங்கள்
வெளிப்பட்டன.
ஐரோப்பிய கடன் நெருக்கடி
ஜேர்மனியின் பொருளாதார வளர்ச்சியால் சரிகட்டப்படும் அல்லது ஒட்டுமொத்தமாக மேற்கின்
பலவீனம் ஆசியாவின் பலமான உற்பத்தியால் சம அளவிற்கு ஈடுகட்டப்படும் என்று
எதிர்பார்த்த முதலாளித்துவ விமர்சகர்களின் நம்பிக்கைகள் கடந்து செல்லும் ஒவ்வொரு
நாளும் துடைத்து அழிக்கப்படுகின்றன.
உண்மையில் சீனா மற்றும்
ஜேர்மனி இரண்டு நாடுகளின் உற்பத்தியும்,
ஏற்றுமதி வீழ்ச்சியால்
பெரும்பகுதி,
சுருங்கி வருகின்றன.
வியாழனன்று வெளியான
புள்ளிவிபரங்களின்படி,
ஜேர்மனியின் மொத்த நுகர்வு
மேலாண்மை குறியீடு
(composite purchasing managers index)
மூன்று ஆண்டுகளில் இல்லாதளவிற்கு
குறைந்துள்ளது.
அது ஒரு மாதத்திற்கு முன்னர் இருந்த
49.3
சதவீதத்தில் இருந்து ஜூனில்
48.5
சதவீதமாக வீழ்ச்சி அடைந்துள்ளது.
HSBC சீனா உற்பத்தி நுகர்வு
மேலாண்மை குறியீடும் (HSBC
China Manufacturing Purchasing Managers’ Index)
இதேபோல மே மாதத்தில் இருந்த
48.4
சதவீதத்தில் இருந்து ஜூனில்
48.1
சதவீதமாக வீழ்ந்தது.
ஏனைய பிரதான
"அபிவிருத்தி
அடைந்துவரும்"
நாடுகளும் ஒன்றும் சிறப்பாக இல்லை.
இந்தியாவின் பொருளாதாரம் இந்த
ஆண்டின் முதல் காலாண்டில் வெறும்
5.3
சதவீதம் மட்டுமே வளர்ச்சி கண்டது.
இது ஒன்பது ஆண்டுகளில்
இல்லாதளவிற்கு குறைந்தபட்ச வளர்ச்சி விகிதமாகும் என்பதோடு
2011இல்
இருந்து சுமார் நான்கு சதவீத வீழ்ச்சியாகும்.
பிரேசிலிய மத்திய வங்கி கடந்த
வாரம் கூறுகையில்,
அனேகமாக நாட்டின் பொருளாதாரம் முந்தைய
ஓராண்டுடன் ஒப்பிட்டு பார்த்தால் ஏப்ரலில் சுருங்கி இருந்தது,
இது
2009க்கு
பிந்தைய காலக்கட்டத்திலிருந்து ஏற்பட்ட முதல் இதுபோன்ற ஆண்டு வீழ்ச்சியாகும்.
முதலாளித்துவத்தின்
மையமாக விளங்கும் அமெரிக்காவில்,
பெரிதும் சாத்தியமற்ற ஒரு
"மீட்சியைத்"
தொடர்ந்து,
வெளிப்படையாகவே ஓர் ஆழ்ந்த
நிலைமுறிவாக இருந்ததை ஒபாமா நிர்வாகம் அதன் தேனொழும் சொற்களோடு மூடிமறைக்க
விரும்புகிறது.
பொருளாதாரம் ஆரோக்கியமாக இருப்பதற்கான
அனைத்து அடிப்படை குறியீடுகளும் மார்ச்சில் இருந்து குறைந்துள்ளதாகவும்,
ஆனால் விடையிறுப்பாக எந்தவொரு
ஆழ்ந்த முறைமைகளும் முன்வைக்கப்படவில்லை என்றும் பெடரல் ரிசர்வ் இந்த வாரம்
குறிப்பிட்டது.
பெருநிறுவனங்கள்
வேலைக்கு ஆட்களை எடுப்பதை நிறுத்தி வருகின்றன;
வங்கிகள் பாரிய
வேலைவாய்ப்பின்மை நிலைமைகளின் கீழ் கடன்கள் அளிப்பதைக் குறைத்து வருகின்றன.
இந்த வாரம்,
வேலையற்றோர் நலன்களுக்கான புதிய
விண்ணப்பங்களைப் பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை மிக உயர்ந்த மட்டங்களில் இருந்தது.
நான்கு-வார
காலத்தில் செய்யப்பட்ட புதிய விண்ணப்பங்களின் சராசரி,
டிசம்பருக்கு பின்னால்
ஏற்பட்டிருக்கும் அதன் அதிகபட்ச அளவாகும்.
தொழிலாளர் நலத்துறையின்
தகவலின்படி,
இருக்கும் வேலைகளின் எண்ணிக்கை
ஏப்ரலில் 325,000
ஆக குறைந்துவிட்டது.
இதுவே
2008
செப்டம்பருக்குப் பின்னால் ஏற்பட்ட
அதிகப்பட்ச மாதாந்திர வீழ்ச்சியாக உள்ளது.
ஐரோப்பாவோ ஒரு
நெருக்கடியிலிருந்து இன்னொன்றுக்கு என நகர்ந்து கொண்டிருக்கிறது.
நிதியியல் வட்டாரங்களில் இருள்
திரும்புகிற உணர்வு பரவுவதற்கு முன்னதாகவே,
ஸ்பெயின் வங்கி பிணையெடுப்பைத்
தொடர்ந்து ஏற்பட்ட பங்குச்சந்தை ஏற்றம்,
ஒரு நாளைக்கு கூட நீடிக்கவில்லை.
அரசியல் ஸ்தம்பித்து நிற்கிறது
என்ற பொதுவான உணர்வு,
மெக்சிக்கோவில் நடந்த ஜி20
மாநாட்டின் நொடிந்துபோன
முடிவுகளால் நிரம்பி இருந்தது.
ஐரோப்பா குறித்து ஒரு பொதுவான
உடன்படிக்கையை தீர்மானிக்க இருந்த அந்த மாநாடு,
ஆனால் உண்மையில் பிரதான
சக்திகள் மத்தியில் ஏற்பட்ட முரண்பாடுகளோடு முடிந்தது.
ஆளும் வட்டாரங்களின்
தடுமாற்றத்திற்கு இடையில்,
மற்றும் பிரதான சக்திகளுக்கு
இடையில் அதிகரித்துவரும் கசப்பான முரண்பாடுகளுக்கு முன்னிலையில்,
இந்த நெருக்கடிக்கு
முதலாளித்துவம் எவ்வாறு விடையிறுப்பைக் காட்ட வேண்டுமென்ற,
அதாவது,
சற்றும் இரக்கமில்லாமல்,
தொழிலாளர் வர்க்கத்தின் மீது
தீர்க்கமாக,
முடிவில்லாமல் தாக்குதலை நடத்தும்,
ஒரு கருத்துருவைக்
கொண்டிருக்கிறது.
நெருக்கடியின் ஒவ்வொரு கட்டத்திலும்
வங்கி பிணையெடுப்புகளோடும்,
இன்னும் கூடுதலான
காட்டுமிராண்டித்தனமான சிக்கன நடவடிக்கைகளோடும்,
நவீன வரலாற்றில் செல்வவளத்தை
பெருமளவிற்கு மேல்நோக்கி திருப்புவதில் பக்கவாத்தியம் வாசித்து கொண்டு,
அது எதிர்வினையாற்றியது.
இந்த நெருக்கடி மிகமிக கசப்பான
வர்க்க யுத்தமோதலை வெளிபடுத்துகின்றது.
கிரேஸிற்கு என்ன
நடந்துள்ளதென்பது ஒவ்வொரு நாட்டிலும் என்ன தயாரிப்பு செய்யப்பட்டு வருகிறது என்பதை
உலக தொழிலாளர் வர்க்கத்திற்கு எடுத்துக்காட்டுகின்றது.
அந்நாட்டின் பாதிக்கும்
மேற்பட்ட இளைஞர்கள் உட்பட நான்கால் ஒருபகுதி உழைப்புசக்தி வேலையின்றி உள்ளது.
1930களின் பெருமந்த நிலைமையை
நினைவூட்டிய ஒரு காட்சியாக,
ஏதென்சில் இலவச பண்டங்களின்
வினியோகத்திற்காக ஆயிரக்கணக்கானவர்கள் வரிசையில் நின்றதைக் காண முடிந்தது.
ஒரு அபிவிருத்தி அடைந்த
நாடு என்ற அந்தஸ்திலிருந்து
"அபிவிருத்தி
அடைந்துவரும்"
நாடு என்ற அந்தஸ்திற்கு கீழிறங்கிய
உலகின் முதல் நாடு என்று அதன் மீள்பார்வையில் கிரீஸ் பொருளாதாரத்தை கொண்டு போய்
நிறுத்தியுள்ளதாக,
வியாழனன்று,
ஓர் உலகளாவிய பங்குச்சந்தை
குறியீடு தொகுப்பு நிறுவனமான
MSCI
கூறியது.
எவ்வாறிருந்த போதினும்,
“அபிவிருத்தி அடைந்துவரும் நாடு"
என்று குறிப்பிடுவதுமே
முற்றிலும் தவறாக நிறுத்தப்பட்டதாகும்.
உலக முதலாளித்துவம்,
பெரிய வங்கிகள் மூலமாக,
கிரீஸ் தொழிலாளர் வர்க்கத்தின்
வாழ்க்கை நிலைமைகளில் ஒரு தலைகீழ் அதிர்ச்சியைத்
(shock reversal)
திணிக்கிறது.
ஒரு பொருளாதார விமர்சகர்
குறிப்பிடுகையில், “ஒருவிதத்தில்
அவர்களுக்கு நிஜமாகவே ஒரு புதிய விதமான அபிவிருத்தி அடைந்து சேதமடைந்த சந்தைகள்
தேவைப்படுகின்றது,”
என்றார்.
ஆளும் வர்க்கத்தின்
பிரதிநிதிகள்,
அவர்களின் நடவடிக்கைகள் ஒரு வரலாற்று
பின்னோக்கி திரும்புதலை (a
historic retrogression)
உருவாக்கி கொண்டிருக்கிறார்கள் என்பதை ஒப்புக் கொள்கின்றனர்.
ஜனவரி
2008இல்,
லெஹ்மன் பிரதர்ஸ் பொறிவிற்கு பல
மாதங்களுக்கு முன்னர்,
அமெரிக்க வீட்டுத்துறை
குமிழியின் ஒரு பொறிவிற்கான அதிகரித்துவந்த அறிகுறிகளுக்கு இடையில்,
உலக சோசலிச வலைத்தளம்
பின்வருமாறு
விளக்கியது:
“உலக நிநியியல் சந்தைகளின்
கொந்தளிப்பு வெறுமனே ஒரு தற்காலிக நிலைமுறிவின் வெளிப்பாடல்ல,
மாறாக ஏற்கனவே சர்வதேச அரசியலை
ஸ்திரமின்றி செய்துவரும் ஓர் ஆழ்ந்த நிலைத்துபரவும் அமைப்புரீதியிலான முறிவாகும்.”
ஏதோவொருவிதத்தில் ஒரு புதிய
உலகளாவிய சமநிலைமையை,
உலக பொருளாதார வளர்ச்சிக்கான ஒரு புதிய
அடித்தளத்தை கண்டுபிடித்துவிடலாம் என்று முதலாளித்துவ விமர்சகர்களால்
தூண்டிவிடப்பட்ட நம்பிக்கைகள் நசுங்கி போயின.
மிகவும் ஆழ்ந்த விதத்தில்,
இந்த நெருக்கடியானது உலக
முதலாளித்துவ அமைப்புமுறையின் ஒரு நெருக்கடியாகும்.
இந்த நெருக்கடியின்
உலகளாவிய குணாம்சத்திற்கு தொழிலாளர் வர்க்கத்திடமிருந்து ஓர் உலகளாவிய விடையிறுப்பு
அவசியப்படுகிறது.
அது என்னவென்றால்,
ஒவ்வொரு நாட்டின்
தொழிலாளர்களும் அவர்களின் பொதுவான வர்க்க நலன்களால்,
அதாவது முதலாளித்துவ
அமைப்புமுறை உற்பத்திக்குள் இருக்கும் அவர்களின் பொதுவான உறவுமுறையால்
தீர்மானிக்கப்படும் நலன்களால்,
ஐக்கியப்படுத்தப்படுகிறார்கள்
என்ற மார்க்சியத்தின் அடிப்படை மூலக்கூற்றாகும்.
இது முன்னோருபோதும்
இல்லாதளவிற்கு தற்போது உண்மையாகி உள்ளது.
ஒரு தோற்றுபோன பொருளாதார
அமைப்புமுறையை இரக்கமின்றி பாதுகாப்பதில் ஆளும் வர்க்கம் உலக சோசலிச புரட்சிக்கான
பற்றியெறியும் அவசியத்தை,
கடந்து செல்லும் ஒவ்வொரு நாளும்,
எடுத்துக்காட்டுகின்றது. |