சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The Egyptian election

எகிப்தியத் தேர்தல்

Bill Van Auken
26 June 2012

use this version to print | Send feedback

முஸ்லிம் பிரதர்ஹுட்டின் வேட்பாளர் முகம்மது மோர்சி எகிப்திய ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றார் என்னும் அறிவிப்பு அந்நாட்டின் வரலாற்றில் ஒரு திருப்புமுனை என்று பரந்த அளவில் பாராட்டப்படுகிறது. சர்வதேசச் செய்தி ஊடகம் மோர்சியை, வோல் ஸ்ட்ரீட் ஜர்னலின்  சொற்களில் சொல்வதானால், எகிப்தின் முதல் முறையாகச் சுதந்திரமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜனாதிபதி என்று விவரிக்கிறது.

 

எகிப்து நாட்டின் ஊடகங்களே இன்னும் கூடுதலான பரபரப்பைக் காட்டி; நாளேடு Al-Shorouk  “மோர்சி மக்கள் உத்தரவின்பேரில் ஜனாதிபதியாகிறார்: புரட்சி  ஜனாதிபதி அரண்மனையை அடைகிறது என்ற தலைப்பை வெளியிட்டது.

இக்கூற்றுக்கள் உண்மையைத் தலைகீழாகத் திருப்பி விடுகின்றன. எகிப்தின் தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் இத்தகைய கட்டுக்கதைகளுக்கு சிறிதும் நம்பகத்தன்மையைக் கொடுக்கக் கூடாது.

வெகுஜன ஆர்ப்பாட்டங்களும், எல்லாவற்றிற்கும் மேலாக பரந்த வெகுஜன வேலைநிறுத்தங்களின் ஒரு அலையும் அமெரிக்க ஆதரவுடன் எகிப்தின் சர்வாதிகாரியாய் திகழ்ந்த ஹொஸ்னி முபாரக்கை அகற்றி இப்பொழுது கிட்டத்தட்ட 17 மாதங்கள் ஆகிவிட்டன.  சர்வதேசத் தொழிலாளர் வர்க்கம் 2008 செப்டம்பர் உலகளாவிய நிதி உருக்குலைவைத் தொடர்ந்து  தன்னுடைய வேலைகள், வாழ்க்கைத் தரங்கள் மற்றும் அடிப்படை உரிமைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு அளித்த விடையிறுப்பின் உயர்ந்த மட்டமாக இத்தகைய புரட்சிகரப் போராட்டத்தின் வெடிப்பு அமைந்திருந்தது.

எகிப்தியத் தொழிலாளர்கள் வறுமை, சுரண்டப்படுதல், சமூகச் சமத்துவமின்மை, அரசியல் அடக்குமுறை என்ற நிலைக்கு முற்றுப் புள்ளி வைப்பதற்கு கிளர்த்தெழுந்தனர். முபாரக் ஆட்சியின் பாதுகாப்புப் படைகள் மற்றும் குண்டர்களுக்கு - அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆதரவும் ஆயுத உதவியும் இவர்களுக்கு இருந்தது - எதிராக அவர்கள் வீரத்துடன் போராடினர்; போராட்டத்தின் போக்கில் கிட்டத்தட்ட 1,000 பேர் உயிர்த்தியாகம் செய்திருந்தனர்; இப்போராட்டம் உச்சக் கட்டத்தை அடைந்து பெப்ருவரி 11, 2011ல் முபாரக் அகற்றப்பட்டார்.

ஆனால், கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டிற்குப் பின்னரும், முன்னேற்றமான வாழ்க்கைத் தரங்கள், வேலைகள், சமுகச் சமத்துவம், ஜனநாயகம் ஆகிய எகிப்தியத் தொழிலாளர்களின் கோரிக்கைகள் எதுவுமே பூர்த்தியாகி இருக்கவில்லை. மாறாக, அடக்குமுறை முதலாளித்துவ அரசாங்க எந்திரமும் மற்றும் நாட்டின் மீதான ஏகாதிபத்தியத்தின் மேலாதிக்கமும் இன்னமும் மாறாமல் தொடர்கின்றன; வெறுப்பைச் சம்பாதித்திருந்த முபாரக் பதவியில் இல்லை என்பது மட்டுமே மாற்றம்; சமீபத்தில் அவர் டோரா சிறையில் இருந்து கெய்ரோ மருத்துவமனை ஒன்றிற்கு மாற்றப்பட்டுள்ளார்.

முஸ்லிம் பிரதர்ஹுட்டின் மோர்சி ஜனாதிபதி அரண்மனையில் அமர்த்தப்பட்டதால் இந்த உண்மை மாறிவிடவில்லை. இது ஒரு “சுதந்திரமான மற்றும் நியாயமான” தேர்தலின் இறுதி விளைபொருள் அல்ல, மாறாக இராணுவ ஆட்சி நிலைமைகளின் கீழும் அத்துடன் வாக்கு உரிமை படைத்தவர்களில் பாதிப் பேர் புறக்கணித்த நிலைமையிலும் வாக்கெடுப்பு நடந்து, இதைத் தொடர்ந்து வலதுசாரி இஸ்லாமியவாதக் கட்சிக்கும் SCAF எனப்படும் ஆயுதப்படைகளின் தலைமைக்குழுவுக்கும் இடையே ஏற்பட்ட இழிவான கொல்லைப்புற வழி உடன்பாட்டைத் தொடர்ந்து இது நிகழ்ந்துள்ளது.

மோர்சி மற்றும் அவருடைய போட்டியாளர் (முன்னாள் விமானப் படைத் தலைவரும் முபாரக்கின் கடைசிப் பிரதம மந்திரியுமான) அஹ்மத் ஷபிக்கிற்கு இடையே இரண்டாம் சுற்று வாக்கெடுப்பு நடந்ததற்கு இடையில், SCAF ஓர் அரசியல் இராணுவ ஆட்சி மாற்றத்தைச் செயல்படுத்தி, இஸ்லாமியவாத ஆதிக்கம் இருந்த பாராளுமன்றத்தைக் கலைத்து, தனக்கே புதிய அரசியலமைப்பு இயற்றுவது குறித்த கட்டுப்பாட்டை அளித்துக்கொண்டு, புதிய சுற்று அடக்குமுறை, சித்திரவதைக்குப் பாதையை ஏற்படுத்திக் கொண்டது; இராணுவமும் அரசாங்க உளவுத்துறை அமைப்புக்களும் குடிமக்களைக் கைதுசெய்யலாம் என்ற ஆணை பிறப்பிக்கப்பட்டது. மேலும் ஒரு அரசியலமைப்பு சேர்க்கை மூலம் கலைக்கப்பட்டுவிட்ட பாராளுமன்றத்தின் அனைத்து சட்டமியற்றும் மற்றும் பட்ஜெட் அதிகாரங்களையும் தானே எடுத்துக் கொண்டது; குடிமக்களின் கட்டுப்பாட்டில் இருந்து இராணுவப் படைகளுக்கு முழுத் தன்னாட்சியை உத்தியோகப்பூர்வமாக நிறுவியது.

இராணுவத்தின் சொந்த வேட்பாளர்களில் ஒருவரான ஷபிக்கைக் காட்டிலும் மோர்சியை வெற்றி காணச் செய்ய செய்த முடிவுக்கு முன்னால் இராணுவத் தலைமைக்கும் பிரதர்ஹுட்டிற்கும் இடையே வார இறுதி முழுவதும் தீவிரமான பேச்சுவார்த்தைகள் நடந்திருந்தன. எகிப்திய மக்களின் முதுகுக்குப் பின்னால் நடைபெற்ற இப்பேச்சுக்களில் என்ன உடன்பாடுகள் ஏற்பட்டன என்பது வரவிருக்கும் நாட்களிலும் வாரங்களிலும்தான் தெளிவாகத் தெரியும். ஆனால் ஒன்று உறுதி: பிரதர்ஹுட் மற்றும் SCAF க்கு இடையே வந்துள்ள உடன்பாடு ஓர் எதிர்ப்புரட்சி அரசாங்கத்தைத்தான் தோற்றுவிக்கும்; அதன் முக்கிய நோக்கம் தொழிலாளர் வர்க்கத்தின் புரட்சிகரப் போராட்டங்களை நசுக்குவதாக இருக்கும்.

 

ந்த அம்சம் எகிப்து மற்றும் ஏகாதிபத்திய மையங்கள் இரண்டின் ஆளும் வட்டங்களுக்குள்ளும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்பது தேர்தல் அறிவிப்பைத் தொடர்ந்து எகிப்தியப் பங்குச் சந்தை ஒரே நாளில் பெரும் ஏற்றம் அடைந்ததின் மூலம் தெளிவாகியது. பிரதர்ஹுட்டின் தலைமை மற்றும் அதன் பொருளாதாரக் குழுவுடன் தனியாகப் பேச்சு நடத்திய அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் ”பொருளாதாரத் தரப்பில் சரியான அனைத்து அம்சங்களையும் எடுத்துரைத்து அந்த அமைப்பின் பிரதிநிதிகள் அமெரிக்காவுக்கு மறு உத்தரவாதத்தை அளித்துள்ளனர்” என்று கூறியதாக வோல் ஸ்ட்ரீட் ஜர்னல் தெரிவித்தது.

அவசரக்காலக் கடனாக 3.2 பில்லியன் டாலர் தொகையைப் பெறுவதான விடயத்தில் சர்வதேச நாணய நிதியத்துடன் ஒரு உடன்பாட்டை எட்டுவது SCAF-பிரதர்ஹுட் ஆட்சியின் உடனடி நோக்கங்களில் ஒன்று. இக்கடன் பொருளாதாரச் சீர்திருத்தங்கள் என்று கூறப்படுபவற்றுடன், அதாவது, மக்களில் 40 சதவீதம் பேர் நாள் ஒன்றிற்கு 2 டாலருக்கும் குறைவான பணத்தில் வாழ்க்கை நடத்தும் ஒரு நாட்டில் தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கை நிலைமைகளை இன்னும் கீழே தள்ளுகின்ற வகையிலான பெரும் சிக்கன நடவடிக்கைள் கடுமையாக மேற்கொள்ளப்படுவதுடன், பிணைக்கப்படும்.

எகிப்தியத் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் கடந்த ஒன்றரை ஆண்டின் வரவு செலவுக் கணக்கை கையிலெடுத்துக் கொண்டு, தங்களை வீரம் செறிந்த வேலைநிறுத்தங்கள் மற்றும் வெகுஜனப் போராட்டங்களில் இருந்து எதிர்ப்புரட்சிகர SCAF-முஸ்லிம் பிரதர்ஹுட் ஆட்சி நிறுவப்படுவதைக் காணும் நிலைக்கு கொண்டுவந்து நிறுத்தியிருக்கும் அரசியல் சக்திகள் மற்றும் வேலைத்திட்டங்கள் குறித்து பகுத்தாய்வது மிகவும் முக்கியமானதாகும். குறிப்பாக, போலி இடது அமைப்புக்களின் பங்கு பற்றி நெருக்கமான ஆய்வு தேவையாகும்; இந்த அமைப்புகள் தங்களை புரட்சிகர” “சோசலிச” அடைமொழிகளுடன் அழைத்துக் கொண்டாலும், முதலாளித்துவத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான தொழிலாள வர்க்கத்தின் முயற்சிகளை  இவை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை; மாறாக, இருக்கும் சமூக மற்றும் அரசியல் அமைப்புமுறைக்குள்ளாக தங்களுக்கு இன்னுமொரு பெரும் பாத்திரத்தைப் பெறத் துடிக்கின்ற நடுத்தர வர்க்கத்தின் வசதி படைத்த பிரிவினரைத் தான் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.

இந்த அடுக்கின் சரியான எடுத்துக்காட்டு தான் பெயருக்குப் பொருத்தம் இல்லாத புரட்சி சோசலிஸ்ட்டுக்கள் (RS)  என்னும்அமைப்பு; இது தொழிலாளர்களின் இரண்டாம் புரட்சி என்று எழுப்பப்பட்ட கோரிக்கைகளை எதிர்த்தது; மாறாக SCAF இராணுவத் தலைமை “ஜனநாய மாற்றத்திற்கா" ஒரு கருவி என்கிற பொய்யை நெறிப்படுத்த முனைந்தது. அரசியல் மற்றும் பொருளாதார அமைப்புமுறையில், கூடுதல் ஜனநாயகரீதியானதாகவும் ஒடுக்குமுறை குறைந்ததாகவும் அது ஆக அனுமதிக்கின்ற வகையில், சீர்திருத்தங்கள் செய்ய” SCAF நோக்கம் கொண்டிருப்பதாக சென்ற ஆண்டின் மே மாதத்தில் RS உறுதிப்பட அறிவித்திருந்தது.

பின்னர், ஏராளமான கைதுகள் மற்றும்  தொழிலாளர்கள், இளைஞர்ள் மீது இராணுவ விசாரணைகள் ஆகியவற்றின் எதிரொலியாக, SCAF க்கு மக்கள் எதிர்ப்பு பெருகிய நிலையில்,  தளபதிகளுக்கு மாற்றீடாக முஸ்லிம் பிரதர்ஹுட்டை RS  ஊக்குவித்தது; இராணுவ ஆட்சியுடன் பிரதர்ஹுட் ஒத்துழைத்திருந்த பாத்திரத்தை அது ஒதுக்கித் தள்ளியது. தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீன இயக்கம் அபிவிருத்தியடைவதைத் தலைசீவும் பொருட்டே அவர்கள் இவ்வாறு செய்தனர்.

ஜனாதிபதித் தேர்தலின் இரண்டாம் சுற்றில், RS  தன் ஆதரவை பிரதர்ஹுட்டிற்கு அளித்தது. மோர்சிக்கு வாக்கு என்பது எதிர்ப்புரட்சி” மற்றும் “பாசிசத்திற்கு எதிரான வாக்கு என அது கூறியது.

RS ன் அமெரிக்க சகாவான சர்வதேச சோசலிச அமைப்பின் வலைத்தளமான socialistworker.org இல் ஜூன்25 அன்று வெளிவந்த பேட்டி ஒன்றில் RS  ன் தலைவர் முஸ்தபா அலி அவருடைய அமைப்பு பிரதர்ஹுட் குறித்து பிரச்சாரம் செய்து வருகிற போலித்தோற்றங்களைப் பற்றிய குறிப்பைக் கொடுத்தார்; பிரதர்ஹூட் தான் இராணுவ ஆட்சி மாற்றத்தை நிறுத்தியதாக அவர் கூறியுள்ளார்.

 முஸ்லிம் பிரதர்ஹுட் தலைமை மீண்டும் SCAF உடன் சமரசம் செய்துகொள்ளுமா? அவர்கள் சதுக்கத்தில் நடந்தவெகுஜன அணிதிரட்டலைக் காட்டிக் கொடுப்பரா? SCAF நிர்ணயித்துள்ள விதிகளையும் உடன்பாட்டையும் அவர்கள் ஏற்பரா? போன்ற தொடர்ச்சியான கேள்விகளை அவர் எழுப்புகிறார்.

வற்றிற்கு விடை இல்லை என்பதுதான்  என்று ஜூன் 22 அன்று கொடுக்கப்பட்டுள்ள பேட்டியில் அலி கூறுகிறார். தடுமாற்றம், ஊசலாட்டம்” இருந்தாலும் பிரதர்ஹுட் ஆட்சிமாற்றத்தை நிறுத்த தெளிவானதொரு கோடு கிழிக்க வேண்டியுள்ளது” என்றார் அவர். இரண்டு நாட்களில் இந்த மதிப்பீடு முற்றிலும் திவாலானதாய் நிரூபணப்பட்டது.

 “இராணுவ ஆட்சி மாற்றத்திற்கு எதிராக அனைத்துப் புரட்சிகரச் சக்திகளின் ஒரு ஒன்றுபட்ட முன்னணியை”க் கட்டுவதே ”புரட்சிகர இடதின்” பணி” என்று தொடர்ந்து சொல்லும் அவர் அந்தப் புரட்சிகரச் சக்திகளின் பட்டியலில் முஸ்லிம் பிரதர்ஹுட் மற்றும் இன் பிற முதலாளித்துவ அரசியல் சக்திகளைத் தெளிவாகச் சேர்க்கிறார்.  ” இந்த ஒன்றுபட்ட முன்னணிக்குள்  வரும் வாரங்களில் நிகழவிருக்கும் ஜனநாயக அரசியல் கோரிக்கைகள் மற்றும் பொருளாதாரக் கொள்கைகள் ஆகிய இரண்டையும் இணைத்ததான ஒரு போராட்டத்தின் ஒரு குறிப்பிடத்தக்க பகுதியாக எகிப்தியத் தொழிலாள வர்க்கம் இருக்கும்” என்று அவர் கூறுகிறார்.

ஆக, இடது கட்சி என்பதாய் அழைக்கப்படும் இதன் நோக்கம் தொழிலாள வர்க்கத்தை முதலாளித்துவ முஸ்லிம் பிரதர்ஹுட்டிற்கு கீழ்ப்படியச் செய்வது தான்; முஸ்லீம் பிரதர்ஹூட்டோ SCAF இராணுவக் குழுவின் பெயரளவுத் தலைமையைத் தாங்க ஒப்புக் கொண்டுள்ளது. இந்தச் சூத்திரம் எகிப்தியத் தொழிலாளர்களின் கைகளையும், கால்களையும் கட்டி, அவர்களை அவர்களுடைய பெரும் விரோதிகளிடம் ஒப்படைக்கின்றதாகும்.

எகிப்தியத் தொழிலாளர்களுக்கு முன்னால் இருக்கும் ஒரே பாதை இத்தகைய எதிர்ப்புரட்சிகர, குட்டி முதலாளித்துவ அரசியலை உறுதியாக நிராகரிப்பதுதான். அதிகாரத்திற்கும் மற்றும் முதலாளித்துவ ஆட்சியைத் தூக்கியெறிவதற்குமான போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான வலிமையை அணிதிரட்டுவதற்கான ஒரு சர்வதேசிய சோசலிச முன்னோக்கின் அடிப்படையிலான ஒரு புதிய புரட்சிகரத் தலைமையை ஒழுங்கமைப்பது தான் ஒத்திப்போட முடியாத பணியாக முன்நிற்கிறது. இதன் பொருள் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் எகிப்தியப் பிரிவைக் கட்டுவது என்பதாகும்.