சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆபிரிக்கா  : எகிப்து

Egyptian junta installs Islamist Mursi as figurehead president

எகிப்திய இராணுவ ஆட்சிக்குழு இஸ்லாமியவாதி முர்சியை தமது பிரதிநிதியாக ஜனாதிபதி பதவியில் இருத்துகிறது

By Barry Grey 
25 June 2012

use this version to print | Send feedback

எகிப்தின் தலைமை ஜனாதிபதித் தேர்தல் ஆணையம் ஞாயிறன்று முஸ்லிம் சகோதரத்துவத்தின் (MB) வேட்பாளர் முகம்மது முர்சி, கடந்த வார இறுதியில் இரண்டாம் சுற்று ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றவராக அறிவித்துள்ளது. இத்தேர்தல் ஆளும் SCAF எனப்படும் ஆயுதப் படைகளின் தலைமைக்குழு செயல்படுத்திய ஒரு அரசியல் சதியிற்கு மத்தியில் நடைபெற்றது.

Tahrir
இந்த அறிவிப்பு மூன்று நாட்கள் தாமதத்திற்குப்பின் வந்துள்ளது. இக்காலக்கட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள், பெரும்பாலும் முஸ்லிம்
சகோதரத்துவத்தின் ஆதரவாளர்கள் சர்வாதிகாரத்தை இராணுவம் எடுத்துக் கொண்டதற்கும், SCAF தேர்தல் முடிவுகளைத் தவறாக்கும் என்றும் ஜனாதிபதிப் பதவியைத் தன் ஆதரவைக் கொண்ட, பதவியிலிருந்து கீழிறக்கப்பட்ட சர்வாதிகாரி ஹொஸ்னி முபாரக்கின் கடைசிப் பிரதம மந்திரியும் முன்னாள் விமானப் படைத் தலைவர் அஹ்மத் ஷபிக்கிற்குக் கொடுக்கலாம் என்பதைக் கண்டிக்க கெய்ரோவின் தஹ்ரிர் சதுக்கத்தில் கூடினர்.

ஞாயிறன்று சதுக்கத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் அறிவிப்பைக் கேட்க கூடியிருந்தனர். அதே நேரத்தில் துருப்புக்கள் ஷபிக்கிற்கு ஆதரவாக முடிவு வந்தால் எதிர்பார்க்கப்பட்ட, வெடிக்கக் கூடிய கோபத்தை அடக்குவதற்குத் தயாராக இருந்தன.

கடந்த வாரத்தில் இராணுவ ஆட்சிக்குழு எதிர்ப்பாளர்களுக்கு எதிராக இரும்புக் கரத்தை பயன்படுத்துவதாக எச்சரித்து, கெய்ரோவில் காலியாக இருக்கும் தேர்தல் ஆணைய அலுவலகங்கள், பாராளுமன்றக் கட்டிடம் மற்ற பொது அலுவலகங்களுக்கு முன்பு துருப்புக்களையும் மற்றும் ஆயுதமேந்திய கவச வாகனங்களையும் நிறுத்தியது. அதே நேரத்தில், தீவிரமாக SCAFக்கும் முஸ்லிம் சகோதரத்துவத்திற்கும் இடையே திரைக்குப் பின்பேச்சுக்கள் முர்சிக்கு அதிக அதிகாரம் இல்லாத ஜனாதிபதிப் பதவியை கொடுக்கவும், அதற்கு ஈடாக இஸ்லாமியவாதிகள் இராணுவம் சர்வாதிகாரங்களை ஏற்பதை ஒப்புக் கொள்ள வேண்டும் என்பதற்கும் நடைபெற்றன.

முன்னாள் சர்வதேச அணுச்சக்தி நிறுவனத்தில் -IAEA- தலைவர் இந்த உடன்பாட்டை முடிப்பதற்கு இடைத்தரகராக இருந்தது வெளிப்படை. முஸ்லிம் சகோதரத்துவத்துடன் ஒரு சாத்தியமான மந்திரிசபை பதவி ஒன்றிற்காக அவர் பேச்சுக்களை நடத்துகிறார் என வந்த அறிக்கைகளைத் தொடர்ந்து, அவர் சனிக்கிழமை இரவு SCAF உடைய தலைவரான பீல்ட் மார்ஷல் முகம்மது ஹுசைன் தந்தவியைச் சந்தித்தார்.

இப்பேச்சுக்களின் முடிவுதான் தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பை நிர்ணயிக்கும், ஜனாதிபதித் தேர்தல் இரண்டாம் சுற்றுக்களின் முடிவு அல்ல என்பது ஒரு வெளிப்படையான இரகசியம் ஆகும்.

எப்படியும், ஆணையம் ஷபிக்கின் 48.3%க்கு எதிராக முர்சி தேர்தலில் 51.7% வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார் என்று அறிவித்தது. இது கிட்டத்தட்ட 900,000 வாக்குகள் வித்தியாசமாகும். இரண்டாம் சுற்றில் பதிவான வாக்குகள் 51.6% எனவும், முதல் சுற்றில் இதைவிடக் குறைவாக 46%தான் பதிவாயிற்று என்றும் கூறப்பட்டது.

இவ்வகையில் ஏராளமானவர்கள் வாக்குப்மதிவில் கலந்துகொள்ளாதது, இரு வேட்பாளர்கள் மீதும் தொழிலாள வர்க்கம் அதிக ஆர்வம் காட்டாததைப் பிரதிபலித்தது. அதாவது வெறுப்பிற்கு உட்பட்ட முபாரக் ஆட்சியில் இருந்த ஷபிக் இன் மீதும் மற்றும் முதலாளித்துவம், மற்றும் வசதி படைத்த மத்தியதர வர்க்கத் தட்டுக்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய வலதுசாரி, முதலாளித்துவ சார்பு இஸ்லாமியவாதக் கட்சியின் முர்சி இருவர் மீதும் ஆர்வம் காட்டவில்லை.

தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பை உடனடியாகத் தொடர்ந்து தந்தவி முர்சிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். முர்சி ஜூலை 1 அன்று பதவியேற்க உள்ளார். தளபதிகள் பாராளுமன்றத்தையும் அரசியலமைப்பு மன்றத்தையும் கலைத்து, நடைமுறையில் இராணுவ சட்டத்தை ஆணையிட்டு, தங்களுக்கு முழு அதிகாரத்தையும் சட்டமியற்றும் துறை, வரவு-செலவுத் திட்டமிடல் துறை, பாதுகாப்பு அமைப்புக்கள், இராணுவம், அரசியலமைப்பு மன்றம் அமைக்கப்படுதல், புதிய அரசியலமைப்பை இயற்றுதல் ஆகியவற்றை எடுத்துக் கொண்ட பின் அவர் பதவி ஏற்பார்.

ஆளும் உயரடுக்கின் போட்டியிடும் பிரிவுகளுக்கு இடையே வந்துள்ள உடன்பாட்டின் விளைவினால் ஏற்பட்டுள்ள இந்த ஜனநாயக விரோதச் செயல், எகிப்திய மக்களின் பரந்த பிரிவுகளின் உணர்வுகளையும் நலன்களையும் ஒதுக்கிவிட்ட நிலையில், வாஷிங்டன் மற்றும் பிற ஏகாதிபத்திய சக்திகளால் ஜனநாயகத்திற்கான மாற்றத்திற்கான ஒரு திருப்புமுனை என்று உடனடியாகப் பாராட்டப்பட்டது. இது SCAF தளபதிகளில் இராணுவக் காலணிகளின்கீழ் செயல்படுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.

ஒபாமாவின் வெள்ளை மாளிகை முர்சியையும் எகிப்திய மக்களையும் ஜனநாயகத்தின் இம்மாற்றத்தல் ஒரு மைல்கல்லிற்காக பாராட்டுக்களைத் தெரிவித்தது. அதே நேரத்தில் அது வரவிருக்கும் ஜனாதிபதி பிராந்தியத்தில் அமெரிக்க ஏகாதிபத்திய ஆதிக்கத்திற்கு உட்பட்ட அரசியல் கட்டமைப்பிற்கு சவால் விடக்கூடாது என்றும் எச்சரித்துள்ளது. இதில் முக்கியமாக 1979ம் ஆண்டு எகிப்திற்கும் இஸ்ரேலுக்கு இடையே ஏற்பட்ட சமாதான உடன்பாடும் அடங்கும். எகிப்திய அரசாங்கம் பிராந்தியத்தின் அமைதி, பாதுகாப்பு, உறுதித்தன்மை ஆகியவற்றின் தூணாக இருக்கும் பங்கைத் தொடர்தல் இதற்கு அவசியம் என நம்புகிறோம் என்றும் வெள்ளை மாளிகை அறிவித்தது.

பிரித்தானிய வெளியுறவு மந்திரி வில்லியம் ஹேக், எகிப்திய மக்கள் ஒரு புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுத்துள்ளனர்; அவருக்கு என் பாராட்டுக்கள், மக்களுக்கும் இம்முடிவு மற்றும் அமைதியான வழிமுறைக்கு என் பாராட்டுக்கள் என்றார்.

ஒரு இராணுவ சர்வாதிகாரத்தின் யதார்த்தநிலையை மறைக்கும் இந்த முயற்சி, தளபதிகளை தொழிலாள வர்க்கத்தின் ஒரு புதுப்பிக்கப்படும் இயக்கத்திற்கு எதிரான பெரும் அடக்குமுறைக்கு தயாரிக்க உதவுவது என்பது எகிப்தில் உள்ள மிதவாத இஸ்லாமியவாதிகளில் இருந்து, மத சார்பற்ற தாராளவாதிகளில் இருந்து, பல மத்தியதர வகுப்பு போலி இடது அமைப்புக்கள் வரை முழு அரசியல் ஆளும்தட்டினதும் ஆதரவைக் கொண்டுள்ளது. போலி இடது அமைப்புக்கள் முர்சி மற்றும் முஸ்லீம் சகோதரத்துவத்தின் பின் தயக்கமின்றி அணிவகுத்து நிற்கின்றனர்.

கடந்த வெள்ளியன்று, இரண்டு நாட்கள் முஸ்லிம் சகோதரத்துவத்தில் இருந்து பிரிந்துவந்த தாராளவாதிகளுடன் மற்றும் மதசார்பற்ற நாசரைட்டுக்களும் ஏப்ரல் 6 இளைஞர் இயக்கத்தின் பிரதிநிதிகளுடனும் பேச்சுக்களை நடத்தியபின், முர்சி ஒரு செய்தியாளர் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து, ஒரு தேசிய முன்னணி அமைப்பைப் பற்றி அறிவித்தார். முஸ்லிம் சகோதரத்துவத்தினர் அல்லாத ஓர் உறுப்பினரை பிரதம மந்திரியாக நியமிப்பதாகவும், மற்ற மந்திரிசபை பதவிகளும் இஸ்லாமியவாதம் இல்லாத தேசிய சக்திகளுக்கு கொடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

ஞாயிறன்று, தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பைத் தொடர்ந்து, புரட்சிகர சோசலிஸ்ட்டுக்கள் (RS), முர்சி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது ஒரு கணிசமான புரட்சிகர வெற்றி என அறிவித்தது. தொழிலாள வர்க்கம் மையமாக இருந்த, அமெரிக்க ஆதரவுடைய சர்வாதிகாரி பெப்ருவரி 2011ல் அகற்றிய புரட்சிகர இயக்கத்திற்குப்பின், புரட்சிகர சோசலிஸ்ட்டுக்கள் இராணுவம் ஒரு ஜனநாயக மாற்றத்திற்கு தலைமை தாங்குகிறது என்ற கூற்றிற்கு நம்பகத்தன்மை கொடுக்க முற்பட்டுள்ளது. அதே நேரத்தில் இது முஸ்லிம் சகோதரத்துவத்துடன் ஒத்துழைத்து இராணுவ ஆட்சியை அகற்றி சோசலிசத்திற்காகப் போராடும் தொழிலாளர் அரசாங்கத்தை நிறுவக்கூடிய தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன இயக்கம் வெளிப்படுவதைத் தவிர்க்கவும் முற்பட்டுள்ளது.

ஞாயிறன்று வெளியிட்ட அறிக்கையில் புரட்சிகர சோசலிஸ்ட்டுக்கள் தன் ஆதரவை நடைமுறையில் இல்லாத ஜனநாயக மாற்றத்திற்கு தன் ஆதரவை மீண்டும் வலியுறுத்தியது. இராணுவம் சர்வாதிகார அதிகாரங்களை எடுத்தபின்னும் இந்நிலைதான் உள்ளது. முர்சி பதவியில் இருத்தப்பட்டது குறித்து, மக்கள் மீண்டும் எதிர்ப்புரட்சி இராணுவத்தின் திட்டத்தை மாற்றும் திறன் கொண்டவர்கள் என்பதை நிரூபித்துள்ளனர். புரட்சிகர யதார்த்தமானது இன்னமும் நலன்களையும் புரட்சிகர சட்டங்களையும் பெற இயலுமானதாக உள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இது புரட்சிகர சோசலிஸ்ட்டுக்கள் மற்றும் பரந்த சோசலிச கூட்டு, எகிப்திய சோசலிஸ்ட் கட்சி மற்றும் எகிப்திய கம்யூனிஸ்ட் கட்சி போன்ற பிற போலி இடதுகளின் எதிர்ப்புரட்சி பங்கின் தொடர்ச்சி ஆகும். இவற்றுள் பெரும்பாலானவை எகிப்திய 1971 அரசியலமைப்பிற்கு ஆதரவைக் கொடுத்து உறுதிமொழியில் கையெழுத்திட்டவை. எகிப்தின் அரசியல் வாழ்வில் இராணுவத்தின் பங்கிற்கு SCAF பாராளுமன்றத்தையும் அரசியல் அமைப்பையும் கலைத்து இராணுவச் சட்டத்தை அறிவித்த சில நாட்களுக்கு முன் ஒப்புதலும் கொடுத்தன.

முர்சியின் மையச் செயற்பாடு தொழிலாள வர்க்கத்தின் புதுப்பிக்கப்படும் ஒரு இயக்கத்திற்கு எதிராக அரசாங்க வன்முறையைக் கட்டவிழ்ப்பதில் இராணுவத்துடன் ஒத்துழைப்பது ஆகும். முதலாளித்துவ ஆளும்தட்டின் அனைத்துப் பிரிவுகளும், அதன் இடது பிரிவான புரட்சிகர சோசலிஸ்ட்டுக்கள் மற்றும் அதேபோன்ற அமைப்புக்களும் தொழிலாள வர்க்கம் எகிப்திய அரசாங்கத்தைக் கவிழ்த்து பிராந்தியம் முழுவதையும் தொழிலாள வர்க்கப் புரட்சிக்கு திறந்துவிட்டுவிடும் என அஞ்சுகின்றன.

நாடெங்கிலும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஞாயிறு இரவு உரையில், முர்சி பாராளுமன்றத்தில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்வேன், SCAF தளபதிகள் ஆணையிட்டுள்ள தலைமை அரசியலமைப்பு நீதிமன்றத்தில் அல்ல என்று உறுதியிளித்தார். புரட்சிகர சோசலிஸ்ட்டுக்களின் அறிக்கையில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளில் ஒன்றான இது எகிப்திய இராணுவம் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு அப்பட்டமாகத் தாழ்ந்து நடக்கவில்லை என்று கூறுவது போன்ற ஒரு போலி மறைப்பு கொடுக்கும் முயற்சியாகும்.

தேசிய ஒற்றுமை ஒன்றுதான் எகிப்து கடின நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு ஒரே வழி என்று அறிவித்த அமெரிக்காவில் படித்த ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர், இராணுவம், பொலிஸ், நீதிபதிகள், பிற அரசாங்க அலுவலர்களுக்கு நாட்டின் சார்பாக அவர்களுடைய பணிக்கு நன்றியறிதலை தெரிவித்தார். அவர்களுக்கு நான் வணக்கம் செலுத்துகிறேன், ஏனெனில் அவர்களுக்கு வருங்காலத்தில் ஒரு பங்கு உண்டு. என்றார் அவர்.

இதன்பின் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு வணக்கம் தெரிவிக்கும் வகையில், நாம் அனைத்துத் தேசிய, சர்வதேச உடன்பாடுகளைக் பாதுகாப்போம் என்றார் அவர்.

முஸ்லிம் சகோதரத்துவத்தின் முதலாளித்துவச்சார்பு, ஏகாதிபத்திய சார்புடைய அரசியல் அந்த அமைப்பின் தலைவரான பல மில்லியன்களைக் கொண்ட வணிகர் கைரட் அல் ஷடெருடன் சனிக்கிழமை வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் நடத்திய ஒரு சிநேகிதபூர்வமான நேர்காணலில், தான் ஒரு தடையற்ற பொருளாதாரச் சந்தைச் சீர்திருத்தங்களுக்கு ஆதரவு தருவதைத் தெளிவுபடுத்திய அவர், நம் பொருளாதாரப் பார்வை ஒரு திருத்தியமைக்கப்பட்ட முதலாளித்துவத்திற்கு அருகே உள்ளது என்றார்.

அதன்பின், முஸ்லிம் சகோதரத்துவத்தின் முன்னுரிமை அமெரிக்காவுடன் நெருக்கமான மூலோபாயப் பங்கைக் கொள்ளுவது என்று அறிவித்தார்.

முஸ்லிம் சகோதரத்துவத்தின் அடிப்படைப் பங்கு பற்றிய திறவுகோல் SCAF தனக்கே சர்வாதிகார அதிகாரங்களை அளித்துக் கொண்டு அரசியலமைப்பின் 53-b விதியின்கீழ் உள்ள அரசாங்க அமைப்பில் தான் காலூன்ற வேண்டும் என்பதாகும். அந்த விதி கூறுவது: ஆயுதப்படைகளின் தலையீடு தேவைப்படும் என்ற வகையில் உள்நாட்டு அமைதியின்மையை நாடு எதிர்கொண்டால், ஜனாதிபதி ஆணையத்திற்கு ஆயுதப்படைகள் —SCAF உடைய ஒப்புதலுடன் பாதுகாப்பை நிலைநிறுத்தவும் பொதுச் சொத்துக்களைக் பாதுகாக்கவும் ஆணையத்திற்கு முடிவைக் கொடுக்கலாம்.