WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள் :
அவுஸ்திரேலியா &
தென்பசுபிக்
Australian and US governments “playing word games”
ஆஸ்திரேலிய மற்றும் அமெரிக்க
அரசாங்கங்கள் “சொல் விளையாட்டு விளையாடுகின்றன”
விக்கிலீக்ஸ் நிறுவுனர் ஜூலியன் அசான்ஜ் ஈக்வடோரியத்
தூதரகத்திலிருந்து பேசுகிறார்
By Richard Phillips
22 June 2012
use
this version to print | Send
feedback
விக்கிலீக்ஸின்
நிறுவுனர் ஜூலியன் அசான்ஜ் அவரது ஜனநாயக உரிமைகள்மீது தீவிரப்படுத்தப்பட்டுள்ள
தாக்குதல்கள் குறித்தும்,
அவர் ஏன் ஈக்வடோரில் அரசியல்
தஞ்சம் கேட்க நிர்பந்திக்கப்பட்டுள்ளார் என்பது குறித்தும் இன்று லண்டனில் உள்ள
ஈக்வடோர் தூதரகத்தில் இருந்து உரையாற்றினார்.
ஆஸ்திரேலிய ஒளிபரப்பு
நிறுவனத்தின் ரேடியோ நேஷனல் “காலை” நிகழ்ச்சியில்
(breadfast show)
பேட்டி காணப்பட்ட அசான்ஜ்,
அவர் உளவுவேலையில்
ஈடுபட்டதற்காக அல்லது வேறு இட்டுக்கட்டப்பட்ட குற்றச்சாட்டுகளுக்காக அவருக்கு
எதிரான ஒரு பெரும் நீதிவிசாரணை
(Grand Jury)
இருக்கிறது என்பதன் மீது ஆஸ்திரேலிய
மற்றும் அமெரிக்க அரசாங்கத்தின் மறுப்புகளை அசான்ஜ் நிராகரித்தார்.
தமது அரசாங்கம் அவருக்கு
“தொடர்ந்து தூதரக ஆதரவை அளித்து வருகிறது” என்ற ஆஸ்திரேலியப் பிரதம மந்திரி ஜூலியா
கில்லர்டினின் கூற்றையும் அசான்ஜ் அப்பட்டமாக மறுத்தார்.
அமெரிக்காவின்
மற்றும் ஏனைய அரசாங்கங்களின் யுத்த குற்றங்கள் மற்றும் ஜனநாயக-விரோத
நடவடிக்கைகளை அம்பலப்படுத்திய அவற்றின் ஆயிரக்கணக்கான ஆவணங்களை விக்கிலீக்ஸ்
பிரசுரத்தமைக்காக,
ஆஸ்திரேலிய அரசாங்கத்திற்கு
நெருக்கமாக உதவி வரும் ஒபாமா நிர்வாகம்,
அசான்ஜை சிறையிலடைக்க முயன்று
வருகிறது.
அவரை ஸ்வீடனிடம்
ஒப்படைப்பதற்கு எதிரான அவருடைய இறுதி முறையீட்டை மறுவிசாரணைக்கு எடுத்து கொள்ள
வேண்டுமென்ற அசான்ஜின் சட்டரீதியிலான மனுவை கடந்த வாரம் இங்கிலாந்தின்
உச்சநீதிமன்றம் நிராகரித்தது.
அயல்நாட்டிடம் ஒப்படைக்கும்
இங்கிலாந்தின் சட்டவிதிகளின் கீழ்,
"சட்டப்பூர்வ அனுமதி
பெற்றிராத"
ஒரு ஸ்வீடன் நாட்டு வக்கீலால் கைது
பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதால்,
அது செல்லத்தக்கதல்ல என்று
அவருடை வக்கீல்கள் வாதிட்டனர்.
ஈக்வடோரிய தூதரகத்தை
விட்டு வெளியேறினால் அசான்ஜ் கைது செய்யப்படுவார் என்று பிரிட்டிஷ் பொலிஸ்
அறிவித்துள்ளது.
அதே நேரத்தில் பெருநிறுவன
செய்தி ஊடகம் 40
வயதான விக்கிலீக்ஸ் எடிட்டர் மீது
அவரது குணாம்சத்தை இழிவுபடுத்தும் முயற்சிகளை முடுக்கிவிட்டுள்ளது.
செய்தி ஊடகப் பிரிவுகள்
அசான்ஜை, “நேர்மை
அற்றவர்”,
ஒரு பொய்யர்”
(fabulist), “நெறியற்றவர்”,
“கோழை” என்று பலவிதமாக
விவரித்துள்ளன.
டிசம்பர்
2010இல்
அசான்ஜிற்கு 240,000
யூரோ பிணை அளித்தவர்களிடையே
அசான்ஜிற்கு எதிரான வெறுப்புணர்வைப் பரப்ப பிரிட்டிஷ் செய்தி ஊடகமும் முயன்றுள்ளது.
இம்முயற்சிகள் தோற்றுவிட்டன.
சான்றாக,
விக்கிலீக்ஸ் எடிட்டர்
“பிரிட்டிஷ் மற்றும் ஸ்வீடன் நாட்டு நெறியற்ற நீதித்துறைகளால்”
பாதிக்கப்பட்டிருப்பதால்,
தாம் அசான்ஜை முற்றிலும்
ஆதரிப்பதாகவும்,
வருங்காலத்தில் பிணையெடுப்பிற்கு
நிதியளிக்க இருப்பதாகவும் எழுத்தாளர் பிலிப் நைட்லி அறிவித்தார்.
“விசாரணைக்கு
உட்படுத்தப்படுவதைத் தவிர்ப்பதற்காகவே” ஸ்வீடனிடம் ஒப்படைக்கப்படுவது குறித்த
வழக்கை எதிர்ப்பதாக கூறப்படும் வாதங்களை அவர் மறுப்பதாக
ABC
ரேடியோவிற்கு அசான்ஜ் தெரிவித்தார்.
விசாரணை செய்யப்படுவதை அவர்
எதிர்க்கவில்லை,
மாறாக ஸ்வீடன் நாட்டிடம்
ஒப்படைக்கும் விதிமுறைகள் குறித்தும்,
ஓர் அமெரிக்க சிறையில்
அடைப்பதற்கான அமெரிக்க நடவடிக்கைகள் குறித்துமே கவலைப்படுவதாக அவர் தெரிவித்தார்.
ஸ்வீடனுக்கு அனுப்பி
வைக்கப்பட்டால்,
பாலியல் தாக்குதல்
குற்றச்சாட்டுகள் விசாரணை முடியும் வரையில் தாம் கைது செய்யப்பட்டு சிறையில்
அடைக்கப்படலாம் என்று அவர் தெரிவித்தார்.
அவர் ஐரோப்பிய மனித உரிமைகள்
நீதிமன்றத்திற்கு முறையீடு செய்வதற்கு போதிய அவகாசம் கொடுக்கக்கூடாதென ஸ்வீடன்
அதிகாரிகள் முறையிட்டு வருவதையும் அசான்ஜ் குறிப்பிட்டு காட்டினார்.
பிரிட்டனில் வைத்து அல்லது
தொலைபேசி மூலமாக அவரை விசாரிக்க ஸ்வீடன் வழக்கறிஞர் மறுப்பதானது,
அவரை
"பொறியில்"
மாட்டி வைத்துள்ளது.
வாஷிங்டன் அவரை
அமெரிக்காவிற்கு அழைத்து செல்வதில் அக்கறை கொள்ளவில்லை என்னும் அமெரிக்க மற்றும்
ஆஸ்திரேலிய அரசாங்கங்களின் கூற்றுக்களைக் குறித்து குறிப்பிடுகையில்,
அவருக்கு எதிரான சட்டப்பூர்வ
அமெரிக்க நடவடிக்கை ஏற்கனவே நடந்து வருகிறது;
அது “பொது பதிவேட்டிலும்”
உள்ளது என்று அசான்ஜ் தெரிவித்தார்.
அமெரிக்க நீதித்துறை
“ஒரு சிறு விளையாட்டை மேற்கோண்டுள்ளது,
ஒரு பெரும் நீதிவிசாரணை
உள்ளதா,
இல்லையா என்பதை அவர்கள் கூற மறுப்பதே
அச்சிறு விளையாட்டாகும்.
இதனால்,
“நல்லது,
அவர்கள் அதை
உறுதிப்படுத்தவில்லை என்பதால்,
உண்மையில் நாம் அது குறித்து
எழுதுவதற்கில்லை"
என பத்திரிக்கைகள் பேசுகின்றன.
“ஆனால்
இது உண்மையல்ல.
எல்லா இடங்களிலும் இது குறித்து பொது
பதிவேட்டில் உள்ளது.
பல சாட்சிகள் எல்லா
இடங்களிலும் உள்ளன.
இந்த
48,000
பக்கங்களில் என்ன உள்ளன என்பது
குறித்து இராணுவ நீதிமன்றங்களில் ஆதாரங்கள் உள்ளன.
விக்கிலீக்ஸ் நிறுவுனர்களும்,
மேலாளர்களும் குறித்து
அவற்றில் உள்ளன,”
என்று அசான்ஜ் தெரிவித்தார்.
அசான்ஜ் கூறுகையில்,
அவருடன் இதற்கு முன்னர்
இணைந்து வேலை செய்திருந்த
Jeremie Zimmermann மற்றும்
Smari McCarthy
இருவரும் சமீபத்தில் அமெரிக்க விமான
நிலையங்களில் தடுத்து நிறுத்தப்பட்டு,
FBI அதிகாரிகளால்
விக்கிலீக்ஸ் நடவடிக்கைகள் குறித்து விசாரிக்கப்பட்டனர் என்றார்.
அமெரிக்கா அதன்
“பரந்த ஆதாரவளங்களை” தனக்கு எதிரான நடவடிக்கைகளில் செலவிடுவதாகவும் அசான்ஜ்
கூறினார்.
விக்கிலீக்ஸிற்கு எதிராக
அரசாங்கத்தின் கணினி அமைப்புமுறை நடவடிக்கைகளை நிர்வகிக்க,
நீதித்துறை சமீபத்தில்
2
மில்லியன் டாலர் ஒப்பந்தம் ஒன்றை,
ஒரு தகவல் தொழில்நுட்ப
நிறுவனமான MANTECனிடம்
ஒப்படைத்ததை வெகு முன்னதாக விக்கிலீக்ஸ் கண்டறிந்ததையும் அவர் வெளியிட்டார்.
கான்பெர்ரா மிக
பெரியளவில் துணை தூதரக உதவியை அளித்து வருவதாக ஆஸ்திரேலியத் தலைமை வக்கீல் நிக்கோலா
ரோக்சன் மற்றும் வெளியுறவு மந்திரி பாப் கார் இருவரும் தெரிவித்தது குறித்து
கூறுகையில்,
அவை போலித்தனமானது என்றார்.
“என்ன கூறுகிறார்கள் இவர்கள்?”
என்று அவர் கேள்வி
எழுப்பினார்.
டிசம்பர்
2010க்குப்
பின்னர் ஆஸ்திரேலிய உயர் கமிஷனில் இருந்து எவரும் தம்மை சந்திக்கவில்லை என்ற
அசான்ஜ், “அவர்கள்,
‘திரு.
அசாஞ்சே ஏதேனும் கவலைகள்
உண்டா?'
என்னும் குறுந்தகவல்களை மட்டுமே
அனுப்பினர்.
ஆனால் இதை தான் அவர்கள் சூசகமாக
பயன்படுத்த முடியும்,”
என்றார்.
கான்பெர்ராவிற்கு
அவருடைய கவலைகள் குறித்து எழுத்து மூலம் தெரிவிக்கப்பட்ட பின்னர்,
“அதற்கான விடையிறுப்பு,
ஒவ்வொரு பிரிவிலும் அதை உதறி
தள்ளுவதாக இருந்தது,”
என்று விக்கிலீக்ஸ் எடிட்டர்
ABC
ரேடியோவிற்கு தெரிவித்தார்.
தன்னுடைய அடிப்படை
உரிமைகள் மீதான தாக்குதல்களில் உள்ள
"அடிப்படை
பிரச்சினைகள்"
மீது ஒருமுனைப்பு காட்டுவது
அவசியமாகும் என்று அசான்ஜ் தெரிவித்தார்.
“உண்மை
உங்கள் பக்கம் இருக்கிறதென்றால்,
பெரும்பாலும்
விசாரிக்கப்படாமல் இருப்பது தான் உங்களுக்கு எதிராக அமைந்திருக்கும்,
ஆகவே நான் விசாரணையை
வரவேற்கிறேன்.”
ஆஸ்திரேலியாவிற்கான அமெரிக்க தூதர்,
கில்லார்டு,
மற்றும் வெளியுறவு மந்திரி
ஆகியோரிடம் இருந்து வரும் அற்பத்தனமான வனப்புரையை அம்பலப்படுத்த இது மட்டுமே ஒரே
வழி,
உண்மையிலேயே இது தக்க வைக்கப்பட
வேண்டும்,”
என்றவர் தெரிவித்தார்.
விக்கிலீக்ஸின்
செய்தித்தொடர்பாளர் கிறிஸ்டின் ஹ்ராப்சன் நேற்று கூறுகையில்,
முந்தைய செய்தி ஊடக
தகவல்களுக்கு மாறுபட்ட விதத்தில்,
அசான்ஜிற்கு அவருடைய
தஞ்சமடையும் முயற்சி குறித்து எப்போது ஒரு முடிவெடுப்பது என்பதில்
"இன்னும்
எந்த யோசனையும் இல்லை"
என்றார்
ஈக்வடோரின் அரசாங்கம்
இங்கிலாந்து,
அமெரிக்கா மற்றும் ஸ்வீடன்
அதிகாரிகளிடம் இருந்து தகவல்களுக்காக காத்திருக்கிறது என்றும்,
விவகாரம் முடிவடையும் வரை
தாம் தூதரகத்தில் இருக்க வேண்டியுள்ளது என்றும் அவர் கூறினார்.
கட்டுரை ஆசிரியர்
கீழ்காணும் கட்டுரையையும் பரிந்துரைக்கிறார்:
The Australian Labor government—a key
accomplice in the vendetta against Julian Assange |