World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆபிரிக்கா  : எகிப்து

Protests continue in Cairo amid threats of crackdown by military junta

இராணுவ ஆட்சிக் குழுவின் வன்முறை அச்சுறுத்தல்களுக்கு இடையே கெய்ரோவில் எதிர்ப்புக்கள் தொடர்கின்றன

By Barry Grey
23 June 2012

Back to screen version

SCAF எனப்படும் ஆயுதப்படைகளின் தலைமைக்குழு சர்வாதிகார சக்திகளை எடுத்துக் கொண்டிருப்பதற்கு எதிராக பல்லாயிரக்கணக்கான மக்கள் வெள்ளியன்று கெய்ரோவின் தஹ்ரிர் சதுக்கத்தில் அணிவகுத்து நிற்கையில், SCAF க்கும் MB  எனப்படும் முஸ்லிம் சகோதரத்துவத்திற்கும் இடையே பூசலுக்குட்பட்ட ஜனாதிபதித் தேர்தல் குறித்த சர்ச்சையால் இன்னும் பதற்றம் அதிகரித்தது;  அத்துடன் எதிர்ப்பாளர்களுக்கு எதிராக அடக்குமுறையைக் கட்டவிழ்க்கப் போவதாக இராணுவ ஆட்சிக் குழு அச்சுறுத்தியுள்ளது.

இஸ்லாமிய சகோதரத்துவம் அழைப்பு விடுத்து செவ்வாய்க்கிழமை முதல் நடந்து வருகிற அன்றாட ஆர்ப்பாட்டங்களில்  வெள்ளியன்று நடந்த ஆர்ப்பாட்டமே மிகப் பெரியதாய் இருந்தது; MB ஆதிக்கத்திற்கு உட்பட்டிருந்த பாராளுமன்றம் மற்றும் அரசியலமைப்பு மன்றத்தை SCAF கலைத்து, அனைத்து சட்டமியற்றும், நிர்வாக அதிகாரங்களையும் தளபதிகளிடம் கொடுக்கும் தொடர்ந்த SCAF நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்க இந்த ஆர்ப்பாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன.

தஹ்ரிர் சதுக்கத்தில் முபாரக் தீர்ப்பு மற்றும் இராணுவ ஆட்சிக்கு எதிரா ஜூன் 5 அன்று நடந்த பெருந்திரள் ஆர்ப்பாட்டம் (புகைப்படம்: Lorenz Khazaleh)

பதவியில் இருந்து கீழிறக்கப்பட்ட சர்வாதிகாரி ஹொஸ்னி முபாரக் நியமித்திருந்த ஜனாதிபதித் தேர்தலுக்கான தலைமை ஆணையம் கடந்த வார இறுதியில்  நடந்த ஜனாதிபதித் தேர்தல் போட்டியில் வென்றவரை அறிவிப்பதை வியாழனில் இருந்து இந்த வார இறுதி வரையிலும் தாமதித்ததை அடுத்து பதட்டங்கள் அதிகரித்திருந்தன. தேர்தல் மோசடிக் குற்றச்சாட்டுகள் குறித்த பரிசீலனையை மேற்கொள்ள வேண்டியிருந்ததால் அறிவிப்பை தாமதப்படுத்தியதாய் ஆணையம் கூறிது.

MB வேட்பாளர முகமது முர்சி மற்றும் அவருடைய போட்டியாளர் அஹமத் ஷபிக் (முன்னாள் விமானப் படைத் தளபதி அத்துடன் முபாரக்கின் கடைசிப் பிரதம மந்திரி) இருவருமே தாமே வெற்றி பெற்தாய்க் கூறி வருகின்றனர். ஜனாதிபதிப் பதவியை தளபதிகளின் வேட்பாளராகிய ஷபிக்குக்குக் கொடுக்க இருக்கும் அறிவிப்பிற்கு எதிர்பார்க்கப்படும் வெகுஜன எதிர்ப்பை அடக்க இராணுவம், பொலிசைத் தயாரிப்பதற்குத் தான் SCAF அறிவிப்பை தாமதப்படுத்தியது என்று பரந்த முறையில் சந்தேகம் உள்ளது. ஜனாதிபதித் தேர்தல் தலைமை ஆணையம் ஷபிக்கின் வெற்றியை ஞாயிறு மாலை அறிவிக்கத் தயார் நிலையில் இருப்பதாக பெயர் கூறாத அரசாங்க நபர்கள், மற்றும் மேலைத் தூதர்களை மேற்கோள் காட்டி அரசாங்கத்திற்குச் சொந்தமான அல் அஹ்ரம் செய்தித்தாள் வெள்ளியன்று  செய்தி வெளியிட்டிருந்தது. SCAF ஆதரவுடைய வேட்பாளர் 50.7% வாக்குகளைப் பெற்றதாக அறிவிக்கப்படக் கூடும் என ஒரு ஆதாரம் கூறியதாகவும் இக்கட்டுரை தெரிவித்து.

ஷபிக் வெற்றி பெற்றதாய் அறிவிக்கும் தனது எண்ணத்தைப் பற்றிய அறிக்கைகளை ஜனாதிபதித் தேர்தலுக்கான தலைமை ஆணையத்தில் இருக்கும் ஆதாரங்கள் உறுதி செய்யாது என்று அந்த செய்தித்தாள் தெரிவித்தது.

இந்த வாரத்தில் முன்னதாக, தேர்தல்களைக் கண்காணித்த நீதிபதிகளில் எகிப்திய நீதிபதிகளின் குழு ஒன்று முர்சி வெற்றி பெற்றார் என உத்தியோகப்பூர்வமற்ற அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அஹ்மத் ஷபிக்கை விட 900,000 கூடுதல் வாக்குகள் பெற்று தேர்தலில் முர்சி வெற்றி பெற்றிருந்ததாக நீதிபதிகள் கூறினர்.

முர்சியை ஜனாதிபதிப் பதவியை ஏற்க அனுமதித்து விட்டு, அதே சமயத்தில் உண்மையான அதிகாரத்தை ஜெனரல்களின் கரங்களில் வைத்திருக்கும் வகையிலான “ஒரு அரசியல் உடன்பாட்டை” நோக்கி சகோதரத்துவத்தின் தலைமைக்கும் இராணுவத் தலைமைக்கும் இடையே தீவிரப் பேச்சுவார்த்தைகள் வியாழன் இரவு வரை நீண்டதாக அஹ்ரம்ஆன்லைன் தெரிவித்தது. சகோதரத்துவம் அதன் ஆதரவாளர்களை தஹ்ரிர் சதுக்கத்தில் இருந்து விலக்கிக் கொள்ள வேண்டும் என்றும் இராணுவம் தனக்கே சர்வாதிகாரத்தை அளித்துக் கொள்கின்ற அதன் அரசியல்சட்ட ஆணையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் SCAF கோருகிறது.

முர்சி ஜனாதிபதிப் பதவியை ஏற்க அனுமதிக்கும் ஒரு உடன்பாடு சனிக்கிழமை அல்லது ஞாயிற்றுக் கிழமை அடையப்படலாம் என்று சகோதரத்துவத்தின் ஒரு ஆதாரம் கூறியதாக அறிக்கை மேற்கோளிட்டுள்ளது. ஆனால் உடன்பாடு ஏற்படவில்லை என்றால், SCAF அனைத்தையும் எடுத்துக்கொண்டு எதையும் கொடுக்கவில்லை என்றால், அப்பொழுது ஷபிக் ஜனாதிபதி என்று அவர்கள் அறிவித்தால் நாங்கள் வியப்படைய முடியாது” என்று அந்த ஆதாரம் கூறியது.

அமெரிக்கா அதன் உட்குறிப்பான ஆதரவை இராணுவ ஆட்சிக் குழுவிற்குக் கொடுக்கிறது; அதன் அதிகாரக் கைப்பற்றலைக் கண்டிக்கவும்இல்லை, அது சர்வாதிகார நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும் என்று கோரவும் இல்லை. இராணுவ ஆட்சிக்குழு ஜனநாயகத்திற்கான மாற்றத்திற்குத் தலைமை தாங்குகிறது என்ற அபத்தமான நிலைப்பாட்டை வாஷிங்டன் தொடர்ந்து கொண்டுள்ளது. இந்த முகப்பு அலங்காரத்துக்கு இணங்கிய வகையில் அமெரிக்க வெளியுறவுச் செயலரான ஹில்லாரி கிளின்டன் ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில் முறையாக வெற்றி பெற்றவருக்கு” SCAF அதிகாரத்தைக் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

SCAF  மற்றும் MB  க்கு இடையேயான மோதல் எகிப்திய முதலாளித்துவத்திற்குள் இருக்கும் ஓர்அதிகாரச் சண்டை ஆகும். MB  யே ஒரு வலதுசாரிக் கட்சி; இது தொழிலாளர் வர்க்கத்திடம் விரோதப் போக்கு கொண்டது என்பதோடு மத்திய கிழக்கில் முதலாளித்துவம், அத்துடன் அங்கு நடப்பில் இருக்கின்ற ஏகாதிபத்திய அமைப்புமுறை ஆகிய இரண்டையும் பாதுகாப்பதில் உறுதியாக இருக்கின்றதாகும். இது பெருநிறுவன நிதி உயரடுக்கு மற்றும் சலுகை படைத்த நடுத்தர வர்க்கத்தின் (இது பல தசாப்த கால இராணுவ ஆட்சியில் அரசியல் அதிகாரத்தில் இருந்தும், தொழிலாளர்களின் மீதான சுரண்டலில் இருந்து கிட்டிய பொருளாதாரத் திரட்சியில் தனது பங்காக இது கருதியவற்றில் இருந்தும், பங்கு தரப்படாதிருந்தது)  பிரிவுகளின் நலன்களைப் பிரதிபலிக்கிறது.

2011 பிப்வரியில் முபாரக்கை வீழ்த்திய, தொழிலாள வர்க்கத்தை மையமாகக் கொண்டிருந்த புரட்சிகர எழுச்சியை அடக்குவதில் SCAF  உடன் சகோதரத்துவம் இணைந்து ஒத்துழைத்திருந்தது. ஆனால் பாராளுமன்றத் தேர்தல்களில் பெரும்பான்மை பெற்ற பின் தளபதிகளுடன் மோதல் அதிகரித்து விட்டது.

SCAF  ஆணைகளினால் வெறும் பெயரளவுத் தலைவராக ஆக்கப்பட்டுவிட்ட ஜனாதிபதிப் பதவியை வெல்வதின் மூலம் அரசாங்க அதிகாரத்தில் ஒரு பங்கைக் காண இது விரும்புகிறது. அதற்காக இராணுவ ஆட்சிக் குழுவுடன் ஒரு புதிய உடன்பாட்டை உருவாக்க இது ஆர்வத்துடன் உள்ளது. அதேநேரத்தில், தொழிலாள வர்க்கத்திடம் இருந்து புதிய வெகுஜன எதிர்ப்புக்கள் மற்றும் வேலை நிறுத்தங்கள் வெடிக்கலாம் என்று இராணுவத்துடன் சேர்ந்து அச்சப்படும் இது, முதலாளித்துவ அரசை தூக்கியெறியவும் சோசலிசத்தை ஸ்தாபிக்கவுமான ஒரு புரட்சிகர இயக்கத்தைத் தலைசீவ முனைந்து கொண்டிருக்கிறது.

கடந்த வாரம் நடத்தப்பட்ட இராணுவ சதியைத் தொடர்ந்து ஷபிக் பதவியில் அமர்த்தப்பட்டாலும், இராணுவ ஆட்சிக்குழுவின் கீழ் நடப்பது “ஜனநாயகத்திற்கான மாற்றம் என்னும் கட்டுக்கதையை ஊக்குவிப்பதிலான தன் பாத்திரம் அம்பலப்பட்டு தன்னை மதிப்பிழக்கச் செய்து விடும் என்றும் MB அஞ்சுகிறது.

ஜனநாயக மாற்றம் என்கிற பிரமையை வழங்குவதற்கு வசதியாய்,  செயல்பாட்டில் இருக்கும் நிறுவனங்களைக் கலைப்பதை இராணுவம் நிறுத்த வேண்டும் என்று MB, பிற இஸ்லாமியவாதிகள், தாராளவாதிகள், மற்றும் இப்போது முழுமையாக சகோதரத்துவத்தின் பின்னால் அணிவகுத்து நிற்கின்ற புரட்சிகர சோசலிஸ்டுகளைப் போன்ற போலி-இடதுகள் விடுத்த அழைப்புகளை SCAF வெள்ளியன்று பிற்பகலில் திட்டவட்டமாக நிராகரித்து விட்டது.

எகிப்தின் “பொது நிறுவனங்கள் அல்லது தனியார் நிறுவனங்கள்” மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டால் இராணுவமும் போலிசும் அணிதிரட்டப்படும் என்று அரசாங்கத் தொலைக்காட்சியில் படிக்கப்பட்ட நான்கு நிமி அறிக்கை ஒன்றில் SCAF எச்சரித்து. SCAF 2011 அரசியலமைப்பு அறிவிப்பிற்கு தான் வெளியிட்டுள்ள திருத்தத்தைக் காத்து (இத்திருத்தம் அதற்கு தண்டனையில் இருந்து விலக்கும் அத்துடன் நாட்டின் பாதுகாப்புப் படைகளின் மீது முழுமையான கட்டுப்பாடும் அளிக்கிறது; குடிமக்களைக் கைது செய்யும் உரிமையை இராணுவத்திற்கு அளிக்கிறது; அத்துடன் SCAF சட்டமன்ற மற்றும் நிதிநிலை விவகாரங்களின் மீது கட்டுப்பாட்டை எடுத்துக் கொள்கிறது) அறிவித்தது: மது தேசத்தின் வரலாற்றில் இந்த நெருக்கடியான காலகட்டத்தில் அரசின் விவகாரங்களை நிர்வகிக்கும் தேவைகளால் இந்த துணை அரசியலமைப்பு ஆணை வெளியிடப்படுவது அவசியப்பட்டது.

 நாட்டின் நலன்களைப் பாதிக்காத வரை மட்டுமே தன்னால் அமைதியான எதிர்ப்புக்களை அனுமதிக்க முடியும் என்றும் அது அச்சமூட்டும் முறையில் எச்சரித்துள்ளது.

இந்த அறிக்கை MB இன் ஜனாதிபதி வேட்பாளர் முர்சியை தேர்தல் ஆணையம் முடிவை அறிவிப்பதற்கு முன் அவர் தன் வெற்றியை அறிவித்தற்குக் கண்டித்ததுடன், பெருகும் அரசியல் அமைதியின்மைக்கும் அவரைக் குறைகூறியது.

இதற்கு விடையிறுப்பாக முர்சி, இராணுவ ஆட்சி பாராளுமன்றத்தையும், அரசியலமைப்பு மன்றத்தையும் கலைத்ததிலும், சர்வாதிகாரங்களை அது எடுத்துக் கொள்வதிலும் அதன் முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும் என்கிற தனது கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தம் செய்தார். ஆனால் தான் வெற்றி பெற்று விட்டதாக முன்னர் கூறியவற்றை அவர் மீண்டும் கூறவில்லை; முஸ்லிம் சகோதரத்துவம் SCAF  உடன் ஒத்துழைக்கும் விருப்பம் உடையது என்பதைத் தெளிவுபடுத்திய அவர் SCAF இன் உறுப்பினர்கள் “எகிப்தை முன்னேற்ற உழைக்கும் நேர்மையான மனிதர்கள் என்றார். அவர்கள் நம் நாட்டைப் பாதுகாக்க உழைக்கின்றனர் என மேலும் சேர்த்துக் கொண்டார்.

எகிப்திய இராணுவம் எகிப்திய முதலாளித்துவ அரசின் முதுகெலும்பாகவும் தொழிலாளர் வர்க்கப் புரட்சிக்கு எதிரான முக்கிய தடுப்பு அரணாகவும் இருக்கிறது. முஸ்லிம் சகோதரத்துவமோ, அல்லது புரட்சிகர சோசலிஸ்ட்டுகள் போன்ற அதன் போலி இடது ஆதரவாளர்களோ எப்படியோ அரச அதிகாரத்தில் ஒரு பங்கைப் பெற்று விடுகிறார்களாயின், முதலாளித்துவ ஆட்சிக்கு தொழிலாள வர்க்கத்திடம் இருந்து வருகின்ற எந்த சவாலையும் அடக்க அவர்கள் இராணுவத்தையும் போலிசையும் முன்நிறுத்துவார்கள்.