WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் : கலை
விமர்சனம்
கிட்டார் மற்றும்
கிராமிய இசைக் கலைஞரான டாக் வாட்சன் 89 வயதில் காலமானார்
By Hiram Lee
8 June 2012
use
this version to print | Send
feedback
Doc Watson
in 2011
புகழ்பெற்ற கிடார்
இசைக் கலைஞர் டாக் வாட்சன் அவரது
89
வயதில்,
மே
29இல்
வடக்கு கரோலினா,
வின்ஸ்டன்–சேலமில் உள்ள வேக் ஃபாரஸ்ட்
பேப்டிஸ்ட் மருத்துவமனையில் காலமானார்.
வீட்டில் கீழே விழுந்ததை
அடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த வாட்சனுக்கு,
இறப்பதற்கு முன்னர் அந்த வார
தொடக்கத்தில் பெருங்குடல் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தது.
விரல்மீட்டியைக்
(Flat
picking) கொண்டு கிடார்
வாசிப்பதில் ஒரு முன்னோடியான வாட்சன் கிராமிய இசை,
புளூகிராஸ்
(bluegrass)
மற்றும் நாட்டுப்புற இசையில் பிரபலமான
ஒரு கலைஞராக இருந்தார்.
வடக்கு கரோலினாவில் ஞாயிறன்று
நடந்த இறுதி மரியாதையில் நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டார்கள்.
பலர் பல மணி நேரம் வரிசையில்
நின்று தங்களின் மரியாதையைச் செலுத்தி சென்றனர்.
“Doc”
வாட்சன் என்கிற
ஆர்தல் லேன் வாட்சன் 1923,
மார்ச்
3இல்
பிறந்தார்.
அவர் வடக்கு கரோலினாவில்,
டென்னிஸீ எல்லைக்கருகே,
டீப் கேப்பின் ஒரு சிறிய
அபாலசியன் (Appalachian)
சமூகத்தில் வளர்ந்தார்.
குழந்தைப் பருவத்தில் ஏற்பட்ட
ஒரு கண் தொற்று நோய் வாட்சனின் கண் பார்வையினைப் பாதித்ததால்,
அந்த எதிர்கால இசைக்கலைஞர் ஒரு
வயதிற்குள்ளாக முழுவதுமாக குருடாக நேர்ந்தது.
வாட்சனின் தந்தை,
ஜெனரல் வாட்சன் ஒரு விவசாயியும்
மர அறுவை ஆலை தொழிலாளியும் ஆவார்.
மூத்தவரான வாட்சன் அவரே கட்டிய
ஒரு மரவீட்டில் அவரது குடும்பம் வாழ்ந்தது.
மொத்தம் ஒன்பது குழந்தைகளுடன்,
அந்த பெரிய குடும்பம் அதிக
பணமில்லாமல்,
சிறிய வீட்டில் அடைந்து கிடந்தது.
சிறுவனாக
Doc,
ஒரு படுக்கையை இரு சகோதரர்களுடன்
பகிர்ந்து கொள்ள வேண்டியிருந்தது.
தலையணையில் பனி உறையும்
அளவிற்கு அங்கே குளிர் இருந்ததாக அவர் பின்னர் நினைவுகூர்ந்துள்ளார்.
வாட்சனின் குடும்பம்
இசைக் குடும்பமாக இருந்தது.
உள்ளூர் தேவாலயத்தில்
இசைக்குழுவை நடத்திவந்த ஜெனரல் வாட்சன்,
வீட்டில் “பழங்காலத்து”
banjo
இசைக்கருவியைக் கொண்டு வாசிப்பார்.
வாட்சனின் தாயார் கிராமத்து
கதைப் பாடல்களைப் பாடுவார்.
ஐந்து வயதில்,
தன் தந்தை தனக்காக செய்திருந்த
ஒரு banjo
இசைக்கருவியை
Docஉம்
வாசிக்க தொடங்கி இருந்தார்.
அந்த நேரத்தில் வடக்கு
கரோலினாவின் சட்டம் ஏழு வயதிலிருந்து பார்வையற்றவர்களுக்கு கல்வியைக் கட்டாயமாக்கி,
தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு
அனுப்பவியலாத ஏழைக் குடும்பங்களுக்கு நிதியுதவியும் அளித்தது.
இதன் அடிப்படையில்,
வாட்சன் தனது
10வது
வயதில் ராலெயில் இருந்த பார்வையற்றவர்களுக்கான கவர்னர் மோர்ஹெட் பள்ளிக்கு செல்ல
தொடங்கினார்.
அந்த பள்ளியில் நிறைய இசை நிகழ்ச்சிகள்
இருந்தன.
இளம்பருவ வாட்சன்,
கிளாசிக்கல் மற்றும் ஜாஸ் உட்பட
புது விதமான இசையிலும் தன்னை வெளிப்படுத்தினார்.
பள்ளியில் ஒரு நண்பர்
கிட்டார் வைத்திருந்ததுடன் வாட்சனை அதை வாசிக்கவும் அனுமதித்தார்.
மர அறுவை ஆலையிலிருந்து
கிடக்கும் வாராந்தர கூலியிலிருந்து தந்தை தனக்காக சொந்தமாக ஒன்றை வாங்கும் வரை,
வாட்சன் அந்த இசைக்கருவியையே
விரும்பி வாசித்து வந்தார்.
இறுதியில் வாட்சன் ஒரு
கைதேர்ந்த கிடார் இசைக் கலைஞரானார்.
இருப்பினும்,
விரல்மீட்டியைக்
(flat pick)
கொண்டு அவர் வேகமாக வாசித்த முறை தான்,
அவரை மிகவும் பிரபலமாக்கியது.
தம்முடைய வெறும் விரல்களைக் கொண்டு அல்லது ஒரு கட்டைவிரல்
வளையத்தைக்
(thumb pick)
கொண்டு மீட்டாமல் ஒரு விரல்மீட்டியைக்
(flat pick)
கொண்டு மீட்டிய “The
Singing Brakeman,” என்றறியப்பட்டிருந்த
நட்சத்திரமான ஜிம்மி ரோட்ஜரின்
(1897-1933)
ஆரம்பகால நாட்டுப்புற இசையைக் கேட்டு
இரசித்து,
வாட்சனும் விரல்மீட்டியைக் கொண்டு
வாசிக்க தொடங்கினார்.
விரல்மீட்டி அதற்கே உரிய ஒரு பிரத்யேக
உணர்வை,
அதாவது உயர்ந்த தரத்துடன்
இசைக்குறிப்புகளைக் கூர்மையாக,
கொண்டு வந்தது.
வாட்சன்
1950களின்
தொடக்கத்தில் தொழில்ரீதியாக ஒரு இசைக் கலைஞராக தனது முதல் அடியை எடுத்து வைத்தபோது,
பியானோ வாசிப்பவராக பணியாற்றிக்
கொண்டிருந்தார்.
அவர் ஜேக் வில்லியம்ஸால் நடத்தப்பட்டு
வந்த வட்டார நாட்டுப்புற மற்றும் ராக்கபில்லி இசைக்குழுவில் சேர்ந்தார்.
அதில் அவர் மின்-கிட்டாரை
வாசித்தார்.
அந்த குழுவில் ஃபிடில்
(fiddle)
வாசிப்பவர் இல்லை.
வேகமாக வாசிக்கப்படும் ஃபிடில்
இசை மற்றும் சதுர நடனங்களுக்கான தேவையை நிறைவு செய்ய,
வாட்சன் படிப்படியாக ஒரு
நுணுக்கமான கிடார் நுட்பத்தை உருவாக்கினார்.
அது அப்பாலசியன் ஃபிடில்
இசையின் (Appalachian fiddle
music) வேகத்தையும் மற்றும்
நடனங்களின் ஒத்திசைந்த தன்மைகளையும் உள்ளடக்கி இருந்தது.
மேடையில் அவர் மின்-கிட்டாரைக்
கொண்டு அவரது யுக்திகளை மெருகூட்டிய போது,
வாட்சன் ஒருபோதும் குரல்வழி
இசையை பின்னுக்கு தள்ளியதில்லை.
அவரின் இளமைக்கால கிராமிய
பாடல்கள் அவரது மனத்திற்கு நெருக்கமாக இருந்தன.
அவர்
Deep Gapஇல்
அவரது குடும்பத்தார் மற்றும் அண்டைவீட்டாருடன் சேர்ந்து “பழங்காலத்து” பாடல்களை
வாசிப்பதைத் தொடர்ந்தார்.
திறமைகள் இருந்தாலும்
கூட,
அவரை
1960இல்
கிராமிய இசைக்கலைஞரான ரால்ஃப் ரின்ஜ்லெர்
(Ralph Rinzler)
கண்டுபிடிக்காதிருந்தால்,
வடக்கு கரோலினாவுக்கு வெளியே
ஒருவருக்கும் வாட்சனைத் தெரிந்திருக்காமல் கூட போயிருக்கும்.
ரின்ஜ்லெர் ஒருமுறை வாட்சனின்
நண்பரும் அண்டை வீட்டாருமான
Clarence “Tom” Ashleyஇன்
இசையைப் பதிவு செய்ய வடக்கு கரோலினாவிற்கு பயணம் செய்திருந்தார்.
இவரும் ஒரு குறிப்பிடத்தக்க
பழங்கால banjo
இசைக்கருவி வாசிப்பாளரும்,
கிராமிய பாடகரும் ஆவார்.
இவர் ஒரு காலத்தில் புகழ்பெற்ற
கரோலினா டார் ஹீல்சின்
(Carolina Tar Heels)
உறுப்பினராக இருந்தவர்.
ஆஷ்லி மற்றும் வாட்சன்
இருவரும்,
பல்-இசைக்கருவிகள்
வாசிப்பவரான கெய்தர் கார்ல்டன்
(வாட்சனின்
மாமனார்),
வயலின் கலைஞர் ஃப்ரெட் பிரைஸ் மற்றும்
கிட்டார் கலைஞர் க்ளைண்ட் ஹவார்ட் ஆகியோருடன் இணைந்து ரிட்ஜலெருக்கு பாரம்பரிய
கிராமியப் பாடல்களை பதிவு செய்து அளித்தனர்.
பெரும் மதிப்புடைய இந்த
பதிவுகள்,
இன்று
The Original Folkways Recordings
of Doc Watson and Clarence Ashley, 1960-1962
என்பதில் சேர்க்கப்பட்டு,
மீண்டும் மீண்டும் கேட்டு
இரசிக்கப்படுகிறது.
ரின்ஜ்லெர்
1961இல்
வாட்சனையும்,
அவரது சக இசைக்கலைஞர்களுக்களையும் நியூ
யோர்க் நகருக்கு அழைத்து வந்து,
அரை நூற்றாண்டிற்கு
நீடித்திருந்த ஒரு தேசிய மற்றும் உலகளாவிய இசைவாழ்வை தொடங்கி வைத்தார்.
ஒரு தனி கலைஞராக வாட்சனின்
முதல் இசைதொகுப்பு,
எளிமையாக
Doc Watson
என்ற தலைப்பில்
1964இல்
வெளியானது.
தனது பட்டியல்களில்,
அப்பலாசியன் கிராமியப்
பாடல்களோடு வாட்சன் ஓர் ஆழமான பிணைப்பை உணர்ந்தார்.
அத்துடன் பல
blues
மற்றும்
standardகளையும்
பதிவு செய்தார்.
இந்த பழைய இராகங்களுக்கு வாட்சன்
புத்துயிர் அளித்தார்.
அவை வெறுமனே புதுமையானவையாக
மட்டுமல்லாமல்,
அவரை பொறுத்த வரையில்,
அந்த பாடல்கள் அர்த்தத்தையும்
கொண்டிருந்தன.
அவர் தனது ரசிகர்களோடு அந்த
அர்த்தத்தைப் பகிர்ந்து கொண்டார்.
“Omie Wise”
மற்றும் “St.
James Hospital” போன்ற வாட்சன்
இசைத்த மற்றும் பாடிய சோக கதைப்பாடல்களில் தீவிர சோகம் நிறைந்திருந்தன.
வாட்சனின் கட்டையான அதிரும்
குரல் மிகவும் கவர்ந்திழுப்பதாக இருந்தது.
மென்மையான பாடல்கள் மற்றும்
ஃபிடில் இசையிலும்,
வேகமான இசையிலும் கூட,
அவரது வெளிப்பாடுகள் இனிமையாக
இருந்ததோடு,
பெரும்பாலும் இயல்பாக இருப்பதைப்
போன்று தோன்றியது. 1963
நியூபோர்ட் கிராமிய கலைவிழாவில்
அவர் இசைத்த “Black Mountain
Rag” இசை,
அவரது வாசிப்புகளில் ஒருவர்
முழுமையாக ரசித்துக் கேட்பனவற்றில் சிறப்பாக குறிப்பிடக்கூடியதாக உள்ளது.
வாட்சன் அவரது
விரல்மீட்டி வாசிப்பிற்கு நன்கு அறியப்பட்டவராக இருப்பினும்,
அவரது பல சிறந்த ஒலிப்பதிவுகள்
அவரது தனிச்சிறப்பான விரல்பாணி
(fingerstyle)
கிட்டார் இசையைக் கொண்டுள்ளது.
“Deep River Blues,” “Blue Railroad Train,” “Doc’s Guitar,” “Sitting on Top of
the World” மற்றும் “St.
James Hospital” ஆகியவை அவரது
பிந்தைய பதிவுகள் ஆகும்.
1960களின்
மத்தியில் தொடங்கி வாட்சன் இசையின் போக்கில் இணைந்தார்.
பின்னர் தமது சொந்த முயற்சியில்
கிடார் வாசிப்பாளராக ஆகியிருந்த அவரது மகன் மெர்லி வாட்சனுடன் ஒலிப்பதிவு
ஸ்டூடியோவிற்குள் நுழைந்தார்.
1971இல் மெர்லி வாட்சனுடன்
சேர்ந்து இரட்டையர்களாக செய்த
Doc Watson Live on Stage,
இசைதொகுப்பு சில அருமையான
நெகிழ்வூட்டும் தன்மைகளைக்
கொண்டிருந்தது.
பிரபலமாக அறியப்படும் வாட்சனின்
பாடல்களுள் ஒன்றான “Southbound”ஐயும்
மெர்லி எழுதி இருந்தார்.
அது அதே பெயரில்
1966
இசைதொகுப்பில் சேர்க்கப்பட்டது.
வாட்சன் தனக்கு கிடைத்ததிலேயே
சிறந்த நண்பனாக தனது மகனை அடிக்கடி குறிப்பிடுவார்.
மெர்லி வாட்சன்
துயரகரமாக
1985இல்
குடும்ப பண்ணையில் ஒரு டிராக்டர் விபத்தில்
36
வயதில் காலமானார்.
அது வாட்சனுக்கு
தனிப்பட்டரீதியிலும் மற்றும் கலைக்கும் ஒரு மாபெரும் இழப்பாக இருந்தது.
மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர்,
Doc அவரது மகனுக்கு மரியாதை
செலுத்தும் விதமாக மெர்லி ஆண்டுவிழாவை
(MerleFest)
தோற்றுவித்தார்.
ஒவ்வொரு ஆண்டும் வடக்கு கரோலினா
வில்கிஸ்போரோவில் வில்கிஸ் சமூகக் கல்லூரியில் நடைபெறும் அந்த விழா,
ஒரு பிரதான நிகழ்ச்சியாக நடந்து
வருகிறது.
அதில் உலகெங்கிலும் உள்ள
"இசையின்
வேர்களாக"
விளங்கும் பல்வேறு மேதைகளின் இசை
நிகழ்ச்சிகள் வழங்கப்பட்டு,
பெரும் இரசிகர்களை ஈர்த்து
நிற்கிறது.
அவரது நீண்டகால
இசைவாழ்விலிருந்து ஓய்வு பெறுவது குறித்து வாட்சன் அடிக்கடி பேசி இருந்தாலும் கூட,
அவர் இறக்கும் வரையில் இசையோடு
செயலாற்றி வந்தார்.
ராலெய்லியில் உள்ள வடக்கு கரோலினா
அருங்காட்சியகத்தில் இம்மாத கடைசியில் ஒரு நிகழ்ச்சிக்கு அவர் திட்டமிட்டிருந்தார்.
அந்த திட்டமிடப்பட்ட இசை
நிகழ்ச்சி,
இப்போது மறைந்த அந்த கலைஞருக்கான ஒரு
நாள் முழுமையான புகழாரமாக இருக்கும். |