சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  கணனி தொழில்நுட்பம்

Billionaire Oracle CEO buys Hawaiian island

பில்லியனரான ஆரக்கிள் தலைமை நிர்வாகி ஹவாய் தீவு ஒன்றை வாங்குகிறார்

By James Brewer
22 June 2012

use this version to print | Send feedback

மென்பொருள் பெருநிறுவனமான ஆரக்கிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும் ஃபோர்ப்ஸ் இதழின் வரிசையின் படி உலகின் ஆறாவது பெரும் பணக்காரருமான  லாரி எலிசன் லனாய் என்கிற ஒரு ஹவாய் தீவினை வாங்குவதற்கான பேரத்தை ஏறக்குறைய முடித்திருக்கிறார். இந்த விற்பனையானது குறிப்பாக அமெரிக்காவில் சமூக வாழ்வின் அத்தனை அம்சங்களிலும் பெரும் செல்வந்தர்களின் ஆதிக்கம் மேலோங்கி இருப்பதன் அப்பட்டமான வெளிப்பாடாக அமைந்திருக்கிறது.

Yacht
2004
இல் எலிசன் கட்டிய ரைஸிங் சன் என்கிற சொகுசுப் படகு

எலிசன்  ஒரு விட்டுக்கொடுக்காத தொழிலதிபராக மட்டுமல்லாமல், பெரும் செல்வந்தர்களின் மிதமிஞ்சிய ஆடம்பரப் பொழுதுபோக்குகளில் மூழ்கித் திளைப்பதற்கும் இழிபுகழ் பெற்றவராவார். 2004 ஆம் ஆண்டில், ’ரைஸிங் சன்என்கிற ஒரு 435 அடி சொகுசுப் படகைகட்டுவதற்கு 377 மில்லியன் டாலர் தொகையை ஒப்பந்தத் தொகையாக அவர் செலவிட்டதாக கூறப்படுகிறது. இந்தப் படகில் ஐந்து அடுக்குகளுடன் 82 அறைகள் உண்டு. மொத்தமாய் 86,000 சதுர அடி புழங்கிடம் கொண்ட இப்படகில் ஓனிக்ஸ் கவுன்டர்டாப்கள், சினிமா அரங்கு மற்றும் ஒரு பரந்த ஒயின் அறை ஆகியவை உண்டு. உலகின் பத்தாவது நீளமான மோட்டார் படகாக இருக்கும் இந்தக் கப்பல் இப்போது பொழுதுபோக்குத் துறையில் ஒரு நிர்வாகியான டேவிட் கெஃபன் வசம் உள்ளது

எலிசன் ஆடம்பரமான வாகனங்கள் மற்றும் விமானங்களைச் சேகரிப்பதில் பிரியம் கொண்டவர். தனது பல மில்லியன் டாலர் விலை கொண்ட உயர்திறன் வாகனமான USA-17 ஐக் கொண்டு படகுப் போட்டியில் அமெரிக்கன் கோப்பையை இவர் வென்றிருக்கிறார்.

இவருக்கு சான் பிரான்சிஸ்கோ பே ஏரியா பகுதியில் பல மில்லியன் டாலர் மதிப்பு கொண்ட மூன்று வீடுகள் இருக்கின்றன. அவற்றில் பசிபிக் ஹைட்ஸ் என்கிற அவர் தற்காலிகமாய்த் தங்குவதற்கான 10,000 சதுர அடிப் பரப்புள்ள இரண்டு மாடி வீடும் ஒன்று. இதில் ஒரு நீரூற்றும் ஒரு பாறைப் பூங்காவும் பனி மூடிய பரப்பு போன்றதொரு சுவற்றுக்குப் பின்னால் அமைந்திருக்கும். இந்தச் சுவற்றை ஒரு சின்னச் சாவி போட்டுத் திறந்தால் போதும் அந்த மொத்தச் சுவரும் மறைந்து போகும்.

இப்போது எலிஸன் தனது மகுடத்திற்கு ஒரு பகட்டான இன்னுமொரு ஆபரணத்தை ஒரு பசிபிக் தீவின் வடிவத்தில் சேர்த்துக் கொண்டிருக்கிறார்.

ஒரு செல்வந்தர் ஒரு தீவை வாங்குவது இது நிச்சயமாக முதல்முறை அல்ல தான், என்றாலும் இதை கவனத்திற்குரியதாக்குவது என்னவென்றால், முதலாவதாய், பரிவர்த்தனையின் அளவு, இரண்டாவதாக இப்பகுதி அமெரிக்க அரசின் ஒரு பகுதி என்கிற உண்மை. லனாய் என்கிற இந்தத் தீவு ஹவாய் தொகுப்பில் ஆறாவது பெரிய தீவாகும்.

Lanai
ஹவாய் தொகுப்பின் செயற்கைக்கோள் தோற்றம்
; உட்படம் லனாய் தீவைக் காட்டுகிறது.

லனாய் ஒரு காலத்தில் அன்னாசிப் பழ வளர்ப்புக்குப் பெயர்பெற்ற வரலாறைக் கொண்டது என்பதால் அதனைச் சிலசமயங்களில் அன்னாசித் தீவு என்றும் அழைப்பதுண்டு. தீவின் 140 சதுர மைல்களில் 98 சதவீதத்திற்கான உரிமை முன்னாள் உரிமையாளரான கேஸில் & கூக் (Castle & Cooke)நிறுவனத்திடம் - இந்நிறுவனம் பழங்கள் மற்றும் காய்கறிகள் உற்பத்தியில் உலகின் மிகப் பெரும் நிறுவனமான டோல் ஃபுட் கம்பெனிநிறுவனத்தில் இருந்து பிரித்து உருவாக்கப்பட்ட ஒரு நிறுவனம்  - இருந்து எலிஸனுக்குக் கைமாறும் ஏற்பாடு ஏறக்குறைய பேச்சுவார்த்தை முடிந்த நிலையில் இருக்கிறது. கேஸில் & கூக் உரிமையாளரான பில்லியனர் டேவிட் முர்டோக் 2000 ஆவது ஆண்டில் இந்நிறுவனத்தின் மற்ற பங்குதாரர்களிடம் இருந்து 700 மில்லியன் டாலருக்குப் பங்குகளை வாங்கி இந்நிறுவனத்தைக் கைப்பற்றினார்

இந்த ஒப்பந்தம் புதனன்று ஹவாய் ஆளுநர் நீல் ஆபர்குரோம்பியின் மூலமாக பகிரங்கப்பட்டது, ஆனால் மே 2 அன்று கையொப்பமாகி இருக்கும் இந்த விற்பனை ஒப்பந்தம் குறித்து விற்றவர்களது வழக்கறிஞர்கள் தெளிவற்ற விவரங்களை மட்டுமே அளித்தனர். எலிசனை பாதிக்கக் கூடிய இரகசியத் தகவல்கள் இந்த ஆவணத்தில் இடம்பெற்றிருப்பதாய் அதற்கு அவர்கள் காரணம் கூறினர்.

இதில் சம்பந்தப்பட்டிருக்கும் ரியல் எஸ்டேட் நிலத்தின் அளவு 88,000 ஏக்கர்கள். ஃபோர் சீசன்ஸ் ரிஸார்ட்ஸ் கிளைகள் இரண்டு இங்கு இருக்கிறது. ஒவ்வொன்றிலும் அதற்கென ஒரு கோல்ஃப் மைதானம், ஒரு குதிரை இலாயம், அத்துடன் குடியிருப்பு மற்றும் வர்த்தக இடங்கள் இருக்கின்றன. இத்தீவில் தனி நடைபாதையுடனான சாலைகள் 30 மைல் நீளத்திற்கும், நடைபாதைகளற்ற சாலைகள் 400 மைல்களுக்கும் இருக்கின்றன. டிராபிக் விளக்குகள் கிடையாது. இத்தீவின் மக்கள்தொகை 3,200. இவர்களில் பலரும் எலிசனின் நிலத்தில் தான் வாழ்கிறார்கள் என்பதால் அவரது பண்ணையடிமைகளாய் வாழ  வேண்டிய நிலைக்கு அவர்கள் முகம் கொடுப்பார்கள் என்பது வெளிப்படை

ஒரு காலத்தில் உலகின் 75 சதவீத அன்னாசிப் பழங்கள் லனாய் தீவில் விளைவிக்கப்பட்டதாய் உள்ளூர் வரலாறு அறிந்தவர்கள் கூறுகின்றனர். 1985 இல் கேஸில் & கூக் இந்தத் தீவை வாங்கியதற்குப் பிறகு அன்னாசி உற்பத்தியை அது நிறுத்தி விட்டது. அதன்பின் முர்டோக் இத்தீவில் சுற்றுலாத் துறையை வளப்படுத்துவதில் தான் கவனம் செலுத்தி வந்திருந்தார். ஆனால் ரிசார்ட்டுகள் வழங்கும் நான்கு-நட்சத்திர விடுதி வசதிகளுக்குச் செலவு செய்யத்தக்க வசதிபடைத்த சுற்றுலாப் பயணிகளை மட்டுமே குறிவைத்து இந்த வேலைகள் அமைந்திருந்தன. 1994 இல் பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் திருமணம் செய்து கொண்ட சமயத்தில், இத்தீவின் அனைத்து ஹோட்டல் அறைகளும் அவர்களின் பேரில் மொத்தமாய் முன்பதிவு செய்து கொள்ளப்பட்டது.    

வேலைவாய்ப்பின்மை இத்தீவில் அதிகமாய் இருக்கிறது. சென்ற ஆண்டிலிருந்து இங்கு சுற்றுலாத் துறை பரிவர்த்தனைகள் 6 சதவீதம் சரிவு கண்டிருப்பதாக ஹவாய் சுற்றுலாத் துறை ஆணையம் தெரிவிக்கிறது. இந்த ஆண்டின் ஜனவரி முதல் ஏப்ரல் வரையான காலத்தில் வெறும் 26,000 பேர் மட்டுமே இத்தீவுக்கு வந்து சென்றிருக்கின்றனர்.

லனாய் தீவின் விற்பனை விலை தெரியவில்லை என்றாலும் அடிப்படை விலை 500 மில்லியன் டாலர் முதல் 600 மில்லியன் டாலர் வரை இருந்தது என்பதாய் மவுய் நியூஸ் மதிப்பிட்டுள்ளது. கம்மியான தொகை தான்.

எலிசன் அதை ரொக்கப் பணமாகவே கொடுத்து விடுவார்.