WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் :
முன்னோக்கு
கிரேக்கத்தின் முன்னால் உள்ள பாதை எது?
Chris
Marsden
19 June 2012
use
this version to print | Send
feedback
ஐரோப்பிய ஒன்றியம்,
சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கி ஆகிய முக்கூட்டிடம்
ஒப்புக்கொண்ட மிருகத்தனமான சிக்கன நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தும் வேலையோடு,
புதிய ஜனநாயகம் கட்சியின்
(New
Democracy - ND)
தலைவர் அன்டோனிஸ் சமாரஸ் கிரேக்கத்தில் ஒரு கூட்டணி அரசாங்கத்தை அமைப்பார் என
எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய ஜனநாயகம் கட்சியின் வெற்றி,
அனைத்திற்கும் மேலாக,
ஒரு
பிரதான எதிர்கட்சியாக எழுந்த
SYRIZA
மீதான மற்றும்,
ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் கிரேக்க முதலாளித்துவத்தைத் தூக்கியெறியும் ஒரு
போராட்டம் இல்லாமலேயே சிக்கன நடவடிக்கையை எதிர்க்கலாம் என்ற அதன் வாதத்தின் மீதான
ஒரு குற்றப்பத்திரிக்கையாக உள்ளது.
முக்கூட்டின் மற்றும் வங்கிகளின் கட்டளைகளை எதிர்ப்பதற்கு தற்போதைய அரசியல்
அமைப்புமுறையில் எவ்வித இடமும் இல்லை என்பதை கிரேக்கத்தின் பொதுத் தேர்தல்
அப்பட்டமாக உறுதிபடுத்தியது.
புதிய ஜனநாயகம் கட்சியின் வெற்றி,
பகிரங்க மிரட்டலை அடித்தளமாக கொண்ட ஒரு பிரச்சாரத்தின் இறுதி விளைவாகும்.
முக்கூட்டின் சிக்கன நடவடிக்கை குறிப்பாணைக்கு
(memorandum)
ஒப்புதல் அளித்து கையெழுத்திட்ட பிரதான கட்சியான புதிய ஜனநாயகம் கட்சிக்கு எதிரான
ஒரு வாக்கு,
உடனடியாக கிரேக்க வங்கிகளைப் பிணையெடுக்க உதவும் பணத்தை முடக்கி விடுவதற்கும்,
யூரோ
பிராந்தியத்திலிருந்து கிரேக்கத்தை நிர்பந்தமாக வெளியேற்றுவதற்கும்,
மற்றும் ஒரு நாசகரமான பொருளாதார பொறிவை ஏற்படுத்துவதற்கும் இட்டு செல்லக்கூடுமென்று
ஐரோப்பிய தலைவர்கள் ஒருவர் மாற்றி ஒருவர் எச்சரித்தனர்.
அவ்வாறிருந்தும் கூட,
27
சதவீத அளவிற்கு எட்டிய
SYRIZAஇன்
வாக்குகளோடு சேர்ந்து,
உத்தியோகப்பூர்வமாக குறிப்பாணைகளை எதிர்த்த கட்சிகளும் கூட ஒரு பெரும்பான்மையைப்
பெற்றன.
முன்னொருபோதும் இல்லாதளவிற்கு
37.5
சதவீத வாக்குகள் வாக்களிக்கப்படாமல் விடப்பட்டன.
இது
ஒட்டுமொத்த அரசியல் அமைப்புமுறை மீதுள்ள பரந்த வெறுப்புணர்வையும்,
அத்தோடு பல வாக்காளர்கள் தங்களின் கிராமங்களில் இருந்து வாக்களிப்பதற்காக வந்து
திரும்பிச் செல்ல பணம் இல்லாததையும் பிரதிபலிக்கிறது.
வாக்களித்தவர்களில்
40
சதவீதத்தினர்,
குறிப்பாணைக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்த கட்சிகளுக்கு ஆதரவளித்திருந்த
போதினும்,
புதிய ஜனநாயகம் மற்றும் சமூக ஜனநாயக
PASOK
ஆகிய
இரண்டு இழிபெயர்பெற்ற கட்சிகளும் ஒரு கூட்டணி அரசாங்கத்தை அமைக்க பேச்சுவார்த்தைகள்
நடத்தி வருவதாக கூறப்படுகின்றது.
அவர்களுக்கு நாடாளுமன்ற பெரும்பான்மை கிடைக்கக்கூடும்.
அதற்காக,
வெற்றி பெற்றுள்ள கட்சியான புதிய ஜனநாயகம் கட்சிக்கு
50
இடங்களைக் கூடுதலாக அளிக்கும் கிரேக்கத்தின் ஜனநாய-விரோத
தேர்தல் சட்டங்களுக்கு தான் நன்றி கூற வேண்டும்.
இத்தகையவொரு அரசாங்கம் அதன் கொள்கை முடிவுகளுக்கு வெகுஜனங்களின் அனுமதியைப் பெற
வேண்டியதிருக்காது என்பதோடு முதலாளிமார்களுக்கும்,
தொழிலாளர் வர்க்கத்திற்கும் இடையில் ஒரு மோதலுக்கு மட்டுமே அது வழிவகுக்கிறது.
அவருடைய நிலைமை இடர்பாடானது என்பது சமாரஸிற்குத் தெரியும்.
இருந்தபோதினும்,
(SYRIZAஇல்
இருந்து பிளவுபட்டு வந்த ஜனநாயக இடது மற்றும் மற்றொரு சிறிய கட்சி உட்பட)
“முடிந்தளவிற்கு
எத்தனை கட்சிகளைச் சேர்க்க இயலுமோ"
அவற்றை சேர்த்து
"மீட்பை
அளிக்கும் ஓர் அரசாங்கத்தை"
உருவாக்கும் அவரது முயற்சியானது,
உடன்படிக்கையின் உட்கூறுகளை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு உட்படுத்துவதோடு
இணைந்துள்ளது.
தேர்தலுக்கு முந்தைய தங்களின் அச்சுறுத்தல்களை மீண்டும் வலியுறுத்தி,
தங்கள் கோரிக்கைகளில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கு எவ்வித வாய்ப்பும் இல்லை என்று
ஐரோப்பியத் தலைவர்கள் உதறித் தள்ளிவிட்டனர்.
மெக்சிகோ
G20
கூட்டத்தில் ஜேர்மன் சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெல் அப்பட்டமாகக் கூறினார்:
“அது
ஏற்றுக்கொண்ட பொறுப்புகளில் புதிய அரசாங்கம் உறுதியுடன் நிற்க வேண்டும் என்பது தான்
முக்கிய விஷயம்.
சீர்திருத்த நடவடிக்கைகளைத் தளர்த்துவது என்பதற்கு இடமில்லை,”
என்றார்.
பெரும்பாலான வாக்காளர்கள் இன்னமும் குறிப்பாணைக்கு ஒப்புதலை வழங்கவில்லை அல்லது
கிரேக்கம் மற்றும் ஒட்டுமொத்த ஐரோப்பாவின் வருங்காலத்தை நிர்ணயிக்கும் ஒரு ஒரு
வாக்கெடுப்பாக சித்தரிக்கப்பட்ட ஒன்றில் வாக்குப்பதிவு செய்யவில்லை என்பது
2009இல்
இருந்து சுமத்தப்பட்ட காட்டுமிராண்டித்தனமான வெட்டுக்களால் ஏற்பட்டிருக்கும் ஆழ்ந்த
விரோதப் போக்கிற்கு நிரூபணமாகும்.
ஆனால் இந்த எதிர்ப்பை
SYRIZA
ஒரு
அரசியல் முட்டுச் சந்திற்குள் மட்டுமே திசைதிருப்பிவிட்டது.
SYRIZA
தலைவர் அலெக்சிஸ் சிப்ரஸ்,
தாம்
ஐரோப்பிய ஒன்றியத்திற்கு உறுதிப்பாடு உடையவர் என்றும்,
கிரேக்க கடன்களை படிப்படியாக வரி உயர்வு வருவாய் மூலமாக திரும்ப செலுத்தி
விடுவதாகவும்,
வெறுமனே சிறிய விட்டுகொடுப்புகளையும்,
பணத்தைத் திரும்பி செலுத்துவதற்கான கூடுதல் அவகாசம் மட்டுமே விரும்புவதாகவும் ஆளும்
மேற்தட்டிற்கு மறு-உத்தரவாதம்
அளிப்பதிலேயே அவரது பிரச்சாரத்தை செலவிட்டார்.
அவர்,
ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் முதலாளித்துவத்திற்கு எதிரான எதிர்ப்பு என்பது அடையக்
கூடியதல்ல,
நடைமுறை சாத்தியமற்றது,
தேசிய தற்கொலைக்கான ஒரு பாதை என்று தொழிலாளர்களுக்கு வலியுறுத்தினார்.
இது
SYRIZA
யாருக்காக பேசுகிறதோ அந்த வசதி படைத்த மத்தியதட்டு வர்க்க அடுக்குகளின் வர்க்க
நலன்களையும்,
அரசியல் போலித் தோற்றங்களையும் பிரதிபலிக்கிறது.
கிரேக்கத்தில் கட்டவிழ்ந்துவரும் அரசியல் பேரழிவு குறித்து அவர்கள் கோபம்
கொண்டிருந்தாலும்,
ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்தில் ஒட்டுமொத்த
ஐரோப்பிய தொழிலாளர் வர்க்கத்தைப் பரந்தமுறையில் ஒன்றுதிரட்டி போராடும் ஒரு சோசலிச
மூலோபாயத்திற்கு
SYRIZAஇன்
தலைவர்கள் கட்சிரீதியில் விரோதம் கொண்டவர்களாக உள்ளனர்.
SYRIZA
இப்போது ஒரு விசுவாசமான எதிர்க்கட்சியாக செயல்படத் திட்டமிடுகிறது.
புதிய ஜனநாயகம் கட்சியின் அரசாங்கம் “மக்கள் கட்டளைக்கு” இணங்கி இருக்க
வேண்டுமென்று நேற்று சிப்ரஸ் அபத்தமாக வலியுறுத்தினார்.
அவர்
கூறுகையில்,
எதிர்க்கட்சி என்பது
"ஆராய்ந்தறிந்தும்,
பொறுப்புடனும் இருக்க வேண்டும்",
நாங்கள் அவ்வாறு இருப்போம் என்று திரு.
சமாரஸிற்கு நான் தெரிவித்துள்ளேன்,”
என்றார்.
கிரிஸில் தொடங்கி ஐரோப்பா முழுவதிலும் பரவும் சிக்கன நடவடிக்கைக்கு எதிரான ஒரு
பரந்த எதிர்ப்பு இருந்தபோதினும் கூட,
SYRIZAஇன்
போக்கினாலும் மற்றும் சர்வதேசரீதியில் போலி-இடது
குழுக்களிடமிருந்து அதற்கு கிடைக்கும் ஆதரவினாலும் உண்டான நாசகரமான விளைவானது,
ஆளும் மேற்தட்டிற்கு செயல்படும் சுதந்திரத்தை அளிக்கிறது.
தங்களின் உத்தியோகப்பூர்வ வர்ணம் எப்படியிருந்த போதினும்,
சிக்கன நடவடிக்கையோடு தொடர்புபட்ட கட்சிகள் தேர்தல்களில் தண்டிக்கப்படுவது
வாடிக்கையாகி உள்ளது:
அதாவது ஸ்பெயினில்
PSOE,
போர்த்துக்கல்லில் சோசலிஸ்ட் கட்சி,
பெர்லுஸ்கோனியின் போர்ஜா இத்தாலியா மற்றும் பிரான்சில் சார்க்கோசியின்
UMP
ஆகியவை பலியானவைகளில் அடங்கும்.
அவற்றிற்கு பிரயீடாக வரும் ஒவ்வொரு அரசாங்கமும் இன்னும் கூடுதலாக சிக்கன
நடவடிக்கைகளைத் திணிக்கின்றன.
எவ்வாறிருந்த போதினும்,
அவை
ஒரு அரசியல் பின்னடைவிற்குள் தள்ளப்படுவதோடு,
தொழிலாளர் வர்க்கத்திடமிருந்து கடுமையான எதிர்ப்பையும் முகங்கொடுக்கின்றன.
இக்காரணத்தை ஒட்டி,
இன்னும் கூடுதலான காட்டுமிராண்டித்தனமான வெட்டுக்கள் மற்றும் கிரேக்கத்தை யூரோ
மண்டலத்திலிருந்து வெளியில் தள்ளக்கூடிய நடவடிக்கைகள் உட்பட,
அவர்கள் கிரிஸில் என்ன செய்கிறார்களோ அதுவொரு அரசியல் மற்றும் பொருளாதார பேரழிவைத்
தடுக்கும் என்பதில் ஆளும் வர்க்கத்திற்கே அங்கே நம்பிக்கை இல்லை.
கிரீஸில் புதிய ஜனநாயகம் கட்சி வெற்றி அடைந்தும் கூட சந்தைகள் தீவிர சரிவைக் கண்டன.
ஸ்பெயின் மற்றும் இத்தாலியின் கடன் பத்திரங்கள் ஊக வணிகர்களால் இலக்கு
கொள்ளப்படுகிறது.
வங்கி பங்குகளும் கூட ஜேர்மனியிலும் பிரான்ஸிலும் சரிவடைந்தன.
Institute of International Financeஇன்
தலைவர் சார்லஸ் டல்லரா
G20
தலைவர்களைப் பின்வருமாறு எச்சரித்தார்:
“நான்கு
ஆண்டுகளில் இரண்டாம் முறையாக மீண்டும் ஓர் உலக மந்தநிலை ஏற்படுவதற்கான அபாயம்
இருப்பது மிக மிக உண்மையாக உள்ளது.”
இதுபோன்ற நிலைமைகளின் கீழ்,
SYRIZAஉம்
மற்றும் அதன் எதிர்பலங்களும் ஆளும் வர்க்கத்திடம் “Plan
B”
திட்டத்தை நடைமுறைபடுத்த வலியுறுத்துவது சிக்கன நடவடிக்கைகளில் இருந்து
திரும்பியதாகாது,
மாறாக அது தொழிலாளர் வர்க்கத்தின் மீதான இன்னும் ஆழ்ந்த தாக்குதலாகும்.
இவை
பொலிஸ்-இராணுவ
அடக்குமுறையைப் பயன்படுத்தியேனும் அவசியப்படும் அனைத்து வழிவகைகளிலும்
திணிக்கப்படும்.
ஐரோப்பா முழுவதும் உள்ள தொழிலாளர்களும் இளைஞர்களும் கிரேக்கத்திலிருந்து மையப்
படிப்பினையை எடுத்துக் கொண்டு,
அரசியல் போக்கில் ஒரு தீர்க்கமான மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும்.
ஐரோப்பிய ஒன்றியத்தைச் சீர்திருத்துவதோ அல்லது அதன் உறுப்பு அரசாங்கங்களிடம்
SYRIZA
போன்ற போலி-இடது
கட்சிகளின் தலைமைகளின் கீழ் விட்டுகொடுப்புகளுக்காக அழுத்தம் அளிப்பதோ
முன்னாலிருக்கும் வேலையல்ல என்பதை கிரேக்கத்தின் கசப்பான அனுபவம்
உறுதிபடுத்துகின்றது.
பெரு
வணிகம்,
அதன்
கட்சிகள்-அரசாங்கங்கள்,
ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தில் தங்களின் அதன் முடிவுகளைக்
கூட்டாக திணிப்போர்கள் ஆகியோருக்கு எதிராக தொழில்துறைரீதியாகவும்
அரசியல்ரீதியாகவும் ஒரு தாக்குதலை ஐக்கியப்படுத்த தொழிலாளர் வர்க்கத்தின் புதிய
கட்சிகள் கட்டியெழுப்பப்பட வேண்டும்.
ஐக்கிய ஐரோப்பிய சோசலிச அரசுகளுக்குள் தொழிலாளர்களின் அரசாங்கங்களை அமைப்பதே
நோக்கமாக இருக்க வேண்டும்.
அத்தகையவொரு உண்மையான சோசலிச,
சர்வதேச தலைமையை—அதாவது நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின்
பிரிவுகளை—கட்டியெழுப்பாமல் வேறொன்றையும் சாதிக்க முடியாது. |