WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா
:
பிரான்ஸ்
பிரெஞ்சுச் சட்டமன்ற தேர்தல்களில் சோசலிஸ்ட் கட்சி அறுதிப் பெரும்பான்மை அடைகிறது
By Antoine Lerougetel
18 June 2012
use
this version to print | Send
feedback
புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்டின்
பெருவணிக
PS
சோசலிஸ்ட் கட்சி ஞாயிறன்று நடந்த பிரெஞ்சு சட்டமன்றத் தேர்தல்களின்
இரண்டாம் சுற்றில் அறுதிப் பெரும்பான்மையில் வெற்றி பெற்றுள்ளது.
577 உறுப்பினர்கள் உடைய தேசிய சட்டமன்றத்தில் 312ல் இருந்து 326
இடங்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில்,
PS
அறுதிப்பெரும்பான்மையான 289 இடங்களுக்கும் மிக அதிகமான இடங்களைப் பெற்றுள்ளது. மற்ற
அரசியல் கட்சிகளுடன் சமரசத்திற்குப்
பேச்சுக்கள் நடத்தத் தேவையில்லாத வகையில் பாராளுமன்றத்தில் ஒழுங்கை எதிர்பார்த்த
ஹாலண்டிற்கு இப்பொழுது நல்ல பெரும்பான்மை கிடைத்துள்ளது. பிரான்சின் பிராந்தியங்கள்
அனைத்திலும் கிட்டத்தட்ட மற்றும் செனட்டிலும்
PS
பெரும்பான்மையைக் கொண்டுள்ளது.
56% வாக்குப் பதிவு,
1958ல் நிறுவப்பட்ட பிரான்ஸின் ஐந்தாம் குடியரசில் சட்டமன்றத் தேர்தல்களிலேயே
மிகவும் குறைவானது ஆகும்.
PS
உடன் நட்புக்கொண்டுள்ள பசுமைவாதிகள் 20 தொகுதிகளில் வெற்றி பெறுவர்
என்று கணிக்கப்பட்டுள்ளது; இதையொட்டி ஒரு பாராளுமன்றக் குழுவாக அதை அமைக்க
முடியும்; அதனால் அக் கட்சியினருக்கு கூடுதல் அரசாங்க நிதி கிடைக்கும்.
மக்கள் இயக்கத்திற்காக ஒரு ஒன்றியம் எனப்படும்
UMP,
தோல்வியுற்ற ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசியின் கட்சி 206ல் இருந்து 230 இடங்களைப்
பெறும். பல முக்கிய
UMP
உறுப்பினர்கள் தங்கள் இடங்களை இழந்துவிட்டனர்: கடினப் போக்கை சட்டம் ஒழுங்கில்
கொண்ட,
குடியேற்ற எதிர்ப்பு முன்னாள் உள்துறை மந்திர,
Claude Guéant,
முன்னாள் பாதுகாப்பு மந்திரி
Michelle Alliot-Marie;
UMP
இன்
அதி வலது பிரிவைச் சேர்ந்த
Nadine Morano,
இவர் புதிய பாசிச தேசிய முன்னணிக்கு இரண்டாம் சுற்றின் போது
முறையிட்டவர் ஆகியோர் இப்பட்டியலில் உள்ளனர்.
உண்மையில், இரண்டாம் சுற்றின் ஒரு முக்கிய கூறுபாடு,
UMP
மற்றும்
FN
வேட்பாளார்களுக்கு இடையே
PS
வேட்பாளர்களுக்கு எதிராக ஒருங்கிணைந்து செயல்படுதல் என இருந்தது; உத்தியோகபூர்வமாக
UMP
யில் இதற்கு எதிராக ஒரு தடை இருந்தபோதிலும்கூட. சார்க்கோசியின் முன்னாள் பிரதம
மந்திரி பிரான்சுவா ஃபிய்யோன்,
UMP
க்கு தலைமைக்கு இப்பொழுது முயல்பவர், மோரனோவிற்கு ஒரு கௌரவமான சாடலைத்தான்
கொடுத்தார்.
FN
தேசிய சட்டமன்றத்தில் 1997க்குப் பின் முதல்தடவையாக நுழையும்; இதற்கு மூன்று அல்லது
நான்கு தொகுதிகள் கிடைக்கும், பிரான்ஸ் முழுவதும் கிட்டத்தட்ட 61
FN
வேட்பாளர்கள் இரண்டாம் சுற்றிற்கு முன்னேறியிருந்தனர்.
FN
உடைய தலைவர்
Marine Le Pen,
Hénin-Beaumont
தொகுதியில் குறுகிய அளவில் தேர்தலில் வெற்றி பெற முடியாமற் போய்விட்டது. இது
தொழில்துறையில் இருந்து அகற்றப்பட்டுவிட்ட சுரங்கச் சமூகம் ஆகும்; இங்கு உள்ளூர்
PS
அதிகாரிகள் பணக்கையாடலுக்காகக் கண்டிக்கப்பட்டுள்ளன்னர்—இத்தேர்தலில்
லு பென்
PS
மேயர் பிலிப் கெமெலுக்கு எதிராக நின்று தோற்றார்.
அவருடைய 22 வயது மருமகள்
Marion Maréchal-Le Pen
ஒரு
UMP
கோட்டையான
Carpentras
ல் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இத்தேர்தல் இடது முன்னணிக்கு
–ஸ்ராலினிசக்
கம்யூனிஸ்ட் கட்சி
PCF, PS
ல்இருந்து பிரிந்த ஒரு சிறு அமைப்பு,
Jean-Luc Mélenchon
உடைய இடது கட்சி (PG)-
ஆகியவற்றிற்கும் மற்றொரு தீவிரப் பின்னடைவு ஆகும். இது தேர்தலில் 13 இடங்களைத்தான்
பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது 2007ல்
PCF
குழுக்கள் கொண்டிருந்த 20 இடங்களில் இருந்து ஒரு சரிவு ஆகும்; அதேபோல்
உத்தியோகபூர்வ பாராளுமன்றத்திற்குத் தேவையான 15 இடம் என்பதின் கீழ்த்தான் உள்ளது.
இது
PCF
ன் ஆதாரங்களில் கணிசமான குறைப்பு ஏற்படும் என்ற அச்சுறுத்தலைக் கொடுத்துள்ளது.
ஜனாதிபதித் தேர்தல்களில் இரண்டாம் சுற்றில் ஹாலண்டிற்கு
நிபந்தனையற்ற ஆதரவு என்னும் இடது முன்னணியின் அழைப்பு, அவர்கள்
PS
ன் வணிக சார்புத் திட்டத்திற்கு எந்த மாற்றீட்டையும்
தெரிவிக்கவில்லை என்பதைத்தான் வாக்காளர்களுக்குத் தெளிவுபடுத்தியது.
மெலென்ஷோன்
Hénin-Beaumont
தொகுதியில்
Marine Le Pen
ஐ தோற்கடிக்கும் முயற்சியில் முதல் சுற்றிலேயே
அகற்றப்பட்டுவிட்டார். ஸ்ட்ராஸ்பூர்க் ஐரோப்பிய பாராளுமன்றத்தில் மெலென்ஷோன் தன்
வரைகாலத்தைத் தொடர்வார்.
இரு
PCF
பிரதிநிதிகளை அரசாங்கத்திற்குள் கொண்டுவரும் வாய்ப்பு குறித்து
PS
அதிகாரிகள் பரிசீலிக்கின்றனர்.
இது குறித்து
PCFல்
பிளவு உள்ளது; ஏனெனில்
PS
அரசாங்கத்தில் சேர்வது என்பது ஐரோப்பிய ஒன்றிய நிதிய உடன்பாட்டிற்காக ஹாலண்ட்
கொடுத்த ஆதரவிற்கு அவர்களுடைய மோசடித்தன குறைகூறல்கள் அம்பலமாகும். அந்த
உடன்படிக்கை யூரோப் பகுதி முழுவதும் கடுமையான சிக்கன நடவடிக்கைகளைச் சுமத்துகிறது.
பல தசாப்தங்களாக
PCF
கூட்டணி அரசாங்கங்களிலும் உடன்பாடுகளிலும்
PS
உடன் இருந்துள்ளது; பொதுத்துறைகள் தனியார்மயமாக்கப்படுதல், சமூகநலச் செலவுக்
குறைக்குப்புக்கள் இவற்றிற்கு ஒத்துழைப்பு கொடுத்துள்ளது.
2007ம் ஆண்டு
PS
ன் ஜனாதிபதி
வேட்பாளராக இருந்த செகோலீன் ரோயால் பாராளுமன்றத்தில் நுழைவதில் தோற்றுவிட்டார்.
அவர் PS
ன் தேசியக் கருவியால்
La Rouchelle
தொகுதியில் எதிர்க்கப்பட்டார்; அங்கு உள்ளூர்
PS
வேட்பாளர், எதிர்ப்பாளராக நின்று கீழிறங்க மறுத்துவிட்டார்.
ஒருங்கிணைக்கப்பட்ட நிறைவேற்று அதிகாரம் இத்தேர்தல்களில் இருந்து
வந்திருப்பதை வங்கிகளுக்கு பணிபுரியும் நோக்கத்திற்குத் தான் பயன்படுத்தப்போவதை
ஹாலண்ட் தெளிவுபடுத்தியுள்ளார். பிரான்சின் வரவு-செலவு
திட்ட பற்றாக்குறையை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3%க்கும் கீழே 2013 ஐ ஒட்டியும்,
பூஜ்யம் என 2017லும் செய்ய இருப்பதாகத் திட்டமிட்டுள்ளார்; இதற்கென மாபெரும் சிக்கன
நடவடிக்கைகள் எடுக்கப்படும்—தொழிலாள
வர்க்கம்தான் அதை எதிர்கொள்ளும்.
பிரெஞ்சுத் தொழிலாளர்களுக்கான இவருடை நோக்கம் புதன் அன்று கிரேக்க
MagmaTVநிலையத்திற்கு
இவர் கொடுத்த பேட்டியில் இருந்து அறிந்து கொள்ள முடியும். ஐரோப்பிய ஒன்றியம்,
ஐரோப்பிய மத்திய வங்கி மற்றும் சர்வதேச நாணயநிதியம் ஆகிவை சுமத்திய சிக்கன
நடவடிக்கைகளினால் கிரேக்கப் பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள பேரழிவைப் புறக்கணித்து,
25% வயதுவந்தோர் வேலையின்மை, இளைஞர்களிடையே 50% என்றுள்ள நிலையில், ஹாலண்ட்
அச்சுறுத்தியிருப்பதாவது:
“கிரேக்கர்கள்
கொண்ட உறுதிப்பாட்டில் இருந்து விலகுவர் என்ற நிலை எற்பட்டு, தங்கள் நிதியங்களைச்
சீராக்க எந்த முன்னோக்கையும் கைவிடுவர் என்ற உணர்வு ஏற்பட்டால், பின் பல நாடுகளும்
யூரோப்பகுதியில் கிரேக்கம் கூடாது என அகற்றுவதை விரும்புவர்.”
ஹாலண்டின் இடைக்காலப் பிரதம மந்திரி கடந்த புதன் அன்று கடுமையான
தியாகங்கள் பொறுத்துக் கொள்ளப்பட வேண்டும்,
“ஏனெனில்
நாம் நினைப்பதைக் காட்டிலும் நிலைமை கடுமையாக உள்ளது”
என்பதைத் தெளிவுபடுத்தினார். அரசாங்கம் ஜூலை 17ல் நடக்க இருக்கும்
“சமூக
மாநாட்டை”
எதிர்பார்க்கிறது; அதில் அரசாங்கம், முதலாளிகள் குழுக்கள் மற்றும்
தொழிற்சங்க அதிகாரத்துவம் ஆகியவை தம் கூட்ட சமூக, பொருளாதாரக் கொள்கைகள் பற்றி
விவாதிப்பர். |