சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு

BBC world news editor: Houla massacre coverage based on opposition propaganda

BBC உலகச் செய்தி ஆசிரியர்: எதிர்த்தரப்பினரின் பிரச்சாரத்தை ஹௌலாப் படுகொலைகள் பற்றிய தகவல்கள் அடித்தளமாக கொண்டிருந்தன

By Chris Marsden
15 June 2012

use this version to print | Send feedback

மிகவும் அமைதியான முறையில் BBC உலகச் செய்தி ஆசிரியர் ஜோன் வில்லியம்ஸ், சிரியாவில் கடந்த மாதம் ஹௌலாவில் நடைபெற்ற படுகொலைகள் பற்றிய உலகச் செய்தி ஊடகத்தினதும் மற்றும் அவருடைய ஊழியர்களின் தகவல்கள் ஒரு பொய்களின் தொகுப்பு எனக் கூறியுள்ளார்.

ஜூன் 7, 16:23 என நேரம் கொடுக்கப்பட்டு, தன்னுடைய வலைத் தளத் தகவலையே தொடர்ச்சியான வெளிப்படையான அறிக்கைகளை கூறப் பயன்படுத்தி, சிரிய இராணுவத்தையோ அல்லது அலவைட் போராளிகளையோ மே 25 ல் 100 பேரை படுகொலை செய்தனர் எனத் தொடர்புபடுத்துவதற்கு எந்தவிதச் சான்றும், அடையாளமும் இல்லை என்று வில்லியம்ஸ் விளக்கினார்.

இது சம்பந்தமாக, வில்லியம்ஸ் அத்தகைய குற்றச்சாட்டுக்கள் பஷர் அல்-அசாத்தை அகற்ற முற்பட்ட சுன்னி எழுச்சியாளர்களின் பிரச்சாரத்துறையின் செயற்பாடுகளாகும் என்றும் வலுவாகத் தெரிவித்துள்ளார்.

தன்னை நியாயப்படுத்திக் கொண்ட தயாரிக்கப்பட்ட அறிக்கைகளுக்குப் பின், சிரியாவில் தளத்தில் இருந்த நிலைமையின் சிக்கல்தன்மை, உண்மையில் இருந்து கட்டுக்கதையைப் பிரிக்க முற்படுவதற்குத் தேவையைக் கொடுத்துள்ளது என்ற வில்லியம்ஸ், சிரியாவின் நீண்டகாலமாக வதந்திகள் உண்மை என்று வெளிவரும் வரலாறு உண்டு என எழுதியுள்ளார்.

கடந்த மாதம் ஹௌலாப் படுகொலைகளுக்குப் பின், ஆரம்ப அறிக்கைகள் 49 குழந்தைகள், 34 பெண்கள் கழுத்தை அறுத்துக் கொலை செய்யப்பட்டதாகக் கூறின. டமாஸ்கஸில் மேற்கத்தைய அதிகாரிகள் பின்னர் என்னிடம், விசாரணைகளில் இறந்தவர்கள் எவரும் அத்தகைய மிருகத்தன முறையில் கொல்லப்படவில்லை எனக் காட்டியுள்ளன என்றார்கள். மேலும், சிரியப் படைகள் படுகொலைகளுக்கு முன் இப்பகுதி மீது தாக்குதல்கள் நடத்தியபோதும், தாக்குதல்கள் எவர் துல்லியமாக நடத்தியது, எப்படி, எதற்காக என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

இக்காரணத்தை ஒட்டி அவர் மிகவும் காலந்தாழ்த்தி முடிவுரையாக, இவ்வாறான சூழ்நிலையில், நமக்குத் தெரியாதவை பற்றியும் தகவல் கொடுக்கிறோம், நமக்குத் தெரிந்தவற்றை மட்டும் அல்ல என்பது முன்னெப்போதையும்விட மிகவும் முக்கியமானது.

அப்பொழுது ஹௌலாவிலும், இப்பொழுது Qubair இலும், சுட்டும் விரல் அரசாங்கச் சார்பு உடைய போராளிக்குழுவான ஷபிஹாவைக் காட்டுகிறது. ஆனால் சோகம் ததும்பிய மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை ஒருபுறம் இருக்க, உண்மைகள் புதியவை : கொலைகளுக்கு எவர் உத்தரவிட்டதுஅல்லது ஏன் என்பது தெளிவில்லை.

அந்த நேரத்தில் BBC யிலோ அல்லது பெரும்பாலும் பிற இடங்களிலோ, இத்தகைய நிதானமான அணுகுமுறையின் சுவடு காணப்பட்டதில்லை.

மாறாக BBC, லண்டன், வாஷிங்டன், .நா.தலைமையகம் என அனைத்தில் இருந்தும் வெளிப்படும் சிரிய இராணுவம் குறித்து அல்லது ஷபிஹாப் போராளிக்குழுக்கள் அதன் பாதுகாப்பில் நடத்திய கொடுமை எனப்பட்டது பற்றிய  போலித்தனச் சீற்றங்கள் நிறைந்த அறிக்கைகளை வெளியிடும் அமைப்பாகக் காட்டிக் கொண்டது.

மே 28ம் திகதி அறிக்கை தக்க மாதிரியாக உள்ளது: சிரியா- ஹௌலாப் படுகொலைகள்: தப்பிப்பிழைத்தவர்கள் கொடூரத்தை உரைக்கின்றனர்: இதில் அடையாளம் கூறப்படாத படுகொலைகளில் தப்பிப் பிழைத்தவர்கள்..... BBC யிடம் தங்கள் அதிர்ச்சி மற்றும் அச்சத்தை ஆட்சியின் படைகள் தங்கள் வீடுகளில் நுழைந்து தங்கள் குடும்பங்களைக் கொன்றது குறித்துக் கூறினர். அத்தகைய மோதலில் இப்படி சாட்சி எனக் கூறப்படுபவர்கள் அரசியல்ரீதியாக  எதிர்க்கட்சியுடன் இணைந்திருக்கலாம் அல்லது அதன் உத்தரவுப்படி நடந்து வரலாம் என்ற பிரச்சனை முன்வைக்கப்படவே இல்லை.

இப்பொழுதுதான் வில்லியம்ஸ் கூறுகிறார்:

சிரியாவிற்குள் நடப்பதைப் பற்றித் தகவல் கொடுப்பதில் உள்ள இடர்கள் இருக்கையில், ட்விட்டர், பேஸ்புக், யூட்யூப் ஆகியவற்றில் எதிர்த்தரப்பு பதிவு செய்துள்ள ஒளிப்பதிவுகளின் களத்தில் இருக்கும் நிலைமை பற்றிய உட்பார்வையை அளிக்கலாம். ஆனால் நிகழ்வு பற்றிய தகவல்கள் எப்பொழுதுமே முழு வெள்ளையாகவோ, கறுப்பாகவோ இராதுபல நேரங்களில் சாம்பல் வண்ணத்தில் இருக்கும். ஜனாதிபதி அசாத்தை எதிர்ப்பவர்களுக்கு ஒரு செயற்பட்டியில் உள்ளது. ஒரு மூத்த மேற்கத்தைய அதிகாரி, தன் யூட்யூப்பில் தொடர்பு மூலோபாயங்களை மிகச்சிறந்தவை என்று கூறுமளவிற்குச் சென்றார். ஆனால் அவரும் இதை உளரீதியான-நடவடிக்கைகள் என்று ஒப்பிட்டுள்ளார், அதாவது அமெரிக்கா இன்னும் பிற இராணுவங்கள் உண்மையாக இராது என்னும் விடயங்களைப் பற்றி மக்களை நம்ப வைப்பதற்காக.

தான் என்ன பேசுகிறேன் என்பதை அறிந்திருக்கும் நிலையில்தான் வில்லியம்ஸ் இப்பொழுது உள்ளார்.

மே 27ம் திகதி, BBC ஹௌலா பற்றி ஓர் அறிக்கையை, குழந்தைகளின் சடலங்கள் ஹௌலாவில் புதைக்கப்படுவதற்காகக் காத்திருக்கின்றன எனக் காட்டும் வகையில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டது.

உண்மையில் இது மிகச் சிறந்தது என்பதைத் தவிர வேறு எப்படி வேண்டுமானாலும் கூறலாம் என்னும் எதிர்த்தரப்புப் பிரச்சாரத்திற்கு உதாரணம்தான் எனக்கூறலாம். இப்புகைப்படம், டஜன் கணக்கான அடையாளம் தெரியாத சடலங்களைக் காட்டுவது உண்மையில் மார்ச் 27, 2003 ல் ஈராக்கில், மார்க்கோ டி லௌராவில் எடுக்கப்பட்டது; இதில் பாக்தாத்திற்குத் தெற்கே உள்ள பாலைவனத்தில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகள் வெள்ளை உடல் பைகளில் வைக்கப்பட்டிருந்ததைத்தான் காணலாம்.

Di Lauro கூறினார்: எனக்கு உண்மையில் வியப்பைத் தருவது BBC  போன்ற செய்தி நிறுவனம் செய்தியின் ஆதாரத்தைச் சரிபார்க்கவில்லை, எவர் அனுப்பும் படத்தையும வெளியிடத் தயாராக உள்ளது என்பதுதான்: நடவடிக்கையாளர், குடிமகன்-செய்தியாளர் எவர் வேண்டுமானாலும் என... வேண்டுமென்றே பிரச்சார நோக்கத்திற்காக எவரோ, வேறு எவர் எடுத்து புகைப்படத்தைப் பயன்படுத்திகிறார்.

மீண்டும் BBC இத்தகைய பிரச்சாரத்திற்கு ஒரு கருவி போல் செயல்பட்டது; இப்புகைப்படம் ஒரு நடவடிக்கையாளரால் கொடுக்கப்பட்டது, சுதந்திரமாகச் சரிபார்க்கப்பட முடியாதது எனத் தெரிந்தும்கூட.

தன்னுடைய சக ஊழியர்களுக்கு ஆலோசனையுடன் வில்லியம் முடிவுரை கூறுகிறார். எந்தச் செய்தியாளருக்கும் ஒரு காத்திரமான அவநம்பிக்கை கொள்வது அடிப்படை தகமை ஆகும். அது மோதல்களைப் பற்றித் தகவல் கொடுப்பதைவிட இன்னமும் முக்கியமானது. இதில் பணயத்தில் உள்ளது அதிகம். எல்லாமே அவை காணப்படுவதுபோல் அவ்வாறு உண்மையாக இருப்பதில்லை.

இதனுடைய கடந்தக்காலச் சான்றைப் பார்க்கையில், இத்தகைய நிதானத்திற்கான முறையீடு, ஒரு காத்திரமான அவநம்பிக்கைகொள்வது எனக்கூறுவது BBC யில் செய்திகூறுபவர்கள், காண்பவர்கள் பக்கம் சரியாக திருப்பப்பட வேண்டும்மற்றும் முழு உத்தியோகபூர்வச் செய்தி ஊடகக் கருவியிடத்தேயும்.

வில்லியம்ஸின் சொந்தத் தவறு அவரும் அவருடைய சக ஊழியர்களும் சிரியாவில் ஆட்சிமாற்றத்திற்கான பிரச்சாரத்தின் குரல்களாக இருக்கும் பங்கைக் கொள்ள கேட்கப்பட்டதினால் உந்துதல் பெற்றிருக்கலாம். ஆனால் அவருடைய கருத்துக்கள் அவரின் வலைத் தளத்திலேயே முடிவடைந்துவிடுவதால், BBC யில் மற்றைய இடங்களில் எல்லாம் அனைத்தும் திட்டமிட்டபடிதான் நடக்கின்றன.

ஜூன் 6 படுகொலைகள் Qubair கிராமத்தில் நடந்ததாகக் கூறப்படுவது பற்றிய BBC கொடுத்த தகவல்கள் மீண்டும் திறனாயாத வகையில் எதிர்த்தரப்பின் குற்றச்சாட்டுக்களைத்தான் கூறுகின்றன; அதாவது இது ஷபிஹாப் போராளிகளின் வேலை, சிரியத் துருப்புக்களால் செய்யப்பட்டுள்ளது என. BBC நிருபர் Paul Danahar, .நா.கண்காணிப்பாளர்களுடன் செல்லுபவர், கட்டிடங்கள் இடிந்துள்ளது, எரிக்கப்பட்டது பற்றி எழுதி, பாதிக்கப்பட்டவர்கள் என்போரின் டஜன் கணக்கிலான சடலங்கள் என்ன ஆயின என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று கூறுகிறார். ஒரு வீடு தீயினால் கருகியது பற்றியும், சதைகள் எரியும் துர்நாற்றம் பற்றியும் எழுதுகிறார். தாக்குபவர்களின் இரத்தவெறியை மக்களைப் படுகொலை செய்வது தீர்த்துவிடவில்லை. அவர்கள் கால்நடைகளையும் சுட்டுக் கொன்றனர்.

இதைத்தொடர்ந்து ஒரு இறந்த கழுதையின் புகைப்படம் உள்ளது; ஆனால் அதைத்தவிர கிராமத்தில் நடந்தது என்பது குறித்துக்கூற உண்மையில் கணிசமாக ஏதும் இல்லை.

ஒரு கட்டத்தில் Danahar ட்வீட் செய்கிறார்: அஹ்மத் என்பவர் கிராமத்தில் இருந்து வந்துள்ளார்; கொலைகளைப் பார்த்ததாகக் கூறுகிறார். டஜன்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர் என்று அவர் கூறுகிறார்....அவர் கருகிய முகத்தைக் கொண்டுள்ளார்...ஆனால் அவருடைய விவரங்களில் முரண்பாடுகள் உள்ளன; அவர் நேர்மையற்றவர் என்பது உறுதி இல்லை என்று .நா. கூறுகிறது; அவர் வாகன வரிசையைத் தொடர்ந்து வந்திருக்கலாம் (வலியுறுத்தல் சேர்க்கப்பட்டுள்ளது)

ஆனால் இதையொட்டி இராணுவ வாகனங்கள் மூலம் வெளிப்பட்ட சுவடுகளில் இருந்து, கொடூரங்களை மறைக்கும் முயற்சிகள் திட்டமிடப்பட்டவை, தெளிவு என்று முடிவுரை கூறவதில் இருந்து Danahar நிறுத்தவில்லை.

இதுதான் காத்திரமான அவநம்பிக்கைகொள்ளலாகும்!

FrankfuterAllgemeine Zeitung ல் வெளியிடப்பட்ட ஜூன் 7அறிக்கை பற்றி, BBC ஒரு சொல்கூட கூறவில்லை என்பதும் சுட்டிக்காட்டப்பட வேண்டும்; அந்த அறிக்கையில் சுதந்திர சிரிய இராணுவம்தான் ஹௌலாப் படுகொலைகளை நடத்தியது என்றும், இது மேற்கத்தைய ஆதரவுடைய போராளிகளை எதிர்க்கும் உள்ளூர் மக்கள் கொடுத்த பேட்டிகளில் இருந்து தெரிகிறது என்றும் கூறப்பட்டுள்ளது.