சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan government imposes new price rises

இலங்கை அரசாங்கம் புதிய விலை உயர்வை விதிக்கிறது

Saman Gunadasa
18 May 2012

use this version to print | Send feedback

ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் அரசாங்கம் இலங்கை தொழிலாளர்களின் மற்றும்  ஏழைகளின் ஊதியங்கள் மற்றும் வாழ்க்கை நிலைமைகளை எல்லாப் பக்கங்களிலும் இறுக்குகின்ற அதே வேளை, வங்கிகளும் பெரிய நிறுவனங்களும் பெரும் இலாபங்களைப் பெறுவதோடு அவற்றின் தலைமை நிர்வாக அதிகாரிகள் பிரமாண்டமான சம்பள உயர்வுகளையும் பெறுகின்றனர்.

மே 4 அன்று, அரசாங்கம் சர்வதேச நாணய நிதியம் (IMF) வகுத்த சிக்கன நடவடிக்கைகளுக்கு ஏற்ப, இறக்குமதி பால் மா, சமையல் எரிவாயு மற்றும் சீமெந்து போன்றவற்றின் விலையை முறையே 25, 16 மற்றும் 10 சதவீதம் என்றளவில் அதிகரித்துள்ளது. கடந்த மாதம் கோதுமை மாவின் விலையை 10 வீதம் உயர்த்தியதை தொடர்ந்து இந்த விலை உயர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கோதுமை மா இலங்கையின் ஏழைகளின், குறிப்பாக தோட்ட தொழிலாளர்களின் முக்கிய பிரதான உணவுப் பொருளாகும். மது, சிகரெட் மற்றும் அனைத்து இறக்குமதி வாகனங்கள் மீதான வரிகளும் மார்ச் 31 முதல் அதிகரிக்கப்பட்டன.

பெப்ரவரி ஆரம்பத்தில் விதிக்கப்பட்ட 50 சதவீத எரிபொருள் விலை அதிகரிப்பின் உச்ச கட்டமாக இந்த விலை உயர்வு வந்துள்ளது. பெப்பிரவரியில் ஏற்பட்ட விலை அதிகரிப்பு வெகுஜன ஆர்ப்பாட்டங்களை தூண்டியதுடன், கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் மீது பொலிசார் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் மீனவர் ஒருவர் கொல்லப்பட்டார். இலங்கை ரூபாய் பெப்ரவரி முதல் 17 சதவிகிதம் வீழ்ச்சியடைந்ததால்,
அனைத்து இறக்குமதி பொருட்களின் விலைகளும் உயர்ந்தன.

மத்திய வங்கி இந்த ஆண்டு 9.1 சதவீதம் பணவீக்கத்தை முன்னறிவித்த போதிலும், இது ஒரு சமாளிக்கக் கூடிய நிலை எனக் கூறி, கவலைகளை ஓரங்கட்டியது. ஏப்ரல் 27 அன்று ஆற்றிய ஒரு விரிவுரையில், சர்வதேச நாணய நிதியத்தின் வதிவிடப் பிரதிநிதி கொஷி மாதாய் அறிவித்ததாவது: "பொருளாதார வலி காணப்பட்டாலும், சரியான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன, அவை ஒரு நிலையான, மேலும் தாங்கி நிற்கக்கூடிய பாதையில் பொருளாதாரத்தை வைக்கும்.

ஆனால் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படும் சிக்கன நடவடிக்கைகளின் பேரழிவு விளைவுகளை தொழில் மற்றும் அடிப்படை வாழ்க்கைத் தர வெட்டுக்களுடன் கிரேக்கம் மற்றும் ஐரோப்பா முழுவதும் காண முடியும். ஐரோப்பிய நெருக்கடியானது இலங்கை உட்பட அனைத்து நாடுகளையும் பாதிக்கும், ஆழமடைந்துவரும் உலக பொருளாதார நெருக்கடியின் ஒரு அறிகுறியே ஆகும்.

2011மத்திய வங்கி அறிக்கை, கணிஷ்ட ஊழியர்கள் மற்றும் அரசாங்க ஆசிரியர்களுக்கு ஓரளவு ஊதிய உயர்வுகள் கிடைத்துள்ள அதே வேளை, "சாதாரண தனியார் துறையில் உள்ள ஒட்டுமொத்த ஊழியர்களின் உண்மையான ஊதிய விகித சுட்டெண்ணை, முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2011ல் அது 2 சதவீதம் குறைந்துள்ளது," என்று கூறுகிறது. தோட்ட தொழிலாளர்களின் உண்மையான சம்பளம் அதே ஆண்டில் சுமார் 3 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.

இலங்கை தொழிலாளர்களின் வாழ்க்கை தரம் இறங்குமுகமாக சுழலும் போது, நாட்டின் அதி செல்வந்த தட்டினர் இராஜபக்ஷ அரசாங்கத்தின் கொள்கைகளால் பயனடைந்துள்ளனர்.

மத்திய வங்கியின் படி, பெருநிறுவன வங்கித் துறை 2011ல் பெரும் இலாபத்தை பதிவுசெய்துள்ளது. இவற்றில் கொமர்ஷல் வங்கியின் இலாபம் 8 பில்லியன் ரூபாய்களால் (62 மில்லியன் அமெரிக்க டொலர்கள்) 45 சதவிகிதம் உயர்ந்துள்ளது, ஹட்டன் நஷனல் வங்கியின் இலாபம் 6 பில்லியன் ரூபாய்களால் 27 சதவீதம் அதிகரித்துள்ளது, சம்பத் வங்கியின் இலாபம் 4 பில்லியன் ரூபாய்களால் 18.5 சதவீதம் உயர்ந்துள்ளது.

இந்த அதிகரிப்பு குறைந்த பெருநிறுவன வரி விகிதங்களின் ஒரு நேரடி விளைவாகும். பெருநிறுவன வரி விகிதம் 2011 வரவு செலவுத் திட்டத்தில் 35 சதவிகிதத்தில் இருந்து 28 சதவீதமாக குறைக்கப்பட்டது. நிதி அமைச்சராகவும் உள்ள ஜனாதிபதி இராஜபக்ஷ, இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் வங்கி மற்றும் நிதி துறையினருக்கு மேலும் 7 அல்லது 8 சதவிகிதம் வரி குறைப்பு கொடுத்துள்ளார்.

ஏப்ரல் 23 அன்று டெயிலி எஃப்.டீ. தெரிவித்ததாவது: நாட்டின் மிகவும் இலாபகரமான துறையான வணிக வங்கிகள், அவற்றின் அடிமட்டத்தையும் உயர்த்திக் கொண்டுள்ளமை, அவற்றின் நிர்வாகக் குழு அதிகாரிகள் பெருந்தொகைப் பணத்தை வீட்டுக்கு எடுத்துச் சென்றதில் இருந்து தெரிய வருகின்றது. 2012ல் வங்கிகள் மற்றும் பட்டியலிடப்பட்டுள்ள இதர நிறுவனங்களின் அதிகாரிகளின் சம்பளம் மிகவும் உயர்ந்த மட்டத்தில் இருக்கும் என அந்த கட்டுரை முன்னறிவிக்கின்றது.

ஒட்டுமொத்தமாக ஏழு வணிக வங்கிகளின் 77 இயக்குனர்கள், 2011ல் 314 மில்லியன் ரூபாய்களை (2.5 மில்லியன் டொலர்) குவித்துக்கொண்டுள்ளனர். இது முந்தைய ஆண்டு பெற்ற223 மில்லியன் ரூபாவில் இருந்து 41 சதவீத அதிகரிப்பாகும். நேஷன்ஸ் டிரஸ்ட் வங்கி மற்றும் கொமர்ஷல் வங்கியின் இயக்குனர்கள் முறையே 78 மற்றும் 46 சதவிகிதங்களால் தமது ஊதியத்தை அதிகரித்துக்கொண்டுள்ளனர். இலங்கையின் இரண்டாவது பெரிய தனியார் வங்கியான ஹட்டன் நஷனல் வங்கியின் பதினொரு இயக்குனர்கள், ஒரு 42 சதவிகித வருடாந்த அதிகரிப்பில் 117 மில்லியன் ரூபாய்களைப் பெற்றுள்ளனர்.

வங்கி இயக்குநர்கள் தற்போது 350,000 ரூபாய்கள் சராசரி மாத ஊதியத்தை, அல்லது இலங்கையின் சராசரி குடும்ப வருமானமான 36,000ரூபாய்களில் இருந்து கிட்டத்தட்ட பத்து மடங்கு அதிகமாக பெறுகின்றனர். மேலதிக நேர ஊதியம் உட்பட அரசாங்க துறை தொழிலாளர்களின் மாத வருமானம் சுமார் 15,000 ரூபாய். தனியார் தொழிற்சாலை தொழிலாளர்கள் மற்றும் தோட்டத் தொழிலாளர்கள் சுமார் 5,000  முதல்  10,000  ரூபாய் வரை பெறுகின்றனர்.

இலங்கை அரசாங்கம், கடந்த ஆண்டு பொருளாதாரம் 8.3 சதவிகிதம் வளர்ந்ததுள்ளது மற்றும் தனிநபர் ஆண்டு வருமானம் 2.836 டொலர்களால் அதிகரித்துள்ளது என்று புகழ்ந்துகொண்ட போதிலும், இவற்றில் எந்தவொரு சாதாரண தொழிலாளியோ அல்லது விவசாயியோ அல்லது மீனவர்களோ பயனடையவில்லை. மத்திய வங்கி இந்த ஆண்டு கணித்த வளர்ச்சி விகிதத்தை 7.2 சதவிகிதமாக குறைத்துக்கொண்டது. மற்றொரு சர்வதேச நாணய நிதிய குழு ஜூலை தொடக்கத்தில் இலங்கை பொருளாதாரத்தை பரிசீலனை செய்யவுள்ள நிலையில், மேலும் சிக்கன நடவடிக்கைகளும் தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளின் உரிமைகள் மீதான ஏனைய தாக்குதல்களும் கட்டவிழ்த்து விடப்படும்.

ஆசிரியர் பரிந்துரைக்கும் கட்டுரை:

இலங்கை அரசாங்கம் சிக்கன நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்திய பின்னர் சர்வதேச நாணய நிதியம் கடனை விடுவித்தது