WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள் :
மத்திய கிழக்கு
சுதந்திர சிரிய இராணுவம்தான் ஹௌலாப் படுகொலைகளை நடத்தியது என்று
Frankfurter Allgemeine Zeitung
கூறுகிறது
By Chris Marsden
13 June 2012
use
this version to print | Send
feedback
மே 25ம்
திகதி ஹௌலாவில் நடந்த படுகொலைகள் சுதந்திர சிரிய இராணுவத்துடன்
(FSA)
இணைந்த
எதிர்ப்பு குழுக்களால்தான் நடத்தப்பட்டன என்று ஜேர்மனியின்
Frankfurter
Allgemeine
Zeitung
பத்திரிகை கூறியுள்ளது.
செய்தி
ஊடகத்தால் விமர்சனத்திற்குட்படுத்தாது முன்வைக்கப்பட்ட அமெரிக்காவும் பிற முக்கிய
சக்திகளும் கொடுக்கும் உத்தியோகபூர்வ மதிப்பீட்டை இந்த அறிக்கை மறுக்கிறது.
படுகொலைகள் அரசாங்க சார்புடைய சக்திகளால் செய்யப்பட்டன என்று கூறப்பட்டு, பஷர்
அல்-அசாத் ஆட்சிக்கு எதிரான இராணுவத் தலையீட்டிற்குப் பிரச்சாரத்தாக்குதலால்
முடுக்கிவிடப்பட்டன. எந்தத் தீவிர சான்றையும் முன்வைக்காமல், அமெரிக்காவும் அதன்
நட்பு நாடுகளும் சிரிய இராணுவம் அல்லது அரசாங்க சார்புடைய ஷபிஹா போராளிக்குழுக்கள்
100 பேருக்கும் மேலான படுகொலைகள் என்ற நிகழ்வை செய்திருக்க வேண்டும் என்று
கூறிவந்தன.
Frankfurther Allgemeine Zeitung
அதன்
ஜூன் 7 பதிப்பில் டமாஸ்கசில் இருந்து ரைனர் ஹெர்மான் கொடுத்துள்ள அறிக்கை ஒன்றை
வெளியிட்டுள்ளது. அவர் தன்னுடைய கட்டுரைக்குத் அடிப்படையாக அப்பகுதியைப்
பார்வையிட்டவர்கள், நேரில் பார்த்தவர்களுடைய சாட்சியத்தைக் கேட்ட எதிர்த்தரப்பு
விசாரணையாளர்களின் நிலைப்பாட்டைக் கொண்டுள்ளார். இவை பெரும்பாலும் அசாத் அரசாங்கம்
கொடுத்துள்ள நிகழ்ச்சி விபரத்தைத்தான் உறுதிப்படுத்துகின்றன.
“இவர்களுடைய
கண்டுபிடிப்புக்கள் எழுச்சியாளர்களுடைய குற்றச்சாட்டுக்களை
முரண்பாட்டுக்குள்ளாக்குகின்றன. அவர்களோ ஆட்சிக்கு நெருக்கமாக இருக்கும் ஷபிஹா
போராளிகள்தான் காரணம் எனக் குற்றம் சாட்டியிருந்தனர்”
என்று ஹெர்மன் எழுதினார்.
“பலாத்காரத்தை
நிராகரிக்கும் எதிர்த்தரப்பாளர்கள் கொல்லப்பட்டனர் அல்லது குறைந்தப்பட்சம்
சமீபத்தில் அச்சுறுத்தப்பட்டுள்ளனர் என்ற நிலையில், எதிர்த்தரப்பாளர்கள் தங்கள்
பெயர்களைக் குறிப்பிட விரும்பவில்லை.”
என்று சேர்த்துக் கொண்டார்.
இப்படுகொலை வெள்ளிக்கிழமை பிரார்த்தனைகளுக்குப் பின் நடந்தன. சுன்னி
“எழுச்சியாளர்கள்”
ஹௌலாவைச் சுற்றி இருக்கும் மூன்று சிரிய இராணுவச் சோதனைச்சாவடிகள் மீது
தாக்குதலுடன் இவை தொடங்கின.
“சோதனைச்சாவடிகள்
பெரும்பாலும் சுன்னி ஹௌலாக்கள் இருக்கும் அலவைட் கிராமங்களைப் பாதுகாக்கும் வகையில்
வடிவமைக்கப்பட்டுள்ளன என்று ஜேர்மனிய நாளேடு கூறுகிறது.
ஆதரவுப்
படைகள் சிரிய இராணுவத்தினால் உதவிக்கு அனுப்பப்பட்டன. மோதல்கள் 90 நிமிடங்கள்
நீடித்தன; இதில்
“டஜன்
கணக்கான படையினரும் எழுச்சியாளர்களும் கொல்லப்பட்டனர்.”
இந்த
மோதல்களுக்கு நடுவேதான் ஹௌலாவிலுள்ள மூன்று கிராமங்கள் வெளியுலகில் இருந்து
தொடர்பற்றுப் போயின.
“நேரில்
பார்த்தவர்களின் சாட்சியப்படி, இந்த நேரத்தில்தான் படுகொலைகள் நடத்தப்பட்டன
என
Frankfurther Allgemeine Zeitung
எழுதியது. இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் முற்றிலும் அலவைட் மற்றும் ஷியா
சிறுபான்மையினர், ஹௌலாவைச் சேர்ந்தவர்கள். இங்குள்ள மக்களில் மொத்தம் 90%
சுன்னிகளாவர். ஒரு குடும்பத்தின் பல டஜன் உறுப்பினர்கள், சமீப ஆண்டுகளில்
சுன்னியில் இருந்து ஷியா மத மாறியவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இறந்தவர்களில்
பலர் அல்வைட் குடும்பமான ஷோமாலியாவைச் சேர்ந்தவர்கள், பாராளுமன்றத்தில் உள்ள
உடனுழைப்பாளர் எனக்கருதப்படும் ஒரு சுன்னி உறுப்பினரின் குடும்பத்தினரும்
அடங்குவர்.”
அறிக்கை
தொடர்கிறது:
“படுகொலைகளைத்
தொடர்ந்து, தாக்கியவர்கள் தங்களை சுன்னி பாதிப்பாளர்கள் எனக்கூறி பாதிப்பாளர்களை
ஒளிப்படம் எடுத்து, ஒளிப்பதிவு நாடாக்களை இணையத்தளம் மூலம் வழங்கவும் செய்தனர்.”
இந்நிகழ்வுக் குறிப்பு வாஷிங்டன், லண்டன் மற்றும் பாரிஸ் நடத்தும்
பிரச்சாரத்திற்குப் பேரழிவு தரும் மறுப்பு ஆகும். அவை சிரியத் தேசியக் குழு, சிரிய
மனித உரிமைகள் கண்காணிப்புக்குழு மற்றும் வளைந்து கொடுக்கும் மேலைச் செய்தி
ஊடகத்துடன் இணைந்து செயல்படுகின்றன.
தாக்குதல் தினத்தன்று ஐக்கிய நாடுகள் சபையி பொதுச்செயலர் பான் கீ-மூன்,
எச்சான்றும் இல்லாமல், சிரிய அரசாங்கத்தின்
“ஏற்க
முடியான வன்முறை, தவறுகளின் அளவை”
கண்டித்தார். இவற்றுள் கனமான ஆயுதங்கள் குடிமக்கள் மீது பயன்படுத்தப்படுகின்றன
என்று கூறியதும் அடங்கும்.
ஐ.நா.தூதர் கோபி அன்னன் டமாஸ்கஸுக்கு வருகை தரும் நேரத்தில் இணைந்திருக்கும்
வகையில் படுகொலை நடத்தப்பட்டதாக ஆட்சி குறிப்பிட்டது. படுகொலைகள் அன்னன்
பேச்சுவார்த்தைகள் மூலம் வந்த போர் நிறுத்தத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதற்காக
நடத்தப்பட்டன என்றும் குற்றம் சாட்டியது. இதைத் தொடர்ந்து இப்பொழுது குற்றம்
சாட்டப்பட்டுள்ள அமைப்பான சிரிய விடுதலை இராணுவம் படுகொலைகளைச் செய்துள்ளதாகவும்,
அது அன்னனுடைய சமாதானத்திட்டத்திற்கு மதிப்புக் கொடுக்காது என்றும் கூறிவிட்டது.
Frankfurter Allgemeine Zeitung கட்டுரைக்குக் கூடுதல் மதிப்பு
Spiegel Online மார்ச் 29 அன்று கொடுத்துள்ள கட்டுரை
பெறுகிறது. சிரிய தேசிய இராணுவம் நடத்தும் பரந்த செயற்பாடான பலரைச் சட்டத்திற்கு
உட்படுத்தாமல் கொலை செய்வது சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
Spiegel “புதைக்கும் கூட்டம்”
என்று
“சமீபத்தின் நான்கு பேரைக் கழுத்தை நெரித்துக் கொன்ற”
குழுவின் உறுப்பினர்
ஒருவரைப் பேட்டி கண்டது.
அவரால்
பாதிக்கப்பட்டவர்களில் சிரிய இராணுவத்தில் இருந்து ஷியைட் படையினர் ஒருவரும்
இருந்தார்; இவர்
“ஒப்புதல்
வாக்குமூலம் கொடுப்பதற்காக அடித்துத் தாக்கப்பட்டார்; மரணபீதி உற்ற அடிவாங்கியவர்
பிரார்த்தனைகளைக் கூறத் தொடங்கினார்.”
புதைக்கும் கூட்டம் மூலம் கொல்லுதல்,
“மற்றவர்களைச்
சித்திரவதை செய்ய விடுதல்; இதைத்தான் விசாரணைக்குழு என்பது செய்கிறது”
என்று
Spiegel
எழுதியுள்ளது.
150
சிரிய இராணுவக் கைதிகள் தூக்கிலிடப்பட்டதாக ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது என்று
அறிக்கை கூறுகையில்,
“ஹோம்ஸில்
உள்ள கொலைகாரர்கள் தங்கள் உறுப்பினரகளில் உள்ள காட்டிக் கொடுப்பவர்களையை தீவிரமாகத்
தாக்குகின்றனர்”
என்றும் கூறுகிறது.
“இப்பொழுது
குற்றம் சாட்டப்பட்டுள்ள ஒரு சுன்னி ஒற்றுவேலை செய்யும்போது பிடித்துவிட்டால்,
அல்லது ஒரு குடிமகன் புரட்சியைக் காட்டிக் கொடுத்தால், எங்களை வேலையை விரைவாகச்
செய்வோம்.”
என்று எதிர்த்தரப்பாளர் ஒருவர் கூறினார்.
“அபு
ரமியின் கூற்றுப்படி, ஹுசைனின் புதைக்கும் கூட்டம் எழுச்சி தொடங்கியதில் இருந்து
200 முதல் 250 துரோகிகளைக் கொன்றுள்ளனர்.”
உடனடிப்
பொருத்தம் உடையது சிரியாவில் உள்ள
Monatry of St.James the Mutilated
எனக்
காராவிலுள்ள வலைத் தளம் கொடுத்துள்ள அறிக்கைகளும் ஆகும். ஏப்ரல் 1ம் திகதி,
Mother Agnes-Mariam de la Croix
ஹோம்ஸிற்கு அருகே உள்ள காலிடியாவில் நடந்த நிகழ்வைப் பற்றி எழுதியுள்ளார். இங்கு
சிரிய விடுதலை இரானுவம் கிறிஸ்துவ, அலவைட் பிணைக்கைதிகளை ஒரு கட்டிடத்தில் கூட்டி,
கட்டிடத்தைத் தகர்த்தனர். அதன்பின் அவர்கள் சிரிய இராணுவத்தை இதற்காகக்
குற்றம்சாட்டினர்.
“ஹோம்ஸ்
பகுதியில் அல் துர்டக் கிராமத்தில் உள்ள அத் அமௌரா குடும்பம், வஹாபி
பயங்கரவாதிகளால் முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டது. இக்குடும்பத்தைச் சேர்ந்த 41
பேர் ஒரே நாளில், கழுத்தில் பிளவுற்றுக் கொல்லப்பட்டனர்.”
ஹோம்ஸிலுள்ள ஒரு மில்லியன் மக்கள், மொத்தத்தில் மூன்றில் இரு பகுதியினர்,
வெளியேறிவிட்டனர்; இதில் 90% க்கும் மேலானவர்கள் கிறிஸ்துவர்கள்; இதற்குக் காரணம்
“ஸ்னைப்பர்களின்
தாக்குதல்கள், குற்றம் சார்ந்த ஆக்கிரமிப்பு அலவைட் மற்றும் கிறிஸ்துவ
சிறுபான்மையினர், ஷியைட்டுக்கள் இன்னும் பல
“மிதவாத”
முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்டதுதான். அவர்கள் எதிர்ப்பு நடவடிக்கைகளில் பங்கு
பெற விரும்பவில்லை.”
“பல
குறுங்குழுவாத தாக்குதல்களில், மக்கள் உறுப்புக்கள் சிதைக்கப்பட்டன, அவர்களுடைய
கழுத்துக்கள் நெரிக்கப்பட்டன, குடல்கள் கிழிக்கப்பட்டன, உடல்கள் துண்டிக்கப்பட்ட
தெரு மூலைகளிலும் குப்பைத் தொட்டிகளிலும் போடப்பட்டன. பெரும் தொந்திரவு, திகைப்பு
கொடுப்பதற்காகச் சிறு குழந்தைகளைக்கூட அருகில் இருந்து சுட்டுக் கொல்லுவதை அவர்கள்
நிறுத்தவில்லை; அப்படித்தான் எங்கள் கல் வேலை செய்பவருடைய தம்பி பையன்
கொல்லப்பட்டார். இத்தகைய கொடூரச் செயல்கள் செய்தி ஊடகத்தில் பின்னர் அரசாங்கச்
சக்திகள்மீது பழிபோடப் பயன்படுத்தப்பட்டன.”
இப்படி
ஆதரவு கொடுக்கும் வகையில் இணையான குறிப்புக்கள் இல்லாவிடினும், உலகச் செய்தி ஊடகம்
Frankfurter Allgemeine Zeitung அறிக்கை குறித்து மௌனமாக இருப்பது
அசாதாரணம் ஆகும்.
Frankfurter Allgemeine Zeitung ஒரு கௌரவமான, உண்மையில் பழமைவாதப்
பதிப்பு ஆகும். நூறாயிரக் கணக்கான பிரதிகள் ஒவ்வொரு நாளும் விற்கின்றன. 148
நாடுகளில் இது வாசிக்கப்படுகிறது. ஆயினும் எந்தப் பெரிய செய்தித்தாளும் இந்த
அறிக்கையைக் கருத்திற்கொள்ளவில்லை. ஏனெனில் அவை அனைத்தும் அப்பட்டமான போலிப்
பிரச்சாரத்தைப் பரப்புவதில் துணை நிற்கின்றன. முக்கிய மேலைச் செய்தித்தாட்கள்
அனைத்திலும் கூறப்படுபவை சரியாவை என எடுத்துக் கொள்ளப்படுவதற்கு இல்லை.
Frankfurter
Allgemeine Zeitung முன்வைக்கும் மிக முக்கியமான வினா,
அமெரிக்காவினாலேயே எத்தகைய பங்கு இதில் உள்ளது என்பதுதான். சுதந்திர சிரிய
இராணுவத்துடன் அது கொண்டுள்ள பரந்த தொடர்பை ஒட்டி, அதற்கு வாஷிங்டனின் பிராந்திய
நட்பு நாடுகளான சவுதி அரேபியா, கட்டார், துருக்கி போன்றவை கொடுக்கும் அரசியல்,
நிதிய, இராணுவ ஆதரவு கிடைக்கும் நிலையில், படுகொலை ஆட்சி எதிர்ப்புப்
போராளிகளால்தான் நடத்தப்பட்டது, சிரிய இராணுவத்தால் அல்ல என்று ஒபாமா நிர்வாகம்
நன்கு அறியும். ஆனால் வெளிவிவகார செயலர் ஹில்லாரி கிளின்டன் இன்னும் பலரும் அசாத்தை
அகற்றக் கூடுதல் நடவடிக்கை தேவை எனக் கோரியுள்ளனர்.
ஹௌலாப்
படுகொலைகள் ஓர் அமெரிக்கத் தயாரிப்புத்தான் என முற்றிலும் நம்ப சாத்தியமுண்டு.
சிரியாவில் அமெரிக்கக் கொள்கை ஆரம்பத்தில் இருந்து சுன்னித்தள குறுங்குழுவாத
எழுச்சியைத் தூண்டும் வகையில் உள்ளது. இதன் நோக்கம் அசாத்தின் அலவைட் ஆட்சியை
உறுதிகுலைத்து அகற்றுவது ஆகும். இது ஈரான் மீதான அமெரிக்க இராணுவத் தாக்குதல்
தயாரிப்புடன் பிணைந்துள்ளது; அப்பொழுது பிராந்தியத்தில் அதன் முக்கிய நண்பரான அசாத்
கொல்லப்பட்டுவிட்டால் ஈரான் மத்திய கிழக்கில் இன்னும் தனிமைப்படுத்தப்படும்;
பொஸ்னியா மற்றும் கொசவோ அனுபவத்தைக் கொண்டு, இதையொட்டி குருதிகொட்டும் உள்நாட்டுப்
போரை ஆரம்பிக்கும் என்ற உறுதிப்பாட்டினால் இது செய்யப்பட்டது. அதே போல் உள்நாட்டுப்
போரைத் தூண்டிவிட வேண்டும், அதை மனிதாபிமானம் என்னும் மறைப்பில் இராணுவத்
தலையீட்டிற்குப் போலிக் காரணம் கொடுக்கும் என்றும் கருதப்படுகிறது.
திங்களன்று வெளிவிவகாரத்துறையின் செய்தித் தொடர்பாளர் விக்டோரியா நியூலாண்ட், ஆட்சி
லாடாகியா மாநிலத்தில்
“மற்றொரு
படுகொலையை ஏற்பாடு செய்யக்கூடும்”
என்னும் தன் கவலையைத் தெரிவித்தார்.
“மக்கள்தான்
இதற்குப் பொறுப்பேற்க வேண்டும்”
என்று அவர் எச்சரித்தார்.
செவ்வாயன்று நெருக்கடியை விரிவாக்கும் வகையில் அமெரிக்க வெளிவிவகாரத்துறை செயலர்
ஹில்லாரி கிளின்டன், அசாத் ஆட்சிக்கு ஹெலிகாப்டர்களை ரஷ்யா அனுப்புகிறது என்றும்,
ஆயுதம் வழங்குதல் குறித்து மாஸ்கோ பொய்கூறுகிறது என்றும் குற்றம் சாட்டினார்.
ஐக்கிய
நாடுகள் அமைதி காக்கும் செயற்பாடுகளின் தலைவர், இதற்கிடையில், சிரிய மோதலை
உள்நாட்டுப் போர் என விளக்கும் முதல் ஐ.நா. அதிகாரியானார். பிரித்தானியாவின்
வெளியுறவு மந்திரி வில்லியம் ஹேக் ஹௌலா, அல்-கபைரில் நடந்த படுகொலைகளைப் பற்றிக்
குறிப்பிடுகையில்,
“கொடூரக்
குற்றங்களை இழைக்கிறது”
என்று சிரிய அரசாங்கத்தைக் கண்டித்தார். |