World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

Socialist Party leads in French parliamentary elections

பிரெஞ்சுப் பாராளுமன்றத் தேர்தல்களில் சோசலிஸ்ட் கட்சி முன்னணியில் உள்ளது

By Antoine Lerougetel
8 June 2012

Back to screen version

பதவியில் இருந்த ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசியை மே 6 நடைபெற்ற தேர்தல்களில் சோசலிஸ்ட் கட்சி வேட்பாளர் பிரான்சுவா ஹாலண்ட் தோற்கடித்தபின், பிரெஞ்சு சட்டமன்றத் தேர்தல்கள் ஜூன் 10, 17 திகதிகளில் நடக்க உள்ளது. தேசிய சட்டமன்றத்தில் கிட்டத்தட்ட 577 இடங்கள் 6,303 வேட்பாளர்களால் போட்டியிடப்படுகின்றன.

ஹாலண்ட் எதிர்பார்த்ததைவிட மிகக் குறைவான பெரும்பான்மையில் வெற்றிபெற்றது, அதாவது 51.67% பெற்று, சார்க்கோசியை மக்கள் நிராகரித்தபின்பும்கூட என்பது, மக்களுடைய உள்ளங்களில் சார்க்கோசி வங்கிகள் மற்றும் பிரஸ்ஸல்ஸ் நிறுவனங்கள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் சுமத்திய சிக்கனத் திட்டங்களை ஹாலண்ட் மாற்றிவிட முடியுமா என்ற சந்தேகங்களைப் பிரதிபலித்தது. கிரேக்கம், ஸ்பெயின், போர்த்துக்கல், இத்தாலி போன்ற நாடுகளில் ஏற்பட்டுள்ள பேரழிவு தரும் சமூகப், பொருளாதார விளைவுகளைப் பற்றி மக்கள் நன்கு அறிவர்.

PS ன் மேலாதிக்கத்தில் இருக்கும் ஒரு பாராளுமன்றத்தை அடைய ஹாலண்ட் விரும்புகிறார்; தேர்தலுக்குப் பின் அவர் நியமித்துள்ள தற்போதைய இடைக்கால அரசாங்கத்திற்கு நீண்டகால ஆதரவு வேண்டும் என்பதற்காக. PS  தேர்தலில் வெற்றி பெற்றால், தேசிய சட்டமன்றம் மற்றும் செனட்டில் பெரும்பான்மை என்று முன்னோடியில்லாத ஒரு நிலைப்பாடாகிவிடும்; கிட்டத்தட்ட பிரான்ஸில் அனைத்து அரசாங்கக் கருவிகளையும் இயக்கும் ஆற்றலை அது பெற்றிருக்கும்.

கருத்துக் கணிப்புக்கள் முதலாளித்துவ இடது” PS மற்றும்அதன் சுற்றில் உள்ள கட்சிகளுக்கு முதல் சுற்றில் நிதானமான முன்நிலையைக் காட்டுகின்றன. PS க்கு 31.5 சதவிகித வாக்குகள் கிடைக்கலாம், அத்துடன் அதன் நட்புக் கட்சிகளின் மொத்த எண்ணிக்கையும் கிடைக்கும். Jean-Luc Mélenchon  இடது முன்னணியுடன் இணைந்துள்ள இடது கட்சி, ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சி  உடன் சேர்ந்து 7.5% வாக்குகளைக் கொண்டுள்ளது, பசுமை வாதிகள் 5% மும் போலி இடது குட்டி முதலாளித்துவக் கட்சிகள் 1.5% பெறும்.

பதிவு செய்துள்ள வாக்காளர்களிடையே 12% க்கும் மேலான வாக்குகளைப் பெறும் எந்த வேட்பாளரும் ஜூன் 17 இரண்டாம் சுற்றுத் தேர்தலில் கலந்து கொள்வார். சார்க்கோசியின் UMP 35.5 % பெறும் எனக் கணிக்கப்பட்டுள்ளது; புதிய பாசிச தேசிய முன்னணி FN 15% -- இது ஜனாதிபதித் தேர்தலில் அதன் வேட்பாளர் மரின் லு பென் பெற்ற 17.9%ல் இருந்து குறைவாகும்.

ஒரு பரந்த பிழைக்கும் உட்படக்கூடிய திறனுடைய தற்போதைய மதிப்பீடுகள் FG மற்றும் PCF இன் இடது முன்னணிக் கூட்டணிக்கு 13 முதல் 17 இடங்களையும், அதற்கு ஒத்துழைப்பவர்களுக்கு 280 ல் இருந்து 310 இடங்கள் வரையிலும், பசுமைவாதிகளுக்கு 12 முதல் 17 இடங்கள் வரையும் கிடைக்கும் எனக் கூறுகின்றன; இது இடதிற்கு மொத்தம் 305ல் இருந்து 345 இடங்களைக் கொடுக்கும். UMP  க்கு 235ல் இருந்து 265 வரை இடங்கள் கிடைக்கும், FN க்கு 5 வரை கிடைக்கலாம்.

La Dépêche எழுதுகிறது: பிரான்ஸுவா ஹாலண்ட் ஒரு தெளிவான பெரும்பான்மையை எதிர்பார்க்கிறார்: பொருளாதாரத் தடைகள் அவரை அந்நிலைக்கு கொண்டுவந்தால் அதையொட்டி அவர் நம்பிக்கத்தன்மை அற்ற பாராளுமன்ற கூட்டுக்களின் தயவில்லாமல் ஆளலாம்எல்லாவற்றிற்கும் மேலாக அவருக்கு ஆதரவு கொடுக்கும் இடது சக்திகளின் எரிச்சலுக்கு உட்படாமல் அவர் சுதந்திரமாகச் செயல்பட முடியும்.

 

இத்தகைய கருத்துக்கள் ஆளும் வர்க்கத்தின் பரந்த எதிர்பார்ப்புக்களைத்தான் பிரதிபலிக்கின்றன; அதாவது சட்டமன்றத் தேர்தல்களுக்குப் பின் ஹாலண்ட் தொழிலாளர் வர்க்கத்திற்கு எதிராகத் தீவிர வெட்டுக்களைச் செயல்படுத்தத் தொடங்குவார் என. ஆனால் PS ன் இடது நட்புக் கட்சிகள் அவை தொழிலாள வர்க்கத்தின்மீது நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்துப் பெயரளவு குறைகூறல்களைத்தான் கூறும் என அடையாளம் காட்டியுள்ளன. Mélenchon, PS  இடம் அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையற்ற தீர்மானத்திற்கு ஆதரவாக அவர் ஒருபொழுதும் வாக்களிக்க மாட்டார் என உறுதி கூறியுள்ளார். ஜேர்மனியின் சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெலை நிதிய ஒப்பந்தத்தில் வளர்ச்சி பற்றிய விதியை சேர்ப்பதற்குத் தான் நம்ப வைக்க முடியும் என்னும் ஹாலண்டின் நம்பிக்கைகள் பெருகிய முறையில் வீணாகிவிடக்கூடும், ஏனெனில் ஐரோப்பாவிற்குள் பெருகும் பூசல்கள் அவ்வாறு உள்ளன. (See: “ Tensions mount as European leaders scramble to avert Spanish banking collapse”. )

இந்த வடிவமைப்பை ஹாலண்ட் ஏற்றுள்ளார் என்னும் உண்மை அவருடைய தொழிலாளர் விரோத அரசியலுக்குச் சான்றாகும். ஒப்பந்தப்படி யூரோப்பகுதி நாடுகள் தொழிலாள வர்க்கத்தின்மீது மகத்தான சிக்கன நடவடிக்கைகளைச் சுமத்த வேண்டும் என்றால் வரவு-செலவுத் திட்ட பற்றாக்குறைகளைக் குறைத்து வங்கிகளுக்கான கடன்களையும் திருப்பிக் கொடுக்க வேண்டும். இவருடைய திட்டங்கள், சிக்கனத்தை தக்க வைக்கையில், வரவு-செலவுத் திட்ட பற்றாக்குறை பூஜ்யம் என 2017க்குள் ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்துகையில், ஏராளமான ரொக்கத்தை பிணைஎடுப்பு மற்றும் வளர்ச்சி நிதிகளில் விரும்பப்படும் தொழில்துறை திட்டங்களுக்கு உட்செலுத்த வேண்டும் என்ற நிலையையும் ஏற்படுத்துகிறது.

பொருளாதார நெருக்கடி தீவிரமடைகையில், புதுப்பிக்கப்படும் வர்க்கப் போராட்டங்கள் நிகழ்ச்சி நிரலில் வரும். 2011ம் ஆண்டு பிரான்ஸ் மிக அதிகமாக 70 பில்லியன் யூரோக்கள் வணிகப் பற்றாக்குறையைக் கண்டது. ஹாலண்டும் ஆளும் வர்க்கமும் பிரான்ஸின் போட்டித் தன்மையை உலகச் சந்தையில் அதிகரிப்பதற்கு ஊதியங்களையும் பணிநிலைமைகளையும் தாக்க முற்படுகின்றனர். இது ஜனாதிபதி ஒபாமாவின் நடவடிக்கைகளான அமெரிக்க கார்த்தயாரிப்புத் தொழிலில் எடுக்கப்பட்டவற்றை தரமாகக் கொள்ளும். கார்த்தயாரிப்புத் துறைக்கு ஒபாமா பிணை கொடுத்தது தொழில்துறையின் பெரும்பகுதிகளை மூடிய நிலைக்குத் தள்ளி, தொழிலாள வர்க்கத்தின் ஊதியங்களைப் பாதியாகவும் ஆக்கியது.

தன் ஆட்சி, சார்க்கோசியின் ஆட்சியில் இருந்து ஒரு முறிவைக் காட்டுகிறது எனத் தோற்றுவிக்கும் தொடர்ச்சியான நடவடிக்கைகள் பலவற்றை சட்டமன்றத் தேர்தல்களில் PS ன் வெற்றிக்குப்பின் ஹாலண்ட் உறுதி செய்ய முற்படுவார்: ஏற்கனவே அவர் ஜனாதிபதி மற்றும் மந்திரிகளின் ஊதியங்களை 30% குறைத்துவிட்டார்; புதிய ஆண்டின் தொடக்கத்தில் பள்ளிகளுக்கு கருவி வாங்குவதற்குக் கொடுக்கப்படும் மானியத்தில் 25% அதிகரிப்பு இருந்தது; குறைந்தபட்ச ஊதியத்தரத்தில் 5%ஐயும் விடக் குறைவான அதிகரிப்பு இருந்தது.

சார்க்கோசியின் பெரும் இகழ்விற்குட்பட்ட ஓய்வூதியத் திட்டத்தையும் அவர் ஓரளவு திருத்தியுள்ளார்; இதையொட்டி தொழிலாளர்கள், 41 முழு ஆண்டுகள் பிரெஞ்சு தேசிய ஓய்வூதியத் திட்டத்திற்கு நிதி செலுத்தியவர்கள் 60 வயதில் ஓய்வு பெறலாம். சார்க்கோசி இந்தக் குறைந்தப்பட்ச வயதை 60ல் இருந்து 62 என உயர்த்தியிருந்தார். ஆனால் இந்த நடவடிக்கை நடைமுறைக்கு வரவேண்டும் என்றால், தொழிலாளர்கள் 19 வயதிலேயே வேலையில் சேர்ந்திருக்க வஏண்டும்; வேலையின்மைக் காலம் என்பது கிட்டத்தட்ட அவர்களுக்கு இல்லாமல் இருந்திருக்க வேண்டும். அதன் விளைவாக இது 110,000 ஓய்வு பெறுபவர்களுக்கு மட்டுமே பொருந்தும்; இது ஆண்டு மொத்தத்தில் 20 சதவிகிதம் ஆகும்.

மீடியாபார்ட் சுட்டிக் காட்டுகிறது: இது 60 வயதில் ஓய்வு பெறுவது என்பதில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. மேலும் பொதுச் செலவின்மீது கடுமையான கட்டுப்பாட்டைக் கொண்டவர் என்னும் முறையில் பிரான்சுவா ஹாலண்ட் இதை ஒன்றும் உறுதியளித்ததில்லை. ஆயினும்கூட, இது மே 2011ல் PS ஜனாதிபதித் தேர்தலில் ஒரு திட்டமாக இருந்தது; செகோலீன் ரோயாலுடைய [2007 PS ஜனாதபதி வேட்பாளர்] மற்றும் தற்பொழுது உற்பத்திப் பெருக்கத்திற்கு மந்திரியான Arnaud Montebourg இருவருடைய சோசலிஸ்ட் கட்சி துவக்கத் தேர்தல்கள் திட்டத்திலும் இருந்தது.

நடவடிக்கைக்கு நிதியளிப்பதற்கு ஒதுக்கி வைக்கப்பட்ட 5 பில்லியன் யூரோக்கள் இப்பொழுது 2013ல் 1.1 பில்லியன் யூரோ எனவும் 2017ல் 3 பில்லியன் யூரோக்கள் எனவும் குறைக்கப்பட்டுவிட்டது. COR எனப்படும் ஓய்வூதியக் கொள்கைக்குழு, மீடியாபார்ட் கருத்துப்படி, இந்த ஆண்டு இறுதியில் புதிய நிதிய மதிப்பீடுகளை முன்வைக்கும்; அவை நம்பிக்கையை இழக்கத்தான் வைக்கும், ஏனெனில் பொருளாதார நிலைமை அவ்வாறு உள்ளது.

பெரும்பாலான மக்களை சட்டமன்றத் தேர்த்லகளில் இருந்த விரோதப்படுத்துவது என்பது பிரான்ஸில் 46 மில்லியன் பதிவான வாக்காளர்களில் 40% வாக்களிக்கவில்லை என்பதில் இருந்து தெரியவரும். மே 5ம் தேதி பிகாரோ நடத்தி கருத்துக் கணிப்பு மக்களில் 51% தேர்தலில் மிகவும் அல்லத ஓரளவு அக்கறை உடையதாகக் காட்டியது. ஆனால் ஜூன் 6ம் தேதிக்கும் இது 42 சதவிகிதம் எனக் குறைந்துவிட்டது.

பாரிஸ் பகுதியினா Seine-Saint-Denis போன்ற தொழிலாள வர்க்கப் பகுதிகளில் வாக்காளர்களுக்கு வேட்பாளர்களை அறிமுப்படுதும் அரங்குகள் அதிக பங்கு பெறுவோரைக் காணவில்லை.

பிரான்ஸின் மூன்றாம் பெரிய கட்சி என்னும் FN உடைய நிலைமை PS உடைய தொழிலாள வர்க்க விரோதக் கொள்கைகளால் வலுப்பெற்றுவருகிறது. இதன் வேட்பாளர்கள் இரண்டாம் சுற்றிற்கு கிட்டத்தட்ட 100 தொகுதிகளில் முன்னேறும் நிலைமையில் உள்ளனர்; இது பல UMP வேட்பாளர்கள் அவர்களுடைய தேர்தல் உடன்பாடுகளைக் கொள்ள வைத்துள்ளது; பொதுவாக இது UMP தலைமையில் இருந்து வரும் உத்தரவுக்கு எதிரானது ஆகும்.

CSA கருத்துக் கணிப்பு அமைப்பின் இயக்குனரான Jérôme Sainte-Marie கூறுகிறார்: இப்பொழுது நோக்கம் 2014 பிராந்தியத் தேர்தல்களுக்கு தயாரிப்பைக் கொள்ளுவது ஆகும்; அப்பொழுது FN, UMP மீது கொடுக்கும் அழுத்தம் கூட்டுப் பட்டியலுக்காக என்பது, மிகவும் வலுவாக இருக்கும்; இப்பொழுது முதல் இது UMP க்குள் ஒரு மூலோபாய விவாதத்தை, FN ஐ அணுகவேண்டும் என்று விரும்புவர்களுக்கும் அதை மறுப்பவர்களுக்கும் இடையே தூண்டிவிடும்.