WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள் :
உலக பொருளாதாரம்
யூரோ
நெருக்கடிக்கு “உடனடியான
விடையிறுப்பு தேவை”
என்னும் அமெரிக்க, பிரித்தானியக் கோரிக்கைகளை ஜேர்மனியின் சான்ஸ்லர்
நிராகரிக்கிறார்
By
Stefan Steinberg
9
June 2012
use
this version to print | Send
feedbac
வியாழன் அன்று பேர்லினில் பிரித்தானியப் பிரதம மந்திரி டேவிட்
காமெரோன் உடன் மோசமாகி வரும் ஐரோப்பிய நிதிய நெருக்கடி பற்றிய விவாதங்களில்,
அமெரிக்க, பிரித்தானிய கோரிக்கைகளான உடனடி நடவடிக்கை தேவை என்பதற்கு ஜேர்மனிய
சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெல் தெளிவான மூக்குடைப்பைக் கொடுத்துள்ளார். அமெரிக்க
ஜனாதிபதி பாரக் ஒபாமாவுடன் பேச்சுக்கள் நடத்தியபின், ஐக்கிய
இராச்சியத்தின்
தலைவர் ஐரோப்பிய வங்கிகளைப் பிணை எடுக்கும் திட்டத்திற்கு ஜேர்மனிய அரசாங்கம்
ஒப்புக் கொள்வதற்கு அழுத்தம் கொடுப்பதற்குப் பேர்லின் சென்றிருந்தார்.
நெருக்கடியைத் தீர்ப்பதற்கு
“மந்திரத்
தோட்டா ஏதும் இல்லை”
என்று அறிவித்த வகையில் மேர்க்கெல் கோரிக்கையை எதிர்கொண்டார்.
ஐரோப்பாவை போட்டியிடும் பொருளாதாரக் குழுக்களாக பிரிப்பது குறித்து ஆலோசிக்க
ஜேர்மனி தயார் என்றும் அவர் குறிப்புக் காட்டியுள்ளார்.
அமெரிக்க, பிரித்தானிய அரசாங்கங்கள் ஜேர்மனியை ஐரோப்பிய வங்கி
முறையில் ஐரோப்பிய மத்திய வங்கி மூலமோ அல்லது ஐரோப்பிய ஒன்றியத்தின் பிணை எடுப்பு
நிதியான ஐரோப்பிய உறுதிப்பாட்டுக் கருவி
ESM
மூலமோ நிதிகளை உட்செலுத்த ஆதரவு கொடுக்குமாறு வலியுறுத்துகின்றன. ஒரு நீண்டகாலப்
பார்வையில், லண்டனும் வாஷிங்டனும் ஐரோப்பா படர்ந்த நிதியக் கருவி ஒன்று
அறிமுகப்படுத்தப்பட வேண்டும்—யூரோப்
பத்திரங்கள் என அழைக்கப்படுபவை—அது
கண்டத்தில் வங்கி முறையைச் சீராக்கும் என அழைப்பு விடுத்துள்ளன.
இந்த நடவடிக்கைகளுக்கு ஜேர்மனியில் இருந்து கண்டத்தில் நலிந்த
பொருளாதாரங்களுக்கும் வங்கிகளுக்கும் மாபெரும் நிதி மாற்றம் தேவைப்படும்—இது
ஜேர்மனிய அரசாங்கம், மத்திய வங்கி மற்றும் வணிகச் சமூகத்தின் பரந்த பிரிவுகளால்
எதிர்க்கப்படுகிறது. அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவின் கோரிக்கைகளுக்கு
இணங்குவதற்குப் பதிலாக—அவற்றிற்கு
துன்பத்தில் இருக்கும் இத்தாலி, ஸ்பெயின் போன்ற அமெரிக்கப் பொருளாதாரங்கள் ஆதரவு
கொடுக்கின்றன—மேர்க்கெல்
“இரு
வரிசை”
ஐரோப்பா என்னும் முறையில் ஜேர்மனி, ஒரு சிறிய முக்கிய நாடுகளின்
தொகுப்பு கொண்டுவரத்தயார் என்று அடையாளம் காட்டியுள்ளார்.
வியாழன் காலை, காமெரோனுடைய வருகைக்குமுன், மேர்க்கெல் ஜேர்மனியத்
தொலைக்காட்சிக்கு பேட்டி ஒன்று கொடுத்தார்; அதில் நெருக்கடியை எதிர்கொள்ளும்
வகையில்,
“நாணய
ஒன்றியத்தில் இருக்கும் நாடுகள் நெருக்கமாக இணைந்து செயல்பட வேண்டும்”
என்று அறிவித்தார்.
“ஓரிரு
நாடுகள் இதில் சேர இன்னும் விரும்பாததால், இந்த வழிவகையை நாம் நிறுத்திவிட
முடியாது.”
என்றும் அவர் கூறினார்.
பிரித்தானியாவைப் பெயரிட்டுக் கூறவில்லை என்றாலும், அவருடைய
கருத்துக்களின் இலக்கு தெளிவாகத்தான் உள்ளது. பிரித்தானியா யூரோப் பகுதியில்
சேரவில்லை; இந்த ஆண்டுத் தொடக்கத்தில் பேர்லின் ஐரோப்பா முழுவதும் செயல்படுத்த
வேண்டும் என்று இயற்றிய கடுமையான நிதிய விதிகளை ஒப்புக் கொள்ள மறுத்துவிட்டது.
யூரோப் பத்திரங்களை ஜேர்மனி ஏற்பது என்பது அதன் நிதிய உடன்பாட்டை முழுமையாக ஏற்றல்
என்னும் நிபந்தனைக்கு உட்பட்டுத்தான் இருக்கும் என்று பலமுறை மேர்க்கெல்
கூறிவிட்டார். அவருடைய கருத்துக்கள் ஜேர்மனி பிரித்தானியாவை அதன் ஒத்துழைப்பிற்கு
ஐரோப்பியக் கொள்கையின் வருங்காலத்தை நிர்ணயிக்க நம்பியிருக்கவில்லை என்ற
எச்சரிக்கையைத்தான் பிரித்தானியாவிற்குக் கொடுத்துள்ளது.
அடுத்த சில ஆண்டுகளில் ஒரு நிதானமான நிதியத் தொகுப்பை
ஏற்படுத்தக்கூடிய வகையில் வங்கிகள் மீது பெயரளவிற்கு ஐரோப்பிய வரி விதிக்கப்படுதல்
செயல்படுத்தப்பட வேண்டும் என்பது பற்றி ஜேர்மனிய அரசாங்கம் பிரித்தானியா மற்றும்
அமெரிக்காவுடன் கருத்து வேறுபாடுகளைக் கொண்டுள்ளது. புதன் அன்று மேர்க்கெலின்
CDU
எனப்படும் கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியம் எதிர்க்கட்சியான சமூக ஜனநாயகக்
கட்சியினருடன் உடன்பாடு ஒன்றைக் கொண்டது; அத்தகைய நிதிய வரி என்பதை ஒரு
நிபந்தனையாகக் கூறி சமூக ஜனநாயகவாதிகள் அதுதான் அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுக்க
இயலும் எனக் கூறிவிட்டது. தங்கள் பங்கிற்கு பிரித்தானியாவும் அமெரிக்காவும் சிட்டி
ஆப் லண்டன் மற்றும் வோல்ஸ்ட்ரீட்டின் முக்கிய பங்கு சர்வதேச நிதியச் சந்தைகளின்
மீது இருப்பதைப் பாதிக்கும் எந்த நடவடிக்கைகளையும் நிராகரித்துவிட்டன.
ஜேர்மனிக்கும் லண்டன், வாஷிங்டன் அச்சிற்கும் இடையே உள்ள
வேறுபாடுகளின் பரப்புத்தன்மை பைனான்சியல் டைம்ஸில் தலைமைப் பொருளாதாரக்
கட்டுரையாளர் மார்ட்டின் வொல்ப், மற்றும் ஜேர்மனிய நிதிய அமைச்சரகத்தில் முக்கிய
அதிகாரியாக இருக்கும்
Ludger Schuknecht இருவருக்கும் இடையே
நடந்த கருத்துப் பறிமாற்றத்தில் வெளிப்பட்டுள்ளது.
பேர்லினை சிக்கன நடவடிக்கையைக் கூடுதலாக வலியுறுத்துவதற்கும்,
யூரோச் சரிவைத் தடுக்க நடவடிக்கை எடுக்காததற்கும் வொல்ப் குறைகூறியள்ள ஒரு
சமீபத்திய கட்டுரைக்கு விடையிறுக்கும் வகையில்,
Schuknecht “குறுகிய
கால நடவடிக்கை”
ஏதும் எடுப்பதற்கு இல்லை என நிராகரித்துள்ளார். யூரோப் பத்திரங்கள்
தோற்றுவிப்பதையும் அவர்ஏற்கவில்லை; அவை நிலைமையை மோசமாக்கத்தான் செய்யும் என்று
கூறிவிட்டார்.
பதிலுக்கு வொல்ப் கடுமையாகச் சாடிய மறுப்பு ஒன்றை வெளியிட்டு,
அதில்,
“குறைந்தப்பட்சம்
ஜேர்மனியிலேனும், அடோல்ப் ஹிட்லர் அதிகாரத்திற்கு வந்தது என்பது பெரு மந்தநிலைக்கு
முன் என்பது பல நேரமும் மறக்கப்பட்டுவிடுகிறது; அவர் ஒரு தசாப்தம் முன்னர் பதவிக்கு
வந்தார்; ஆனால் பெருமந்தநிலை மற்றும் ஹென்ரிக் ப்ரூனிங் உடைய சிக்கன
நடவடிக்கைகளுக்கு விடையிறுப்பாக வந்தது.”
என்று எச்சரித்தார்.
Schuknecht
ஐரோப்பாவை சூழ்ந்துள்ள பொருளாதாரக் கேட்டின் முறையுடைய
ஆபத்துக்களைப் புறக்கணிப்பதாகவும் வொல்ப் குற்றம் சாட்டி கட்டுரையை முடித்துள்ளார்.
காமெரோனுக்கு மேர்க்கெலின் மூக்குடைப்பும், இருவழி ஐரோப்பா பற்றிய
கருத்துக்களை அவர் கூறியுள்ளதும், ஜேர்மனிய நிதிய மற்றும் பெருநிறுவன
உயரடுக்கிற்குள் இருக்கும் பெருகிய உணர்வுகளைத்தான் பிரதிபலிக்கின்றன.
Handelsblatt
பத்திரிகையின் வெள்ளிக்கிழமைப்பதிப்பு ஜேர்மனிக்கு ஐரோப்பிய ஒருங்கிணைப்பால்
ஏற்பட்டுள்ள செலவுகளைப் பற்றி ஆறு பக்கக் கட்டுரையை வெளியிட்டது. செய்தித்தாளின்
ஆசிரியர்
Gabor Steingart ஜேர்மனியச் சான்ஸ்லரின் நெருக்கடிக்கு
“எச்சரிக்கை
மிகுந்த அணுகுமுறைக்கு”
ஆதரவு கொடுக்கிறார்; அவர் ஒன்றும் தோன்றுவது போல்
தனிமைப்படுத்தப்பட்டுவிடவில்லை என்றும் ஆறுதல் கொள்ளச் சொல்லுகிறார்.
ஜேர்மனியின் செலவில் ஐரோப்பா வாழ்தல் என்பதையும்
Steingart
நிராகரித்து, ஜேர்மனியின் வரி இருப்புக்களையும், அதன் குடிமக்களின்
சேமிப்புக்களையும் (கிட்டத்தட்ட 2 டிரில்லியன் யூரோக்கள்) மற்ற நாடுகளைப் பிணை
எடுப்பதற்குப் பயன்படுத்த வேண்டும் என்று கூறுவது
“ஐரோப்பாவிற்கு
தீமை பயக்கும் கருத்து ஆகும்”
என்று அறிவித்துள்ளார்.
முதல் பக்கக் கட்டுரையில் செய்தித்தாள் தற்போதைய நெருக்கடி
“வரலாற்று
முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளை முன்வைத்துள்ளது”
என்று செய்தித்தாள் எழுதி, தொடர்கிறது:
“நாம்
நம்மை மீண்டு மரணத்தைச் சந்திக்க வேண்டுமா? யூரோவை மீட்கும் செலவுகள் நாணய
ஒன்றியத்தின் தொகுப்பைச் சுகாதார முறையில் குறைப்பதற்கான செலவுகளுள் ஒப்பிடும்போது
நியாயமா?”
ஒரு இருவழி ஐரோப்பாவை ஏற்படுத்தும் வாய்ப்பு என்பது குறித்த
மேர்க்கெலின் கருத்துக்கள் ஐரோப்பிய மத்திய வங்கியில் ஜேர்மனியின் குழு உறுப்பினரான
Jörg Asmussen
முன்வைத்த கருத்துக்களைப் போலவே உள்ளன. இரு வாரங்களுக்கு முன் நிகழ்த்திய உரை
ஒன்றில் அவர் யூரோப் பகுதி நாடுகளை ஒருங்கிணைக்கும் விரைவான வழிவகை தேவை என அழைப்பு
விடுத்தார்: இது
“வங்கி
முறை ஒன்றியம், நிதிய முறை ஒன்றியம், அரசியல் முறை ஒன்றியம்”
எனப் பிரிக்கப்பட வேண்டும் என்றார். இத்திட்டத்தின் மீது குவிப்புக் காட்டுவதற்காக
Asmussen
ஐரோப்பிய ஒன்றியம் பால்கன்கள், துருக்கி ஆகியவற்றில் அது கொண்டுள்ள
விரிவாக்கத் திட்டங்களை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
ஸ்பெயினின் வங்கிகளுடைய உடனடிப் பிரச்சினைகள் பற்றி அதிக கவனம்
இப்பொழுது குவிப்புக் காட்டப்படுகையில், இவை பெரிய பனிப்பாறையின் உச்சிமட்டும்தான்
என்பது கருத்திற் கொள்ளப்பட வேண்டும். புதன் அன்று கார்டியனில் வந்த தலையங்கம்
ஒன்று உண்மையான பிரச்சினை ஸ்பெயினிலோ, அயர்லாந்திலோ உள்ள திவால் வங்கிகள் மட்டும்
அல்ல, அவற்றிற்குக் கடன் கொடுத்துள்ள, சுற்றியுள்ள ஐரோப்பிய நாடுகள் அனைத்திலும்
இருக்கும் நிதியச் சந்தைகளும், முக்கிய வங்கிகளும்தான் (ஜேர்மனி, பிரான்ஸ்,
ஆஸ்திரியாவுடையவை). தலையங்கம் அறிவித்தது;
“சிக்கன
நடவடிக்கைகள், நிதிய ஒன்றியங்கள், ஐரோப்பிய மத்திய வங்கியின் பணவீக்க ஆட்சிகள்
இவற்றை மறந்துவிடுக –யூரோக்
கரைப்பு என்பது முக்கியமாக அரசாங்கங்கள் எப்படித் தங்கள் நிதியத் துறைகளில்
சேதப்பட்ட எஞ்சியிருப்பவற்றைச் சமாளிக்கப்போகிறது என்பதுதான்.”
புதிய பிணை எடுப்பு நிதிகளுக்காகத் தேவைப்படும் நிதியக் கரைப்பு
என்னும் பின்னணியில், ஜேர்மனியில் உள்ள செல்வாக்குடைய வணிக, நிதிய வட்டங்கள் உஷாராக
நடந்து கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது என எச்சரிக்கின்றனர். ஐரோப்பாவிற்கு
நிதியளிக்கும் செயலை பேர்லின் நிறுத்த வேண்டும் என அவர்கள் வாதிடுகின்றனர்.
ஐரோப்பாவை ஒரு சிறிய வடக்குத் தொகுப்பு என்றும் மற்றவற்றை அவற்றின் விதிப்படி
விட்டுவிட வேண்டும் என்று முறிப்பதற்காக முயல்கின்றனர்.
இத்தகைய கருத்து இப்பொழுது ஜேர்மனியில் பகிரங்கமாக
விவாதிக்கப்படுகிறது என்பது, ஐரோப்பாவில் உள்ள ஆழ்ந்த அரசியல் நெருக்கடியின்
வெளிப்பாடு ஆகும். அத்தகைய முறிவு, யூரோப்பகுதியில் இருந்து கிரேக்கம் வெளியுவதில்
தொடங்குவது, நீண்டகால, தீர்க்கப்படாத வரலாற்றுப் பிரச்சினைகளைப் புதுப்பிக்கும்.
உதாரணமாக ஒரு பிளவுபட்டுள்ள ஐரோப்பாவில் பிரான்ஸ் தன்னை எங்கு நிலைநிறுத்திக்
கொள்ளும்?
பேர்லின் முன்வைக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டால்,
ஐரோப்பாவின் தேசிய உயரடுக்குகளுக்கு இடையே உள்ள அழுத்தங்களை மிகப் பெரிய அளவில்
அதிகப்படுத்தும்; கண்டத்தை பால்கன்கள் போல் துண்டாக்கிவிடும்; புதிய இராணுவ
மோதல்களுக்கான ஆபத்தை உருவாக்கிவிடும்.
ஐரோப்பிய தொழிலாள வர்க்கம் அதன் சர்வதேசிய, சுயாதீன அடிப்படையில்
அணிதிரட்டப்பட்டு, ஐரோப்பிய ஒன்றியம், பல தேசிய_அராசங்கங்கங்கள் என பிற்போக்குத்தன
அமைப்புக்களை அகற்ற வேண்டும்; அவற்றிற்குப் பதிலாக ஐக்கிய ஐரோப்பிய சோசலிச அரசுகள்
தோற்றுவிக்கப்பட வேண்டும். |