WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்:
ஆசியா :சீனா
As tensions mount with China US to shift bulk of Navy ships to Asia-Pacific
சீனாவுடன் அழுத்தங்கள் அதிகரிக்கையில், அமெரிக்கா ஏராளமான கடற்படைக் கப்பல்களை
ஆசிய-பசிபிக் பகுதிக்கு அனுப்பி வைக்கிறது
By Patrick Martin
4 June 2012
Back to screen version
அடுத்த
தசாப்தத்தையொட்டி, அமெரிக்கா அதன் பெரும்பாலான கடற்படைச் சக்திகளை ஆசிய-பசிபிக்
பிராந்தியத்தில் நிலைநிறுத்தும் என்று பாதுகாப்பு மந்திரி லியோன் பானெட்டா
சனிக்கிழமை அன்று சிங்கப்பூரில் ஒரு பாதுகாப்புக் கூட்டத்தில் அறிவித்தார். இந்த
நடவடிக்கை அமெரிக்காவில் இலக்கின் பட்டியலில் சீனாவை முதலிடத்தில் வைக்கும்
அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலக மூலோபாய நிலைப்பாட்டின் முக்கிய மாற்றத்தின் ஒரு
பகுதி ஆகும்.
போர்க்கப்பல்களை திரட்டி நிறுத்துவதுடன் இப்பிராந்தியத்தில் பென்டகன் நடத்தும்
இராணுவப் பயிற்சிகளிலும் அதிகரிப்பு இருக்கும். இவற்றில் விமான, கடல், நிலப் படைப்
பிரிவுகள் இருக்கும். பெரும்பாலானவை சீனாவிற்கு எதிரான அமெரிக்காவுடன்
வெளிப்படையாகவோ, மறைமுகமாகவோ உள்ள நாடுகளுடன் இணைந்து நடத்தப்படும். அவற்றில்
ஜப்பான், தென் கொரியா, ஆஸ்திரேலியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகியவை அடங்கும்.
மாநாட்டிற்கு நிகழ்த்திய உரையில், பானெட்டா கடந்த ஆண்டு ஒபாமா
“ஆசியாவில்
முன்னிலை”
என
அறிவித்ததின் கருத்தை விரிவுபடுத்திக் கூறினார். அதில் ஒபாமா அமெரிக்கப் படைகள்,
ஈராக்கில் இருந்து திரும்பப் பெறுவது, ஆப்கானிஸ்தானில் இருந்து திரும்பப்பெறும்
படைகள் ஆகியவை அமெரிக்க இராணுவத்தை தூரகிழக்கில் அதிக வளங்களை நிலைநிறுத்த
அனுமதிக்கும் என்று கூறியிருந்தார்.
“அமெரிக்காவின்
அனைத்து இராணுவப் படைகளும் ஜனாதிபதியின் வழிகாட்டு முறையைச் செயல்படுத்துவதில்
குவிப்புக்காட்டி, ஆசிய-பசிபிக் பகுதியை உயர்ந்த முன்னுரிமையுள்ளதாக்கும்”
என்றார் பானெட்டா.
“அமெரிக்க
இராணுவம் உலகப் பாதுகாப்பு, உறுதிப்பாடு ஆகியவற்றிற்கு ஒரு சக்தியாக விளங்கும்
என்றாலும், நாம் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் மறுசமநிலையை செய்வது தேவையாகிறது.”
என்று சேர்த்துக் கொண்டார்.
தற்பொழுது
நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அமெரிக்கக் கடற்படை அட்லான்டிக்கிற்கும் பசிபிக்கிற்கும்
இடையே கிட்டத்தட்ட 50—50
என்ற விகிதத்தில் உள்ளது. இது 2020 அளவில் பசிபிக்கிற்கு சார்பாக 60-40 என்று
மாறும் என்றார் பானெட்டா.
“இதில்
இப்பிராந்தியத்தில் நிறுத்தி வைக்கப்படும் 6 விமானந்தாங்கி கப்பல்கள், நம்
க்ரூசர்களில் பெரும்பாலனவை, அழிக்கும் திறனுடைய கப்பல்கள், லிட்டோரல்
போர்க்கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் ஆகியவை அடங்கும்.”
இச்சக்திகள்
“இப்பிராந்தியத்தில்
நம் அடிப்படை ஈடுபாட்டுத் திறனைக் காட்டும் வகையில் இருக்கும்”
என்றார்.
கடந்த
இலையுதிர்காலத்தில் ஆஸ்திரேலிய அரசாங்கத்துடன் வடக்கு ஆஸ்திரேலியாவில் அமெரிக்கப்
படைகளை நிலைநிறுத்துவதற்கான உடன்பாட்டைப் பிரத்தியேகமாக பாராட்டிய பானெட்டா,
அமெரிக்க இராணுவக் கட்டமைப்பில்
“இது
ஒரு முக்கியமான கூறுபாடு ஆகும்”
என்றார்.
“இந்த
கடற்படை, விமான-தரைப்படைப் பணிப் பிரிவு ஆசிய-பசிபிக் பிராந்தியம் முழுவதும்
விரைவில் நிலைப்பாடு கொள்ளும் ஆற்றல் உடையது”
என்றார் பானெட்டா. முக்கிய நீரோட்ட சந்திகளான மலாக்கா ஜலசந்தி
போன்றவற்றில் தலையிடு இவை உதவும் என்பதை உறுதி செய்தார். இப்பகுதி குறிப்பாக மத்திய
கிழக்கு, ஆபிரிக்கா ஆகியவற்றில் இருந்து வரும் எண்ணெய் விநியோகங்களை பொறுத்தவரை
சீனாவின் ஏற்றுமதி, இறக்குமதி வணிகத்திற்கு முக்கியமானதாகும்.
இதேபோன்ற
உடன்பாடு ஒன்றை பிலிப்பைன்ஸில் சுழற்சி முறையில் நிறுத்திவைப்பதற்காக அமெரிக்கா
பேச்சுக்களை நடத்திவருகிறது என்றும் பானெட்டா கூறினார். இத்தகைய உடன்பாடுகள்
இப்பிராந்தியத்தில் இருக்கும் மற்ற நாடுகளுடனும் மேற்கொள்ளப்படும் என்றார். ஆனால்
அவற்றின் பெயர்களை அவர் குறிப்பிடவில்லை. 2011ல் அமெரிக்கா ஆசிய-பசிபிக்
பிராந்தியத்தில் 172 இராணுவப் பயிற்சிகளை நடத்தியது: இது இந்த ஆண்டு கணிசமாக
அதிகப்படுத்தப்படும்.
அமெரிக்கக்
கட்டமைப்பு சீனாவிற்கு எதிராக இயக்கப்படவில்லை என்று பானெட்டா கூறினார். ஒர்வேலியன்
கூற்றுப்போல்,
“பெருகிய
அமெரிக்க ஈடுபாடு இப்பிராந்தியத்தில் சீனாவிற்கு நலன்களை வழங்கும். ஏனெனில் இது
எம்மால் பகிர்ந்து கொள்ளப்படும் பாதுகாப்பு, வருங்கால வாய்ப்புக்கள் ஆகியவற்றையும்
முன்னேற்றுவிக்கும்”
என்றும் கூறினார்.
அவர்
அறிவித்துள்ள நடவடிக்கைகளில் இருக்கும் பொருள் பற்றி தவறாகப் புரிந்து கொள்வதற்கு
இடம் இல்லை. அமெரிக்கக் கடற்படையில் பாதிக்கும் மேலாக ஆசிய-பசிபிக்கில்
நிலைநிறுத்தப்படுகிறது. வேறு எந்த நாடு இலக்காக இருக்க முடியும்?
வடக்கு
கொரியாவிடம் உள்ள சிறியளவு கடலோர கப்பல்கள்,
அமெரிக்காவை பற்றிச் சொல்லத்தேவையில்லை, தென் கொரியாவிற்கு கூட ஒரு
அச்சுறுத்தலாக இல்லை. இப்பிராந்தியத்தில் இருக்கும் மற்ற நாடுகள் ஒவ்வொன்றும்
ஜப்பான், தென் கொரியா, பிலிப்பைன்ஸ், ஆஸ்திரேலியா போல் கூட்டு அல்லது தைவான்,
சிங்கப்பூர் போல் நட்பு நாடாகும். அல்லது சீனாவிற்கு எதிரான இராணுவ நடவடிக்கையில்
பங்கு பெறும் திறனுடைய இந்தியா போன்ற நாடாகும்.
சீனாவுடன்
அமெரிக்க உறவுகளைக் குறிப்பிட்டு,
“அமெரிக்காவில்
இருக்கும் நாம் சவால்களைப் பற்றித் தெளிவான பார்வையைக் கொண்டுள்ளோம்”
என்றார் பானெட்டா. மாநாட்டில் பங்கு பெற்ற அனைத்து நாடுகளும், சீனா
உன்பட, இத்தகவலைப் புரிந்து கொண்டன.
இன்னும்
ஏதேனும் ஐயங்கள் இருந்தால், அவற்றைத் தீர்க்கும் வகையில், பானெட்டா
இப்பிராந்தியத்தில் அமெரிக்கப் போர்களின் வரலாறு குறித்தும் பேசி முடித்தார்.
“வரலாற்றுப்
போக்கில், அமெரிக்கா பல போர்களைப் புரிந்துள்ளது. இரத்தம் சிந்தப்பட்டுள்ளது.
மீண்டும் மீண்டும் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் நம் முக்கிய நலன்களைக் பாதுகாக்க
நமது பலத்தை பயன்படுத்தியுள்ளோம்”
என்றார் பானெட்டா.
சிங்கப்பூரில் தன் வருகையைத் தொடர்ந்து பானெட்டா கடந்த 50 ஆண்டுகளில் சீனாவுடன்
போர் புரிந்துள்ள இரு நாடுகளுக்கும் பயணித்தார். வியட்நாம் (1979ல் சீனாவுடன் போர்
நடத்தியது), இந்தியா (1962ல் நடத்தியது). ஞாயிறன்று வியட்நாமில் அவர் கடற்படைக்
கப்பல் தளத்தில் இருந்து அமெரிக்க கடற்படையினருக்கு உரையாற்றினார். அக்கப்பல்
Cam Ranh Bay
இல்
நங்கூரமிட்டிருந்தது. வியட்நாமில் அமெரிக்கா போர் நடத்தியபோது இது ஆசியாவில் மிகப்
பெரிய அமெரிக்கக் கடற்படைத் தளமாக இருந்தது.
பகிரங்க
கூட்டங்களை தவிர, பானெட்டா சிங்கப்பூர் மாநாட்டின் மேலதிகநேரங்களில் ஜப்பான், தென்
கொரியா, பிலிப்பைன்ஸ், ஆஸ்திரேலியா, மலேசியா, சிங்கப்பூர் ஆகியவற்றின் பல
பாதுகாப்பு மந்திரிகள், உயர்மட்ட அதிகாரிகளுடன் கதவுகள் மூடிய கூட்டங்களில்
கலந்துகொண்டிருந்தார். தாய்லாந்து, கம்போடியப் பாதுகாப்பு மந்திரிகள் தங்கள்
நாட்டிற்கு வருகை புரிமாறு பானெட்டாவிற்கு அழைப்பு விடுத்தனர்.
தென்
கொரியத் தேசியப்பாதுகாப்பு மந்திரி கிம் க்வான் ஜின் மற்றும் ஜப்பானியப் பாராளுமன்ற
மூத்த பாதுகாப்புத் துணை மந்திரி ஷு வடனபேயுடன் பானெட்டா முத்தரப்புக் கூட்டம்
ஒன்றை நட்த்தி, வட கொரியாவிற்கு எதிரான கூட்டு நடவடிக்கைகளை விவாதித்தார்.
அமெரிக்க,
தென்கொரிய சிறப்புப் படைகள் வட கொரியாவில் ஊடுருவல் செயற்பாடுகளை நடத்தி, இரகசிய
நிலத்தடி இராணுவ நிலைகள் பற்றித் தகவல் சேகரித்தன என்று அமெரிக்காவில் செய்தி
ஊடகங்கள் கொடுத்த தகவலைத் தொடர்ந்து இக்கூட்டம் வந்துள்ளது.
தென்
கொரியாவில் அமெரிக்கச் சிறப்புப் படைகளின் தளபதியும், இராணுவ பிரிகேடியர் ஜெனரல்
நீல் டோலி, புளோரிடாவில் ஒரு மாநாட்டில் வட கொரியா கொரியப் போர் முடிந்த பின் 60
ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான மறைவுப் பாதைகளை நிலத்தடியில் தோண்டியுள்ளது என்று
கூறினார்.
“இந்த
முழு நிலத்தடிப்பாதைகளும் நம் செயற்கைக் கோள்களுக்குப் புலனாகாதவை. எனவே நாம் கொரிய
மற்றும் அமெரிக்க படையினரை சிறப்பு மேற்பார்வையிடுவதற்கு வடக்கே அனுப்பிவைத்தோம்”
என்றார் டோலி.
டோலியின்
உதவியாளர் ஒருவர் பின்பு தளபதி
“தவறாகக்
கூறிவிட்டார்”
என்றாலும், செய்தி
ஊடகத்தில் வந்துள்ளபடி தளபதியின் கருத்துக்கள் சந்தேகத்திற்கு இடம் இல்லாதவையாகும்.
The
Hillweb
வலைத்தளத்தின்படி,
“மே
மாதம் நடந்த சிறப்பு செயற்பாடுகள் தொழில்துறை மாநாட்டில், உயர்மட்ட அமெரிக்கத்
துருப்புக்கள் வடக்குக் கொரிய எல்லைகளுக்கு அப்பால் அனுப்பப்பட்டு, பியோங்யாங்கின்
பரந்த நிலத்தடி இராணுவத் தளங்களின் துல்லிய இடங்களைப் பற்றி அறியப்பட்டது. அமெரிக்க
கமாண்டோக்கள், நூற்றுக்கணக்கான நிலத்தடி ஆயுதக்கிடங்கு வசதிகளை அடையாளம்
கண்டுள்ளனர்; இவற்றைத் தவிர, ஆயிரக்கணக்கான நிலத்தடிப் பீரங்கித் தளங்களும்
உள்ளன.... “
என கூடியிருந்தவர்களிடம் டோலி கூறியதாக குறிப்பிட்டுள்ளது.
இப்பிராந்தியத்தில் அமெரிக்காவின் இராணுவத்தில் உண்மையான நிலைப்பாடு குறித்து இந்த
அறிக்கை ஒரு பார்வையை கொடுக்கிறது. இராஜதந்திர பேச்சுக்களான சமாதான நோக்கங்கள்,
“சுதந்திர
உலகை”
பாதுகாத்தல் என்னும் கூற்றுக்களுக்குப் பின்னணியில் அமெரிக்க ஏகாதிபத்தியம்
உலகிலேயே மிகச் சக்தி வாய்ந்த, ஆக்கிரமிப்புமிக்க இராணுவச் சக்தி ஆகும்.
சிங்கப்பூர்
பாதுகாப்பு மந்திரி
Ng Eng Hen
உடன்
பானெட்டா நடத்திய இருதரப்புப் பேச்சுவார்த்தைகளில் நான்கு அமெரிக்க லிட்டோரல்
போர்க்கப்பல்களை அங்கு நிறுத்தி வைக்கும் உடன்பாட்டை உறுதிப்படுத்தின. இக்கப்பல்கள்
கடலோரச் சூழலில் செயல்படும் வகையில் வடிவமைப்புக் கொண்டவை. குறிப்பாக சுரங்கங்கள்,
நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் சிறிய, எளிய நீர்நிலை வாகனங்களுக்கு எதிராக
பயன்படுத்தக்கூடியவை.
கூட்டுப்
படைகளின் தலைமைத் தலைவரான ஜெனரல் மார்ட்டின் இ. டெம்சே,
கப்பல்கள் பத்து மாதகாலத்திற்கு ஒரு முறை சிங்கப்பூரில் இருந்து
வந்து செல்லும் சுழற்சியில் இருக்கும் என்றார். கடல்படையினர் கப்பலிலேயே வசிப்பர்,
சிங்கப்பூர் வீடுகளிலோ, மற்ற வசதிகளிலோ இருத்தப்பட மாட்டார்கள். ஆனால் இதன்விளைவாக
300 அமெரிக்க கடற்படை எப்போதும் சிங்கப்பூரில் இருந்து மலாக்கா ஜலசந்திற்கு அருகே
கண்காணிப்பைக் கொள்ளுவர். இப்பிராந்தியத்தில் இருந்து கப்பல்கள் மலேசியா,
இந்தோனிசியா, பிலிப்பைன்ஸ் இன்னும் பல தெற்கு ஆசிய இடங்களுக்குப் பயணிக்கும்.
சிங்கப்பூர்
மாநாட்டைத் தொடர்ந்து, டெம்சி ஜனாதிபதி பெனிக்னோ அக்கீனோ
III,
மற்றும் பிலிப்பைன்ஸ் படைகளின் தலைமைத் தளபதி லெப்டினென்ட் ஜெனரல் ஜேசி டெலோசா
ஆகியோருடன் பேச்சுக்களை நடத்துவதற்கு பிலிப்பைன்ஸ் சென்றிருந்தார். சமீபத்தில்
பிலிப்பைன்ஸின் கடற்படைகள் தென் சீனக்கடலில் உள்ள சிறிய தீவுகளையும்
கடற்பாறைகளையும் கொண்ட ஒரு சிறிய கூட்டமான ஸ்கார்பரோ ஷோலை அணுகுவதில் சீனக்
கப்பல்களை எதிர்கொண்டன. |