World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The Mubarak verdict

முபாரக் பற்றிய தீர்ப்பு

Johannes Stern
5 June 2012

Back to screen version

பதவியில் இருந்து அகற்றப்பட்ட எகிப்திய ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் மற்றும் அவருடைய உயர்மட்ட உதவியாளர்கள் குறித்த வழக்கில் சனிக்கிழமை வெளிவந்த தீர்ப்புக்கள் ஒரு அரசியல் கேலிக்கூத்தாகும்.

2011 ஜனவரி-பெப்ருவரி மாதங்களில் எகிப்திய புரட்சியின் ஆரம்ப வாரங்களில் எதிர்ப்பாளர்கள் பொலிசாரால் கொலை செய்யப்படுவதை மேற்பார்வையிட்டனர் என்ற குற்றச் சாட்டிற்கு உட்படுத்தப்பட்ட முபாரக் மற்றும் அவருடைய முன்னாள் உள்துறை மந்திரி ஹபிப் எல்-அட்லி இருவரும் அவர்களுடை தொடர்பு பற்றிய சான்றுகள் ஏதும் இல்லை என்ற அடிப்பிடையில் குற்றமற்றவர்கள் எனக் கூறப்பட்டுள்ளனர். ஆனால் படுகொலைகளை நிறுத்தவில்லை என்பதற்காகத்தான் இருவரும் ஆயுட்கால சிறைத்தண்டனை பெற்றுள்ளனர். புரட்சியின் ஆரம்பத்தில் 1,000 மக்களுக்கும் மேலானவர்கள் பொலிசால் கொல்லப்பட்டனர்.

எல்-அடியின் துணைத் தலைவர்களையும் பல பாதுகாப்பு, பொலிஸ் சக்திகளின் தலைவர்களையும் நீதித்துறை விடுவித்துவிட்டது; இவைதான் எதிர்ப்பாளர்களுக்கு எதிராகக் கடுமையான வன்முறையைக் கட்டவிழ்த்திருந்தன.  முபாரக் எக்குற்றங்களிலும் தீவிரமாக ஈடுபட்டதற்குச் சாட்சியம் இல்லை என்று தீர்ப்பளித்து விட்டதால், நீதித்துறை தீர்ப்பிற்கு எதிராக அவர் வருங்காலத்தில் முறையீடு செய்தால் அவரை முற்றிலும் விடுவிக்கும் சட்டப்பூர்வத் தளங்களைக் கொடுத்துள்ளது.

இத்தீர்ப்பு எகிப்திய அரசாங்கக் கருவிக்கு வெள்ளைப் பூச்சு கொடுத்துவிட்டது; எகிப்திய ஆளும் இராணுவத் தன்னலக்குழுவும் அதேபோல் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தின் பாத்திரமும் இதைத்தான் தளமாகக் கொண்டுள்ளது. பல தசாப்தங்களாக முபாரக்குடன் நெருக்கமாக உழைத்த நிலையில், வாஷிங்டனும் அதன் நட்பு நாடுகளும் முபாரக்கை 2011 பெப்ருவரி எழுச்சியின் போது ஆதரித்திருந்தன; இப்பொழுது இராணுவ ஆட்சிக்குழுவை ஆதரிக்கின்றன. பெப்ருவரி 2011 தொடக்கத்தில், எகிப்தியப் பாதுகாப்புப் படையினர் நூற்றுக்கணக்கான எதிர்ப்பாளர்களைக் கொல்லுகையில், அமெரிக்க தூதர் பிராங்க் விஸ்னர், ஜனாதிபதி முபாராக்கின் பாத்திரம் வரவிருக்கும் நாட்களில் முற்றிலும் விமர்சனம் நிறைந்ததாக இருக்கும், அதுவும் வருங்காலம் குறித்து நம் பாதையைப் போடும்போது. என்றார்.

இத்தீர்ப்பு தற்போதைய எகிப்திய ஆட்சி ஒரு பொய்யில் தளத்தைக் கொண்டுள்ளது என்பதைத் தெளிவாக்குகிறது. கடந்த ஆண்டு தொழிலாள வர்க்கத்தை ஒரு புரட்சிகரப் போராட்டத்திற்கு தள்ளிய சமூக மற்றும் ஜனநாயக விழைவுகள் அரசாங்கக் கருவியின் உச்சியில் உள்ள சில அதிகாரிகளை அகற்றுவதால் மட்டுமே தீர்க்கப்பட்டுவிடமுடியும் என்ற கூற்றைத்தான் கொண்டுள்ளது.

முபாரக்கின் குற்றங்கள் குறித்த எந்த காத்திரமான ஆய்வும் எகிப்திய ஆளும் வர்க்கத்தின் முழு அரசாங்கக் கருவியையும் அம்பலப்படுத்தும். முபாரக்கின் பழைய தளபதிகளைக் கொண்டுள்ள எகிப்திய இராணுவ ஆட்சிக்குழு முபாரக் தளம் கொண்டிருந்த அதே பாதுகாப்புப் படைகளைத்தான் நம்பியுள்ளது; இதற்கு நீதித்துறையின் பாதுகாப்பு உள்ளது; ஏகாதிபத்திய சக்திகளிடையே உள்ள அவருடைய நட்பு நாடுகளின் நிதியையும் ஆயுதங்களையும் பெறுகிறது.

இத்தீர்ப்பு எகிப்திய மத்தியதரவர்க்க இடது அரசியலின் திவால்தன்மையையும் அம்பலப்படுத்துகிறது. ஆட்சியை அகற்றுவதற்கு தொழிலாள வர்க்கத்தைத் திரட்டி ஒரு புரட்சிகரப் போராட்டம் நடத்த வேண்டும், சோசலிசத்திற்காகப் போராடவேண்டும் என்பதற்கு விரோதப் போக்கைக் கொண்டுள்ள இப்பிரிவு, இராணுவ ஆட்சிக்குழுவின்கீழ் ஜனநாயகம் கட்டமைக்கப்பட முடியும் என்ற கூற்றை முன்வைத்துள்ளது. முபாரக் வழக்கின் தீர்ப்பு இராணுவ ஆட்சியின் கால்களின் கீழ் ஜனநாயகத்திற்கு மாற்றம் எனப்படும் செயற்பாட்டின் போலித் தன்மையைத்தான் மீண்டும் உறுதிப்படுத்துகிறதுஇதில் ஜூன் 16-17 ஜனாதிபதி இரண்டாம் சுற்றுத் தேர்தலும் அடங்கும்.

இரண்டாம் சுற்றிற்கு தகுதி பெற்ற இரு வேட்பாளர்களும்முபாரக்கின்கீழ் கடைசியாகப் பிரதம மந்திரியாக இருந்த அஹ்மத் ஷபிக் மற்றும் வலதுசாரி முஸ்லிம் பிரதர்ஹுட் MB  உடைய வேட்பாளர் மகமத் முர்சியும் புரட்சிக்கு ஆழ்ந்த எதிர்ப்போக்கை கொண்டவர்கள். எகிப்தில் உள்ள அமெரிக்க வணிக மன்றத்தில் நடத்திய உரை ஒன்றில் ஷபிக், முபாரக்கை ஒரு முன்மாதிரி என்று விவரித்து, தூக்குத் தண்டனைகள், மிருகத்தன வன்முறை ஆகியவற்றின் மூலம் ஒழுங்கை ஒரு மாதத்திற்குள் மீட்பதாக உறுதியளித்தார்.

இராணுவ ஆட்சிக் குழுவுடன் ஒத்துழைத்திருந்த முர்சி, அமெரிக்காவுடன் நெருக்கமான உறவுகளைக் கொண்டவர், முபராக்கின் பொலிஸ் பிரிவைத் தான் முற்றிலும் நம்பியிருப்பதைத் தெளிவுபடுத்தினார். தேர்தல்களில் முதல் சுற்றில் வெற்றி பெற்ற பின், அவர் பொலிஸ், இராணுவம் இரண்டையும் பாராட்டி பொலிஸார், அதிகாரிகள் ஆகியோரின் அந்தஸ்துக்கள் சமமாக இருக்கும் என்று உத்தரவாதம் அளித்தார்.

இத்தகைய அறிக்கைகள் இருந்தபோதிலும்கூட, மத்தியதர வர்க்க இடது சக்திகள் முர்சிக்கான தங்கள் ஆதரவை முடுக்கிவிட்டுள்ளன; அவருக்கூடாக நடைமுறையில் இருக்கும் சமூக ஒழுங்கைக் காக்க முயல்கின்றன. சனிக்கிழமை தஹ்ரிர் சதுக்கத்தில் RS  என்னும் புரட்சிகர சோசலிஸ்ட் குழுவின் தலைவர், ஜனாதிபதித் தேர்தலில் ஒரு மூலோபாயரீதியாக முகமத் முர்சிக்கு ஆதரவளித்து நான் நிற்கிறேன். எகிப்தின் சதுக்கங்கள் மற்றும் தெருக்களில் எண்ணிக்கை தொடர்ந்து அதிகமானால் ஷபிக் அரசாங்கத்திற்குள் நுழைவது கடினம் ஆகிவிடும்என நாம் நம்புகிறோம் என்றார்.

குட்டி-முதலாளித்துதவ இடதுகளின் இஸ்லாமிய வலதிற்கு எகிப்திய அரசாங்கத்துடன் அதை இணைப்பது--ஒரு மூலோபாய வாக்கிற்கான முறையீடு என்பது, தொடர்ச்சியான அரசியல் காட்டிக் கொடுப்புக்களில் சமீபத்தியது ஆகும்.

புரட்சியின் முதல் மாதங்களில் RS, இராணுவ ஆட்சிக்குழுவை ஒரு முற்போக்கு சக்தி எனப் பாராட்டி, ஆட்சிக் குழுவின் தளபதிகள் சீர்திருத்தங்களைக் கொண்டுவர கீழிருந்து அழுத்தம் கொடுக்கப்படலாம், முபாராக் ஆட்சியின் நிறுவனங்களை தூய்மைப்படுத்த முடியும் என்று கூறியது. இம்முன்னோக்கு கடந்த ஆண்டு இரண்டாம் புரட்சிக்காக மக்கள் அழைப்புக்கள் வந்ததை அடுத்துச் சிதறியவுடன்—RS  அதை எதிர்த்திருந்ததுஅவர்கள் இப்பொழுது இஸ்லாமிய MB ஐ பழைய முபாரக் அதிகாரிகளின் ஆட்சிக்கு ஒரு மாற்றீடு என ஒப்புதல் கொடுக்கின்றனர்.

ஆரம்ப வெற்றிகளுக்குப் பின், புரட்சியின் அனுபவம் எவ்வளவு மகத்தானதாக இருந்தாலும் எதிர்ப்பு அலைகள் புரட்சியின் சமூக, ஜனநாயகக் கோரிக்கைகளை அடையமுடியாது என்பதைத்தான் காட்டுகிறது. முபாரக் ஆட்சியின் அரசாங்கக் கருவிக்கு அழுத்தம் கொடுத்தோ, சீர்திருத்த முயன்றோ தொழிலாள வர்க்கம் எதையும் பெற இயலாது; முன்னேற்றத்திற்கான ஒரே பாதை இந்த ஆட்சியை அகற்றுவதுதான்.

தொழிலாள வர்க்கத்தை எதிர்கொண்டிருக்கும் முக்கிய பணி அதன் சொந்த மக்கள் போராட்டக் கருவிகளைக் கட்டமைத்து, ஆட்சியை அகற்றத் தளம் அமைத்து, அதற்குப் பதிலாக தொழிலாளர்களின் அரசாங்கத்தை அமைப்பது ஆகும்; அத்தகைய அரசாங்கம் எகிப்து, மத்திய கிழக்கு மற்றும் சர்வதேச அளவில் சோசலிசக் கொள்கைகளுக்கு போராடும்.

அத்தகைய தொழிலாளர் அரசுதான் முபாரக் மற்றும் அவருடைய ஏகாதிபத்திய ஆதரவாளர்களின் குற்றங்கள் பற்றிய முழுக் குறிப்பை அளிக்க முடியும்.