WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஆசியா :
இந்தியா
இந்தியா:
சங்கத்தின் துரோகத்தை NLC ஒப்பந்தத் தொழிலாளர்கள்
எதிர்க்கின்றனர்
By Arun Kumar and Moses Rajkumar
5 June 2012
use
this version to print | Send
feedback
இந்தியாவின் தென்னிந்திய மாநிலமான தமிழகத்தில் அமைந்திருக்கும்
மத்திய அரசாங்கத்திற்கு சொந்தமான நெய்வேலி லிக்னைட் கார்பரேஷன் நிறுவனத்தில்
ஒப்பந்தத் தொழிலாளர்கள் நடத்தி வந்த ஒரு நீண்ட வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு
வரும் பொருட்டு அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ்
(AITUC)தொழிற்சங்கம்
துரோகத்தனமான ஒரு உடன்பாட்டிற்கு வந்தது தொடர்பாக நூற்றுக்கணக்கான ஒப்பந்தத்
தொழிலாளர்கள் நேற்று ஆவேசத்துடன் இச்சங்கத்தின் உள்ளூர் நிர்வாகிகளுடன் மோதினர்.
NLC
இன் நிரந்தரத் தொழிலாளர்களுக்கு நிகரான சம ஊதியத்தையும் தங்களது
வேலைவாய்ப்பை
“நிரந்தர”மாக்கக்
கோரியும் சுமார்
14,000
ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஏப்ரல்
21
முதலாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.
ஞாயிறன்று பிற்பகலில் கையெழுத்தான ஒரு உடன்பாட்டின் படி,
போராட்டக் கோரிக்கைகள் ஏதும் நிறைவேற்றப்படாத நிலையிலேயே அனைத்து
வேலைநிறுத்த நடவடிக்கைகளையும் முடிவுக்குக் கொண்டு வர
AITUC
ஒப்புக் கொண்டது.
அனைத்து ஒப்பந்தத் தொழிலாளர்களையும்
“விரைவில்”
நிரந்தரமாக்கவும்,
அவர்களில்
4,250
பேரை ஐந்து மாதங்களுக்குப் பின் தொழிற்துறை கூட்டுறவு சொசைட்டியின்
(நிரந்தரமாக்குவதற்கான
நுழைவாயில்)
உறுப்பினர்களாக்கவும்,
அத்துடன் வேலைநிறுத்தம் செய்து வரும் தொழிலாளர்களுக்கு எதிரான சட்ட
நடவடிக்கையை திரும்பப் பெற்றுக் கொள்வதற்கும் மட்டுமே
NLC
நிர்வாகம் ஒப்புக் கொண்டிருக்கிறது.
எந்த ஒப்பந்தத் தொழிலாளர்களையும் நிரந்தரமாக்குவதற்குவதான எந்த
காலக்கெடுவும் இல்லை என்பதோடு சம ஊதியக் கோரிக்கையையும் தொழிற்சங்கம் முழுமையாகக்
கைவிட்டிருக்கிறது.
நிறுவனம் வேலைநிறுத்தம் செய்து வரும் தொழிலாளர்கள் ஒவ்வொருவருக்கும்
2500
ரூபாய்
(45
அமெரிக்க டாலர்)”கருணை”த்
தொகை வழங்குவதோடு மாதந்தோறும் முறையே
25
ரூபாய் மற்றும்
50
ரூபாயினை சலவைப் படி மற்றும் வாடகைப் படியாக வழங்கும்.
இந்த அற்பமான வாக்குறுதிகளையும் கூட
NLC
நிறைவேற்றும் என்பதற்கான எந்த உத்தரவாதமும் கிடையாது.
2008
மற்றும்
2010
இல் வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு,
முந்தைய தொழிற்சங்க உடன்படிக்கைகளில் குறிப்பிடப்பட்டிருந்த
“வாக்குறுதிகளை”
நிறுவனம் நிறைவேற்றத் தவறியிருக்கிறது.
தொழிற்சங்கத்திற்கும் நிர்வாகத்திற்கும் இடையில் ஏற்பட்டிருக்கும்
உடன்பாடு தொடர்பாக ஒப்பந்தத் தொழிலாளர்களிடையே பரவலான கோபமும் எதிர்ப்பும்
எழுந்துள்ளது.
திங்களன்று காலையில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள்
AITUC
இன் உள்ளூர் அலுவலகம் முன்னால் திரண்டு இந்த உடன்பாட்டைக் கண்டனம்
செய்தனர்.
திங்களன்று வேலைக்குத் திரும்புமாறு ஒப்பந்தத் தொழிலாளர்கள்
வலியுறுத்தப்பட்டனர் என்கிற நிலையிலும் மூன்றில் ஒரு பங்கினர் மட்டுமே அவ்வாறு
திரும்பியுள்ளனர் என்று ஒரு தொழிலாளி
WSWS
இடம் தெரிவித்தார்.
வேலைக்குத் திரும்பிய தொழிலாளர்களும் மதியத்திற்கெல்லாம் ஆலையில்
இருந்து கிளம்பி
AITUC
இன் அலுவலகம் நோக்கி படையெடுத்தனர்.
அந்த அலுவலகத்தை அடித்து நொறுக்கிய
அவர்கள் இந்த கொல்லைப்புற வழி உடன்பாடு தொடர்பாக ஜீவா ஒப்பந்தத்
தொழிலாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலரான கே.வெங்கடேசனுடன்
மோதினர்.
ஒப்பந்தம் கையெழுத்திடப்படுவதற்கு முன்பாக தங்களை
கலந்தாலோசிக்கவில்லை என்பதில் தொழிலாளர்கள் ஆவேசமடைந்திருந்தனர்.
அவர்களில் ஒருவர்
WSWS
இடம் கூறுகையில்,
“கோரிக்கைகள்
நிறைவேறும் வரை வேலைக்குத் திரும்பக் கூடாது என்பது தான் அவர்களது மனோநிலை.”
நிர்வாகத்தின் அச்சுறுத்தல்களுக்கும்,
போலிஸ் அடக்குமுறைக்கும்,
அத்துடன் தங்களது வேலைநிறுத்தத்தை
“சட்டவிரோதமாய்’’
அறிவிக்கும் நீதிமன்ற ஆணைகளுக்கும் அஞ்சாமல்
NLC
தொழிலாளர்கள் நடத்தி வருகின்ற நீண்ட வேலைநிறுத்தம் ஒப்பந்தத்
தொழிலாளர் திட்டத்திற்கான ஒரு நேரடி சவாலாய் அமைந்தது.
இந்தியா முழுவதிலும் அரசு நிறுவனங்களும் மற்றும் தனியார் துறை
நிறுவனங்களும் கட்டிக் காப்பாற்றி வரும் இந்த மலிவு உழைப்பு அமைப்புமுறையின் கீழ்
பணியமர்த்தப்பட்ட தொழிலாளர்கள் நிரந்தரத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தின்
ஒரு சிறு துண்டையே ஊதியமாய்ப் பெற்று வருகின்றனர்.
NLC
தொழிலாளர்கள் போராட்டத்திற்கான தங்கள் மன உறுதியை வெளிப்படுத்திக்
காட்டியுள்ளனர்.
ஆனால் மேலாதிக்கம் செலுத்துகின்ற தொழிற்சங்கமான
AITUC (இது
ஸ்ராலினிச இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி
[CPI]
உடன் இணைந்த தொழிற்சங்கம்)
தனது சமீபத்திய காட்டிக்கொடுப்புக்கு தயாரிப்பு செய்த வேளையில்,
அது தொழிலாளர்களைத் தனிமைப்படுத்துவதற்கும் உற்சாகம் குன்றச்
செய்வதற்கும் தேவையான அனைத்தையும் செய்தது.
வேலைநிறுத்தத்தில் இணைந்து கொள்வதற்கு நிரந்தரத் தொழிலாளர்களுக்கு
எந்த அழைப்பையும்
AITUC
விடுக்கவில்லை என்பதோடு வேலைநிறுத்தம் செய்கின்ற தொழிலாளர்களுக்கு
ஆதரவாக முதல்வர் ஜெ.ஜெயலலிதா
தலைமையிலான தமிழக மாநில அரசாங்கம் தலையீடு செய்யும் என்பதான பிரமையையும் அது
ஊக்குவித்தது.
வேலைநிறுத்தம் செய்கின்ற
NLC
தொழிலாளர்களும் அவர்தம் குடும்பத்தினரும் மே
30
அன்று நடத்திய ஒரு பேரணியில் உரையாற்றிய
CPI
இன் தமிழக மாநிலச் செயலாளரான தா.பாண்டியன்,
இப்பிரச்சினையைத் தீர்க்க உதவுமாறு
“அம்மா”வுக்கு
(அதாவது
முதல்வர் ஜெயலலிதாவுக்கு)பரிதாபகரமான
ஒரு விண்ணப்பத்தைச் செய்தார்.
“தமிழ்நாட்டு
மக்களுக்கு பல்வேறு நல்ல திட்டங்களை”
முதலமைச்சர் நிறுவித் தந்திருப்பதாகவும் எனவே தொழிலாளர்களின்
கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் அவர் தலையீடு செய்ய முடியும் என்றும் அவர் அடிமைத்தன
மனோபாவத்துடன் வலியுறுத்தினார்.
பாண்டியனின் கூற்றுகள் மோசடியானவை.
உண்மையில்
NLC
இன் போராடும் தொழிலாளர்களைக் கைது செய்வதற்கு போலிசைக் குவித்ததன்
மூலம் இந்தப் பிரச்சினையில் ஜெயலலிதாவின் அரசாங்கம் ஏற்கனவே
“தலையீடு
செய்திருக்கிறது”.
13,000
மக்கள் நலப் பணியாளர்களை மொத்தமாய் வேலையிலிருந்து அகற்றியது,
கூடங்குளத்தில் அணு உலை எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கோரமான
அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டது,
அத்துடன் பேருந்துக் கட்டணங்கள்,
பால் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலையை உயர்த்தியது ஆகியவை
உட்பட தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகளின் மீதான தாக்குதல்களில் ஜெயலலிதா
நிர்வாகம் இழிபுகழ் ஈட்டியிருக்கிறது.
2003
இல் வேலைநிறுத்தம் செய்த சுமார்
200,000
தொழிலாளர்களை வேலைநீக்கம் செய்த ஜெயலலிதாவின் நிர்வாகம்
அவர்களுக்குப் பதிலாய் கருங்காலிகளை கொண்டு நிரப்பியது.
வேலைநிறுத்தம் அடுத்த சில நாட்களில் தீர்க்கப்படாது போனால்
“நாங்கள்
இந்தப் பிரச்சினையை மாநிலம் தழுவிய போராட்டமாக மாற்றுவோம்.
அனைத்து தொழிற்சங்கங்களுடனும் கைகோர்த்து இதனை தமிழ்நாட்டு மக்களின்
ஒரு போராட்டமாக ஆக்குவோம்”
என்று பாண்டியன் வாய்ஜம்பம் காட்டி அறிவித்தார்.
நான்கே நாட்களின் பின்,
AITUC,
அதாவது அவரது கட்சியைச் சேர்ந்த தொழிற்சங்க அமைப்பு,
தொழிலாளர்களின் முதுகுக்குப் பின்னால் ஒளிந்து நின்று
வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரும் ஒரு உடன்பாட்டில் கையெழுத்திட்டது.
இந்தக் காட்டிக் கொடுப்பில் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
கட்சியும்
(CPM),
மற்றும் அதன் தொழிற்சங்கமான இந்திய தொழிற்சங்கங்களின் மையமும்
(CITU)AITUC
நிர்வாகிகளுக்கு ஒத்துழைப்பு அளித்தன.
இன்று இந்த உடன்பாட்டின் எதிர்ப்பாளர்களாகக் காட்டிக் கொள்கின்ற
சிஐடியு மற்றும் தொழிலாளர் முன்னேற்ற முன்னணி
(இது
தமிழகத்தின் முன்னாள் முதல்வரான மு.கருணாநிதியின்
கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்த சங்கம்)உள்ளிட்ட
மற்ற பல தொழிற்சங்கங்கள் திங்களன்று மாலையில் ஒப்பந்தத் தொழிலாளர்களின் ஒரு
கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தன.
வேலைநிறுத்தம் செய்கின்ற தொழிலாளர்களை
CPI/AITUC
தனிமைப்படுத்துவதை மவுனமாக ஆதரித்து வந்திருக்கும் சிஐடியு,
போராட்டம் காட்டிக்கொடுக்கப்பட்டதால் எழுந்திருக்கும் கோபத்தை
மட்டுப்படுத்துவதற்கும் அதனை இடறச் செய்வதற்கும் முனைந்து கொண்டிருக்கிறது.
இந்தியாவில் இருக்கின்ற உலக சோசலிச வலைத் தள ஆதரவாளர்கள்
NLC
வேலைநிறுத்தப் போராட்டம் முழுதிலும்
AITUC
இன் துரோகப் பாத்திரத்தை அம்பலப்படுத்தி
தலையீடு செய்திருக்கின்றனர்.
தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களிடம் இருந்து முறித்துக் கொள்ள வேண்டும்,
தங்களது சொந்த சாமானியத் தொழிலாளர் குழுக்களை உருவாக்க வேண்டும்,
அத்துடன் சோசலிசக் கொள்கைகளுக்காகவும் மற்றும் ஒரு தொழிலாளர்கள்
மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்திற்காகவும் போராடுவதின் அடிப்படையில்
தொழிலாளர்களின் மற்ற பிரிவுகளை நோக்கித் திரும்ப வேண்டும் என்று
WSWS
வலியுறுத்தி வந்துள்ளது.
ஒரு தொழிலாளி
WSWS
இடம் கூறினார்:
“NLC
நிர்வாகத்திற்கு எதிராக மட்டுமன்றி
AITUC
தலைவர்களுக்கு எதிராகவும் பெரும் ஏமாற்றமும் கோபமும் தான்
தொழிலாளர்களிடம் நிலவும் பொதுவான மனநிலையாக உள்ளது.”
“ஒப்பந்தத்
தொழிலாளர்களுடன் சேர்ந்து சமீபத்திய ஆர்ப்பாட்டத்தில் பங்குபெற்ற இல்லத்தரசிகளும்
இந்த உடன்பாடு விடயமாக மிகுந்த துயரமும் எரிச்சலும் பெற்றுள்ளனர்.
நம் கண்களில் மண் தூவும் வேலை தான் இது என்பதாக அவர்கள்
நினைக்கின்றனர்.
ஒப்பந்தத் தொழிலாளர்களும் அவர்தம் குடும்பங்களும் கடுமையான
பொருளாதார நெருக்கடிக்கு உள்ளானபோதிலும் கூட இடைவிடாமல்
44
நாட்கள் நடத்திய ஒரு வேலைநிறுத்தத்தில்,
தொழிலாளர்களின் பிரதான கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமலேயே
வேலைநிறுத்தத்தை முடித்துக் கொள்வதற்கு இத்தகையதொரு அவசரம் காட்டப்பட்டது ஏன்
என்பதே அவர்கள் அறிய விரும்பும் கேள்வியாக உள்ளது.”
”இந்த
உடன்பாட்டில் இம்மியளவான ஊதிய உயர்வும் கூட இல்லை”
என்று கூறிய அவர்,
ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரமாக்குவதற்கான
“வாக்குறுதி”களாய்
கூறப்படுவனவற்றையும் கூட நிராகரித்தார்.
“2008
இல் இதே வாக்குறுதிகளை நாம் செவிமடுத்தோம்.
ஆனால் அடுத்த நான்கு ஆண்டுகளில் இந்த வாக்குறுதிகள் மறக்கப்பட்டதும்
புறக்கணிக்கப்பட்டதும் தான் மிச்சம்.
ஐந்து மாதங்களுக்குப் பின்னர் இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி
நாம் மீண்டும் வேலைநிறுத்தத்தில் இறங்க வேண்டுமா என்ன?”
|