WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா
:
பிரான்ஸ்
French unions discuss wave of sackings after presidential elections
ஜனாதிபதித் தேர்தல்களுக்கு பின் பிரெஞ்சு தொழிற்சங்கங்கள் அலையென பணிநீக்கங்கள்
பற்றி விவாதிக்கின்றன
By Francis Dubois and Antoine Lerougetel
31 May 2012
Back to screen version
செவ்வாயன்று புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சோசலிஸ்ட் கட்சியின்
பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்டுடன் பேச்சுக்களை நடத்தியபின், தொழிற்சங்க
அதிகாரிகள் டஜன் கணக்கான ஆலைகள் மூடப்பட உள்ளன, இதையொட்டி பல்லாயிரக்கணக்கான வேலை
இழப்புக்கள் ஏற்படும் என அறிவித்துள்ளனர்.
CGT
எனப்படும் பொதுத் தொழிலாளர் கூட்டமைப்பு, 46 நிறுவனங்கள் செயற்பாடுகளை மூடத்
திட்டமிட்டுள்ளன என்றும், இது கிட்டத்தட்ட 45,500 வேலைகளுக்கு அச்சுறுத்துல்
கொடுக்கும் என்றும் கூறியுள்ளது.
CGT
கருத்துப்படி, இம்மூடல்கள் மூலம் ஏற்படக்கூடிய மொத்த நேரடி, மறைமுக
வேலை இழப்புக்கள் கிட்டத்தட்ட 90,000 என இருக்கலாம்.
இடைக்காலத் தொழில்துறை மந்திரி மிசேல் சபான் கூறினார்:
“இது
ஓர் யதார்த்தமான எண்ணிக்கைதான்... 100, 1000 அல்லது 10,000 வேறுபாடு எனத் தவறு
இருக்கும் வகையில்கூட நான் தெளிவாகக் கூறமுடியாது; ஆனால் உண்மையான கவலைகள் உள்ளன;
பல நிறுவனங்களில் நெருக்கடி நிலைமைகள் உள்ளன; இந்நெருக்கடிகள் பேச்சுக்கள்
மூலம்தான் தீர்க்கப்பட வேண்டும்.”
வேலையின்மை விகிதங்கள் பற்றிக் குறிப்பிட்ட சபான்,
“வளர்ச்சி
சீராக இருந்தால் நான் வியப்படைவேன்.”
இத்தகைய திடீர் பகிரங்க அறிவிப்பு வணிகக் குழுக்கள் மற்றும்
தொழிற்சங்கத் தலைமைகளுக்கு இடையே தொடர்ந்து நடக்கும் பேச்சுக்களின் விளைவு ஆகும்.
CGT
அதிகாரி
Mohamed Oussedik, Le Parisien
இடம்
கூறியது போல்,
“கடந்த
வாரம் எங்கள் உறுப்புச் சங்கங்கள் அனைத்தையும் ஒன்றாகக் கூட்டி பிரான்சில் எல்லாப்
பிராந்தியங்களிலும் நடைபெறும் பிரச்சினைகள் பற்றிப் பேசினோம்.”
வேலை வெட்டுக்களுக்காக இலக்கு வைக்கப்பட்டுள்ள தொழில்கள் மற்றும்
ஆலைகளில் கீழ்க்கண்டவையும் அடங்கும்:
·
கார்த்தயாரிப்புத் தொழில்துறையில்,
PSA
Citroen Peugeot, என்னும்
மிகப் பெரிய கார்த்தயாரிப்பு நிறுவனம் ஐரோப்பாவில், முக்கியமாக பிரான்சில் 6,000
வேலைகளை வெட்டுவதற்குத் திட்டமிட்டுள்ளது. பாரிஸுக்கு வடகிழக்கே உள்ள
Aulnay-sous-Bouis
ல் 3,300 தொழிலாளர்கள்
Citroen C4
உற்பத்தி நிறுத்தப்படுகையில் தங்கள் ஆலை முடப்படும் என அஞ்சுகின்றனர். வடக்கே உள்ள
Valenciennes
ஆலையும் அச்சறுத்தலுக்கு உட்பட்டுள்ளது.
·
Renault
அதன்
Mabeguge
மற்றும்
Douai
ஆலைகளில் பணிநீக்கங்களை திட்டமிட்டுள்ளது.
Scenic, Kangoo
ஆகியவை இங்கு தயாரிக்கப்படுகின்றன. 1,000 தொழிலாளர்கள் உள்ள ஜெனரல்
மோட்டார்ஸ் ஆலையும் அச்சறுத்துலக்கு உட்பட்டுள்ளது.
·
Florange
ல்
இருக்கும்
Arcelor Mittal
ஆலையும் மூடல் அச்சுறுத்தலை எதிர்நோக்குகிறது; அதையொட்டி 5,000
வேலைகள் இழக்கப்படலாம், அவற்றுள் 3,000 நிரந்தர ஒப்பந்தப் பணியாளர்கள் ஆவர்.
·
ஏயர் பிரான்ஸ் மறுகட்டமைப்பை அறிவித்துள்ளது; இதன்படி 5,000 வேலைகள்
இழக்கப்படும். விமானத்துறை, போக்குவரத்துத் தொழில்களில் மற்ற வேலை வெட்டுக்கள்
National Corsica-Mediterranean Company (SNCM)
, என்னும் நிறுவனத்திலும் அடங்கும். ஒரு
Veolia
துணைநிறுவனமாக மாறுவதற்காக
CGT
உடன்பேச்சுக்கள் நடத்தியபின் 2006ல் தனியார்மயமாக்கப்பட்ட
இந்நிறுவனம் மொத்தம் உள்ள 2,000 வேலைகளில் 800 வேலைகளைக் குறைக்க உள்ளது.
·
பேரங்காடிச் சங்கிலிப் பிணைப்புக்களும் பெரும் வேலை
வெட்டுக்களுக்குத் திட்டமிட்டுள்ளன.
Carrefour, Leclerc, Casino, Intermarché, Système U
ஆகியவை தொழிற்சங்கங்கள் கருத்துப்படி கிட்டத்தட்ட 12,000 வேலைகளை
மொத்தத்தில் நீக்க உள்ளன.
·
பிரான்சின் மூன்று முக்கிய வங்கிகள் 6,000 வேலை இழப்புக்களை
அறிவித்துள்ளன.
Credit Agricole
நிறுவனம் உலகம் முழுவதும் உள்ள அதன் தொழிலாளர் தொகுப்பில் உள்ள160,000 பேரில் 2,350
பேரை நீக்க உள்ளது; இதில் பிரான்சில் 850;
Societe Generale
ல் 1580
பணிநீக்கங்கள், அவற்றுள் 800 பிரான்ஸில் இருக்கும்;
BNP
யில்
1,400;
பிரான்சில் 370 ஆகியவை அடங்கும்.
·
மற்ற பாதிக்கப்பட்ட தொழில்களில் எண்ணெய்ச் சுத்திகரிப்பு
நிறுவனங்கள் (LyndellBasell),
அணுவிசை (Areva),
சுற்றுலாத்துறை மற்றும் அஞ்சல் வழி பத்திரிகைகள் அனுப்பும் பிரிவு
ஆகியவை அடங்கும்.
ஹாலண்ட் தேர்ந்தெடுக்கப்பட்டதில் இருந்து, பல துறைகளிலும்
பணிநீக்கங்கள் பற்றிய அறிவிப்புக்கள் அதிகரித்துவிட்டன. தேர்தல் பிரச்சாரத்தின்போது
இவை மறைத்து வைக்கப்பட்டிருந்தன; அது ஓர்
“இடது”
சிக்கன அரசாங்கம் தேர்ந்தெடுக்கப்பட வசதியளித்தது. ஏற்கனவே 106 ஆலை
மூடல்கள் 2012ம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் பதிவாகியுள்ளன; 2011ல் இதே
காலத்தில் 66 ஆலை மூடல்கள் பதிவாகியுள்ளது. 2012ன் ஆரம்பத்தில் இருந்து,
பிரான்சில் ஒவ்வொரு மாதமும் 10 ஆலைகள் நிகர இழப்பு என ஏற்பட்டுள்ளது.
Le Figaro
ல் வெளியிடப்பட்டுள்ள புள்ளிவிவரங்கள் அடுத்த இரு ஆண்டுகளில்
307,000 பணி இழப்புக்கள் ஏற்படும் என்று கணித்துக் காட்டுகின்றன; இது மொத்த
வேலையின்மை எண்ணிக்கையை 10.6% என உயர்த்திவிடும்.
ஒரு நீடித்த
PS
தலைமையிலான அரசாங்கத்தை அமைப்பதற்கு ஜூன் 17 சட்டமன்றத்த தேர்தல்களில் ஹாலண்ட்
வெற்றிபெற முயல்கையில்,
PS
மற்றும் அதன் நட்புக் கட்சிகளும், ஹாலண்டையும் தற்போதைய இடைக்கால அரசாங்கத்தையும்
பணிநீக்கங்களை அகற்றுவதற்குச் சிறந்த நம்பிக்கை கொடுப்பவை என்று சித்தரிக்க
முற்பட்டுள்ளன. தொழிற்சங்கங்கள் இப்பொழுது பணிநீக்கம் என அச்சுறுத்தும் வேலைகளைக்
காப்பாற்றுவதற்கு ஹாலண்டிடம் முறையீடு செய்துள்ளன.
தன்னுடைய இடைக்கால அரசாங்கத்தில்
“உற்பத்தி
ஏற்றத்திற்கான மந்திரி”
என்று
Armaund Monterbourg
ஐ
ஹாலண்ட் நியமித்துள்ளார்; இப்புதிதாகத் தோற்றுவிக்கப்பட்டுள்ள அமைச்சரகம்,
Official Journal
கருத்துப்படி,”பிரான்சின்
பொருளாதாரப் போட்டித்தன்மைக்கான கொள்கைகளைத் தயாரிக்கிறது, செயல்படுத்த உள்ளது.”
இப்பொழுது
Montebourg
மூடல், பணிநீக்கம் என்னும் அச்சுறுத்தல்களுக்கு உட்பட்டுள்ள
ஆலைகளுக்கு சென்று, ஆதரவைத் திரட்ட முயல்கிறார்.
இத்தகைய முயற்சி முற்றிலும் நம்பிக்கையற்றதாகும். ஹாலண்டின் இலக்கு
மிக அதிக தேர்தல் ஆதரவைப் பெறுவதற்காக தெளிவற்ற வாக்குறுதிகளைக் கொடுத்து, இலக்கு
வைக்கப்படும் ஆலைகளுக்கு உதவுதல் என உள்ளது; தேர்தல் முடிந்தபின், அவர் எங்கு
எல்லாம் அரச நிதிய உதவி கொடுக்கமுடியுமோ அங்கெல்லாம் அவற்றை நியாயப்படுத்த புதுச்
சலுகைகளைச் சுமத்த முற்படுவார்.
ஆளும் வர்க்கத்தில் நிதிய ஒட்டுண்ணிகள் பாரிய செல்வத்தைச்
சேகரித்துள்ளபோதிலும்கூட, தொழிலாளர்கள், வறிய நிலைமைகள் என உலகத் தொழிலாளர்
சந்தைகள் ஆணையிடும் ஊதிய, நலன்கள் வெட்டுக்களை ஏற்றால்தான் தங்களுடைய வேலைகளைத்
தக்க வைத்துக் கொள்ள முடியும் எனக் கூறப்படுவர். முதலாளித்துவத்திற்கு எதிரான ஒரு
வர்க்கப் போராட்டம் மூலம்தான் தொழிலாள வர்க்கம் தன் வேலைகளைக் காத்துக் கொள்ள
முடியும். பிரான்சில் அது
PS,
அதன் முதலாளித்துவ அரசியல் நட்பு அமைப்புக்கள்,
“இடது”
கட்சிகள் மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்திற்கு எதிராக
இயக்கப்பட்டால்தான் முடியும்.
Montebourg
அரச
வளங்களை தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரங்களைக் காப்பதற்குப் பயன்படுத்துவதாக இல்லை
என்பதைத் தெளிவாக்கிவிட்டார். மே 25ம் திகதி
Marseille
க்கு
அருகே உள்ள மூடல் அச்சுறுத்தலுக்கு உட்பட்டுள்ள
Fralib
ஆலைக்கு
சென்றிருந்தபோது, அவர்,
“முன்கூட்டிய
கண்டனத்திற்கு உட்பட்டுவிடும் நிறுவனங்களுக்கு செயற்கையான ஆதரவை அளிப்பதற்கு
நாங்கள் தயாராக இல்லை.”
என்றார்.
இது பரந்த முறையில்
PS
மற்றும் பிற முதலாளித்துவ
“இடது”
கட்சிகளால் உணர்ந்து கொள்ளப்பட்டுள்ளது. மே 28ம் திகதி வெளிவந்த
“பணி:
துயரத்தில் இருக்கும் பிரெஞ்சுத் தொழிலைக் காப்பாற்றுக”
என்னும் தலைப்பில் வந்த கட்டுரையில்
Le
Monde,
பெயரிடப்படாத
PS
அதிகாரிகள்,
“அவர்
ஆலைகளை மூடும் மந்திரியாக வரவுள்ளார்”
என்று
Montebourg
ஐ பற்றிக் கூறியதாக மேற்கோளிட்டுள்ளது.
சமீபத்திய ஜனாதிபதித் தேர்தல்களில் ஹாலண்டிற்கு ஆதரவு கொடுத்த
தொழிற்சங்கங்களைப் பொறுத்தவரை, வேலைகள் இழப்பு பெரிதும் நடக்க உள்ளது என்பதைப்
பற்றி அவை நன்கு அறிந்திருந்தன என்பது இப்பொழுது மிகவும் தெளிவாகிவிட்டது; அதேபோல்
PS
இன் திட்டங்களில் உள்ள தொழிலாள வர்க்க-விரோதப் போக்குகள் பற்றியும்
அவை நன்கு அறியும்.
இதில் ஹாலண்ட் இக்கோடைகாலத்தில்
“வெளிநாட்டிற்குப்
பணிகளை அனுப்பவதற்கு எதிரான போராட்டம்”
என்ற பெயரில் ஒரு சட்டத்தை இயற்ற விரும்புவதும் அடங்கும். இது அதிக
இலாபங்கள் அடைவதற்காக தங்கள் வணிகங்களை விற்க முற்படும் முதலாளிகள் பிரான்சில்
செயற்பாட்டைத் தொடர இருக்கும் நபருக்குத்தான் விற்க வேண்டும் என்ற கட்டாயம்
இருக்கும். ஆனால் இச்சட்டம் ஊதியங்களையோ, தொழிலாளர்களின் பணி நிலைமைகளையோ
பாதுகாக்காது; அவைதான் அடிப்படைப் பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆகும். ஒரு நிறுவனத்தின்
உரிமையாளர் பற்றி பிரச்சினை எழுப்பாது, வாங்குபவர்மீது நிபந்தனைகளைச் சுமத்தாது;
அதாவது நிறுவனத்தில் செயற்பாடுகள் போட்டித்தன்மையில் இருக்க வேண்டும் என்பதற்காக
தொழிலாளர்களின் இழப்பில் நடத்தப்படும். |