WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் :
முன்னோக்கு
A new stage in the global crisis
உலக நெருக்கடியில் ஒரு புதிய கட்டம்
Andre Damon
4 June 2012
Back to screen version
அமெரிக்காவில் வேலைகள் நிலை பற்றி வெள்ளியன்று வெளிவந்துள்ள
அழிவுகரமான அறிக்கை, ஓராண்டில் மிக மோசமான வேலைவழங்கல் அதிகரிப்பு பற்றிக்
காட்டியுள்ளதுடன், இது உலகின் ஒவ்வொரு பகுதியில் இருந்தும் வந்த மோசமான பொருளாதார
தகவல்களுக்கு சிகரம் வைத்தாற்போல் இருந்தது.
இத்தகைய போக்குகள் ஒரு பொருளாதார மீட்சி வந்துவிட்டது எனப்படும்
கூற்றுக்கள் காலத்திற்கு முந்தியவை என்பது மட்டுமில்லாமல் முற்றிலும் கற்பனையானவை
என்பதைத்தான் வெளிப்படுத்துகின்றன. கூறப்படும் அனைத்து கருத்துகளுக்கு மாறாக,
நெருக்கடி தீர்க்கப்பட முடியாது என்பதையே மீண்டும் மீண்டும் நிரூபிக்கின்றது.
கீழ்நோக்குச் சரிவில் இருந்து உலகின் எப்பகுதியும் பாதுகாப்பாக
இருக்கவில்லை. ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் பொருளாதார பலவீனமான நிலை
அபிவிருத்தியடையும் உலகின் பகுதியால் ஓரளவு தீரும் என்ற நம்பிக்கைகளை சமீபத்திய
புள்ளிவிவரங்கள் அடித்துச்சென்றுள்ளது. இந்தியாவில் முதல் காலாண்டு வளர்ச்சி 5.3%
என்பதை எட்டியது. இது ஓராண்டிற்கு முன்பிருந்த 9.2% ல் இருந்து பெரும் சரிவடைந்து 9
ஆண்டுகளில் மிகக் குறைந்தளவாகும். பிரேசிலின் பொருளாதாரம் 2% மட்டுமே
வளர்ச்சியுற்றது. சீனாவின் பொருட்கள் வாங்கும் மேலாளர்கள் குறியீடு -purchasing
managers’ index-
பெரிதும் சரிந்தது.
அமெரிக்கப் புள்ளி விவரங்கள் வெளியிடப்படுவதற்குச் சற்று முன்னர்,
Eurostat
யூரோ பகுதியில் வேலையின்மை 13 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு உயர்ந்து
விட்டது என்று அறிவித்தது. இதைத்தொடர்ந்து யூரோப் பகுதி உற்பத்திசெய்யும் வாங்கும்
மேலாளர்கள் குறியீடும் மூன்று ஆண்டுகள் இல்லாத அளவிற்குச் சரிந்தது என்னும்
அறிவிப்பு வந்தது. இது அறிவிப்பு வெளியிடும் அமைப்பை யூரோப்பகுதியின் பொருளாதாரம்
இக்காலண்டு சுருங்கும் எனக் கணித்துக் கூறவைத்தது.
ஸ்பெயினின் வங்கித்துறை பற்றிய கவலைகளுடன் இணைந்த வகையில் இப்புள்ளி
விவரங்கள் ஒப்புமையில் பாதுகாப்பான அரசாங்கப் பத்திரங்கள் வாங்குவதற்கு ஊக்கம்
கொடுத்து, அமெரிக்க, ஜேர்மனிப் பத்திர ஆதாயங்களை மிகக்குறைந்தளவிற்குத் தள்ளியது.
இதற்கிடையில், ஸ்பெயின் மற்றும் இத்தாலி கடன் வாங்குவதற்காக செலவுகள்,
பிணையெடுப்பிற்கு கிரேக்கமும் போர்த்துக்கல்லும்
கட்டாயப்படுத்தப்பட்ட விகிதங்களை அணுகின.
ஸ்பெயினின் மத்திய வங்கி கடந்த வியாழனன்று 97 பில்லியன் யூரோக்கள்
ஆண்டின் முதல் காலாண்டுப் பகுதியில் திரும்பப்பெறப்பட்டுள்ளன என்ற அறிக்கையும்
இத்துடன் இணைந்து வந்தது. முந்தைய வாரம்தான், நாட்டின் நான்காம் பெரிய வங்கியான
Bankia
ஸ்பெயின் அரசாங்கத்திடம் இருந்து 19 பில்லியன் யூரோக்கள்
பிணையெடுப்பைக் கோரியிருந்தது. நாட்டின் வரலாற்றிலேயே இது மிகப் பெரிய வங்கிப் பிணை
எடுப்புத் தொகை ஆகும்.
அமெரிக்காவில் ஆண்டின் மோசாமான வேலைகள் பற்றிய அறிக்கை வேலையின்மை
சராசரிக்காலம் அதிகரித்துவிட்டது. நீண்டகாலமாக வேலையற்று இருப்போர் எண்ணிக்கை
வளர்ந்து விட்டது, ஆனால் வருமானங்கள் உயரவில்லை, பணிநேரங்கள் சரிந்துவிட்டன
என்பதைக் காட்டியது.
அமெரிக்க அரசியல் ஆளும்தட்டிடம் இருந்து வேலைகள் அறிக்கை மிக்குயர்
பிரதிபலிப்பை சந்தித்தது. ஒபாமாவும் அவருடைய குடியரசுக் கட்டசிப் போட்டியாளர்களும்
பெருநிறுவனங்களுக்கு நிதியளிக்காததற்கும், விரைவாகக் கட்டுபாடுகளை
தளர்த்தாததற்காகவும் ஒருவரை ஒருவர் கண்டித்தனர். ஆளும் வர்க்கத்தின் அனைத்துப்
பிரிவுகளும் வேலைகள் மற்றும் சமூகநலச் செலவுகள்மீதான தாக்குதல்கள் தொடரவேண்டும்
என்று ஒப்புக் கொண்டன.
“செய்யவேண்டிய
பணிகள் பட்டியலில்”
ஒபாமா வேலைகள் பற்றிய சட்டம் இயற்றப்படுதல் கோரிக்கைகையும் வலியுறுத்தியுள்ளார்
—இப்பட்டியலில்
தொடர்ச்சியான பெருநிறுவன நிதியளித்தல்கள் உள்ளன. கடந்த மாதம் இத்திட்டத்தை
அறிமுகப்படுத்துகையில், ஒபாமா அவருடைய நிர்வாகத்தின் பதவிக்காலத்தில்தான்
“அரசாங்க
வேலை என்பது ஒரு மந்தநிலையின்போது குறைந்தது”
எனப் பெருமை பேசிக்கொண்டார்.
இத்தகைய பிரதிபலிப்பு எல்லா நாடுகளிலும் ஒரேமாதிரியாகத்தான் உள்ளது.
ஆளும் வர்க்கத்தின் மிகத் தன்னலம் நிறைந்த கூறுபாடுகளைத் தாக்கும் எத்தகைய
கொள்கையும் முன்வைக்கப்பட முடியாது என்பதே அது. மில்லியன் கணக்கானவர்கள் வேலையின்மை
மற்றும் வறுமையை எதிர்கொள்ளுகையில், பெருவணிகத்திற்கு எப்படி வரிகளைக் குறைக்காலம்,
சமூகநலச் செலவுகளை எப்படிக் குறைக்கலாம் என்பது பற்றிய விவாதங்கள்தான் இரு
கட்சியினரிடையேயும் உள்ளன.
இப்புதிய பேரழிவை முகங்கொடுக்கையில் ஆளும் வர்க்கத்தினரிடையே
நோக்குநிலையின்மையின் ஒரு புத்துயிர்ப்பு தன்மைதான் நிலவுகிறது. இது வேலைகள் பற்றிய
அறிக்கையிலுள்ள செய்தி ஊடகத்தின் விமர்சனத்திலும் பிரதிபலிக்கிறது:
“எது
வளர்கிறது என்பதை கொள்கை இயற்றுபவர்கள் விளங்கிக்கொள்ளும் திறனில் எனக்கு நம்பிக்கை
ஏதும் இல்லை”
என்று விமர்சகர் டக் நோலான்ட் தன்னுடைய வலைத்தளம் சார்ந்த
Credit Bubble Bulletin
ல்
எழுதினார்.
“நடந்து
கொண்டிருப்பது 2008 ஐவிட அதிக பிரச்சினையைக் கொடுக்கும் சாத்தியத்தை கொண்டுள்ளது என
நான் நம்புகிறேன்.”
“இரண்டு
மாதங்களுக்கு முன்பு இருந்ததைவிட நிலைமை இன்னும் இருண்டது போல் தோன்றுகிறது”
எனக் குறிப்பிட்ட நியூயோர்க் டைம்ஸின் புளொய்ட் நொரிஸ் நெருக்கடியை
ஒன்றாக இணைந்து எதிர்ப்பதற்கு நாடுகள் திறனற்று இருக்கும் நிலை குறித்து
வருந்தியுள்ளார்.
“நான்கு
ஆண்டுகளுக்குச் சற்று குறைவான காலத்தில், உலகின் நிதிய அமைப்புமுறை சரியும்
ஆபத்தில் இருக்கையில், முக்கிய நாடுகள் ஒன்றாக வந்து ஒருங்கிணைந்த பாதையைத்
தேர்ந்தெடுத்து உலக மந்த நிலையைத் தவிர்த்தன. ஆனால் இப்பொழுது பெரிய நாடுகள்
மீண்டும் ஒன்றாக வந்து ஒருமித்துச் செயல்படுவதற்கு அதிக விருப்பம் இல்லை போல்,
ஒருவேளை அதிக திறனின்மை என்பது போல் தோன்றுகிறது,”
என அவர் எழுதியுள்ளார்.
ஆயினும்கூட நொரிஸ் கட்டுரையை சற்றே நம்பிக்கைத் தன்மையுடன்தான்
முடிக்கிறார்;
“அதன்
அண்டை நாடுகளைக் பாதுகாக்க அதிக செலவு செய்ய வேண்டியுள்ள நாடான ஜேர்மனி, பெரிய
ஆபத்துக்களை தோற்றுவிக்கப் பணத்தைச் செலவு செய்யமால் இருப்பது இன்னும்
ஆபத்துக்களைத் தோற்றுவிக்கலாம் எனத் தீர்மானிக்கலாம். நிதிய அழுத்தங்கள்,
வெளிநாடுகளுக்கு உதவுவதற்கு காங்கிரசின் விரோதப் போக்கு இருந்தாலும் அமெரிக்கா உதவ
வழிவகைகள் கண்டுபிடிக்கலாம். பொதுவான வங்கிக் கட்டுப்பாடு குறித்த புதிய ஒருமித்த
கருத்து வெளிப்படலாம்.”
ஆனால் ஆசிரியரே சந்தேகப்படும் வகையில் ஒவ்வொரு நாளும் அத்தகைய
குறுக்கீடுகளுக்கான வாய்ப்புக்கள் குறைந்துவருகின்றன.
முதலாளித்துவ விமர்சகர்களிடையே எல்லா நம்பிக்கைகளும் யூரோப்
பகுதியிலேயே மிக வலுவான பொருளாதாரமான ஜேர்மனியின் விருப்பத்தில்தான் குவிப்புக்
காட்டுகின்றன. இது கஷ்டப்படும் ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவ நாடுகளை முட்டுக்
கொடுத்து நிறுத்த, அவற்றின் வங்கிகளை உறுதிப்படுத்த நிதி கொடுக்கலாம்.
“ஐரோப்பிய
ஒன்றியத்தைக் காப்பாற்றுவதற்கு ஜேர்மனி தலைமைத்தன்மை கொள்ள வேண்டும் என நம்ப வைக்க
நாம் அனைத்தையும் செய்ய வேண்டும்”
என்று கோடீஸ்வர முதலீட்டாளர் ஜோர்ஜ் சோரோஸ் வார இறுதியில் கூறினார்.
ஆனால் முக்கிய சக்திகள் ஐரோப்பாவை அதிரவைக்கும் நெருக்கடியின்
மையத்தானத்தை அடைய ஒரு பொதுவான ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுக்கும் திறன் அற்றவையாக
உள்ளன.
ஆளும் வர்க்கத்தின் அதிகரிக்கும் நோக்குநிலையற்ற தன்மை ஒவ்வொரு
முதலாளித்துவ நாட்டின் நலன்களையும் உலகப் பொருளாதாரத்துடன் சமரசம் செய்துவைக்க
இயலாத தன்மையில் இருந்து வெளிப்படுகிறது. முதலாளித்துவத்தின்கீழ் தேசிய அரசுகள்
அனைத்துமே நெருக்கடிக்கு ஒரே மாதிரியாகத்தான் முகங்கொடுக்கின்றன. தேவையானால் இராணுவ
வலிமையைப் பயன்படுத்தி தங்கள் சொந்த நலன்களைக் பாதுகாக்கப் போராடுகின்றன.
தற்போதைய நெருக்கடி 1930களில்
இருந்தவற்றைப் போலவே ஒவ்வொரு வகையிலும் அடிப்படையானதும், ஆழமானதாகவும் உள்ளது.
தற்போதைய நிலைமையைப் போல் பெருமந்த நிலையும் ஒரு பொருளாதார நெருக்கடி பூகோள அரசியல்
விரோதப் போக்குகளைத் தீவிரப்படுத்தியது. அதற்கு ஆளும் வர்க்கம் இறுதியில் இரண்டாம்
உலகப் போர் என்ற இரத்தக்களரியைத் தவிர வேறு எந்த விடையையும் கொண்டிருக்கவில்லை.
பொருளாதாரச் சரிவின் தீவிரம் அனைத்து உத்தியோகபூர்வ விளக்கங்களையும்
வெட்கத்தில் ஆழ்த்துகிறது. அவை 2008 நெருக்கடியை தற்காலிகச் சரிவு, முதலாளித்துவம்
மீழ்ச்சியடையும் என்று கூறிவந்தன. இது பெரும் மார்க்சிசவாதிகளான மார்க்ஸ்,
ஏங்கல்ஸ், லெனின், ட்ரொட்ஸ்கி ஆகியோர் பகுத்தாய்ந்த முதலாளித்துவத்திற்குள்
இருக்கும் வரலாற்று முரண்பாடுகள் பற்றிய கருத்தை இன்னும் செல்தகமையுடையதாகச்
செய்கின்றது.
இந்த முரண்டபாடுகள் இன்னும் தீர்க்கப்படவில்லை. அதற்கு மாறாக அவை
பெரும் ஆற்றலுடன் வெடிக்கின்றன. இவை போருக்குப் பிந்தைய காலத்தின் ஸ்திரப்படுத்தும்
இயங்குமுறைகள் அனைத்தையும் முறிந்துள்ளது. மில்லியன் கணக்கான மக்கள் வேலையின்மை,
வறுமையில், தள்ளப்படுகின்றனர். இத்தகைய முரண்பாடுகள் பரந்த சமூகப் போராட்டங்களை
தூண்டுவதுடன், புரட்சிகர எழுச்சிகளுக்கான ஒரு புதிய காலகட்டமாகவும் இருக்கும். |