WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் :
முன்னோக்கு
சிரியா
மீது கை வைக்காதே!
Chris
Marsden
31 May 2012
use
this version to print | Send
feedback
ஹௌலா படுகொலைகளை அடுத்து பெரும் சக்திகள் சிரிய தூதர்களை ஒன்றாக
இணைந்து நாட்டை விட்டு வெளியேற்றும் செயல்களுடன் இணைந்தவகையில் பொதுமக்களின்
சீற்றத்தைத் தூண்டும் செய்தி ஊடகங்களின் முயற்சி திமிர்த்தனமான இழிவானசெயல்களாகும்.
அவற்றின் நோக்கம் ஹௌலாவிற்கும் 2011ல் மோதல்
ஆரம்பித்ததில்
இருந்து பிற கொடூரங்களைச் சிரியாவில் நடத்திவருவதற்கு நேரடிப் பொறுப்பான ஒபாமா
நிர்வாகமும் அதன் ஐரோப்பிய, மத்திய கிழக்கு நட்பு நாடுகளும் நடத்திவரும்
ஸ்திரமற்றதாக்கும் செயல்களை நியாயப்படுத்துவதாகும்.
இத்தகைய அப்பட்டமான பிராச்சார நடவடிக்கைகளுக்கு மத்தியில்
தொழிலாளர்களும், இளைஞர்களும், எல்லாவற்றிற்கும் மேலாகச் செய்ய வேண்டியது,
சிரியாவிற்கு எதிரான மேற்கின் இராணுவத் தலையீட்டிற்கான அழைப்புக்களை உறுதியுடன்
எதிர்ப்பதாகும்.
உண்மையில் ஹௌலாவில் என்ன நிகழ்ந்தது என்பதற்கானதோ தகவல்களோ அல்லது
அசாத் ஆட்சி படுகொலையில் தான் பங்கு ஏதும் பெறவில்லை, அது ஆத்திரமூட்டுபவர்களின்
செயல் என்று வலியுறுத்துவதை உதறித்தள்ளக்கூடிய நம்பகத்தன்மையுடைய குறிப்பு இன்னமும்
கிடைக்கவில்லை. இதுவரை சாட்சியங்கள் அனைத்துமே சுன்னி சமூகத்தில் இருந்து
வந்தவர்கள்தாம்.
இவர்கள் எதிர்த்தரப்பின் கருத்துக்களை
ஒட்டித்தான் கூறியிருக்க வேண்டும். இறப்பு எண்ணிக்கையில் இருந்து
பாதிக்கப்பட்டவர்களின் அடையாளம் வரை -அவர்கள் அனைவருமே வழமைபோல் குடிமக்களல்ல
எழுச்சியாளர்கள் என்று சித்தரிக்கப்படுகின்றனர்—
ஐக்கிய நாடுகள் சபையின் சொந்த அவதானிகளாலேயே ஒப்புக்
கொள்ளப்பட்டுள்ள அனைத்துமே வழமையாக மிகைப்படுத்தப்பட்டவை, தவறாக
எடுத்துக்கூறப்படுபவையாகும்.
ஆனால், எதிர்த்தரப்பு முன்வைத்துள்ள தகவல்கள் முற்றிலும் உண்மையாக
இருந்தாலும் பெரும்பாலான இறப்புக்களுக்குக் காரணம் எதிர்த்தரப்புத் தளங்களின் மீதான
ஆயுதப்படைகளின் செல் தாக்குதல்களுக்கு பின்னர் அரசு சார்பான அலவைட்
இராணுவக்குழுக்களால் செய்யப்பட்ட குறுங்குழுவாத கொலைகளாலேயே கூடுதலான உயிர்கள்
இழக்கப்பட்டுள்ளன. ஹௌலாவில் நடப்பது சிரியாவில் நடந்துவரும் கணக்கிலா கொடூரங்களில்
ஒரே ஒரு கொடூர உதாரணம்தாம்.
ஹௌலாவின் மீதான தனிக்கவனமானது கடத்தல்கள், சித்திரவதைகள், கொலைகள்,
கார்க்குண்டுத்தாக்குதல்கள் என டமாஸ்கஸ் பிற இடங்களிலும் எதிர்த்தரப்பினுள்
இருக்கும் அல் குவைதா பிரிவினரால் செய்யப்படுபவை உட்பட இரு தரப்பினராலும் அன்றாடம்
நடத்தப்படும் குறுங்குழுவாத வன்முறையில் இருந்து பிரித்துக்காட்டப்படுகின்றது.
இத்தாக்குதல்கள் நூற்றுக்காணக்கான உயிர்களைப் பலி வாங்கிவிட்டன. மே 10 அன்று ஒரு
நிகழ்விலேயே 44 பேர் கோல்லப்பட்டனர், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 40 க்கும்
மேலானவர்கள் மடிந்தனர்.
இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கானவர்கள் இறந்துவிட்டனர். இன்னும் பலர்
உறுப்புக்களை இழந்துள்ளனர் அல்லது வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
வெள்ளை மாளிகை, டௌனிங் தெரு, எலிசே அரண்மனை ஆகியவற்றில் எத்தகைய முதலைக்கண்ணீர்
வடிக்கப்பட்டாலும், இதைத்தான் கடந்த ஆண்டு சுன்னி எழுச்சிக்கு நிதியையும் ஆயுதங்களை
விநியோகித்தல் என்னும் முடிவு எடுத்ததில் இருந்து மேற்கத்தைய சக்திகள் விரும்பின.
மத, இன மற்றும் பழங்குடி என்னும் பிரிவுகளைத் தூண்டிவிடுவதில்
ஏகாதிபத்திய சக்திகள் கடந்தகாலங்களில் மிகவும் தேர்ச்சிபெற்றவையாகும். இதனால்
அவர்கள் பிரித்தாளும் கொள்கையை தொடரமுடியும். துனிசியா மற்றும் எகிப்தில் மக்கள்
எதிர்ப்பினால் அவர்களின் நம்பிக்கைக்கு உகந்த வாடிக்கையாளர் ஆட்சி கவிழ்ந்ததை
எதிர்கொள்ளும்போது, இச்சக்திகள் வட ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கில் முக்கிய
மூலோபாயப் பகுதிகளில் ஏற்படும் பிந்தைய அரசியல் மாற்றங்களை உருவாக்க உறுதி கொண்டன.
எகிப்து, பஹ்ரைன், சவுதி அரேபியா போன்ற இடங்களில் மக்கள் எதிர்ப்பு
மேற்குசக்திகளின் கூட்டினரை அச்சுறுத்தியபோது அவை நேரடியாக எதிர்க்கப்பட்டன அல்லது
முஸ்லிம் சகோதரத்துவம் போன்ற சுன்னி பின்னணியை உடைய இயக்கங்களுக்கு பின்னால்
திசைதிருப்பப்பட்டன. பின்னர் அவை வளைகுடா ஆட்சிகள் மற்றும் துருக்கியுடன்
இணைக்கப்பட்ட வகையில் ஒரு புதிய பிராந்திய சக்திக்கான தளமாக பயன்படுத்தப்படும்.
இல்லாவிடின், மேற்கத்தைய சக்திகளுக்கு எதிராக இருக்கும் அல்லது நம்பத்தகுந்தவை அல்ல
என்று கருதப்படும் லிபியாவின் கடாபி ஆட்சி அல்லது சிரியாவின் அசாத் ஆட்சி போல்
ஈரானுக்கு நெருக்கமாக இருப்பவற்றிற்கு எதிராக சுன்னி எழுச்சியாளர்கள்
பயன்படுத்தப்படுவர்.
ஈரான் எப்பொழுதுமே சிரியாவிற்கு எதிரான குற்றச்சாட்டுகளின் இறுதி
இலக்காக உள்ளது. அத்துடன் இன்னும் பொதுவான பூகோள மூலோபாய நோக்கமான ரஷ்ய, சீனச்
செல்வாக்கைக் கட்டுப்படுத்தும் நோக்கமும் உள்ளது.
சிரியா உள்நாட்டுப்போரில்
“ஆழ்ந்துவிடும்”
என்ற பேச்சு, ஐக்கிய நாடுகள் சபையினதும் அரபுலீக்கினதும் தூதரான கோபி அனானின்
அறிக்கையின்படி
“முழுகும்
கட்டம்”
வந்துவிட்டது என்று கூறுவது ஆகியவை உலக மக்களின் கூட்டு
புத்திஜீவிதத்திறனுக்கு ஓர் அவமதிப்பு ஆகும். முக்கிய சக்திகள் முதல் நாளில்
இருந்தே இத்தகைய விளைவிற்குத்தான் முனைந்துகொண்டிருந்தன.
சிரியாவின் எழுச்சியாளர்கள் வாஷிங்டனிடம் இருந்து அதன் நட்பு
நாடுகளான சவுதி அரேபியா, கட்டார் ஆகியவற்றின் மூலம் ஆயுதங்கள் கொடுக்கப்பட்டனர்.
துருக்கியால் வழங்கப்பட்டுள்ள ஒரு தளத்தைச் சுற்றி ஒழுங்கமைக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் டெரா மற்றும் ஹோம்ஸைச் சுற்றியுள்ள பகுதிகளில் சிரிய இராணுவத்திற்கு எதிராக
மோதுவதற்கு நிறுத்தப்பட்டுள்ளன.
சிரியா,
அரசியல்ரீதியாக ஸ்திரமற்றதாக்கப்படும் என்பது இத்திட்டத்தின்
நோக்கமாகும். பொருளாதாரத் தடைகளின் உதவியோடு பொருளாதாரரீதியாக நாடு நாசமாக்கப்பட்டு
இதனால் அசாத் பதவியில் இருந்து கீழிறங்க நிர்ப்பந்திக்கப்படுவார். அல்லது,
டமாஸ்கஸ், அலேப்போ என்றும் பன்மதநம்பிக்கைகள் கொண்ட நகர்ப்புறப் பகுதிகளில்
குறுங்குழுவாத பிரிவுகளின் எழுச்சிக்கு மக்கள் ஆதரவு இல்லாத நிலையில், அரபு லீக்
மற்றும் துருக்கியை முன்வைத்து போலிப்போர் ஒன்று ஆரம்பிக்கப்படும். இப்போக்கு
இப்பொழுது ஹோலா போலிக்காரணத்தை வைத்துத் ஆரம்பிக்கப்படலாமா என்ற வாதங்கள்தான் ஆளும்
வட்டங்களுக்குள் தொடர்கின்றன.
சமீபத்தில் நிக்கோலோ சார்க்கோசி விட்டுச்சென்ற பதவிக்கு வந்துள்ள
பிரான்ஸின் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சோசலிஸ்ட் கட்சி ஜனாதிபதி பிரான்சுவா
ஹாலண்ட்,
“சர்வதேச
சட்டத்திற்கு மதிப்பளித்து நடத்தப்படுகிறது என்றால், இராணுவத் தலையீடு என்னும்
தேர்வு ஒதுக்கப்படவில்லை. அதாவது ஐ.நா.பாதுகாப்புக் குழுவில் விவாதங்களுக்குப் பின்”
என்று மிகவும் வலுவாக வலியுறுத்தியுள்ளார்.
ஏகாதிபத்தியவாதிகளின் சார்பில் அரசியல் இழிவு நிறைந்த பங்கினை
முன்னாள் இடது அமைப்புக்களான பிரித்தானியாவின் சோசலிச தொழிலாளர் கட்சி போன்றவை
வகிக்கின்றன. இவை லிபியாவில் தாங்கள் கொண்ட பங்கை, மேற்கு ஆதரவுடைய குறுங்குழுவாத
எழுச்சியை ஒரு புரட்சி”
என்றும் மக்கள் நடத்தியது என்றும் சித்தரித்தன. லிபியாவைப் போலவே,
அவர்கள் மேற்கின் இராணுவத் தலையீட்டிற்கு (ஏற்கனவே இது நடக்கவில்லை என்பது போல்),
எதிராக எச்சரித்தாலும், சிரிய தேசியக் குழு, உள்ளூர் ஒருங்கிணைப்புக் குழுக்கள்,
சுதந்திர சிரிய இராணுவம் ஆகிய முதலாளித்துவ இயக்கங்களுக்கு ஆதரவு கொடுக்கின்றன. இவை
அனைத்தும் அத்தகைய தலையீட்டை தூண்டுவதைத்தான் வெளிப்படையான நோக்கமாகக் கொண்டுள்ளன.
மத்திய கிழக்கு முழுவதும் பிற இடங்களில் இருப்பது போல்,
சிரியாவிலும் முதலாளித்துவ சக்திகள் பொதுமக்கள்மீது கொண்டுள்ள அரசியல்
மேலாதிக்கத்தை கடப்பதில்தான் அனைத்தும் அடங்கியுள்ளது. அது
இஸ்லாமிய
அடிப்படைவாதமாகவோ, பெயரளவிற்குத் தாராளவாதமாகவோ, போலி இடதாகவோ இருக்கலாம்.
இவர்களின் ஆதிக்கம் ஏகாதிபத்திய சக்திகள் நிகழ்வுகளை கட்டுப்படுத்த
அனுமதித்துள்ளது. இது துனிசியாவில் கட்டார் நிதியளித்துள்ள இஸ்லாமியவாத ஆட்சி
தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வழிவகுத்துள்ளது. எகிப்தில் நடைபெற்ற தேர்தல்களிலும்
இஸ்லாமியவாதம் ஆதிக்கம் கொள்வதற்கும், இன்னும் உறுதியாக இராணுவம் வலிமை பெறவும்,
லிபியாவில் பெரும் இரத்தக்களரிக்குப் பின் மேற்குசார்பு வாடிக்கையாளர் ஆட்சி
அமைக்கப்படவும் வழிவகுத்தது.
இதில் பணயத்தில் இருப்பது மிகவும் அதிகம் ஆகும். சிரியாவில்
பெருகும் உள்நாட்டுப் போர் மற்றும் மேற்கின் தலையீட்டின் பெருகும் அச்சுறுத்தல்
ஆகியவை பிராந்திப் போர் என்னும் ஆபத்தை எழுப்பியுள்ளது. இதில் ஒரு புறம் ஈரானும்
மற்றொரு புறம் துருக்கி, வளைகுடா முடியாட்சிகள் ஆகியவையும் உள்ளன. இது மத்திய
கிழக்கை நாசப்படுத்தும். அத்தகைய விளைவைத் தடுப்பதற்குத் தொழிலாள வர்க்கம் தனது
சக்திக்குட்பட்ட அனைத்தையும் செய்ய வேண்டும்.
ரியாட், டோஹா, கெய்ரோ, துனிஸ் ஆகிய இடங்களில் இருக்கும்
பிற்போக்குத்தன ஆட்சிகள் சிரியாவில் இருக்கும் பாத்திஸ்ட்டுக்கள் ஆட்சி முடிவதைப்
போல்தான் முடியும். இவை அனைத்தும் தூக்கியெறியப்பட்டு சோசலிச,
ஏகாதிபத்திய-எதிர்ப்பு, உண்மை ஜனநாயக அரசாங்கங்களால் பதிலீடு செய்ய,
மத, இன வேறுபாடுகளை பொருட்படுத்தாது தொழிலாள வர்க்கத்தையும்
கிராமப்புற மக்களையும் ஐக்கியப்படுத்த வேண்டும்.
மேற்கில் ஒரு புதிய போர் எதிர்ப்பு இயக்கம் தேவைப்படுகிறது. அதுவும்
இதேபோல் இப்பொழுது வெளிப்படையாக
“மனிதாபிமானப்
போருக்கு”
ஆதரவு கொடுக்கும் இயக்கங்களாக மாறிவிட்ட போலி இடதுகள் மற்றும்
தாராளவாதிகளின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும். அமெரிக்கா மற்றும்
ஐரோப்பாவில் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் பொறுப்பு தங்கள் அரசாங்கங்களின்
இழிந்த ஒழுக்க நெறித் தன்மைப் போலி நிலைப்பாட்டை நிராகரித்து, சிரியா இன்னும்
மத்திய கிழக்கின் பிற பகுதிகளில் கொள்ளையடிப்பதை கைவிடப்படுவதற்குக் கோர வேண்டும்.
அத்தகைய வெகுஜன இயக்கத்திற்கு ஒரு புதிய தலைமை தேவைப்படுகிறது; உலக
சோசலிசப் புரட்சி என்னும் மூலோபாயத்தை முன்வைக்கும் நான்காம் அகிலத்தின்
அனைத்துலகக் குழுதான் அது. |