சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பிய ஒன்றியம்

World social inequality more pronounced than ever

முன்னெப்போதையும் விட உலக சமூக சமத்துவமின்மை மிக அதிகமாக உள்ளது

By Ernst Wolff 
26 July 2012

use this version to print | Send feedback

மிகப் பெரிய செல்வந்தர்கள் இப்பொழுது 21 டிரில்லியன் டாலர் முதல் 32 டிரில்லியன் டாலர் என மதிப்பிடப்பட்டுள்ள செல்வத்தை வரிவிலக்கிற்கு சுவர்க்கம் போன்ற சுவிட்ஸர்லாந்து, கேமன் தீவுகள் போன்ற இடங்களில் மறைத்து வைத்துள்ளனர். இந்த முடிவு கடந்த வார இறுதியில் TAX Justice Network என்னும் லண்டனைத் தளமாகக் கொண்ட அரசு சாரா அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ளது. ஆய்வின் ஆசிரியர் ஜேம்ஸ் ஹென்றி ஆவார்; இவர் McKinsey ஆலோசனை நிறுவனத்தில் முன்னாள் தலைமைப் பொருளாதார வல்லனர் ஆவார்; இதைத்தவிர வரிவிலக்கு சுவர்க்கங்கள் பற்றிய வல்லுனரும் ஆவார்.

BIS எனப்படும் சர்வதேச தீர்வுகளுக்கான வங்கி, IMF  என்னும் சர்வதேச நாணய நிதியம், ஐ.நா. மற்றும் பல நாடுகளின் தேசிய வங்கிகள் கொடுக்கும் தகவல்களை தளமாகக் கொண்டு ஹென்றி தன் கணிப்புக்களைக் கூறியுள்ளார். இவருடைய ஆய்வு, நிதியச் சொத்துக்களோடு மட்டுப்படுத்தப்பட்டுவிடுகிறது; தெளிவாகத் தெரியக்கூடிய மற்ற சொத்துக்களான நிலச் சொத்துக்கள், தங்கம், ஆபரணங்கள், பிற உடைமைகளைக் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.

இப்புள்ளிவிவரங்கள் மிக அதிக நிகர மதிப்புடைய தனிநபர்கள்(50 மில்லியன் டாலருக்கு மேல் சொத்துக்களை உடையவர்கள் என வரையறுக்கப்பட்டவர்கள்) முன்பு நினைத்ததைவிட வரிவிலக்கு சுவர்க்கங்களில் மிகப் பெரிய பணத்தை ஒதுக்கி வைத்துள்ளனர் என்பதைத் தெரியப்படுத்துகிறது. இந்த அறிக்கை, உலகின் செல்வம், மிகக் குறைந்த நபர்களுடைய கைகளில் குவிந்து இருப்பது விரைவாகப் பெருகியுள்ளது என்பதையும் காட்டுகிறது.

2005ம் ஆண்டு, பெரும் செல்வந்தர்கள் தங்கள் நாடுகளில் இருந்து வெளியே வைத்திருக்கும் சொத்துக்கள் 11.5 டிரில்லியன் டாலர் என மதிப்பிடப்பட்டு இருந்தது. இதற்குப் பின் இந்த மொத்தத் தொகை இருமடங்கு அல்லது மும்மடங்காக ஆகியுள்ளது. இன்று உலக மக்களின் உயர்மட்ட 10 சதவிகிதத்தினர் சொத்துக்களில் 84 விகிதத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டிருக்கின்றனர். கீழேயிருக்கும் 50 சதவிகித மக்களோ ஒரு சதவிகித சொத்தை மட்டும்தான் அணுகமுடியும். இந்த ஆய்வின்படி உயர்மட்டத்தினர் உலக மக்கத்தொகையில் மிக மிகச் சிறிய பிரிவு என 92,000 பேர் மட்டும்9 டிரில்லியன் டாலர்களுக்கும் மேலான நிதியச் சொத்துக்களை மட்டும் மறைத்து வைத்துள்ளனர் என்று தெரிகிறது; அதாவது சராசரியாக ஒவ்வொருவரும் 100 மில்லியன் டாலரை மறைத்து வைத்துள்ளனர்.

கடந்த ஏழு ஆண்டுகளில் இந்த சொத்துக்களில் விரைவான வளர்ச்சியானது முதலாளித்துவத்தின் உலக நெருக்கடி ஒன்றும் நிதிய உயரடுக்கு ஆதாய இழப்புக்கள் எதையும் கொடுக்கவில்லை என்பதைக் காட்டுகிறது. மாறாக, முன்னேற்றம் அடைந்துள்ள நாடுகளில் அதிக மக்கள் அரசாங்கங்களின் சிக்கனத் திட்டங்களால் அவதியுறுகையில், வளர்ச்சி பெறும் நாடுகளில் மில்லியன் கணக்கான மக்கள் மிக அதிக வறிய நிலையில் ஆழ்ந்துள்ள நிலையில், பெரும் செல்வந்தர்கள் சமீபத்திய ஆண்டுகளின் நிதிய, பொருளாதாரக் கொந்தளிப்பைப் பயன்படுத்தி தங்கள் செல்வத்தை மகத்தான அளவில் பெருக்கியிருப்பதுடன், வருமானவரி அதிகாரிகளால் பிடிக்க முடியாத அளவிற்கு அவற்றை மறைத்தும் வைத்துள்ளனர்.

இவர்களுக்கு உதவியாக ஒரு வரி நெறிமுறை உள்ளது; அது அவர்கள் பெரிய நிதியை கடல்கடந்த வரிவிலக்குச் சுவர்க்கங்களில் போட்டு வைக்க முடியும்; இதற்கு சட்டத்தில் ஓட்டைகள் மற்றும் தொழில்துறை நேர்த்தியாளர்களின் உதவியும் கிடைக்கிறது.

குறைந்த வருமானம் உடையவர்கள் மீது அரசாங்கம் கடுமையான கண்காணிப்பைக் கொண்டிருப்பதோடு, அவர்கள் வரி செலுத்துவதற்கு தப்ப முடியாமல் இருக்கும் நிலைதான் காணப்படுகிறது; அதே நேரத்தில் மிகப் பெரிய செல்வந்தர்கள் உலகம் முழுவதும் செயல்ப்படும் மிக அதிக ஊதியம் பெறும் சொத்துக்கள், முதலீட்டு ஆலோசர்களை நம்ப முடிகிறது; பிந்தையவர்கள் முக்கிய சர்வதேச வங்கிகளால் நியமிக்கப்பட்டவர்கள்; அந்த வங்கிகள் கணிசமான கட்டணத்தை இந்த வரி ஏய்ப்புக்களை செயல்படுத்த உதவதற்கு ஈடாக வசூலிக்கின்றன. HSBC, Barclays, Lloyds, Royal Bank of Scotland  ஆகிய நான்கு மிகப் பெரிய ஐக்கிய இராஜ்ஜியத்தின் வங்கிகள் மட்டும் வரிவிலக்கு சுவர்க்கப் பகுதிகளில் 1,200க்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்டுள்ளன.

ஹென்ரியின் கருத்துப்படி, உலகின் 10 மிகப் பெரிய தனியார் நிதிய நிறுவனங்கள்,Deutsche Bank  உட்பட, 2010ல் கடல் கடந்த வகையில் 6.25 டிரில்லியன் டாலர் நிதிக்கும் மேலாக நகர்த்தியுள்ளன. 2007 சரிவிற்கு முன் இதற்கு இணையான நிதி 2.34 டிரில்லியன் டாலர் ஆகும்.

வரி கொடுப்பதைத் தவிர்த்தல், வரி ஏய்ப்பு ஆகியவற்றின் மூலம் கடுமையாகப் பாதிக்கப்படுபவை வளர்ச்சி பெறும் நாடுகள்தான். பெரும் செல்வந்தர்கள் கடந்த 40 ஆண்டுகளில் 139 வளர்ச்சி பெறும் நாடுகளில் இருந்து 7.3 டிரில்லியன் டாலரில் இருந்து 9.3 டிரில்லியன் டாலர் வரை மதிப்பிடப்படும் அறிவிக்கப்படாத சொத்துக்களை, வரிவிலக்குச் சுவர்க்கங்களில் மறைத்து வைத்துள்ளனர். அவர்களுடைய கடல்கடந்த சொத்துக்கள் பல நேரமும் அவர்களுடைய நாடுகளின் தேசியக் கடனை விட அதிகம் ஆகும்; அவை அரசாங்கத்திடம் இருந்தால் மிகவும் தேவைப்படும் பொதுச் சுகாதாரம், கல்வித் திட்டங்களை அந்தந்த நாடுகளில் செயல்படுத்துவதில் பெரும் பங்கைக் கொண்டிருக்கும்.

மிகப் பெரிய செல்வந்தர்கள் என்று தனிநபர்களிடையே இருப்பவர்கள் பட்டியிலில் உயரே மூன்று இடங்களில் இருக்கும் நாடுகள், அமெரிக்கா, சீனா மற்றும் ஜேர்மனி ஆகும். German Institute for Economic Research DIW, சமீபத்தில் நாட்டின் உயர்மட்ட 1சதவிகிதத்தவருடைய சொத்துக்களை மேல்நோக்கி மதிப்பிட்டுத் திருத்தியுள்ளது; அவர்கள் தேசிய சொத்தில் 23 ல் இருந்து 34 சதவிகித்ததை கொண்டுள்ளனர்; அதன் முந்தைய விசாரணைகளில் பெரும் செல்வந்தர்களுடைய வருமானங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை.

மறைத்து வைக்கப்பட்டுள்ள சொத்துக்களின் மகத்தான அளவு குறித்த கண்டுபிடிப்புக்களைத் தளமாகக் கொண்டு, தன்னுடைய ஆய்வில் ஹென்றி முன்பு சமத்துவமற்ற நிலை குறித்து எடுத்துக் கொள்ளப்பட்ட தரங்கள் பொதுவாக வீடுகளின் வருமானத்தை பொறுத்து இருந்தன, ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் இடைய உள்ள உண்மையான பிளவு வியத்தகு அளவில் குறைமதிப்பிற்கு உட்படுத்தப்பட்டிருந்தன, என்று வாதிட்டுள்ளார். ஆய்வின் ஆசிரியர் பிரித்தானியப் பொருளாதார வல்லுனரும் செய்தித்துறையாளருமான Stewart Lansley யுடன் இசைவு காண்கிறார்; பிந்தையவர் தன்னுடைய சமீபத்தில் வெளியிடப்பட்ட புத்தகமான The Cost of Inequality என்பதில் பிரச்சினை குறித்து உயர்மட்டத்தினருடைய வருமானம், சொத்துக்கள் பற்றிய புள்ளிவிவரங்கள் குறைத்துக் கூறப்படுகின்றன என்பது பற்றிச் சிறிதும் சந்தேகமில்லை. என்று எழுதியுள்ளார்.

இன்று உலக சமூக சமுத்துவமின்மை, அனைத்து உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்கள் கூறுவதைக் காட்டிலும் மிக அதிகமாகத்தான் உள்ளது. உலகளாவிய முறையில் அது மனித வரலாற்றில் முன்னோடியில்லாத அளவுகளை எட்டியுள்ளது.