சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள்: ஆசியா :சீனா

Tensions heighten in South China Sea

தென் சீனக் கடலில் அழுத்தங்கள் அதிகரிக்கின்றன

By Peter Symonds 
26 July 2012

use this version to print | Send feedback

ஜூலை மாத நடுப்பகுதியில் நடைபெற்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பின் மந்திரிகளுடைய உச்சி மாநாட்டில், இறுதி அறிக்கையை முன்வைப்பதில் உடன்பாடு காணமுடியாததை தொடர்ந்து தென் சீனக் கடல் குறித்த அழுத்தங்கள் குறிப்பாக சீனா, வியட்நாம், பிலிப்பைன்ஸிற்கு இடையே தொடர்ந்து அதிகரிக்கிகின்றன.

வார இறுதியில் சீனா அதன் சமீபத்தில் நிறுவப்பட்ட பாராசல் தீவுகள் என்ற பிரச்சனைக்கு உட்பட்ட பகுதியில் நிறுவப்பட்டுள்ள சன்ஷா நகரத்தில் ஒரு இராணுவப் பாசறை சேர்க்கப்படும் என அறிவித்துள்ளது. இது வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸிடம் இருந்து தீவிர விமர்சனத்தை தூண்டியுள்ளது. பாராசல் மற்றும் ஸ்ப்ராட்லி குழுத் தீவுகளிலும் அதைச் சுற்றியுள்ள நீர்நிலைகளிலும் பெய்ஜிங்குடைய உரிமைகளை அதிகரிப்பதற்கு நிர்வாக மையம் என்ற வகையில் ஆயிரம் சீன மக்கள் மட்டும் வசிக்கும் இந்த நகரம் வடிவமைக்கப்பட்டுள்ளது;

சீனாவில் இந்த நடவடிக்கையை. சர்வதேச சட்டத்தை மீறுகிறதுஎன்று வியட்நாம்  கண்டித்து, பெய்ஜிங்கிடம் ஒரு பொதுவான எதிர்ப்பையும் பதிவு செய்துள்ளது. ஹனோய் உடைய மறைமுகமான ஒப்புதலுடன், 150 ஆர்ப்பாட்டக்காரர்கள் ஞாயிறு அன்று வியட்நாமின் தலைநகரில் இம்மாதம் மூன்றாம் முறையாகக் கூடி சீனாவின் தென்சீனக் கடல் உரிமைகள் கூற்றை எதிர்த்து ஆர்ப்பரித்தனர். எதிர்ப்பாளர்கள் வியட்யாமிய கொடிகளை சுமந்ததுடன், ஸ்பார்ட்லி, பாராசல் தீவுக் கூட்டங்கள்கள் வியட்நாமிற்கு சொந்தமானவை, சீன ஆக்கிரமிப்பு ஒழிக என்ற கோஷங்கள் கொண்ட பதாகைகளையும் ஏந்தியிருந்தனர்.

பிலிப்பைன்ஸ் சீனத்தூதுவரை அழைத்து இந்த அறிவிப்பிற்கு எதிரான ஒரு புகாரைப் பதிவு செய்தது. திங்கள் கிழமை நாட்டிற்கு விடுத்த உரையில் ஜனாதிபதி பெனிக்னோ அக்வினோ பிலிப்பைன்ஸ் சீனாவுடனான ஸ்கார்பாரோ கடலடித்திடல் குறித்த இரண்டுமாத கால மோதலில் இருந்து பின்வாங்காது என ஆக்கிரோஷத்துடன் அறிவித்தார். இது பிலிப்பைன்ஸில் Bajo de Masinloc  எனஅழைக்கப்படும் பகுதி ஆகும்.

 நாம் Bajo de Masinloc ஐ கைவிட்டுவிட வேண்டும் எனச் சிலர் கோருகின்றனர். நாம் பிரச்சனைகளை தவிர்க்வேண்டும். ஆனால் உங்கள் வீட்டுப்பகுதியில் எவரேலும் நுழைந்து அது தன்னுடைய இடம் என்று உரிமை கோரினால், நீங்கள் ஒப்புக் கொள்ளுவீர்களா? உரிமையுடன் நமக்கு இருப்பதை விட்டுக் கொடுப்பதுபோல் அது ஆகாதா? என்று ஜனாதிபதி வினா எழுப்பினார்.

பிலிப்பைன்ஸ் இராணுவத்தில் ஒரு கணிசமான விரிவாக்கத்தையும் அக்வினோ அறிவித்து, சட்ட மன்ற உறுப்பினர்கள் ஆயுதப்படை நவீனப்படுத்தப்படுதல் பற்றிச் சட்டம் இயற்றவும் வலியுறுத்தினார். இதற்கு என அடுத்த ஐந்து ஆண்டுகளில் கூடுதல் இராணுவ விமானங்கள், பீரங்கிகப்பல்கள், கவச வாகனங்கள் மற்றும் பீரங்கிப்படை வாங்குவதற்கு என 75 பில்லியன் பேசோக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன (அமெரிக்க $1.8 பில்லியன்). இந்த நிதியம் 2011 இருந்து இராணுவத்திற்கு செலவழிக்கப்பட்டுள்ள 28 பில்லியன் பேசோக்களைவிட மேலதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா பிலிப்பைன்ஸில் இராணுவம் வலுவாகக் கட்டமைக்கப்படுவதற்கு ஊக்கம் கொடுத்து உதவவும் செய்கிறது. இதில் கடந்த ஆண்டு ஒரு முன்னாள் அமெரிக்கக் கடலோர இராணுவக் கப்பல் கொடுத்ததும் அடங்கும். இது ஸ்கார்பாரோ கடலடத்திடலில் பயன்படுத்தப்பட்டது ஆகும். ஒரு ஹாமில்டன் பிரிவு இராணுவக் கட்டரும் விரைவில் கொடுக்கப்பட உள்ளது. ஆனால் இந்த அதிகரிப்பு இருந்தாலும்கூட, சீனாவிற்கு இணையாக பிலிப்பைன்ஸ் நிற்க முடியாது. அது தென் சீனக் கடல் மோதலில் அமெரிக்காவின் ஆதரவைத்தான் பெரிதும் நம்பியுள்ளது. ஒபாமா நிர்வாக தனது முன்னாள் காலனியில் இராணுவ தளங்களை அதிகரித்துக்கொள்வதற்காக பிலிப்பைன்ஸுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளது.

அமெரிக்க  செய்தி ஊடகம் சீனாவை தென்சீனக் கடலில் அழுத்தங்கள் உயர்வதற்குக் குறைகூறியுள்ளது. வாஷிங்டன்தான் இருநாடுகளுக்கும் இடையே மோதல்கட்டத்திற்கு எரியூட்டலுக்கு முக்கிய பொறுப்பைக் கொண்டுள்ளது. ஆசியா முழுவதும் சீனச் செல்வாக்கை குறைமதிப்பிற்கு உட்படுத்த வேண்டும் என்னும் அதன் முயற்சிகளில் ஒரு பகுதியாக, ஒபாமா நிர்வாகம் அமெரிக்காவிற்கு இப்பகுதியில் தடையற்ற கப்பல் போக்குவரத்தை உறுதிப்படுத்தும் தேசிய நலன்உண்டு என்று அறிவித்துள்ளது அதாவது அதன் போர்க்கப்பல்கள் தென் சீனக் கடல் வழியே தடையின்றிச் செல்ல முடியும் என.

அமெரிக்காவும், ஆசியான் நாடுகளும் சீனாவுடன் தென் சீனக் கடல் மோதல்கள் குறித்து கூட்டுப் பேச்சு வார்த்தைகள் நடத்துவதற்கு அழுத்தம் கொடுக்கிறது. இது பெய்ஜிங்கின் வலியுறுத்தலான பேச்சுவார்த்தைகள் இரு நாடுகளுக்கு இடையே மட்டும்தான் நடத்தப்பட வேண்டும் என்பதை மீறுவதாகும். இம்மாதம் ஆசியான் உச்சிமாநாடு உண்மையில் தென் சீனக் கடலில் ஒரு பொது நெறிமுறை வேண்டும் என்ற அழைப்புக்கள் குறித்த வேறுபாடுகளில் முறிந்து போயிற்று. பிலிப்பைன்ஸ் இறுதி அறிக்கையில் ஸ்கார்பாரோ கடலடித்திடல் பற்றி வெளிப்படையான கருத்து கூறப்பட வேண்டும் எனக் கோரியிருந்தது.

கிட்டத்தட்ட அரை நூற்றாண்டில் முதல் தடவையாக ஆசியான் கூட்டமைப்பின் மந்திரிகள் கூட்டம் இறுதி அறிக்கை ஒன்றை வெளியிட முடியாமல் போயிற்று. இக்கூட்டத்திற்குத் தலைமை வகித்த கம்போடியா, சீனாவுடன் நெருக்கமான தொடர்புகளைக் கொண்டுள்ளதால், ஒரு சமரச வரைவு அறிக்கையை ஏற்க மறுத்து விட்டது. இக்கூட்டம் நடைமுறையில் சீனச் சார்பு, அமெரிக்க சார்பு நாடுகள் எனப் பிளந்துவிட்டது. இறுதியில் பரபரப்பான இராஜதந்திர நடவடிக்கைகள் வலுவற்ற கூட்டு அறிக்கை ஒன்றைக் கடந்த வாரம் தயாரித்தது. அதுவும் வேறுபாடுகள் குறித்து மூடிமறைத்தலை செய்ததே ஒழிய, எதையும் தீர்க்கவில்லை.

சீனாவின் சமீபத்திய அறிவிப்புக் குறித்து வெள்ளை மாளிகை இன்னும் கருத்து எதையும் தெரிவிக்கவில்லை. ஆனால் இந்த வாரம் குடியரசுக் கட்சி செனட்டரான ஜோன் மக்கெயின் இந்தநடவடிக்கைக்கு பின்வருமாறு கண்டனம் தெரிவித்தார்: சீனாவின் மத்திய இராணுவம் தென் சீனக் கடலில் இருக்கும் வியட்நாமும் உரிமை கோரும் தீவுகளில் துருப்புக்களை நிறுத்தவுள்ள முடிவு ஒரு தேவையற்ற ஆத்திரமூட்டும் செயலாகும். 

உண்மையில் அமெரிக்கா இந்த நீண்டக்கால மோதல்களை தூண்டிவிடுவதில் முக்கிய பங்கைக் கொண்டுள்ளது. ஒபாமா நிர்வாகத்தின் ஆசியாவில் முன்னிலை என்னும் 2009ல் தொடங்கப்பட்ட நிலைப்பாடு, வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸை குறிப்பாக தென் சீனக்கடலில் தம் பிராந்திய உரிமைகளை ஆக்கிரோஷத்துடன் தொடர ஊக்கம் அளித்துள்ளது.

சீனா, சன்ஷா நகரத்தை நிறுவியிருப்பது, கடந்த மாதம் வியட்நாம் தென் சீனக் கடலில் அதிகமான பகுதிகள் மீது தன் இறைமையை அறிவித்த சட்டத்தை இயற்றியதை அடுத்து வந்துள்ளது. அப்பகுதிகளில் பாராசல் மற்றும் ஸ்பராட்லி தீவுகளும் அடங்கியுள்ளன. ஹனோயின் சட்டம் வெளிநாட்டு கடற்படை விமானங்கள், அதன் நீர்நிலை வழியே கடக்கும்போது வியட்நாம் அதிகாரிகளிடம் தகவல் கொடுக்க வேண்டும் எனக் கோருகிறது. இது சீனாவில் எதிர்ப்பைத் தூண்டியுள்ளது.

சீனாவிற்கும் வியட்நாமிற்கும் இடையே மோதல் என்பது அப்பகுதியில் இருப்பதாக கருதப்படும் மிகப்பெரிய எண்ணெய், எரிவாயு இருப்புக்களைப் கைப்பற்றும் போட்டித்தன்மையுடைய செயல்களால் உயர்ந்துள்ளது. சீனத் தேசிய கடலோர எண்ணெய் தோண்டும் நிறுவனம்(CNOOC), சமீபத்தில் வியட்நாம் உரிமை கோரும் நீர்நிலைகளில் எண்ணெய் எடுப்பதற்கான வணிக ஏலங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்தியாவின் அரசாங்க எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் குழு கடந்த வாரம் தான் வியட்நாமால் முன்மொழியப்பட்ட தென்சீனக் கடலில் எண்ணெய் ஆய்வினை தொடர இருப்பதாக அறிவித்துள்ளது; இது முந்தைய முடிவான சீன எதிர்ப்புக்களை அடுத்து விலகுதல் என்பதை நிராகரித்து நடக்கும் செயலாகும்.

எரிசக்தி இருப்புக்கள் மற்றும் வளமான மீன்தொகுப்புக்கள் தவிர, தென் சீனக் கடல் மூலோபாயக் கப்பல் பாதைகளையும் கொண்டுள்ளது. அவை ஆபிரிக்க, மத்திய கிழக்குப் பகுதிகளில் இருந்து சீனாவின் எரிசக்தி மற்றும் மூலப்பொருட்களின் இறக்குமதிக்கு முக்கியமானவை ஆகும். அமெரிக்கா தென் கிழக்கு ஆசியாவில் இராணுவக் கட்டமைப்பு கொண்டு வருவதற்குக் காரணம் இந்த நீர்ப்பாதைகளில் அதன் கடற்படையின் ஆதிக்கத்தை உறுதிப்படுத்துவதற்குத்தான். இதில் மலாக்கா ஜலசந்தி போல் முக்கிய நீரிணைகளும் உள்ளன. சீனாவுடன் ஒரு மோதல் என்று வந்தால், அமெரிக்கா சீனா மீது அதைத் தளர வைக்கும் பொருளாதார முற்றுகைக்கு ஏற்பாடு செய்ய முடியும்.

ஒபாமா நிர்வாகம் பொறுப்பற்ற முறையில் தென் சீனக் கடலில் அழுத்தங்களுக்கு எரியூட்டுகிறது. இது போரைத் தூண்டுக் கூடும் என்பதை அது நன்கு அறியும். தேசியப் பாதுகாப்புக் குழுவின் ஆசியாவிற்கான மூத்த இயக்குனர், டானி ரஸ்ஸல், சனிக்கிழமை அன்று Sydney Morning Herald   இடம் ஸ்கார்பாரோ கடலடித்திடல் குறித்த மோதல் விரிவாகும் அச்சுறுத்தலைக் கொண்டுள்ளது. இது பிராந்தியத்தில் இருக்கும் அனைத்து நாடுகளுக்கும் தீவிரக் கவலை அளிக்கும் நிலைப்பாடு ஆகும் என்றார்.

இரு நாடுகளிலும் தேசியவாதம் ஊக்குவிக்கப்படுவதை ரஸ்ஸல் சுட்டிக் காட்டும் வகையில், சீனாவும் பிலிப்பைன்ஸும் ஒரு கடின நிலையில் உள்ளதுடன், பின்வாங்கக் கூடாது என்ற அழுத்தங்களை எதிர்கொள்ளுகின்றன. அழுத்தங்களை அதிகரிக்கும் போட்டித்தன்மை உடைய நிலப் பகுதிகளின் மீதான கூற்றுக்கள் குறித்து உறுதியான சவாலைக் கொடுக்க வேண்டிய தன்மையில் உள்ளன.என்றார். இதன் விளைவு, ஒரு ஆபத்தான நிலை மற்றொன்றிற்கு இட்டுச் செல்லக்கூடும் என்ற சர்வதேச விவகாரங்களில் இருக்கும் நிரந்தர அபாயத்தை அடிக்கோடிட்டுக் காட்டுவதுதான். என அவர் எச்சரித்தார்.

வாஷிங்டன் பலமுறையும் சீனாவிற்கு தென் கிழக்குச் சீனாவில் நெறிமுறைக்கு உடன்படுமாறு அழைப்பு விடுத்துள்ளது. மோதலைத் தவிர்ப்பதற்கு முற்றிலும் மாறாக, அமெரிக்க கோரிக்கை ஆசியான் நாடுகளிடைய அதன் ஆதரவை ஒருங்கிணைத்து, சீனா பின்வாங்குவதற்கு இன்னும் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றுதான் உள்ளது. இவை அனைத்தும் ஒரு நிகழ்வுமிகச் சிறியதாக இருந்தாலும்கூட, முக்கிய சக்திகளையும் இழுத்துவிடும் முழு அளவிலான போர் என்ற நிலையை ஏற்படுத்திவிடக்கூடும்.