சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Imperialist powers unveil their proposed Syrian military strongman

ஏகாதிபத்திய சக்திகள் சிரியாவில் தாங்கள் முன்மொழிந்துள்ள வலுவான இராணுவ நபரைக் குறிப்பிடுகின்றனர்

Chris Marsden
28 July 2012

use this version to print | Send feedback

அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தின் ஆட்சியை தூக்கியெறிவதில் வெற்றி பெற்றால், சிரியாவின் தளபதி மனஃப் ருலாஸை (Manaf Tlass) ஒரு திட்டமிடப்பட்டுள்ள இடைக்கால தேசிய ஒருமைப்பாட்டு அரசாங்கத்திற்கு தலைவராக நியமிக்கும் கருத்து இந்த வாரம் வெளியிடப்பட்டுள்ளது.

ஜூலை மாதம் 6ம் தேதிதான் அசாத்திடம் இருந்து ருலாஸ் விலகி வந்துள்ளார். அதற்கு முன் அவர் நாட்டின் குடியரசுப் படையின்  உயரடுக்கு 104வது பிரிவில் ஒரு தளபதியாக இருந்தார். ஒரு முன்னாள் பாதுகாப்பு மந்திரியின் மகனான இவர், பல ஆண்டுகள் அசாத்தின் வலதுகரமாக இருந்து, சிரியாவின் சுன்னி வணிகச் சமுதாயத்துடன் உறவுகளை வலுப்படுத்த உதவியிருந்தார்.

திரைக்குப் பின்னால் வாஷிங்டன் அவருக்கு ஆதரவைக் கொடுக்கிறது. வோல் ஸ்ட்ரீட்  ஜேர்னல் எழுதுகிறது, ஒபாமா நிர்வாகமும் சில அரபு மற்றும் மேற்கத்தைய நாடுகளின் அதிகாரிகளும் சிரியாவின் மிக உயர்ந்த இராணுவப் பதவியில் இருந்து விலகியவரை அரபு நாட்டின் அரசியல் மாற்றத்தின் மையமாக இருத்துவதற்கு வழிவகைகளை ஆலோசிக்கின்றன; அமெரிக்க, மத்திய கிழக்கு அதிகாரிகளின் கூற்று இவ்வாறாக உள்ளது.

சவுதியைத் தளமாகக் கொண்ட Al-Arabiya  தொலைக்காட்சியில் ருலாஸ் தயாரிக்கப்பட்ட அறிக்கை ஒன்றை வாசித்தார். இதில் இவர் ஐக்கியத்திற்கு அழைப்பு விடுத்து, தான் சிரிய அரபு இராணுவத்தின் மகன்களில் ஒருவராகப் பேசுவதாகவும், சுதந்திர சிரிய இராணுவத்தின் [எதிர்த்தரப்பு] ஒரு விரிவாக்கமாக நம் பெரும் மதிப்பிற்குரிய துருப்புக்களை அடைவதற்கு வழிகாணக்கூடிய வகையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தன்னுடைய இஸ்லாமிய நிலைப்பாடுகளை வலியுறுத்தும் நோக்கம் கொண்ட வகையில் அவர் மெக்காவிற்குப் புனிதப் பயணத்தை மேற்கோண்டிருந்தார். அவருடைய பயணம் சவுதி அரேபியாவில் புதிய உளவுத்துறைத் தலைவர் இளவரசர் பண்டார் பின் சுல்த்தானால் ஏற்பாடு செய்யப்பட்டது.

இவ்வகையில் அவர் அதிகாரத்தைக் கைப்பற்றுவது வெற்றிகரமாக இருந்தாலும், இல்லாவிடினும், ருலாஸ் இற்கான ஆதரவு அசாத் ஆட்சி அகற்றப்படுவது ஒரு புதிய ஜனநாயக சகாப்தத்தின் விடியலாக இருக்கும் எனச் சித்தரிக்கப்பட்டு எதிர்பார்க்கப்படும் முயற்சிகளில் ஒரு பெரிய ஓட்டைதான் விழுந்துள்ளது. அமெரிக்கா, பிரான்ஸ், பிரித்தானியா மற்றும் பிற ஏகாதிபத்தியச் சக்திகள் அசாத் அகற்றப்பட வேண்டும் என்பதற்குக் காரணம் அவர் ஈரான் மீது அதிக நம்பிக்கை கொண்டுள்ளார் என்பதால்தான். அவற்றின் நோக்கம் அசாத்துடையதைப் போன்ற இராணுவ, சர்வாதிகார ஆட்சியை நிறுவுவதுதான்; அது தங்கள் கட்டுப்பாட்டின்கீழ் இருக்க வேண்டும் என்பதுதான்.

சிரிய தேசியக் குழு (SNC)  ருலாஸிற்கு ஒப்புதல் கொடுப்பது குறித்து பிளவில் உள்ளது. கடந்த வாரம் சிரியத் தேசியக் குழுவின் தலைவர் அப்தெல் பசெட் சய்தா அசாத்திற்குப் பிந்தைய ஆட்சி குறித்த திட்டத்தை வெளிப்படுத்தினார். சிரியத் தேசியக் குழு இராணுவத்தின் உதவியுடன் ஓர் இடைக்கால அரசாங்கத்திற்குத் தலைமை தாங்கும் என்றும் இது தற்போதைய ஆட்சி கவிழ்ந்தபின் நாட்டின் பாதுகாப்பு, ஐக்கியம் ஆகியவற்றை உறுதியளிக்கும் என்றும் கூறினார்.

இத்திட்டத்தின் வர்க்கத் தன்மை ருலாஸைப் பதவியில் இருத்தும் திட்டங்களுடன் பெரும்பாலும் ஒரே மாதிரியாகத்தான் உள்ளது. இஸ்லாமிய மற்றும் ஏகாதிபத்திய சார்பு கட்சிகள், பல முதலாளித்துவ பிரிவுகளை பிரதிநிதித்துவப்படுத்துபவை இராணுவ ஆட்சிக்கு ஒரு முன்னணி போல் இருக்கும். இராணுவ ஆட்சி, அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக அமெரிக்க தலையீட்டினால் அதிகரித்துவிட்ட இனவழி, குறுகியப் பற்று அழுத்தங்களை மிருகத்தனமாக அடக்குவதற்குச் செயல்படும்.

அத்தகைய ஆட்சிக்கு தலைமை தாங்குவதற்கு ருலாஸ் அதிக கருத்துவேறுபாட்டிற்கு உரியவர் என்று கருதப்பட்டால், வேறு சில வேட்பாளர்களும் உள்ளனர். சிரியா பற்றிய விமர்சகர் ஹசான் ஹசான்ன் கார்டியனில் ஈராக்கில் உள்ள முன்னாள் சிரிய தூதர் நவப் அல்-பரெஸ் பழங்குடிப் பிணைப்புக்களைப் பயன்படுத்திச் செல்வாக்கு மண்டலங்களை நிறுவும் முயற்சிகளில் ஆழ்ந்துள்ளார் என எழுதியுள்ளது. அவருடைய கிழக்கு இனத் தொகுப்பு, எகைதத் பழங்குடிக் கூட்டமைப்பில் (Egaidat tribal confederation) மேலாதிக்கம் கொண்டுள்ளது; இதில் குறைந்தப்பட்சம் 1.5 மில்லியன் உறுப்பினர்களாவது சிரியாவின் நிலப்பகுதியில் 40%க்கும் மேலான இடங்களில் படர்ந்துள்ளனர், இதன் உறவுகள் சவுதி அரேபியா, குவைத், கட்டார் ஆகியவற்றுடன் பிணைந்துள்ளன.

ருலாஸ் பதவி ஏற்பது குறித்த ஊகம், பிரதான சக்திகள் மற்றும் அவற்றின் பிராந்திய நட்பு  நாடுகளான வளைகுடா நாடுகள் மற்றும் துருக்கி ஆகியவற்றின் சமீபத்திய முன்முயற்சிதான். இவைதான் சிரியத் தேசியக் குழுவையும் பிற எதிர்த்தரப்பு சக்திகளையும் கண்காணிக்கின்றன.

குறைந்த பட்சம் ஆறு மாதங்களுக்குள் 40 மூத்த சிரிய எதிர்த்தரப்புகுழுக்கள் சமாதானத்திற்கான அமெரிக்க அமைப்பின்(USIP)  ஆதரவுடன், அசாத்திற்குப் பின் சிரிய ஆட்சிக்கான திட்டங்களை தயாரிக்கச் ஜேர்மனியில் சந்தித்துள்ளன என்று Foreign Policy கூறுகிறது. திட்டத்தின் தலைவர் ஜோர்ஜ்டவுன் பல்கலைக்கழக உயர் கல்வியாளர்  ஸ்டீபன் ஹேடமான் ஆவார். ஆனால் USIP அமெரிக்க வெளியுறவுச் செயலகத்தில் இருந்து நிதியைப் பெறுகிறது. இந்த நிலைமையில், மிகவும் வெளிப்படையான அமெரிக்க பங்கு ஆழ்ந்த முறையில் எதிர்மறையான விளைவுகளைத்தான் தரும் என்று ஹேடமான் கூறியுள்ளார்.

Foreign Policy ல் பெப்ருவரி மாதம் எழுதிய கட்டுரை ஒன்றில் அவர், சிரியாவின் நண்பர்கள் குழு விரைவில் செயல்பட்டுஆயுதமேந்திய எதிர்ப்பிற்குப் பயிற்சி, ஆயுதமளித்தல் ஆகியவற்றை மேற்பார்வையிட ஒரு ஒற்றை, ஒருமுகப்படுத்தப்பட்ட அமைப்பை ஸ்தாபிக்க வேண்டும். தவிர்க்கமுடியாமல் இதில் துருக்கிக்கு கணிசமாக பங்கு உள்ளது. அதுதான் தற்பொழுது சுதந்திர சிரிய இராணுவத்திற்கு(FSA) சிரிய எல்லைப் பகுதிகள் முழுவதும் ஆதரவைக் கொடுத்து நிற்கிறது.

இத்திட்டம் முழுமையாகச் செயல்படுத்தப்படும். வெள்ளியன்று, சவுதி அரேபியா, கட்டார் ஆகியவற்றுடன் இணைந்து செயல்பட்டு துருக்கி ஒரு இரகசியத் தளத்தை நிறுவியுள்ளது என்று ராய்ட்டர்ஸ் தெரிவிக்கிறது; இது எதிர்த்தரப்பிற்கு ஆயுதங்கள் கொடுத்து பயிற்சிகளையும் அளிக்கும். இதன் அலுவலர்களில் முன்னாள் சிரியத் தளபதிகள் 30 பேரும் அடங்குவர்.

ஒரு வலுவான இராணுவ நபரை முன்வைப்பது என்பது, அசாத்திற்கு எதிராக எந்த சக்திகளை வல்லரசுகள் அணிதிரட்டியுள்ளதோ அதே சக்திகளை நசுக்கும் முயற்சியின் ஒரு பாகம்தான். இஸ்லாமியவாதிகள் அதாவது முஸ்லிம் சகோதரத்துவம் மட்டுமல்ல, அல் குவேடா மற்றும் பிற சலாபியக் குழுக்கள், வளைகுடா நாடுகளிடம் இருந்து ஆயுதங்களையும், நிதியையும் பெற்றவைதான்.

பெயரளவிற்குத் தாராளவாதிகள் எனக் கூறிக்கொள்ளும் செய்தி ஊடகங்கள் இப்பொழுது வெளிப்படையாக குறுங்குழுவாத மோதலின் தன்மை பற்றி விவாதிக்கின்றன. இவை ஆரம்பத்தில் இருந்தே அசாத்தின் வீழ்ச்சியின் பின்னரான குருதி கொட்டும் ஆபத்திற்கும் ஆதரவு கொடுத்துள்ளன. ருலாஸ் குறித்த திட்டம் பற்றிக் கூறுகையில் Guardian உடைய மார்ட்டின் சுலோவ் இது சிரியாவைத் துண்டுகளாக்கும் சாத்தியத்தை கொண்டுள்ளது.  சாத்தியமானவகையில் வெளிப்படையாக குறுங்குழுவாத மோதல்களுடனும் பிணைப்பு உடையது... இந்த ஆழமான பிளவை தவிர்க்க ஒரே வழி உறுதியான மனிதர் ஒருவருக்குப் பதவி கொடுப்பதுதான் என்று எழுதியுள்ளார்.

ஆனால் மேற்கத்தைய சக்திகள் நடத்தும் பினாமி போரினால் ஒரு இராணுவ ஆட்சியை  நிறுவுதலுக்கு தாராளவாதச் செய்தி ஊடகம் மட்டும் ஆதரவு கொடுக்கவில்லை. இந்த வாரம் பிரித்தானியாவின் சோசலிச தொழிலாளர் கட்சி (SWP), மோதல்கள் எவ்வளவிற்கு தொடர்ந்து நடக்கின்றதோ அந்தளவிற்கு வெளிநாட்டுச் சக்திகள் புரட்சியை கடத்திச்செல்லும் ஆபத்துத்தான் அதிகமாக இருக்கும் என்று எச்சரித்துள்ளது.

இந்த சாத்தியப்பாடுதான் எப்பொழுதும் போலி இடது SWP எள்ளி நகையாடியது ஆகும். இப்பொழுது கூட அது அசாத்திற்கு எதிரானவர்களுக்கு தலைமை தாங்கும் வர்க்க சக்திகளாலும் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன அணிதிரளல் இல்லாத நிலமையினாலும் தான் அத்தகைய கடத்தல் சாத்தியமாகக்கூடும் என்பதைத் தெளிவாக விளக்கவில்லை.

SWP இன் தலைவர் அலெக்ஸ் காலினிகோஸ் ஒரு படி மேலே செல்லுகிறார். ஒரு சுயாதீன தொழிலாள வர்க்க நடவடிக்கை இல்லாதது குறித்து நாம் வருந்த நேரிடலாம் என்று இழிந்த முறையில் அறிவிக்கையிலேயே, அவர் சிரியா மீண்டும் மறுகாலனித்துவமயத்திற்கு உட்படுகிறது என்பது அசாத் ஆட்சியை அகற்றுதல் என்னும் நீண்டக்கால மேற்கின் முன்னுரிமையைத்தான் குறிக்கிறது. ஆனால் இதற்குச் சான்றுகள் ஏதும் இல்லை... மேற்கிலுள்ள இடதுகளில் சிரியப் புரட்சிக்கு எதிராக தம்மை நிறுத்த சிந்திக்காமலும் ஒரு பின்விளைவுள்ளதுமான ஏகாதிபத்திய எதிர்ப்பு பற்றிப் பேசுபவர்கள், தங்கள் சொந்தத் திவால் தன்மையைத்தான் ஒப்புக் கொள்கின்றனர் என்றும் வலியுறுத்துகிறார்.

காலினிகோஸ் மற்றும் அவரைப் போல் முன்னாள் இடது போக்குகளுக்கள் இருப்பவர்கள், அரசியல் திவால்தன்மையையும் விட அதிக மோசமான நிலையை அடைந்துள்ளனர். அவர்கள் ஆதரவு கொடுக்கும் புரட்சி என்பது ஒரு வலதுசாரி ஏகாதிபத்திய சார்புத் தன்மையைக் கொண்டுள்ளது மட்டுமல்லாது அது குறித்து அவர்களுக்கும் நன்கு தெரியும்.

 “பின்விளைவுள்ளதான ஏகாதிபத்திய எதிர்ப்பு பேசுவதைக் கண்டிப்பது பிரித்தானியாவின் ஆளும் உயரடுக்கு மற்றும் வலதுசாரி முதலாளித்துவ சக்திகள், மத்திய கிழக்கில் இருக்கும் முஸ்லிம் சகோதரத்துவம் ஆகியவற்றுடன் நெருக்கமான தனிப்பட்ட, அரசியல் பிணைப்புக்கள் இருக்கும் நபரிடம் இருந்துதான் வருகிறது. சலுகைகள் பெற்றுள்ள குட்டிமுதலாளித்துவ உறுப்பினர்களை உடைய கட்சிக்குத்தான் அவர் தலைமை தாங்குகிறார். இவர்களின் சமூக மற்றும் அரசியல் பார்வை அடிப்படையில் கார்டியன் ஊக்குவிக்கும் பிரிவுகள் கொண்டிருப்பதைப் போல்தான் உள்ளது. சுருங்கக்கூறின், இவருடையது, எதிர்ப்புரட்சியின் அங்கீகரிக்கப்பட்ட குரல்தான்.