சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா : கனடா

Quebec students seek to broaden strike, but CLASSE leaders capitulate to union opposition

கியூபெக் மாணவர்கள் வேலைநிறுத்தத்தை விரிவாக்க விரும்புகின்றனர், ஆனால் CLASSE தலைவர்கள் தொழிற்சங்க எதிர்ப்பிற்கு சரணடைகின்றனர்

By Keith Jones 
24 July 2012
use this version to print | Send feedback

பல்லாயிரக்கணக்கான வேலைநிறுத்த த்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களும் அவர்களுடைய ஆதரவாளர்களும் ஞாயிறன்று CLASSE அழைப்பு விடுத்த ஆர்ப்பாட்டம் ஒன்றில் சேர்ந்து மொன்ட்ரீயாலில் நகரத்தின் முக்கிய பகுதி வழியே அணிவகுத்துச் சென்றனர்; கியூபெக்கின் தாராளவாத அரசாங்கத்தின் திட்டமான பல்கலைக்கழகப் பயிற்சி கட்டணத்தைப் பெரிதும் அதிகரிக்கும் திட்டத்திற்கு எதிரான ஐந்து மாத கால வேலைநிறுத்தத்திற்கு CLASSE தலைமை தாங்குகிறது.


ஞாயிறன்று ஆயிரக்கணக்கான வேலைநிறுத்தம் செய்யும் மாணவர்களும் அவர்களுடைய ஆதரவாளர்களும் மோன்ட்ரீயல் நகர மையத்தின் வழியே அணிவகுத்துச் செல்கின்றனர்

மரபார்ந்த கோடை விடுமுறை காலத்தின் நடுவே கொளுத்தும் வெய்யிலில் நடந்த இந்த கலகலப்பு மிகுந்த ஆர்ப்பாட்டம் கல்வி ஒரு சமூக உரிமை என்பதற்கான மாணவர்களின் உறுதியான போராட்டத்திற்குச் சான்றாகவும், சாரெஸ்ட் தாராளவாத அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் சீற்றத்தின் ஆழத்திற்குச் சான்றாகவும் விளங்கியது.

ஆனால் CLASSE இன் தலைமை போராட்டத்தை முன்னேற்றுவிப்பதற்கான செயல்படக்கூடிய முன்னோக்கு எதையும் முன்வைக்கவில்லை; அதுவும் வேலைநிறுத்தம் மாணவர்களை Jean Charest உடைய தாராளவாத அரசாங்கத்துடன் நேரடி மோதலில் கொண்டுவந்தது மட்டுமின்றி, முழு ஆளும் வர்க்கம், அதன் நீதிமன்றங்கள் மற்றும் பொலிசுடன் நேரடி மோதலில் நிறுத்திய நிலையில்.

CLASSE உடைய தலைமை ஒரு சமூக வேலைநிறுத்தத்திற்கு ஆதரவு இருப்பதாகக் கூறுகிறதுஅதாவது ஒரு பெரிய இயக்கத்திற்கு, தொழிலாளர்களின் வேலையுடன் தொடர்பு குறைந்த வரம்பு இருக்கும் வகையில். ஆனால் தொழிற்சங்கங்களின் கடுமையான எதிர்ப்பை முகங்கொடுக்கையில், அது வேலைநிறுத்தத்தை விரிவாக்குவதற்கான அதன் அழைப்பை அநேகமாக முற்றிலும் கைவிட்டு விட்டது என்றே கூறலாம். ஞாயிறு ஆர்ப்பாட்டத்தில் பங்கு பெற்றவர்கள் CLASSE உடைய வாடிக்கையான எதிர்ப்பு கோஷமான உரக்கக் கத்துங்கள், அதையொட்டி எவரும் நம்மைப் புறக்கணிக்க இயலாது என்ற தொடர் கூவல்களுடன் வரவேற்கப்பட்டது.

அரசாங்கம் பயிற்சிக் கட்டண உயர்வை திரும்பப் பெறவேண்டும் என்பதற்காக அழுத்தம் கொடுத்த முயற்சியில் தோல்வி அடைந்து விட்ட நிலையில், CLASSE பெருகிய முறையில் தொழிற்சங்கத் தலைமைப் பிரச்சார முறையை ஏற்று மாணவர் வேலைநிறுத்தம் மற்றும் தாராளவாதிகளின் கடுமையான சட்டம் 78க்கு எதிரான பரந்த எதிர்ப்பு இயக்க வெடிப்பைத் திசை திருப்பவும், அதை பெருவணிக PQ எனப்படும் பெருவணிக Parti Quebecois க்குப் பின் நிறுத்தவும் முயல்கிறது. சமீப வாரங்களில் CLASSE உடைய செய்தித் தொடர்பாளர்கள் பலமுறையும், சாரெஸ்ட்டின் தாராளவாதிகள் PQ  விடம் தோல்வி அடைந்துவிடுவர் என்ற கருத்தை தாங்கள் கொண்டுள்ளதாகவும்அக்கட்சியோ கடைசியாகப் பதவியில் இருந்தபோது, கியூபெக்கின் வரலாற்றிலேயே மிகப் பெரிய சமூகநலச் செலவுக் குறைப்புக்களைச் சுமத்தியது இது மாணவர்களுக்கும் தொழிலாள வர்க்கத்திற்கும் ஒரு சாதகமான விளைவாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.

சாரெஸ்ட்டின் மொன்ட்ரீயால் அலுவலகத்தில் முடிவடைந்த ஞாயிறு அணிவகுப்பு முடிவில் பேசிய CLASSE செய்தித் தொடர்பாளர் Gabriel Nadeau-Dubois, “ஒரு சிறந்த கியூபெக் வேண்டும் என்ற கனவை நாங்கள் நூறாயிரக்கணக்கானவர்கள் கொண்டுள்ளோம். Jean Charest, அனைத்துத் தாராளவாதிகள், புதிய தாராளவாதிகள் ஆகியோரை அகற்றிவிடுவது என உறுதிகொண்ட நாங்கள் நூறாயிரக்கணக்கில் இருக்கிறோம். நாட்டை அதனுடைய மக்களுக்கு மீட்டுக் கொடுக்க விரும்பும் நாங்கள் நூறாயிரக் கணக்கில் இருக்கிறோம். என்றார்.

மொன்ட்ரீயால், கியூபெக் நகரம் ஆகியவற்றில் ஜூன் 22 ஆர்ப்பாட்டங்களில் இருந்தது போலவே CLASSE உடைய பேச்சாளர்கள் ஒரு சமூக வேலைநிறுத்தம் குறித்து எந்தக் குறிப்பையும் கொடுக்கவில்லை. அதேபோல் மாணவர்கள் அரசாங்கம் சுமத்தியுள்ள மூன்றுமாத இடைக்கால நீக்கம் முடிந்தபின் வேலைநிறுத்தத்தைத் தொடர வேண்டும் என்றும் கூறவில்லை. அரசாங்கத்தின் குளிர்காலப் பருவத்தை இடைக்கால நீக்கம் செய்தது ஆகஸ்ட் நடுவில் முடிகிறது.

சட்டம் 78 ஐ மீற மாணவர்கள் விரும்பி, வேலைநிறுத்தங்களில் இருக்கும் பல்கலைக்கழகங்கள் மற்றும் CEGEP க்களில் (பல்கலைக்கழக முதலாண்டு, தொழில்நுட்பக் கல்லூரிகளில் முதல் ஆண்டுகள்) வேலைநிறுத்தத்தை அமைக்க விரும்பினால் ஆதரவு கொடுப்பதாக CLASSE பேச்சாளர்கள் உறுதியளித்தனர். ஆனால் அரசாங்கம் குளிர்கால கல்வியாண்டை தொடக்க முற்பட்டால், மாணவர்கள் என்ன செய்ய வேண்டும் என பரிந்துரை எதையும் கொடுக்கவில்லை.

இது, ஜூலை 14ம் திகதி மாநாட்டில் தான் ஜனநாயகமாக இருப்பதாகவும், மாணவர்களுடைய விருப்பத்திற்கு விட்டுவிடுவோம் என்று கூறிய CLASSE முடிவை ஒட்டித்தான் உள்ளது; அதாவது போராட்டத்தின் அடுத்த கட்டங்களை தொடக்க உள்ளூர் மாணவர்களின் அமைப்புக்களின் விருப்பத்திற்கு விட்டுவிடப்படும்.

இதற்கிடையில், தொழிற்சங்கங்கள் தாங்கள் சட்டம் 78க்குக் கீழ்ப்படிவோம் எனக் கூறியுள்ளன. இது வேலைநிறுத்தத்திற்கு எதிரான அரச அடக்குமுறையில் இவர்களும் உடந்தை என்பதைத்தான் குறிப்பிடுகிறது; ஏனெனில் சட்டம் 78, சட்டபூர்வமாக அரசாங்கத்தை ஆசிரியர்கள் மற்றும் பிற பல்கலைக்கழக, CEGEP ஊழியர்களை வேலைநிறுத்தத்தை உடைக்க உதவக் கட்டாயப்படுத்துகிறது.

அரசாங்கத்தைப் பொறுத்தவரை, பள்ளிக் காலத்தை நீண்ட காலம் நிறுத்தி வைத்திருப்பதை முன்னோடியில்லாத பொலிஸ் திரட்டிற்குத் தயாரிப்பதற்குத்தான் பயன்படுத்துகிறது என்பது ஒரு வெளிப்படையான இரகசியம்தான்.

ஞாயிறு ஆர்ப்பாட்டத்தில் பல தொழிலாளர்கள் பங்கு பெற்றனர்; ஆனால் இதை அவர்கள் தனிநபர்கள் என்ற முறையில்தான் செய்தனர். United Steel Worker உறுப்பினர்கள் டொரோன்டோவில் இருந்து ஒரு பஸ் நிறைய வந்ததைத்தவிர, வேறு எந்தத் தொழிற்சங்கப் பிரதிநிதிக்குழுக்களும் பங்குபற்றவில்லை.


ஞாயிறு நடைபெற்ற ஆர்ப்பாட்டம் இம்மாதம் 22ம் தேதி நடைபெற்ற வெகுஜன மாணவர் எதிர்ப்பின் ஐந்தாம் தொடர்ச்சியான நிகழ்வாகும். மே 22 அன்று, சட்டம்78 இயற்றப்படுவதற்கு நான்கு நாட்களுக்கு முன்புதான் 250,000 மக்கள் கியூபெக் நகரத்திலேயே மிகப் பெரிய எதிர்ப்பு அணிகள் ஒன்றில் கலந்து கொண்டனர்.

ஆயினும்கூட, தொழிற்சங்கங்கள் மாணவர்கள் போராட்டத்தை தனிமைப்படுத்தினாலும் மற்றும் சட்டம் 78 ஐ செயல்படுத்துவதற்கான உறுதிமொழியைக் கொடுத்தாலும், CLASSE உடைய தலைமை அவர்களை மாணவர்களின் நண்பர்கள் என்று பிரச்சாரம் செய்வதோடு தொழிலாள வர்க்கத்தின் நெறியான பிரதிநிதிகள் என்றும் கூறுகின்றனர்.

ஞாயிறு ஆர்ப்பாட்டம் புதிய தாராளவாதிகளை அகற்றுக என்னும் கருப்பொருளின் கீழ் நடத்தப்பட்டது. பல மாணவர்களும் அவர்களுடைய ஆதரவாளர்களும் இக்கருத்தை வரவேற்றனர்; ஏனெனில் அவர்கள் இது வேலைநிறுத்தம் விரிவாக்கப்படுதல் எனக் கண்டனர்; பயிற்சிக் கட்டண உயர்விற்கான போராட்டம் ஆளும் உயரடுக்கின் உந்துதலான பொதுப் பணிகளை சமூகநலச் செலவுக் குறைப்புக்கள், பணம் கொடுத்துப் பயன்பெறுக, தனியார்மயமாக்கல் இவற்றிற்கு எதிரான பரந்த எதிர்ப்புடன் பிணைக்கப்படும் என்று நினைத்தனர்.

ஆனால் இந்தக் கோஷம் இரட்டைப் பொருளைத்தான் கொண்டுள்ளது; சாரெஸ்ட் தாராளவாதிகளை, மாணவர்களுடைய முக்கிய விரோதி போல் காட்டும் வகையில் கூறப்பட்டுள்ளது. இன்னும் முக்கியமாக, இது புதிய தாராளவாத கருத்தியல் போக்கின் மேலாதிக்கம் பேராசையின் விளைவுதான் என்று திவாலாகிவிட்ட சீர்திருத்தவாதக் கருத்தாய்வுடன் பிணைக்கப்பட்டுள்ளது.  மேலும் சமீபத்திய தசாப்தங்களின் வர்க்கப் போர் முதலாளித்துவத்தின் தோல்வியால் வந்துள்ள விளைவு அல்ல, ஒரு மோசமான கொள்கையின் விருப்பத்தேர்வு, எதிர்ப்புக்களின் மூலம் ஆளும் வர்க்கம் மீண்டும் மட்டுப்படுத்தப்பட்ட சலுகைகள் என்று தொழிலாள வர்க்கத்திற்கு இரண்டாம் உலகப் போர் முடிந்தபின் வந்த செழுமைக்காலத்தில் கொடுத்தவற்றைக் கொடுக்க அழுத்தம் கொடுக்கப்படலாம் என்று கூறுகிறது.

இந்த எதிர்ப்பு நோக்குநிலைக்கு ஏற்ப, CLASSE கியூபெக் முறைகளுக்குள் போராட்டத்தை நிறுத்திக் கொள்ளும் வகையில்தான் தொடர்ந்து செயல்படுகிறது; மாறாக முதலாளித்துவ நெருக்கடிக்கு தொழிலாள வர்க்கம்தான் விலை கொடுக்க வேண்டும் என்ற பெருவணிகம் மற்றும் அதன் அரசியல் பிரதிநிதிகளின் உந்துதலின் ஒரு பகுதி எனக் காட்டுவதற்குப் பதிலாக இதை அது கியூபெக் மக்களின் தேசியவாதப் போராட்டம் என்று சித்தரிக்கிறது.

ஆர்ப்பாட்டத்தின் தொடக்கத்தில் பேசிய மூன்று CLASSE பேச்சாளர்களில் ஒருவர்தான் கனடாவின் கன்சர்வேடிவ் அரசாங்கம் சுமத்தும் மிருகத்தன சிக்கன நடவடிக்கைகள் குறித்த குறிப்பைப் பேசினர். எவரும் கிரேக்கம், ஸ்பெயின் மற்றும் உலகெங்கிலும் நடக்கும் தொழிலாள வர்க்க எதிர்ப்புக்குறித்தோ, வர்க்கப் போர் கொள்கைகள் என்று நிதியப் பிரபுத்துவம் கொண்டிருப்பது குறித்தோ பேசவில்லை; அதே போல் பெருமந்த நிலைக்குப் பின்னர் முதலாளித்துவம் எதிர்கொண்டிருக்கும் மிகப்பெரிய நெருக்கடி பற்றியும் குறிப்பிடவில்லை.

CLASSE பேச்சாளர்கள் PQ பற்றியும் குறிப்பிடவில்லை; ஏனெனில் தாராளவாதிகளைவிட இது அடிக்கடி தொழிலாள வர்க்கத்தின்மீது பெரும் தாக்குதல்களைச் சுமத்தியுள்ளது என்று இருந்தாலும்கூட, அக்கட்சிதான் துல்லியமாக தொழிற்சங்கங்களிடம் இருந்து ஆதரவைப் பெறுவதுடன், வெகுஜன பிரமைகளில் இதுதான் குறைந்த தீமையாகவும் இருக்கிறது.

FECQ , FEUQ இரண்டும் கியூபெக்கின் பிற முக்கிய மாணவர் சங்கங்கள் ஆகும்; தொழிற்சங்க அதிகாரத்துவத்தில் இருக்கும் அவற்றின் ஆசான்களுடன், நீண்டகாலமாகவே PQ  தான் மாணவர்களுக்கு ஒரு நட்பு அமைப்பு என்று கூறுகின்றன. ஞாயிறு ஆர்ப்பாட்டத்திற்கு முன்னதாக, FECQ, FEUQ தலைவர்கள் செய்தியாளர் கூட்டம் ஒன்றை நடத்தி, மாணவர்கள் இப்பொழுது அமர்ந்திருக்கும் 10 தாராளவாதச் சட்டமன்ற உறுப்பினர்களைத் தோற்கடிக்க வேண்டும் என்பதற்கான அழைப்பை வலியுறுத்தினர்; அவர்களோ தங்கள் வெற்றிகளை மிகச் சிறிய பெரும்பான்மையில்தான் அடைந்திருந்தனர்.

இந்த இயக்கம், பல இளைஞர்களை நாம் மாற்றங்களைக் கொண்டுவரலாம் என்னும் உண்மை குறித்து விழிப்படையச் செய்துள்ளது. என்றார் FECQ  வின் தலைவர் Elaine Laberge. “இதற்கு முன்னர் இத்தீய வட்டத்தில் நாங்கள் ஆழ்ந்திருந்தோம், அதாவது நாங்கள் வாக்களிக்காவிட்டால் பிரதிநிதித்துவம் பெறமாட்டோம், பிரதிநிதித்துவம் இல்லை என்ற உணர்வினால் வாக்களிக்கமாட்டோம் என்பதே அத்தீயவட்டம்.

சில FECQ, FEUQ  தலைவர்கள் ஞாயிறு எதிர்ப்பில் சேர்ந்திருந்தாலும், அவர்கள் அதைக் கட்டமைக்க ஏதும் செய்யவில்லை. ஏனெனில் அவர்கள் சட்டம்78ன் ஒவ்வொரு விதியையும் பின்பற்ற உறுதி கொண்டிருந்தனர். மொன்ட்ரீயால் அணிவகுப்பு மற்றும் அதையொட்டிய இணையான ஆர்ப்பாட்டம் கியூபெக் நகரத்தில் நடப்பதற்கான நிரலுக்கு முன் ஒப்புதல் வாங்குவதற்கு பொலிசிடம் மனுக்கொடுக்க CLASSE மறுத்துவிட்டது. இரண்டு எதிர்ப்புக்களும் ஆரம்பத்திலேயே சட்டவிரோதமானவை என்று பொலிஸ் அறிவித்தது;  ஆனால் ஆயிரக்கணக்கானவர்கள் அணிவகுத்துவருகையில், எந்த நடவடிக்கையும் தேவையில்லை என்ற தேர்வை எடுத்துக்கொண்டது.

மொன்ட்ரீயல் ஆர்ப்பாட்டத்தில் சோசலிச சமத்துவக் கட்சியின் ஆதரவாளர்கள் தலையிட்டு, மாணவர்களின் தைரியம் மிக்க, அசைந்து கொடுக்காத ஐந்து மாதக் காலப் போராட்டம் ஆபத்தில் உள்ளது, மீண்டும் ஒரு சோசலிச முன்னோக்கில் மாணவர் வேலைநிறுத்தம் நடத்தப்பட வேண்டும் என்று எச்சரித்தனர். அவர்கள் ஓர் அறிக்கையை 2000 பிரதிகளுக்கு மேலாக வினியோகித்தனர். அதில் குறிக்கப்பட்ட ஒரு பகுதியாவது: தங்கள் போராட்டத்தில் வெற்றிபெறுவதற்கு, மாணவர்கள் தங்கள் சவாலை ஆளும் வர்க்கத்தின் சிக்கன நடவடிக்கை குறித்து வெளிப்படையாகக் கொடுக்க வேண்டும். தங்கள் போராட்டத்தை அவர்கள் அரசியல் அளவிலும் புவியியல் ரீதியாகவும் பரந்ததாக ஆக்க வேண்டும்; இந்த இயக்கத்தை கியூபெக் மற்றும் வட அமெரிக்க முழுவதும் வேலைகள், பொதுப்பணிகள் பாதுகாக்கப்படுவதற்கு, தொழிலாளர்கள் அரசாங்கங்களை அதிகாரங்களை கொண்டு வர இயக்கப்பட வேண்டிய சுயாதீன தொழிலாள வர்க்க இயக்கம் தோன்ற ஊக்கியாக செயல்பட வேண்டும்.

தொழிலாள வர்க்கம் ஒன்றுதான் பெருவணிகத்தின் இரும்புப்பிடி சமூகப் பொருளாதார வாழ்வின் மீது இருப்பதை முறிக்க முடியும்; இதற்காக பொருளாதாரம் முற்போக்கான வகையில் மறுகட்டமைக்கப்பட வேண்டும்; அது தனியார் இலாபத்திற்கு என்று இல்லாமல், சமூகத் தேவை என்ற கருத்தை இயக்கும் கொள்கையாகக் கொண்டிருக்கும்.