WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள் : மத்திய
கிழக்கு :
சிரியா
தற்கொலைக் குண்டுத் தாக்குதல் உயர்மட்ட சிரிய அதிகாரிகளைக் கொல்லுகிறது
By Bill Van Auken
19 July 2012
use
this version to print | Send
feedback
புதன் அன்று
அமைச்சரவை மந்திரிகள் மற்றும் மூத்த பாதுகாப்பு அதிகாரிகள் நடத்தி வந்த கூட்டத்தின்
மீதான ஒரு தற்கொலைக் குண்டுதாரியின் தாக்குதல் குறைந்தப்பட்சம் ஜனாதிபதி பஷர் அல்
அசாத்தின் சிரிய அரசாங்கத்தின் மூன்று மூத்த உறுப்பினர்களின் உயிர்களைக் கவர்ந்து
விட்டது.
சிரியாவில்
அரசாங்கச் செய்தி ஊடகம் புதன் அன்று பாதுகாப்பு மந்திரி டாவுல்ட் ரஜிகா,
ஜனாதிபதியின் மனைவியுடைய சகோதரியும் அவருடை துணை அதிகாரியுமான அசீப் ஷவ்கட் மற்றும்
நாட்டின் பாதுகாப்பு ஆலோசகர் ஹசன் டர்க்மனி ஆகியோர் காலையில் நடந்த வெடிப்பில்
இறந்து விட்டனர் என்று உறுதிபடுத்தியது. இது மத்திய டமாஸ்கஸில் ரவ்டா பகுதியில் மிக
அதிகப் பாதுகாப்பு உடைய தேசியப் பாதுகாப்புக் கட்டிடத்தில் உயர்மட்டக் கூட்டம்
ஒன்று நடைபெற்றுக் கொண்டிருந்தபோது நிகழ்ந்தது.
ஆரம்பத்தில்
தற்கொலைப்படைத் தாக்குதலில் மிக ஆபத்தான நிலையில் காயமுற்றதாகக் கூறப்பட்ட
சிரியாவில் உள்துறை மந்திரியான முகம்மது இப்ரஹிம் அல் ஷார் இறந்து விட்டார் என
ஹெஸ்போல்லாவின் தொலைக்காட்சி நிலையம் மற்றும் பிற ஆதாரங்களின் மூலம் தெரிகிறது.
ஒரு
இஸ்லாமியவாதக் குழு லிவா அல்-இஸ்லா முதலில் தாக்குதலுக்கு பொறுப்பை ஏற்றது. சிரிய
அதிகாரிகள் இது ஒரு மெய்ப்பாதுகாவலரால் நடத்தப்பட்டது என்று கூறினர். பின்னர்
சுதந்திர சிரிய இராணுவம் அறிக்கை ஒன்றை விடுத்து இக்குண்டுவெடிப்பு டமாஸ்கஸ் மீதான
அதன் தாக்குதலில் ஒரு பகுதி எனக் கூறியுள்ளது.
முன்னர் மே
10இல் டமாஸ்கஸ் இராணுவ உளவுத்துறைக் கட்டிடத்திற்கு வெளியே 55 பேரைக் கொன்ற
இரட்டைத் கார் குண்டுத்தாக்குதல்களுக்கும் தற்கொலைத் தாக்குதல்கள்
பயன்படுத்தப்பட்டுள்ளது. இது மத்திய கிழக்கின் பிற இடங்களில் இருந்து
சிரியாவிற்குக் கூட்டமாக வந்துள்ள அல்குவேடா தொடர்புடைய கிளர்ச்சியாளர்களின்
அதிகரித்துவரும் பங்கைச் சுட்டிக் காட்டுகிறது.
அசாத்
ஆட்சியின் இதயத்தானத்தில் நடத்தப்பட்டுள்ள பயங்கரவாதத் தாக்குதல் சிரியத் தலைநகரில்
நான்காம் நாளாகப் பெரும் சீற்றத்துடன் போர் நடைபெறுகையில் நிகழ்ந்தது. நாட்டின்
மற்ற பகுதிகளில் சூழ்ந்திருக்கும் ஆயுதமேந்திய மோதல்களில் இருந்து தப்பியிருந்த
டமாஸ்கஸ் ஞாயிற்றுக்கிழமையில் இருந்து டாங்குகள், பீரங்கிப்படை ராக்கெட் இயக்கும்
எறிகுண்டுகள் ஆகியவற்றின் பயன்பாடு நிறைந்த துப்பாக்கிச் சண்டைகளை தொடர்ந்து
காண்கிறது.
ஞாயிறன்று
சர்வதேச செஞ்சிலுவைக் குழு சிரிய மோதலை ஒரு உள்நாட்டுப் போர் என அறிவித்தது.
“சர்வதேசத்
தொடர்பற்ற ஆயுதமேந்திய மோதல் நாட்டில் இருப்பது பற்றி நாம் பேசுகிறோம்.”
என சர்வதேச செஞ்சிலுவைக் குழுவின் ஜெனீவா அலுவலகம் அறிவித்தது.
ஐ.நா.வின்
மனிதாபிமான விவகாரங்கள் அலுவலகத்தின் தலைவர் செஞ்சிலுவைச் சங்க அறிக்கையைத்
தொடர்ந்து திங்களன்று அரசாங்கமும் மற்றும்
“கிளர்ச்சியாளர்களும்”
“குடிமக்களுக்கு
எதிராகத் தாக்குதல்களை இயக்குவது ஒரு போர்க்குற்றம்”
என்று
எச்சரித்துள்ளார். ஐ.நா.வின் மனிதாபிமான விவகாரங்கள், அவசர உதவிக்கான துணைச்
செயலர், “சிரியாவில்
விரிவாகிவிட்ட மோதல் நூறாயிரக்கணக்கான மக்கள் மீது உடல்ரீதியாகவும், உளரீதியாகவும்
பேரழிவு தரும் பாதிப்பைக் கொண்டுள்ளது. சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கம் நிலைமையை
இப்பொழுது ஆயுதமேந்திய மோதல் என விவரித்துள்ளதால் சர்வதேச மனிதாபிமானச் சட்டம்
சிரியா முழுவதும் மோதல்கள் உள்ள இடங்களுக்கும் பொருத்தமானதாக இருக்கும்.”
என அறிக்கை ஒன்றில் திங்களன்று எச்சரித்துள்ளார்.
இந்த
அறிக்கைகள் முக்கிய செய்தி ஊடகங்களில் வரும் தகவல்களில் இருக்கும் பிரச்சாரத்
தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. சர்வதேச அளவில் இவை போலி இடதுகளால்
எதிரொலிக்கப்படுகின்றது. சிரிய மோதலை அவை ஒருதலைப்பட்டப் படுகொலை, அரசு தன்
மக்களுக்கு எதிராகச் செய்வது எனச் சித்திரிக்கின்றன. உண்மையில் வாஷிங்டன், அதன்
ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்க ஆதரவுடைய சவுதி அரேபியா, மற்றும் வளைகுடாவில்
உள்ள முடியாட்சிகள் வன்முறையின் தீவிர அதிகரிப்பிற்கு எரியூட்டும் வகையில்
வன்முறைத்தளம் கொண்ட கிளர்ச்சிக்குழுக்களுக்கு ஆதரவு கொடுத்து,
ஆயுதமளித்துள்ளதுடன், நிதி, பயிற்சி மற்றும் ஆலோசனைகளையும் வழங்கியுள்ளன.
Debka.com
என்னும் இஸ்ரேலிய
உளவுத்துறையுடன் நெருக்கமான தொடர்புகளைக் கொண்டுள்ள வலைத் தளத்தின் கருத்துப்படி,
“கிளர்ச்சியாளர்கள்”
என
அழைக்கப்படுவோரின் இராணுவ நடவடிக்கைகள் பரந்து வருகின்றன என்பதற்கு
“துருக்கி,
சவுதி அரேபியா, கட்டார் ஆகியவை கணிசமாகக் கிளர்ச்சியாளர்களுக்கு வெடிமருந்துகளை
வழங்குவதை அதிகரித்துள்ளதுதான் காரணம்”.
அது மேலும் கூறுகிறது:
“அவை
சிரியாவிற்குள் இருக்கும் போராட்டக்காரர்களை அடைந்து துருக்கிய இராணுவ தளங்களில்
இருக்கும் பயிற்சி பெறுவோருக்கும் கிடைக்கின்றன.”
இதே போன்ற
பயிற்சி ஜோர்டானிலும் அளிக்கப்படுகிறது.
சுதந்திர
சிரிய இராணுவம்
“உயர்
தொழில்நுட்பத் தொடர்புச் சாதனங்களைக் கொண்டுள்ளது. இவை மாநிலங்களை துருக்கியில்
இருக்கும் அதன் உயர்கட்டுப்பாட்டு தலைமையகத்துடன் பிணைத்துள்ளன”
என்று
Debka.com
குறிப்பிட்டுள்ளது. அது
மேலும் கூறுவதாவது:
“ஒரு
வெளிநாட்டு “இராணுவ
ஆலோசகர்”
ஒவ்வொரு மாநிலக்
கட்டுப்பாட்டு மையத்திலும் நியமிக்கப்பட்டுள்ளார். அவர்கள் பொதுவாக பிரித்தானியா,
பிரெஞ்சு, துருக்கிய, சவுதி மற்றும் கட்டாரி இராணுவங்களில் இருந்து வரும் சிறப்புப்
படைகள் வல்லுனர்கள்.”
திமிர்த்தனமும் பாசாங்குத்தனத்தையும் காட்டும் வகையில், முக்கிய ஏகாதிபத்திய
சக்திகள் வன்முறையைத் தூண்டி பின் அதைப் போலிக்காரணமாகப் பயன்படுத்தி இன்னும்
நேரடியான வெளிநாட்டு தலையீடு சிரியாவில் நடத்தப்படுவதற்கு முன்னெடுக்கின்றனர்.
பிரித்தானியாவின் வெளியுறவு மந்திரி வில்லியம் ஹேக் புதன் அன்று முறையான கண்டனம்
ஒன்றை டமாஸ்கஸில் தற்கொலைக் குண்டுத்தாக்குதல் குறித்து வெளியிட்டார். இது
இத்தாக்குதல்
“சிரியா
மீது ஐ.நா.பாதுகாப்புக்குழுவின் ஏழாம் பட்டய தீர்மானம் உடனடியாகத் தேவை என்பதை
உறுதிப்படுத்துகிறது”
என்று கூறியுள்ளார்.
அமெரிக்காவின் பாதுகாப்பு மந்திரி லியோன் பானெட்டா பென்டகன் செய்தியாளர் கூட்டம்
ஒன்றில் குண்டுத்தாக்குதல் நிலைமை
“கட்டுப்பாட்டை
மீறி சென்றுள்ளது”
என்பதைச்
சுட்டிக்காட்டி, அசாத் அகற்றப்படுவதை கட்டாயப்படுத்த சர்வதேச சமூகத்தால்
“மிகஅதிக
அழுத்தம்”
கொண்டுவரபப்பட வேண்டும் என்ற தேவையையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்றார்.
பேர்லினில்,
ஜேர்மனியச் சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெலும் சேர்ந்துகொண்டு குண்டுத் தாக்குதல்
அடுத்த ஐ.நா.தீர்மானத்திற்கு இசைவு கொடுக்கும் நேரம் வந்துவிட்டது
என்பதைக்காட்டுகிறது என்றார்.
இத்தகைய
மேலை ஆதரவுடைய தீர்மானம் புதன் பிற்பகல் பாதுகாப்புக் குழுவிற்குமுன் ஐ.நா.வின்
சிறப்புத் தூதரும் முன்னாள் தலைமைச் செயலருமான கோபி அன்னானால் கொண்டுவரப்பட
இருந்தது வியாழன் வரை வாக்களிப்பிற்காக ஒத்தி வைக்கப்பட வேண்டும் என அவரால்
கேட்கப்பட்டுள்ளது. இக்குழுவிற்கு வெள்ளிவரை ஐ.நா. கண்காணிப்பாளர் குழு சிரியாவில்
செயல்படுவதை விரிவாக்கம் செய்ய அனுமதி உண்டு. இது அன்னானுடைய அமைதித்திட்டத்தின்
ஒரு பகுதியாக சிரியாவில் நடைமுறையில் உள்ளது.
ஒரு புறம்
அனைத்து மேலைச் சக்திகளுக்கும் மறுபுறம் ரஷ்யா, சீனா ஆகியவற்றிற்கு இடையே சமரசத்தை
ஏற்படுத்த அன்னான் முயல்கிறார்.
சிரியாவுடன்
வரலாற்றுத் தொடர்பு கொண்ட ரஷ்யா அதன் திட்டமான கண்காணிப்பாளர் செயற்பாட்டிற்கு 90
நாட்கள் நீடிக்கவேண்டும் என்பதை கொண்டுவர முன்வைத்துள்ளது. ஆனால் அமெரிக்கா,
பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி ஆகியவை பட்டயம் 7 ஐ பயன்படுத்திக் கொண்டு வரும்
தீர்மானத்தைத் தடுப்பதிகாரத்தின்மூலம் நிறுத்த இருப்பதாக அது தெரிவித்துள்ளது.
ஐ.நா.
பட்டயத்தின் ஏழாம் அத்தியாயம் 15 உறுப்பினர்கள் கொண்ட பாதுகாப்புக் குழு
பொருளாதாரத் தடைகளில் இருந்து இராணவத் தலையீடு வரை யிலான செயல்களுக்கு இசைவு
கொடுக்கிறது. இதே பிரிவுதான் லிபியா மீது ஐ.நா. தீர்மானம் ஒன்றிற்கு
அடிப்படையாயிற்று. பின்னர் அது அமெரிக்க நேட்டோ போர் கடாபி ஆட்சியை அகற்றுவதற்குப்
பயன்படுத்தப்பட்டது. ரஷ்யாவும் சீனாவும் லிபியா மீதான தீர்மானத்தை இயற்ற
அனுமதித்தன. அவை தடுப்பதிகாரத்தை பயன்படுத்தவில்லை. இதனால் லிபியாவில் இருந்த
அவற்றின் நலன்கள் பின்னர் தொடர்ந்த போரில் பலியிடப்பட்டதையே காணவேண்டியிருந்தது.
சிரியாவில்
விடயங்கள் இன்னும் அதிகமாக உள்ளன; அமெரிக்க ஏகாதிபத்தியமும் அதன் நட்பு நாடுகளும்
ஆட்சி மாற்றத்திற்காக ஒரு போரைத் தூண்டுகின்றன. அதன் நோக்கம் மத்திய கிழக்கு
முழுவதும் பூகோள-அரசியலில் அதன் மூலோபாய சமநிலைமையை தங்களுக்கு சாதகமாக மாற்றுவது,
இன்னும் பிராந்திய மேலாதிக்கத்தில் வாஷிங்டனுடைய முக்கிய போட்டி நாடாகக்
கருதப்படும் ஈரானுக்கு எதிராக பெரிய போரை தயாரிப்பது ஆகியவை ஆகும்..
இன்னும்
நேரடி இராணுவத் தாக்குதலுக்கான தயாரிப்பு நடைபெறுகிறது என்பதற்கு அடையாளமாக,
பிரித்தானிய நாளேடு டெலிகிராப் சிரிய
“கிளர்ச்சியாளர்”
ஆதாரங்களை மேற்கோளிட்டு, ஒபாமா நிர்வாகத்தால் வாஷிங்டன் சிரியாவில்
தலையிடக்கூடும் எனக் கூறப்பட்டதாகவும், இது நவம்பர் ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்
நடக்கலாம் என்றும் தெரிவிக்கிறது.
“அடிப்படையில்
தகவல் மிகத் தெளிவு. தேர்தல் முடியும் வரை எதுவும் நடைபெறப் போவதில்லை”
என்று வாஷிங்டனில்
சுதந்திர சிரிய இராணுவப் போராளிகளின் அரசியல் பிரிவான சிரிய ஆதரவுக் குழு
(SSG)
என்னும்
செல்வாக்குக் குழு செய்தித்தாளிடம் கூறியுள்ளது.
மற்றொரு
“போருக்கான
விருப்பத்தேர்வுத்”
தயாரிப்புக்கள் அமெரிக்க மக்களின் பின்புலத்தில் நடைபெறுகிறது.
அதிகாரத்தில் இருக்கும் ஜனநாயகக்கட்சி நிர்வாகம் வேண்டுமென்றே வாக்குப் பதிவின்போது
போர் எதிர்ப்பின் அடையாளம் வெளிப்படுவதைத் தவிர்க்க முற்படுகிறது.
SSG
சமீபத்தில் வாஷிங்டனுக்கு இராணுவ உதவி கோரி மனுக் கொடுத்திருக்கிறது என்று
டெலிகிராப் தகவல் கொடுத்துள்ளது. அதில்
“1000
RPG-29
டாங்குகள் எதிர்ப்பு
ஏவுகணைகள், 500SAM-7
ராக்கெட்டுக்கள், 750 23mm
இயந்திரத் துப்பாக்கிகள் மற்றும் உடல் கவசங்கள், பாதுகாப்பான துணைக்கோள்
தொலைப்பேசிகள்”
ஆகியவை கேட்கப்பட்டுள்ளன. “கிளர்ச்சி”
போராளிகளுக்கு ஊதியங்கள் கொடுப்பதற்காக 6 மில்லியன் அமெரிக்க டாலர்
ரொக்கமும்
கேட்கப்பட்டுள்ளது. |