World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஸ்பெயின்

Mass protests throughout Spain against government cuts

அரசாங்கத்தின் வெட்டுக்களுக்கு எதிரான ஸ்பெயின் முழுவதும் வெகுஜன எதிர்ப்புக்கள்

By Chris Marsden
21 July 2012
Back to screen version

PP  எனப்படும் மக்கள் கட்சி அரசாங்கத்தின் சமீபத்திய சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக ஸ்பெயினில் வியாழன் அன்று நிகழ்ந்த ஆர்ப்பாட்டங்களில் பெரும்பாலான மக்களின் சீற்றமும் மீறிநடக்க வேண்டும் என்ற உணர்வும் வெளிப்பட்டன.

மில்லியனுக்கும் மேலான, ஏன் பல மில்லியன் மக்கள் என்றுகூடக் கூறலாம், 80 நகரங்களில் எதிர்ப்பைத் தெரிவித்தனர்; தலைநகர் மாட்ரிட்டில் எதிர்த்தோர் எண்ணிக்கை 800,000 கூட இருக்கலாம் என்று சில மதிப்பீடுகள் கூறுகின்றன. நூறாயிரக்கணக்கான மக்கள் பார்சிலோனாவில் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

65 பில்லியன் யூரோக்கள் (அமெரிக்க 80 பில்லியன் டாலர் ) ஊதிய வெட்டுக்கள், பொதுநலச் செலவுக் குறைப்புக்கள், வரி அதிகரிப்புக்களை முன்னதாகப் பாராளுமன்றத்தில் பிரதம மந்திரி மரியானோ ரஜோய் அறிவித்தைத் தொடர்ந்து ஒப்புதல் கொடுத்த நேரத்திலேயே இந்த எதிர்ப்புக்களும் நடைபெற்றன.

பொதுமக்கள் சீற்றத் அளவை அறிந்திரிந்த ரஜோய், சிக்கனப் பொதிக்குதன் வாக்குகளை அளித்தபின் பாராளுமன்றத்தை விட்டு அகன்றார்.இது 30 ஆண்டுகளுக்கு முன்பு பிராங்கோ ஆட்சி வீழ்ச்சிக்குப்பின் மிகவும் மிருகத்தனமான வெட்டுக்களாகும்.

வரவு-செலவுத் திட்ட மந்திரி Cristobal Montoro, பொருளாதார மந்திரி Luis de Guidos ஆகியோரை திட்டத்திற்கு ஆதரவளித்து வாதம் அளிக்கச் சொல்லியபின் அவர் அவையில் இருந்து வெளியே சென்ரார். Siemens உடைய தலைவர் Peter Loscher ஐச் சந்திப்பதற்கு அவர் புறப்பட்டு விட்டார். 

ரஜோய் ஏற்கனவே கோடிட்டுக் காட்டியிருந்த நடவடிக்கைகள் மதிப்புக்கூட்டு வரி VAT 18%ல் இருந்து 21% என உயர்த்தப்பட்டது, அரசு ஊழியர்களின் ஊதியங்களில் குறைப்புக்கள், மற்றும் வேலையின்மை, பிற நலன்களில் இன்னும் தாக்குதல்கள் ஆகியவற்றை அடக்கியிருந்தது.

PP, வேலையின்மை பாதுகாப்புநல நிதி 60 சதவிகிதத்தில் இருந்து 50% ஊதியத்தில் குறைத்துவிட்டது; ஆறு மாத காலம் வேலையில்லாத நபர் முன்பு சம்பாதித்திருந்த ஊதியத்தில் இது குறைக்கப்படும். நம்பியிருக்கும் குடும்ப உறுப்பினர்கள் பாதுகாப்பிற்குக் கொடுக்கப்படும் பணம் 15% குறைக்கப்படும். 178,000 மக்கள் அரச ஓய்வூதியம் பெறும் உரிமையை இழந்துவிடுவர்.

இதன் நோக்கம் பொதுப் பற்றாக்குறையை கடந்த ஆண்டு இருந்த மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8.9% என்பதில் இருந்து 2014க்குள் 2.8% எனக் குறைத்துவிட வேண்டும் என்பதாகும்.

வரி அதிகரிப்புக்கள், செலவுகளில் குறைப்பு இல்லாமல், பொதுத்துறை ஊதியங்கள் கொடுக்கப்பட இயலாது என்று மோன்டோரோ எச்சரித்தார்.

அரசாங்கக் கருவூலத்தில் பணம் இல்லை. நமக்குக் கிடைப்பது எல்லாம் வரிகளில் இருந்து, வருவாய் அதிகரிக்கவில்லை என்றால், சம்பளத்தைக் கொடுப்பது கூட நமக்கு அரிதாகவிடும் என்று அவர் அச்சுறுத்தினார்.

இந்த நடவடிக்கைகள் பின்னர் PP  யிடம் இருக்கும் அறுதிப் பெரும்பான்மையை ஒட்டி 180 வாக்குகள் மூலம் இசைவு பெற்றன.

PSOE தலைமைச் செயலர் Alfredo Perez Rubalcaba கூறினார்: இதைப்போல் நாம் தொடரமுடியாது, நாம் அதிருப்தியை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோம்.ரஜோல் ஒரு விமானம் ஏறி, புருஸல்ஸிற்குச் சென்று வெட்டுக்கள் காட்டுமிராண்டித்தனமானவை எனக் கூறவேண்டும் என்று அவர் கூறினார். ஆனால் வெட்டுக்களுக்கு எதிராகத் தான் இல்லை என்றும், அவை செயல்படுத்தப்படும் வேகத்திற்குத்தான் எதிராக இருப்பதாகவும் அவர் தெளிவுபடுத்தினார்.

IU-ICV எனப்படும் ஸ்ராலினிசத் தலைமையிலான ஐக்கிய இடது கூட்டணியும் இரு சிறிய Basque, Catalan பிரிவினைவாதக் கட்சிகளும் வாக்களிப்பதற்கு முன் அவையில் இருந்து வெளியேறிவிட்டன. IU-ICV  யின் தலைவரான கேயோ லாரா தான் நலன்புரி அரசுக்கு எதிரான மிருகத்தனத்தாக்குதலுக்கு ஓர் உடந்தையாக இருக்கத் தயாராக விரும்பவில்லை என்றார். ஆனால் அவர் கோரியதெல்லாம் புதிய சிக்கன நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களிடையே வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதுதான்.

அன்று மாலை அமெரிக்க 122.9 பில்லியன் டாலர் பிணைஎடுப்பு ஸ்பெயினுக்கும் யூரோக்குழுவிற்கும் இடையே உள்ள உடன்பாட்டின் மூலம் பெற இருக்கும் பணம் குறித்து, ஸ்பெயினின் வங்கிகளுக்கு ஒப்படைக்கப்படுவது குறித்த விவரங்களை அரசாங்கம் வெளியிட்டது.

வெளியே எதிர்ப்பாளர்கள் அரசாங்கத்தைக் கொள்ளையர்கள் எனக் கண்டித்து, கொடிகளை அசைத்து, வெட்டுக்களை அடையாளம் காட்டும் கத்தரிக்கோல் படங்கள் கொண்ட பதாகைகளை ஏந்தி இருந்தனர். பணத்திற்கு ஒன்றும் குறைவு இல்லை. பல திருடர்கள்தான் உள்ளனர் என்று ஒரு பதாகையில் எழுதப்பட்டு இருந்தது.

இந்த அணிவகுப்பில் அரசு ஊழியர்கள், தீயணைக்கும் பிரிவு ஊழியர்கள், பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்புப் படை உறுப்பினர்கள்கூட இருந்தனர். தீயணக்கும் பிரிவு ஊழியர்கள் அழிவின் ஆபத்தில் உள்ளோம் என்ற கோஷமிட்ட டி-சட்டைகளை அணிந்திருந்தனர்.

அரசு ஊழியர்களின் ஊதியம் கிறிஸ்துமஸ் போனஸ் குறைக்கப்பட்டதால் 7% வெட்டப்பட்டுவிட்டது; இதைத்தவிர ஏற்கனவே 15% ஊதியக் குறைப்புக்கள் சுமத்தப்பட்டுள்ளன.

துயரத்தைக் குறிக்கும் வகையில் கறுப்புப் பட்டைகளை அணிவகுப்பினர் அணிந்து கொண்டிருந்தனர், அதில் நீங்கள் எங்களை அழித்துவிட்டீர்கள் என்று எழுதப்பட்டு இருந்தது.

கையைத் தூக்குங்கள், இது ஒரு கொள்கை என்று அவர்கள் கூச்சலிட்டனர்.

PP  யின் தலைமையகத்தை ஆயுதமேந்திய பொலிஸ் பாதுகாத்தனர்; பாதுகாப்பு வேலிகள் பாராளுமன்றத்தைச் சுற்றிப் போடப்பட்டிருந்தன. பின்னர் மாலையில் பொலிசார் ரப்பர் தோட்டாக்களைச் செலுத்தி எதிர்ப்பாளர்களைத் தாக்கினர்; பதிலுக்கு அவர்கள்மீது பாட்டில்களும் கற்களும் விழுந்தன. பிளாஸ்டிக் குப்பைத்தொட்டிகளால் தயாரிக்கப்பட்ட தடுப்புக்கள், கார்ட்போர்ட் பெட்டிகளும் நிறுவப்பெற்றிருந்தவை தீக்கிரையாக்கப்பட்டன.

பொலிசார் 15 பேர் கைதுசெய்யப்பட்டனர், 39 பேர் காயமுற்றனர் எனக் கூறினர்.

ரஜோய் தன் அறிவிப்பைக் கூறுகையில் நடந்த கடந்த வார ஆர்ப்பாட்டங்களிலும் இதேபோல் பொலிசின் மிருகத்தனத் தாக்குதல்கள் இருந்தன. இன்னும் மோசமான அடக்குமுறைகள் எதிர்பார்க்கப்படலாம் என்றார்.

வியாழன் அன்று காபினெட் பாராளுமன்றச் சட்டவரைவு ஒன்று நகர்ப்புற வன்முறை என்பதை குறிப்பிடத்தக்க குற்றமாக வகைப்படுத்தியது: இதன்படி பொலிசார் குற்றம் சாட்டப்படும் முன்னரே பாதுகாப்பை ஒட்டி சந்தேகத்திற்கு உரியவர்களைக் காவலில் வைக்கும் அதிகாரத்தைப் பெறுவர்.

முக்கிய தொழிற்சங்கங்களான Union General de Trabajadores (UGT), Comisiones Oberas (CCOO) ஆகியவை வியாழன் எதிர்ப்புக்களுக்கு அழைப்பு விடுத்திருந்தன; ஏனெனில் அவர்களால் அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் போராட்டத்தை எதிர்க்கவோ, உறுப்பினர்களைக் கட்டுப்படுத்தவோ முடியவில்லை. ஒவ்வொரு நாளும் அரசு ஊழியர்கள், தீயணைக்கும் பிரிவினர் இன்னும் மற்றவர்களால், மின்னஞ்சல், பேஸ்புக் இன்னும் பிற சமூக வலைத் தளங்கள் மூலம் இயக்கப்படும் எதிர்ப்புக்கள் தன்னார்வத்துடன் வெளிப்படுகின்றன. அரசாங்க ஊழியர்கள் உணவு இடைவேளையில்கூட PP தலைமையகத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டங்களை நடத்துகின்றனர். நூற்றுக்கணக்கானவர்கள் எதிர்ப்புக்களில் பல சிறிய நகரங்களில் கலந்து கொள்ளுகின்றனர்.

தொழில்துறை நடவடிக்கைக்கான பிரச்சாரத்திற்கு அழைப்பு ஏதும் இல்லை.

ஆயினும்கூட, பொதுமக்களின் சீற்றத்தில் இருக்கும் ஆழ்ந்த தன்மை, PP  அரசாங்கம் தப்பிப் பிழைக்காது என்ற வெளிப்படையான ஊகத்தை ஏற்படுத்திவிட்டது. மாட்ரிட் தளத்தைக் கொண்ட Intermoney SA உடைய தலைமைப் பொருளாதார வல்லுனர் Jose Carlos Diez புளூம்பேர்க்கிடம் கூறினார்: இத்தகைய அழுத்தங்களுடன் அவர்கள் நீண்டகாலம் நீடிக்க முடியாது. தெருக்களில் கோபத்தைவிட பயம்தான் அதிகம் உள்ளது; ஆனாலும் ஆர்ப்பாட்டங்கள் அதிகமாகிவிட்டன, வேலையின்மையோ பெருகிவிட்டது, இந்நிலை மோசமாகத்தான் போகும்.

அன்றே ஜேர்மனியின் பாராளுமன்றம் 100 பில்லியன் யூரோக்கள் (122 பில்லியன் அமெரிக்க டாலர்) ஸ்பெயினின் வங்கிகளுக்கான நிதித் தொகுப்பிற்கு இசைவு கொடுத்தது. அதே நேரத்தில் நாட்டின் 10 ஆண்டு அடையாளப் பதிவுப் பத்திரங்களின் ஆதாயங்கள் 7% ஐக் கடந்துவிட்டது; அந்நிலைதான் கிரேக்கம், அயர்லாந்து மற்றும் போர்த்துக்கலை ஐரோப்பா மற்றும் சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து மீட்புப் பிணைஎடுப்புக்களை நாடச் செய்தது.

 “ஸ்பெயினில் நிதித்துறைக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து யூரோப் பகுதியின் நிதிய உறுதிப்பாட்டிற்கு ஆபத்தாக மாறலாம் என்று ஜேர்மனியின் நிதி மந்திரி வொல்ப்காங் ஷௌபிள எச்சரித்தார்.

ஆனால் நிருபர்களிடம் பேசுகையில், இத்தாலியப் பிரதம மந்திரி மரியோ மோன்டி இன்னும் அப்பட்டமாக சமூக, அரசியல் எதிர்ப்பு தொழிலாள வர்க்கத்திடையை இருப்பதை அடையாளம் கண்டு அவை ஆளும் வட்டங்களில் பெரும் கவலை அளிப்பதாகத் தெரிவித்தார்.

இத்தாலியினுடைய சொந்த பத்தாண்டுப் பத்திரங்களின் மோசமான நிலைமையைப் பற்றிப் புகார் கூறிய அவர், எந்த அளவிற்கு இந்த தொற்று கிரேக்கம், அல்லது போர்த்துக்கல்லில் இருந்து, அல்லது அயர்லாந்தில் இருந்து அல்லது ஸ்பெயின் வங்கிகளின் நிலைமையினால் வருகிறது அல்லது வந்தது என்பது பற்றிக் கூறுவது கடினம்; அல்லது இது மாட்ரிச் சதுக்கங்கள் தெருக்களில் வெளிப்பட்டு வரும் ஆர்ப்பாட்டங்களை ஒட்டி வருகிறதா எனக் கூறுவதும் கடினம் என்றார்.