WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
வட அமெரிக்கா
கொலோரோடோ அரோராவின் பெரும் சோகம்: அமெரிக்காவில் சமீபத்தில் நடந்த பாரிய
சூட்டுச்சம்பவம்
By
David Walsh
21 July 2012
use
this version to print | Send
feedback
அமெரிக்கத் தீய கனாவின் சமீபத்திய நிகழ்வில் ஒரு 24 வயது மனிதன்
கூட்டம் நிறைந்த
The Dark Knight Rises
என்னும் திரைப்படம் கொலோரோடாவில் உள்ள அரோராவில் முதல்
தடவையாக
வெளியிடப்பட்டபோது, வெள்ளி நள்ளிரவிற்குச் சற்றுப் பின்னர் துப்பாக்கியால் சுட்டுக்
குறைந்தப் பட்சம் 12 பேரைக் கொன்று 59 பேரைக் காயப்படுத்திவிட்டார். இறந்தவர்கள்,
காயமுற்றவர்களில் இளம் குழந்தைகளும் இருந்தன.
ஜனநாயகக் கட்சியினரான அமெரிக்க ஜனாதிபதி, கொலோரோடாவின் ஆளுனரிடம்
இருந்து உடனடியாக சேதத்தைக் கட்டுப்படுத்தவதற்கான உத்தியோகபூர்வ முயற்சி உடனடியாக
ஆரம்பித்தது. இப் பெரும் சோகம்
“அறிவற்ற
செயல்”,
“விளங்கிக்கொள்ள
முடியாதது”
என்று மக்களுக்கு கூறப்பட்டதுடன், எவ்வித்ததிலும் இது அமெரிக்க
சமூகத்தின் நிலைமையுடன் தொடர்பு கொண்டது அல்ல என்றும் கூறப்பட்டது.
வெள்ளிக்கிழமை கொடூரம் நடந்த இடத்தில் இருந்து 30 மைல் தொலைவிலேயே
கொலம்பைன் உயல்நிலைப்பள்ளிக் கொலைகள் நடந்த 13 ஆண்டுகளுக்குப் பின்னர்,
(see, “The
Columbine High School massacre: American Pastoral ...
American
Berserk”),
மற்றும், கணக்கிலடங்காக பல பாரிய கொலைகள் இடைப்பட்ட ஆண்டுகளில் நடந்தபின்னரும்,
இதில் 2007 ல் வேர்ஜீனியா டெக்கில் 2007 நடைபெற்ற படுகொலைகள், 2011ல் காங்கிரஸ்
உறுப்பினர் காப்ரியல் கிபோரட்ஸ் மீதான படுகொலை முயற்சி பற்றிய ஆளும்வர்க்கத்தின்
வாதங்கள் எல்லாம்
வெற்றுத்தனம், அறிவீனமானது என்பது மட்டுமின்றி, உண்மையில் இழிந்ததாகவும் நாற்றம்
வீசுவதாகத்தான் உள்ளன.
பொலிசார் திரைப்பட அரங்கில் கொலை செய்த மனிதனை,
ஜேம்ஸ் ஈகன் ஹோம்ஸ் என்று கலிபோர்னியா, சான் டீகோவில் இருந்து
வந்தவர் என அடையாளம் கண்டுள்ளனர். 2011ல் ஹோம்ஸ் அரோராவில் உள்ள கொலோரோடோ
மருத்துவப்பள்ளி வளாகத்தில் நரம்பியில் பட்டப்படிப்பு மாணவனாகப் பதிவு செய்து
கொண்டார். இது புறநகர் டென்வரில் உள்ளது, ஆனால் பள்ளியில் இருந்து விலகிக்கொள்ளும்
முயற்சியில் ஈடுபட்டிருந்தார்.
பெரும் அதிர்ச்சிக்கு உட்பட்டிருந்த சாட்சிகள் நிருபர்களிடம்
கிறிஸ்டோபர் நோலனின் பாட்மன் குறித்த மூன்று படங்களின் மூன்றாம் பகுதியில்,
துப்பாக்கிதாரி அரோரா நகர மையத்தில் இருக்கும்
Century 16 திரையரங்கில்
முன்புறத்தில் இருந்து அவசரகால கதவு மூலம் 20 அல்லது 30 நிமிடங்களில் நுழைந்தார்
என்றனர். அதன் பின் புகை குண்டுக்களைப் போட்டு பார்வையாளர்கள் மீது
துப்பாக்கிச்சூட்டைத் தொடங்கினார்.
ஓர் உள்ளூர்த் தொலைக்காட்சி நிலையத்திடம் சாட்சிகள் கூறினர்:
“அவர்
இச்செயலைச் செய்யும்போது பெரும் நிதானத்துடன் இருந்தார்... பிற செயல்களில்
ஈடுபடுவதற்கும் முன், இரு குண்டுகளும் வெடிக்கும் வரை காத்திருந்தான். அதன்பின்
இரண்டும் வெடித்தபின் சுடத் தொடங்கினார். .... குறிப்பிட்ட இலக்கு எதையும் அவன்
கொண்டிருக்கவில்லை. விரும்பியபடி சுடத் தொடங்கினார்.”
தாக்குதலின் போது துப்பாக்கிதாரி ஒரு வார்த்தைகூட கூறியதாகத்
தெரியவில்லை.
தப்பிப் பிழைத்தவர்கள் துப்பாக்கிச் சூடு, ஓலங்கள், குண்டு துளைத்த
உடல்கள் என்று புகை நிரம்பிய அறை குறித்து பீதி நிறைந்த தகவல்களைக் கொடுத்தனர்.
திரைப்படத்திற்குச் சென்ற காயமுற்ற, குருதி படிந்தவர்கள் திரைப்பட அரங்கில் இருந்து
பெரும் பீதியில் தப்பி ஓடினர். பத்து பேர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டனர்.
மற்றவர்கள் உள்ளூர் மருத்துவமனைகளில் ஆபத்தான உடல்நிலையில்
உள்ளனர்.
முழுக் கறுப்பு உடையணிந்து, உடல் கவசம், ஒரு வாயு முகமூடி மறைப்பு
அணிந்த ஹோம்ஸ்
AR15
தாக்கும் ரைபிள், ஒரு ஷாட்கன் மற்றும் ஒரு .40 காலிபர்
கைத்துப்பாக்கி ஆகியவற்றை வைத்திருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவனுடைய
காரில் மற்றொரு ஆயுதம் இருந்தது; தாக்குதலுக்குப்பின் காரை நோக்கி அவர் நடந்தார்,
அங்கு பொலிசால் நிறுத்தப்பட்டு, எந்தவித எதிர்ப்பும் இன்றிச் சரணடைந்தார்.
பொலிசார் கூற்றுப்படி, துப்பாக்கிதாரி அதன் பின் பொலிசாரிடம் அவர்
வீடு நிறைய பொறிகளைக் கொண்டுள்ளது எனக் கூறினார். அதிகாரிகள் கட்டிடம் காலி
செய்யப்பட வேண்டும் என உத்தரவிட்டனர். இது மாணவர்கள், ஆசிரியர்கள் என்று மருத்துவ
வளாகத்தில் இருந்தவர்களுக்கு தனிக் கட்டிடம் ஆகும். இதைத்தவிர அருகில் நான்கு
கட்டிடங்களும் இவர்களுக்கு உள்ளன. 12 அடி உயரக் கம்பின் உச்சியில்
புகைப்படக்கருவியைக் கட்டி, அவர்கள் கட்டிட பிரிவு முழுவதையும் ஆராய்ந்தனர்.
விளைவுகள்
“பெரும்
எச்சரிக்கை உணர்வைக் கொடுத்தன”;
ஏனெனில் முகவர்கள்
“பல
கட்டுக்களான ஆயுதங்களையும்”,
வெடிக்கக்கூடிய, எரியூட்டக்கூடிய பொருளையும் கண்டனர்.
ஹோம்ஸின் குடும்பம் சான் டீகோவின் வட கிழக்குப் பகுதிச் சமூகத்தில்
Rancho Penasquitos
ல் வசிக்கிறது. அவர் நகரத்தின்
வெஸ்ட்வியூ உயர்நிலைப்பள்ளியில் இருந்து 2006ம் ஆண்டு படிப்பை முடித்து அதன்பின்
கலிபோர்னியாவிலுள்ள ரிவர்சைடிற்குச் சென்றார். இது சான் ஈடகோவில் இருந்து 100 மைல்
தொலைவில் உள்ளது. அங்கு நரம்பியல் பட்டப்படிப்பில் ஒரு பட்டத்தை 2010ல் வாங்கினார்.
NBC
யிடம் ஒரு சக மாணவர் ஹோம்ஸ் சிறப்புப் பட்டப் பிரிவைப் படித்து
முடித்துவிட்டதாகவும்
Phi Beta Kappa, Golden Key Honour
Socieities
என்னும் ரிவர்சைடில் இருக்கும் அமைப்புக்களில் உறுப்பினர் என்றும்
கூறினார்.
“சற்று
விந்தையானவன் என்றுதான் நான் எப்பொழுதுமே அவனைப் பற்றி நினைத்தேன். அது என்ன என்று
சரியாகக் கூறமுடியவில்லை, ஆனால் என் உள்ளுணர்வு அவனிடம் நெருக்கமாகச் செல்ல
வேண்டாம் எனக் கூறியது... ஆனால் அவன் மிகவும் கெட்டிக்காரன். சற்றே எதிர்பார
செயல்களைச் செய்பவன் ஆயினும், நாங்கள் சிறப்புப் படிப்பு மாணவர்கள், எனவே அப்படி
இருப்பது மிகவும் சாதாரணமானதுதான்.”
என்று என்.பி.சியிடம் பெண் மாணவி ஒருவர் கூறினார்.
ஓர் ஓய்வுபெற்ற மின்சாரப் பொறியியலாளரும், சான் டீகோவில் முன்னாள்
அண்டை வீட்டுக்காரரான ரொம் மாய் இன் கருத்துப்படி, இரண்டு ஆண்டுகளுக்கு முன்
UC Riverside
இல்
பட்டம் பெற்ற பின் ஹோம்ஸிற்கு வேலை ஏதும் கிடைக்கவில்லை. ஹோம்ஸ் ஒரு
“வெட்க
சுவாபம் நிறைந்த, நல்ல மரியாதை உடைய இளைஞர்”
என்று மாய் நினைவுகூருகிறார். லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸின் கூற்றுப்படி; மேலும்
“உள்ளுர்
பிரிஸ்பிடேரியன் திருச்சபை நடவடிக்கைகளில் அதிகம் தொடர்பு கொண்டிருந்தார்.”
கொலோரோடோ மாநிலத்தின் மூன்றாம் மிகப் பெரிய நகரம் அரோரா ஆகும்.
இங்கு 325,000 மக்கள் வசிக்கின்றனர். இங்கு மிகப் பெரிய வேலையளிக்கும் நிறுவனம்
Buckley Air Force Base
ஆகும். அதன் உத்தியோகபூர்வ வலைத் தளத்தின் படி,
Buckley “அமெரிக்காவின்
அதன் வான் செயற்பாடுகள், ஏவுகணை பற்றி தரையிலிருந்து எச்சரிக்கை கொடுக்கும் திறன்,
விண்வெளிக் கண்காணிப்புச் செயற்பாடுகள், விண்வெளித் தொடர்புச் செயல்கள், ஆதரவு
நடவடிக்கைகள் ஆகியவற்றின் மூலம் அமெரிக்காவிற்குப் பாதுகாப்புக் கொடுக்கிறது.”
கொலோரோடோ பல்கலைக்கழக மருத்துவமனையுடன், அதன்
Anschutz
மருத்துவ வளாகம் மற்றும் சிறுவர்களுக்கான மருத்துவமனை ஆகியவை உள்ளன. நகரத்தில்
இருக்கும் மற்ற பெரிய நிறுவனங்களில்
ADT
பாதுகாப்பு நிறுவனம், பாதுகாப்புத்துறை தொடர்புடைய பாரிய
Raytheon, Northrop Grumman
மற்றும்
Lockheed Martin
ஆகிய நிறுவனங்களும் உள்ளன.
அரோராவில் பல இலத்தின் அமெரிக்கர்கள் வசிக்கின்றனர். மக்களில்
கிட்டத்தட்ட 20% அவர்கள்தான் ஹோம்ஸ் முக்கியமாக இலத்தின் மக்கள் வசிக்கும்
பகுதியில் வசித்து வந்தார்.
வெகுஜனப் படுகொலைக்கான உடனடி நோக்கம் இன்னும் தெரியவில்லை. ஆனால்
குற்றத்தின் சமூகவிரோதத் தன்மை அசாதாரணமான மனிதகுல வெறுப்பைக் கொண்டது நன்கு
தெரிகிறது. துப்பாக்கிதாரி மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் ஒன்றின் ஆரம்ப
இரவுக் காட்சியை தாக்கத் திட்டமிட்டு விரும்பியுள்ளார். இங்கு அவர் அரோரோ மற்றும்
சுற்றுப்புறத்தில் வசிக்கும் மக்கள் மன ஓய்வு, களிப்பிற்காக பலர் வருவர் என
எதிர்பார்க்க முடியும். பலரும் பாட்மன் ஆடைகள் போன்றவற்றைத்தான் உடுத்தியிருந்தனர்.
கொடூரமான முறையில், துப்பாக்கிதாரி முதலில் தோன்றியபோது, பார்வையாளர்களில் பலர்
அவன் வந்திருப்பது திரைப்படத்துடன் ஏதோ தொடர்பு கொண்டது என நினைத்தனர்.
இத்தகைய சமூகக் கசப்புணர்வு மற்றும் அடக்கி வைக்கப்பட்டிருந்த
சீற்றத்தின் ஆழத்தைக் காணவோ அது பற்றி விளக்கவோ அதிகார வட்டங்கள் முயற்சி
எடுக்கவில்லை, எடுக்கவும் முடியாது. ஆய்வை நடத்துபவர்கள் அதிர்ந்து போகும்
அளவிற்குத்தான் முடிவுகள் இருக்கும்.
ஜனாதிபதி பாரக் ஒபாமாவின் பொதுக் கருத்துக்கள், அரோரோ துப்பாக்கிச்
சூடு பற்றியவை, பில் கிளின்டன் மற்றும் ஜோர்ஜ் டபுள்யூ புஷ் இதேபோன்ற சூழலில்
விடுத்த அறிக்கைகளில் காணப்பட்ட வெற்றுத்தனத்தைத்தான் கொண்டிருந்தது. ஆனால் அவருடைய
முன்னோர்களின் வெறுப்பு மற்றும் தன்னைப் பிரச்சாரப்படுத்திக் கொண்டதை இது
விஞ்சியிருந்ததை காட்டியது.
மக்களுக்கு ஒபாமா கூறியது:
“மத்திய
அரசாங்கம் இந்த இழிந்த குற்றத்தைச் செய்ததற்குப் பொறுப்பானவனை நீதிக்கு முன்
நிறுத்த அனைத்தையும் செய்யும் (பெரும் கரவொலி). நம் அனைத்து மக்களுடைய பாதுகாப்பை
உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம்.”
இது பொய் என்பது நிரூபணம்தான். மூலவளங்களை கொள்ளையடித்து, இராணுவ
ஆக்கிரமிப்பை வெளிநாடுகளில் நடத்துதல், சமூக அழிப்புத்தன்மைக் கொள்கையை உள்நாட்டில்
இயக்குவது ஆகியவற்றின் மூலம் ஒபாமாவை தலைமையாக கொண்ட அமெரிக்க ஆளும் உயரடுக்கு,
அமெரிக்க மக்களுக்கு வாழ்க்கையை அளவிடமுடியாதபடி பாதுகாப்பின்மை உடையதாக
செய்துவிட்டது.
தத்துவார்த்தரீதியாக இதன்பின் ஒபாமா உபதேசித்தார்:
“தங்கள்
சக மனிதர்களை இவ்வாறு சிலர் பயங்கரத்திற்கு ஏன் உட்படுத்துகிறார்கள் என்பதை நாம்
ஒருபோதும் அறிந்து கொள்ள முடியாது. இத்தனை வன்முறை, இத்தனை தீமை பொருளற்றது. இது
காரணத்திற்கு அப்பாற்பட்டது.”
ஒவ்வொரு வாரமும் பாக்கிஸ்தான், ஆப்கானிஸ்தான், யேமன் இன்னும் பல நாடுகளில்
படுகொலைக்கு இலக்கு வைக்கப்பட்டு,
“கொல்லப்பட
வேண்டியவர்கள் பட்டியலை”
தயாரிக்க உதவும் மனிதரிடம் இருந்து வந்த சொற்கள் இவை.
ஹோம்ஸின் நடவடிக்கையை விளக்குவது இப்பொழுது முன்கூட்டிய செயல்
ஆகிவிடும். இன்னும் பல உண்மைகள் வெளிவர வேணடும். ஆனால் இது உறுதியுடன் கூறப்படலாம்.
கொலம்பைன் படுகொலையில் இருந்து, அமெரிக்காவில் சமூக வாழ்க்கை தீவிரமாகச்
சரிந்துவிட்டது, சமூக அழுத்தங்கள் பெருகிவிட்டன. கொலம்பைன், வேர்ஜீனியா டெக்,
கிபோர்ட்ஸ் சூடு ஆகிய கடந்தகால சோகங்கள் விளக்கப்படவில்லை, அதற்கு காரணமும்
கூறப்படவில்லை. அரோரா பெரும் சோகமும் இதைவிட வேறுவிதமாக இருக்கப்போவதில்லை. |