WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் :
முன்னோக்கு
ஜேபி
மோர்கன் ஊழல்: பனிப்பாறையின் உச்சிதான்
Andre
Damon and Barry Grey
17 July 2012
use
this version to print | Send
feedback
சொத்துக்களை
அதிகமாக கொண்டுள்ள பெரிய அமெரிக்க வங்கியான
JPMorgan
Chase
வெள்ளியன்று அதன் முக்கிய முதலீட்டு அலுலகம்
(CIO) எஞ்சிய
பங்குகள் குறித்த பந்தயங்களில் பெற்ற வணிக இழப்பு $5.8 பில்லியனை அடைந்துள்ளது
என்று அறிவித்தது. இது நிறுவனம் மே மாதம் வெளிப்படுத்திய தொகையைக் காட்டிலும்
மூன்று மடங்கு அதிகம் ஆகும். மோசமான பந்தயத்தினால் இன்னும் $1.7 பில்லியன்
இழப்புக்கள் இந்த ஆண்டின் எஞ்சிய பகுதியில் ஏற்படலாம் என்றும் அது கூறியுள்ளது.
SEC
எனப்படும் பங்குப்பத்திர, பரிமாற்ற கண்காணிப்பு ஆணையத்தில் பதிவு
செய்யப்பட்ட அதன் இரண்டாம் காலாண்டுத் தகவல் பதிப்பின்படி, வங்கி ஏப்ரல் 13 அன்று
வெளியிடப்பட்ட முதல் காலாண்டு அறிக்கையில் வணிகங்களின் மூலம் ஏற்பட்ட $459
மில்லியன் இழப்புக்களை அறிவிக்கவில்லை என்பதை ஒப்புக் கொண்டுள்ளது. தலைமை நிர்வாக
அதிகாரி ஜேமி டைமனும் பிற உயர்மட்ட நிர்வாகிகளும் இதற்கான புகாரைச் “குறிப்பிட்ட
சில தனி நபர்கள் மீது” சுமத்தினர். அவர்கள் “முதல் காலாண்டில் ஏற்பட்ட இழப்பின்
மொத்த தொகையைக் காட்டுவதை தவிர்க்க முற்பட்டிருக்கலாம்” என்று கூறினர். இது பதவி
நீக்கப்பட்டுள்ள வங்கியின் லண்டன் அலுவலகத்தில் இருந்த பல வர்த்தகர்களை மறைமுகமாக
குற்றச்சாட்டுவதாகும்.
தான் பேட்டி
கண்ட முன்னாள்
JPMorgan
Chase
நிர்வாகிகள் இத்தகைய விளக்கம் பொருந்தவில்லை என விளக்கம் கொடுத்தனர்
என்று ப்ளூம்பெர்க் நியூஸ் கூறியுள்ளது. நிறுவனத்தில் வர்த்தகர்கள் தங்கள்
இழப்புக்களை மறைக்க முடியாமல் செய்வதற்கு உரிய செயற்பாட்டு முறைகள் நடைமுறையில்
உள்ளன என அவர்கள் தெரிவித்தனர். உண்மையில்,
SEC
க்கு
JPMorgan
Chase
வெள்ளியன்று கொடுத்த அறிக்கை வங்கி லண்டன் வணிகத்தில் அதன்
உட்கணக்கின்படி $718 மில்லியன் இழப்புக்களைக் கண்டது எனக் குறிப்புக்
காட்டியுள்ளது. ஆனால் இது பற்றி தன் முதல் காலாண்டு வருமான அறிக்கையில்
குறிப்பிடவில்லை.
வேறுவிதமாகக் கூறினால்,
JPMorgan
Chase
வேண்டுமென்றே
SEC
க்கு அது கொடுத்த முதல் காலாண்டு அறிக்கையில் அதன் பெரும் சூதாட்ட
இழப்புக்களை மறைக்கும் வகையில் தவறாகக் கூறியுள்ளது. இது ஒரு குற்றம் ஆகும். இது
வங்கிச் சட்டங்களை மீறுதலாகும். இதற்கு தலைமை நிர்வாக அதிகாரி என்னும் முறையின்
டைமன் பொறுப்பாவார். ஒரு மூடிமறைக்கும் விவகாரத்தில் டைமன் தொடர்பு கொண்டிருந்தார்
என்பது வெள்ளியன்று
SEC
க்குக் கொடுக்கப்பட்ட அறிக்கையில் உள்ள நிரூபணம் அடிக்கோடிட்டுக்
காட்டுகிறது. அதில் அவருக்கு ஏற்கனவே அவருடைய வங்கி நூறாயிரக்கணக்கான மில்லியன்கள்
அல்லது பில்லியன்கள்கூட இழந்துள்ளது என்பது ஏப்ரல் மாதம் அவர் வங்கியின் முக்கிய
முதலீட்டு அலுலகம் கொடுத்துள்ள அறிக்கை பற்றி ஒரு தொலைபேசி மாநாட்டில் கூறுகையில்
“தேனீர்க் கோப்பையில் புயல் போன்றவை” என்ற கூறியபோதே தெரிந்திருந்தார்.
JPMorgan
Chase
ஐச் சூழ்ந்துள்ள பல ஊழல்களின் வணிக இழப்பு நெருக்கடியில்
ஒன்றுமட்டும்தான்.
* வங்கி
இப்பொழுது லண்டன் வங்கிகளுக்கு இடையிலான கடன்கொடுக்கும் விகிதத்தை (Libor)
திரிக்க உதவியது குறித்து விசாரணையில் உள்ளது. பல முக்கிய
வங்கிகளும் இதில் தொடர்புடையவை. நிதியக்குறைபாடுகளை மறைக்கவும், எஞ்சிய பங்குகளில்
ஊகப் பந்தயங்களில் இருந்து கிடைக்கும்
Libor
உடன் தொடர்புடைய இலாபங்களுக்கு ஏற்றம் கொடுக்கவும் இது
செய்யப்பட்டது. Libor
தான் அடைமானங்கள், கடன் அட்டைகள், மாணவர் கடன்கள் இன்னும் பிற
நிதியப் பொருட்களுக்கு மில்லியன் கணக்கான டாலர்களுக்குக் கொடுக்கப்படுவதற்கு
முக்கியமான உலகரீதியான மதிப்பீடு அடையாளம் ஆகும்.
*
வாடிக்கையாளர்களுடைய நலன்களுக்கு எதிராக இருக்கும் நிலையில் தங்கள்
வாடிக்கையாளர்களுக்கு
JPMorgan
Chase
பரஸ்பர நிதிகளை விற்றுவிட ஊக்கமளித்தது குறித்த குற்றச்சாட்டுக்களை
SEC
மற்றும் பிற
கட்டுப்பாட்டு அமைப்புக்களும்
JPMorgan
Chase
உடைய தற்போதைய மற்றும் முன்னாள் நிதிய ஆலோசகர்கள் நிறுவனம் விசாரணைக்கு
உட்படுத்தியுள்ளன.
*அமெரிக்க
மத்திய எரிசக்தி கட்டுப்பாட்டு ஆணையம்
JPMorgan
Chase
மீது வழக்குப் பதிவு செய்துள்ளது. இது நிறுவனத்தை கலிபோர்னியாவிலும்
Midwest
இலும் உள்ள
மின்சக்திச் சந்தைகளில் வங்கியின் துணை நிறுவனங்கள் ஒன்று செய்ததாகக் கூறப்படும்
விலை ஏமாற்றுத்தனத்தை குறித்த குற்றச்சாட்டுகளை ஒட்டிய மின்னஞ்சல் தகவல்களை
கையளிக்க கட்டாயப்படுத்துகிறது.
* மற்ற
முக்கிய வங்கிகள், விசா, மாஸ்டர் கார்ட் ஆகியவற்றுடன் சேர்ந்து
JPMorgan Chase
கடந்த வாரம்
கடன் அட்டை செயற்பாடுகளில் ஒரு கட்டணத்தை நிர்ணயிக்க ஒத்துழைத்ததில் பங்கு
கொண்டிருந்தனர் என்ற குற்றச்சாட்டுக்கள் நிறுத்தப்பட்டுவிட்டன என்ற ஒரு திட்டத்தை
அறிவித்தது. இது பில்லின் கணக்கான டாலர்களை சில்லறை வியாபாரிகள் மற்றும்
வாடிக்கையாளர்களிடம் இருந்து பறிப்பது போன்றதும் மற்றும் அறக்கட்டளைவிரோதச்
(antitrust)
சட்டங்களை மீறுவதும் ஆகும்.
இத்தகைய பல
திட்டங்கள் திறம்படச் செயல்பட அவருடைய பங்கிற்காக டைமன் மிக நேர்த்தியான
வெகுமதியைப் பெற்றுள்ளார். கடந்த ஆண்டு அவர் ஊதியமாக $23.3 மில்லியனைப் பெற்றார்.
இது 2010ல் இருந்து 11% அதிகமாகும். இதில் அவர் பிற வங்கிகளின் தலைவர்களுடன்
இணைந்துகொள்கின்றார். அவர்கள் சராசரியாக 2011ல் 12 சதவிகித ஊதிய உயர்வைப் பெற்றனர்.
“ஒபாமாவிற்கு மிக விருப்பமான வங்கியாளர்” என்று டைமன் குறிக்கப்படுகிறார்; இவர்
வெள்ளை மாளிகைக்கு ஒரு டஜன் தடவைகளுக்கும் மேலாகச் சென்றுள்ளார். மே மாதம்
JPMorgan Chase
உடைய பல
பில்லியன் டாலர் இழப்பு குறித்த வியப்பான அறிக்கை கொடுக்கப்பட்டு சில மணி
நேரங்களுக்குள்ளாகவே ஒபாமா தனிப்பட்ட முறையில் அவர் நேர்மையைப் புகழ்ந்து,
“நம்மிடைய உள்ள மிகச்சிறந்த வங்கியாளர்களில் அவர் ஒருவர்” என்று கூறிப்பிட்டார்.
JPMorgan
Chase
செயற்பாடுகள் ஒவ்வொன்றிலும் இருந்து வெளிவரும் குற்றம் சார்ந்த
தன்மை பனிப்பாறையின் உச்சிதான். அதனுடைய எலும்புவரை ஊழலாகிவிட்ட உலக நிதிய முறையில்
பெரும் ஊழல்கள் கிட்டத்தட்ட அன்றாடம் வெளிப்பட்டு வருகின்றன. இவை நிதியத்
தன்னலக்குழுவின் எடுபிடிகளாகச் செயல்படும் கட்டுப்பாட்டு அதிகாரங்கள் மற்றும்
அரசாங்கங்களின் உடந்தை பற்றியும் அம்பலப்படுத்துகின்றன.
வெளிப்பட்டுவரும்
Libor
ஊழல் கிட்டத்தட்ட 20 பெரு வங்கிகள் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும்
ஆசியாவில் இதில் ஈடுபட்டிருந்தன என்று தெரியப்படுத்துகிறது. கடந்த மாதம்
பிரித்தானியத் தளத்தைக் கொண்ட பார்க்கிளேஸ் வங்கியுடனான உடன்பாடு, அமெரிக்க மத்திய
வங்கிக்கூட்டமைப்பு மற்றும் பாங்க் ஆப் இங்கிலாந்து இரண்டும் செப்டம்பர் 2008,
அதற்குப் பின் வோல் ஸ்ட்ரீட் கரைப்பிற்கு முன் வரை வங்கிகளுக்கு இடையே நடந்த
வட்டிவிகித செயற்பாடுகளை மூடிமறைத்தது, ஏமாற்றியது ஆகியவற்றில் கொண்டிருந்த பங்கை
வெளிச்சமிட்டுள்ளது.
உலகின்
இரண்டாம் மிகப் பெரிய வங்கிக குழுவான லண்டனின்
HSBC
யில் உள்ள நிர்வாகிகள் அமெரிக்க செனட்டில் இன்று சாட்சியம் கொடுக்க
உள்ளனர். இது செனட்டின் நிரந்தர துணைக்குழு இவ்வங்கி மெக்சிகன் போதைப் பெருநிறுவனப்
பணத்தை பில்லியன் டாலர்கள் கணக்கில் வருமாறு மாற்றியது
(money
laundering)
குறித்த விசாரணைகள் பற்றிய அறிக்கைக்கு விடையிறுப்பு ஆகும். 2010
மார்ச்சில் இப்பொழுது
Wells
Fargo
உடைய உரிமையாக இருக்கும்
Wachovia Sinaloa Cartelக்கு
ஆக $378.4 பில்லியனைப் பணமாற்று செய்ததை ஒப்புக் கொண்டுள்ளது.
பெருமந்த
நிலைக்குப் பின் உலகை ஆழ்ந்த பொருளாதார நெருக்கடியில் தள்ளிய 2007, 2008 வீட்டு ஊக
வணிகக் குமிழ் வெடிப்புக்கு முன்போ, பின்போ அவர்களுடைய சட்டவிரோத நடவடிக்கைகளுக்காக
அமெரிக்க முக்கிய வங்கி ஒன்றின் உயர் அதிகாரிகூட தண்டிக்கப்பட்டுச் சிறையில்
அடைக்கப்படுவது ஒருபுறம் இருக்க, குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்ளவும் இல்லை,
விசாரணைக்கு உட்படுத்தப்படவும் இல்லை. மாறாக, நிதிய தன்னலக்குழு பொதுப்பணத்தில்
டிரில்லியன் கணக்கில் பிணைஎடுப்புக்கள் பெற்றுள்ளது. இதற்கு வேலை அழிப்புக்கள்,
ஊதியங்கள், சுகாதாரப பாதுகாப்பு, கல்வி, ஓய்வூதியங்கள் துறைகளில் இழப்புக்கள் என்று
அமெரிக்கா ஐரோப்பா முழுவதும் ஏற்படுத்தப்பட்டு, அதற்கு விலை கொடுக்கப்பட்டுள்ளது.
வங்கிகளால்
தூண்டிவிடப்பட்ட இந்த நெருக்கடி பெரும் வங்கிகள்
JPMorgan
Chase
போன்றவற்றின் அதிகாரத்தை உறுதிப்படுத்தவும் அரசியல் அமைப்புமுறை
மீது அவர்கள் கட்டுப்பாட்டை அதிகரிக்கவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. எது பெரும்
தெளிவுடன் அம்பலமாகியுள்ளது என்றால், தற்போதுள்ள ஒரு ஒரு சர்வதேச நிதியப்
பிரபுத்துவம் இரக்கமின்றிச் சமூகத்தைக் கொள்ளையடிப்பதால் ஏற்கனவே அது கொண்டுள்ள
இழிந்த பெரும் செல்வத்தின் மட்டத்தை அதிகரித்துக்கொள்கின்றது. இவை தாமே தமது சொந்த
சட்டம் போல் செயல்படுகின்றன.
நிதிய
முறையைச் சீர்திருத்தல், வங்கிகளைக் கட்டுப்படுத்துதல் அல்லது வோல் ஸ்ட்ரீட்
மற்றும் சிட்டி ஆப் லண்டன் “கலாச்சாரத்தை மாற்றுதல்”குறித்த பேச்சுக்கள் அனைத்தும்,
அறியாமை அல்லது ஏமாற்றுத்தனத்தின் விளைவுதான். வோல் ஸ்ட்ரீட் குற்றவாளிகள்
சமூகத்தின் மீது கொண்டுள்ள பிடியை முறிப்பதற்கு தொழிலாள வர்க்கத்தின் அணிதிரளல்
தேவைப்படுகிறது. ஒரு சோசலிச வேலைத்திட்டத்துடன் ஆயுதபாணியாகுவதன் மூலம் அது நிதிய
ஊக வணிகர்களின் செல்வத்தை எடுத்துக் கொள்ளுவதுடன், வங்கிகள் மற்றும்
பெருநிறுவனங்களை ஜனநாயகரீதியாக நடத்தப்படும் பொது நிறுவனங்களாக ஜனநாயகக்
கட்டுப்பாட்டின்கீழ் பொது சொத்துடைமையாக மாற்ற வேண்டும். |