WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் : ஆபிரிக்கா
:
எகிப்து
Clinton
backs Egyptian military junta, Islamist president
எகிப்திய
இராணுவ ஆட்சிக்குழு, இஸ்லாமியவாத ஜனாதிபதிக்கு கிளின்டன் ஆதரவு
By
Johannes Stern
16 July 2012
வார
இறுதியில் அமெரிக்க வெளிவிவகாரச் செயலர், ஹில்லாரி கிளின்டன் எகிப்தின்
SCAF
எனப்படும் ஆயுதப்படைகளின் தலைமைக் குழுவின் தலைவர் பீல்ட் மார்ஷல்
மகம்மது ஹுசைன் தந்தவி மற்றும் இஸ்லாமியவாத ஜனாதிபதி மகம்மது முர்சி ஆகியோருடன்
கெய்ரோவில் பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.
உத்தியோகபூர்வமாக எகிப்தில் “ஜனநாயகத்திற்கு மாற்றம்” என்பதை வளர்ப்பதாக
கூறிக்கொண்டாலும், கிளின்டனுடைய விஜயம்,
தொழிலாள
வர்க்கத்தின் புதுப்பிக்கப்பட்ட பரந்த போராட்ட அச்சுறுத்தல்களுக்கு எதிராக
அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் எகிப்திய முதலாளித்துவத்துடன் எதிர்ப்புரட்சி
உடன்பாட்டை தீவிரப்படுத்தியுள்ளது.
அவருடைய வருகை எகிப்திய ஆளும் வர்க்கத்தின் இரு போட்டியிடும்
பிரிவுகளுக்கு இடையே அதிகாரப் போராட்டம் தீவிரமாகியுள்ள நிலையில் வந்துள்ளது;
அதாவது இராணுவம் ஒரு புறமும், இஸ்லாமிய முஸ்லிம் பிரதர்ஹுட் மறுபுறமுமாக உள்ளது.
இந்த வாரம்
முன்னதாக எகிப்தின் தலைமை அரசியலமைப்பு நீதிமன்றம் முர்சி வெளியிட்ட ஜனாதிபதி ஆணை
ஒன்றை—அது எகிப்திய பாராளுமன்றத்தை மறுபடியும் நிலைநிறுத்தியது—செல்லாதது எனத்
தள்ளுபடி செய்துவிட்டது. இந்த ஆணையை நிராகரித்ததின் மூலம்,
SCAF
எகிப்திய அரச எந்திரத்தின் மீது தான் முழு அதிகாரத்தையும்
பெற்றிருப்பதை காக்க உள்ளது என்பதைத் தெளிவாக்கியுள்ளது. எகிப்திய ஜனாதிபதித்
தேர்தலின் இரண்டாம் சுற்றிற்கு சற்று முன் ஒரு இராணுவ ஆட்சிமாற்றத்தின் மூலம்,
இராணுவ ஆட்சிக்குழு இஸ்லாமியவாத ஆதிக்கம் கொண்ட பாராளுமன்றத்தைக் கலைத்து, அனைத்து
சட்டமியற்றும், வரவு-செலவுத்
திட்ட அதிகாரங்களையும், புதிய அரசியலமைப்பு இயற்றும் அதிகாரத்தையும் எடுத்துக்
கொண்டது.
உட்குறிப்பாக இந்த சதிக்கு கிளின்டன் ஆதரவு கொடுக்கும் வகையில், “எகிப்தியர்கள்
சிக்கல் வாய்ந்த பேச்சுவார்த்தைகள், மாற்றத்தைப் பற்றி என்பதற்கு மத்தியில் உள்ளனர்
என்பது தெளிவு—இதில் பாராளுமன்ற அமைப்பு முறை, புதிய அரசியலமைப்பை எழுதுதல்,
ஜனாதிபதியின் முழு அதிகாரங்கள் ஆகியவை அடங்கும்” என்றார்.
“புரட்சியில் எகிப்திய மக்களை பிரதிநிதித்துவப்படுத்தியதற்கு” அவர்
SCAF
ஐ பாராட்டினார்; அதேபோல் “எகிப்திய தேசத்தை காப்பாற்றுவதற்கும்”
பாராட்டினார்.
வெளிவிவகாரச் செயலகத்தின் ஒரு முன்னாள் ஆலோசகரான பீட்டர் மண்டவில்லேயும் அமெரிக்கா
எகிப்து இராணுவத்தை தன் நலன்களின் முக்கிய பாதுகாப்பு அமைப்பாகக் கருதுகிறது,
இஸ்லாமியவாதிகளைக் கட்டுப்படுத்தும் ஒரு சக்தியாக, என்றார். நியூயோர்க்
டைம்ஸிடம் அவர் “அமெரிக்க வெளியுறவுக் கொள்கை நடைமுறை என்னும் உடலில் உள்ள
ஒவ்வொரு எலும்பும் இவர்களைக் கண்காணிக்க இன்னும் வலுவான இராணுவம் உள்ளது என்னும்
சிந்தனையில் அதிகத் தெளிவை உணர்வர், இவர்கள் அமெரிக்க நலன்களை எகிப்திலும்
பிராந்தியத்திலும் காப்பர்.” என்றார்.
வாஷிங்டன்,
எகிப்தின் இராணுவத்தை மற்றொரு வெகுஜன வெடிப்பிற்கு எதிரான முக்கிய
அரணாகக் கருதுகிறது. கடந்த ஆண்டு தொழிலாள வர்க்கத்தின் வெகுஜன எழுச்சி, நீண்டகால
அமெரிக்க கைப்பாவையான ஹொஸ்னி முபாரக்கை அகற்றியது, எகிப்திய முதலாளித்துவம் மற்றும்
மத்திய கிழக்கில் ஏகாதிபத்திய ஆட்சியையும் அதன் அஸ்திவாரங்கள் வரை நடுங்க வைத்தது.
தொழிலாள
வர்க்கம் மீண்டும் தாக்குதலில் இறங்கலாம் என்பதற்கான அடையாளங்கள் உள்ளன. கிளின்டன்
தந்தவியைச் சந்தித்த அன்றே, அரசாங்கத்திற்குச் சொந்தமான நைல் டெல்டாவிலுள்ள மகல்லா
அல் குப்ராவில் உள்ள மஹல்லா மிசர் நூற்பு ஆலையில் 25,000 ஜவுளித்துறை தொழிலாளர்கள்
வேலைநிறுத்தம செய்தனர். கடந்த ஆண்டு புரட்சியில் முக்கிய பங்கைக் கொண்டிருந்த
மஹல்லாத் தொழிலாளர்கள் நிறுவன நிர்வாகம் அகற்றப்பட வேண்டும், 2011 இலாபங்களில்
அதிகப் பங்கு, பணிநீக்க ஊதியம் அதிகரிக்கப்படல் ஆகியவற்றைக் கோருகின்றனர்.
வெகுஜனப்
போராட்டங்கள் புதுப்பிக்கப்படும் என்னும் அச்சத்திலில்,
வாஷிங்டன் இராணுவத்திற்கும் இஸ்லாமியவாதிகளுக்கும் இடையே மோதல்
தீவிரமாவதைத் தடுக்க முயல்கிறது; அது எகிப்தின் உறுதியைக் குலைக்கக் கூடும். தன்
வருகையின்போது, கிளின்டன் தந்தவியிடம் இராணுவக்குழு வாஷிங்டனுடைய முழு ஆதரவைக்
கொண்டுள்ளது என உறுதியளித்தார். ஆனால் தளபதிகளிடம் இஸ்லாமியவாத ஜனாதிபதிக்கு சற்றே
கூடுதலான அதிகாரங்களைக் கொடுக்குமாறும் அழுத்தம் கொடுத்தார்; அது எகிப்தில்
நடைபெறும் இராணுவ ஆட்சிக்கு ஒரு மறைப்பாக இருக்கும் என்றார்.
எகிப்தின்
இராஜதந்திர தட்டுக்களின் கருத்துப்படி, கிளின்டன் முர்சியிடம், “எகிப்திடம் இருந்து
சிலவற்றை வாஷிங்டன் எதிர்பார்க்கிறது; அதற்கு ஈடாக தொடர்ந்த நிதிய ஆதரவு
கொடுக்கப்படும்.” ஒரு கோரிக்கை எகிப்து முபராக் ஆட்சியின் அமெரிக்க சார்பு
வெளிநாட்டுக் கொள்கையை தொடர வேண்டும்.
முக்கிய
பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டதில் ஒன்று,
Al-Ahram
Online
க்கு அதிகாரி ஒருவர் கூற்றின்படி, எகிப்து மூன்று தசாப்தங்களாக
இஸ்ரேலுடன கொண்டிருக்கும் சமாதான உடன்படிக்கைக்கு தொடர்ந்த உறுதியாகும். அத்தூதர்
அமெரிக்கா “எகிப்தைப் பழைய பிணைப்புக்களுடன் பயன்படுத்தி முஸ்லிம் பிரதர்ஹுட்டை
காசாப் பகுதியில் உள்ள ஹமாசுடன் இணைப்பது, இஸ்ரேலுடன் போர் விரிவாக்கத்திற்கு
முற்படக்கூடிய ஹமாசின் திட்டத்தை நிறுத்திவிடும் என எதிர்ப்பார்க்கிறது” என்றார்.
அதிகாரபூர்வ
கருத்துப்படி, எகிப்து ஈரானுடனான உறவுகளை தொடர்ந்து மட்டுப்படுத்தும் என அமெரிக்கா
எதிர்பார்க்கிறது என்றும் உள்ளது.
தானும்
பிரதர்ஹுட்டும் வாஷிங்டனுடன் நெருக்கமாக ஒத்துழைக்க விரும்புவதாக முர்சி அடையாளம்
காட்டியுள்ளார். கெய்ரோவின் உயர்ந்த இடமான ஹெலியோபொலிஸ் புறநகரில் உள்ள ஜனாதிபதி
அரண்மனையில் நடைபெற்ற அவர்கள் கூட்டத்தில், முர்சி கிளின்டனிடம் “நாங்கள் உங்களை
சந்திக்க மிகவும், மிக அதிக அளவில் ஆர்வம் காட்டுகிறோம், நீங்கள் இருப்பதில்
பெருமகிழ்ச்சி” என்றார்.
கூட்டம்
முடிந்தபின் கிளின்டன் அவருடைய திருப்தியைத் தெரிவித்தார். “ஜனாதிபதி முர்சி
தன்னுடைய ஜனாதிபதிக்காலம் மற்றும் எகிப்தின் மாற்றம் ஆகியவற்றின் வெற்றி, எகிப்தின்
அரசியல் சக்தி முழுவதும் ஒருமித்த உணர்வு கொள்வதில் இருக்கிறது என்பதை
தெளிவாக்கியுள்ளார்; புதிதாக இயற்றப்படும் அரசியலமைப்பு அனைவராலும் மதிக்கப்பட்டு,
ஜனாதிபதி பதவியின் முழு அதிகாரத்தையும் உறுதிப்படுத்தும்.”
கிளின்டனுக்கும் முர்சிக்கும் இடையே நடந்த கூட்டத்தின்போதும், அதற்குப் பின்னரும்,
ஆயிரக்கணக்கான எதிர்ப்பாளர்கள் அமெரிக்கத் தூதரகத்திற்கு முன் கூடினர், கிளின்டன்
தங்கியிருந்த ஹோட்டல் முன்பும் கூடினர்; அவர்கள் எகிப்தில் அமெரிக்கத் தலையீட்டைக்
கண்டித்தனர்; முஸ்லிம் பிரதரஹுட் வாஷிங்டனுடன் ஒத்துழைப்பதையும் கண்டித்தனர்.
எதிர்ப்பாளர்கள் ஏந்தியிருந்த பதாகைகள் “ஹில்லாரியே, நரகத்திற்குச் செல்”,
“இஸ்லாமிய வாதிகளை உங்களுக்கு பிடித்திருக்கிறதா, ஹில்லாரி? அழைத்துச் செல்லுங்கள்
உங்களுடன்” என்ற வாசகங்களைக் கொண்டிருந்தன.
வாஷிங்டனுடைய ஆதரவைப் பெற்ற நிலையில், ஆட்சிக்குழு தளபதிகள் தங்கள் அதிகாரங்களை
விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளது. ஞாயிறன்று
இஸ்மைலியான நகரத்தில் துருப்புக்களிடம் பேசிய தந்தவி இராணுவம் “எகிப்து அதன் மக்களை
அது காக்கும் பங்கில் இருந்து அகற்றவதற்கு எவரையும் அனுமதிக்காது” என்றார்.
ஆனால்
இராணுவம் இஸ்லாமியவாதிகளின் நிபந்தனைகளுடன் சமரசத்திற்கு ஏற்பாடு செய்யத் தயார்
என்று குறிப்பைக் காட்டியுள்ளார். ஜனாதிபதி பதவிக்குத் தான் மதிப்புக் கொடுப்பதாகக்
கூறிய அவர், “இராணுவ சக்திகளும் இராணுவக் குழுவும் சட்டமியற்றும், நிர்வாக
அதிகாரங்களை மதிக்கின்றன” என்றார்.
SCAF
முர்சிக்குக் கொடுத்துள்ள முக்கிய அதிகாரம் இதுவரை மக்களுக்கு
எதிராக இராணுவத்தைப் பயன்படுத்துவதுதான். அமெரிக்க ஆதரவு பெற்ற இராணுவ ஆட்சி
மாற்றம் ஏற்பட்டபின்
SCAF
வெளியிட்டுள்ள கூடுதல் அரசியலமைப்பு விதி முர்சியை “SCAF
உடைய ஒப்புதலுடன் பாதுகாப்பைத் தக்க வைக்கவும் பொதுச் சொத்தைப்
பாதுகாக்கவும் இராணுவப் படைகளை இயக்கும் முடிவை வெளியிடலாம்” என அனுமதிக்கிறது;
“அதுவும் நாடு உள்நாட்டு அமைதியின்மைக்கு முகங்கொடுத்து ஆயுதப் படைகளின் குறுக்கீடு
தேவை என்னும்போது.”
கிளின்டனுடைய வருகை அமெரிக்க ஏகாதிபத்தியம் “ஜனநாயகத்தை” வளர்த்தல் என்னும் கூற்று
பற்றிய முற்றிலும் இழிந்த தன்மை, பாசங்குத்தன்மை ஆகியவற்றைக் காட்டுகிறது. எகிப்திய
இராணுவ ஆட்சிக்குழு மற்றும் பிரதர்ஹுட் இரண்டையும் கிளின்டன் பாராட்டுகையில், கடந்த
ஆண்டு எழுச்சியின்போது நடைபெற்றது போல் எகிப்தில் முதலாளித்துவத்தை அச்சுறுத்தும்
புதுப்பிக்கப்படக்கூடிய தொழிலாள வர்க்கப் போராட்டங்கள் எதையும் இரத்தம் சிந்தி
அடக்குவதை தான் ஏற்கும் என வாஷிங்டன் எகிப்திய முதலாளித்துவத்திற்கு அடையாளம்
காட்டுகிறது.
இதற்கு
ஈடாக, எகிப்திய இராணுவ ஆட்சிக்குழுவும் இஸ்லாமியவாதிகளும் சிரியா, ஈரானுக்கு எதிரான
அமெரிக்கப் போர் உந்துதலுக்கு ஆதரவு கொடுக்கும். கெய்ரோ வருகைக்குப்பின் கிளின்டன்
இஸ்ரேலுக்குச் சென்றார். அது ஈரானின் அணுச்சக்தித்திட்டம் மற்றும் சிரியப் போர்
குறித்து இஸ்ரேலியப் பிரதம மந்திரி பெஞ்சமின் நெத்ன்யாகு, வெளியுறவு மந்திரி
அவிக்டர் லைபெர்மன், பாதுகாப்பு மந்திரி எகுட் பாரக் மற்றும் ஜனாதிபதி ஷைமன் பெரெஸ்
ஆகியோருடன் விவாதிப்பதற்கு எனக் கூறப்படுகிறது. |