சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

France’s Socialist Party government backs job cuts at automaker PSA

பிரான்ஸின் சோசலிஸ்ட் கட்சி அரசாங்கம் PSA கார்த்தயாரிப்பு நிறுவன வேலை வெட்டுக்களுக்கு ஆதரவளிக்கிறது

By Kumaran Ira
17 July 2012

use this version to print | Send feedback

பிரான்சின் சோசலிஸ்ட் கட்சி (PS) அரசாங்கம் உட்குறிப்பாக கார்த்தயாரிப்பு நிறுவனம் PSA Peugeot-Citroën’s உடைய திட்டமான ஒல்நே ஆலையை மூடுதல், பிரான்ஸ் எங்கும் 8,000 வேலைகளை தகர்த்தல் ஆகியவற்றிற்கு ஆதரவைக் கொடுக்கிறது.

ஜூலை 15ம் திகதி நிதி மந்திரி Pierre Moscovici வெட்டுக்களுக்கு ஆதரவு கொடுத்து PS அரசாங்கம் PSA திட்டங்களின் இரண்டாம் கூறுபாடுகளைத்தான் திருத்த விரும்பம் கொண்டுள்ளது என்பதை தெளிவாக்கினார். PSA இன் தலைமை நிர்வாக அதிகாரி பிலிப் வாரனுடைய வெட்டுக்களை செயல்படுத்தும் “நெறித்தன்மை” பற்றிக் கேட்கப்பட்டதற்கு, Pierre Moscovici பதில் கூறினார்: “இது ஒரு தனியார் நிறுவனம், அதன் நிர்வாகத்தை தேர்ந்தெடுப்பது அதன் விருப்புரிமை”.

அவர் மேலும் வலியுறுத்தினார்: “ஏராளமான வேலை நீக்கங்கள் ஒத்தி வைக்கப்பட உள்ளன, அது தெளிவாகிறது.... நாம் கடுமையான நிலைமையில் வந்துள்ளோம்; சமூக செயலார்களுக்கு இடையே நம்பிக்கையில்லை, போட்டித்தன்மையும் இல்லை, ஆனால் அதைக் கடந்துவிடுவோம்.” அதன் பின் அவர் சேர்த்துக் கொண்டார், “இதை வாரனுடன் விவாதிப்போம், நான் இங்கு எதையும் உறுதிகுலைக்க வரவில்லை, கட்டமைக்கவும், தீர்வுகளைக் காணவும்தான்.”

Pierre Moscovici இன் கருத்துக்கள் PS அரசாங்கத்தின் இழிந்த ஆரம்ப விடையிறுப்பு ஆலைகள் மூடலைப் பற்றி அம்பலப்படுத்துகின்றன; இது முதலில் “ஏற்கத்தக்கதல்ல” என்று கூறியிருந்தது. பாஸ்டீல் தினத்தன்று ஒரு தொலைக்காட்சி பேட்டியில் ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்ட் PSA இன் திட்டங்களை “ஏற்கத்தக்கது அல்ல” என்றும், அரசாங்கம் “இதை அப்படியே விட்டுவிடாது என்றும் கூறினார்.

ஆனால் ஒல்நே ஆலை மூடப்படுவதை தான் நிறுத்த மாட்டேன் என்று ஹாலண்ட் தொடர்ந்து கூறினார். “அரசாங்கம் ஒல்நே ஆலை மூடலை சட்டபூர்வம் அற்றது எனக்கூற முடியாது, ஆனால் ஒல்நே ஒரு தொழில்துறைப் பகுதியாக இருப்பதற்கு ஏற்பாடு செய்ய முடியும்.”

அதன் ஆலை தொழிற்சங்கங்களுடன் அதன் திட்டத்தை PSA நிர்வாகம் “மறு பேச்சுக்கு உட்படுத்தப்பட வேண்டியதை” உறுதிப்படுத்துமாறு அவர் கேட்டுக் கொண்டார். “பேச்சுவார்த்தைகளில் இருக்க வேண்டிய தன்மை Peugeot ல் இழப்பீடு கொடுக்காத பணிநீக்கங்கள் இல்லை, ஒவ்வொரு தொழிலாளருக்கும் ஒரு தீர்வு வேண்டும்” என்ற வகை தேவை என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஹாலண்ட் அரசாங்கத்தின் கொள்கை பெருவணிகத்தின் தேவைகளுடன் முற்றிலும் பிணைந்துள்ளது. இது பிரெஞ்சு நிறுவனங்களின் போட்டித்தன்மையை, தொழிலாளர் செலவுகளையும் வாழ்க்கைத் தரங்களையும் குறைத்து, அதிகரிக்கும் இலக்கைக் கொண்டது. அதே நேரத்தில் தொழிற்சங்கத்துடன் இணைந்து செயல்பட்டு தொழிலாள வர்க்கத்திடையே ஒரு சமூக அதிருப்தி வெடிப்பு ஏற்படுவதைத் தடுக்கவும் முயல்கிறது. அத்தகைய வெடிப்பு அதன் திட்டங்களை தடைக்கு உட்படுத்திவிடும். இது செல்வந்தர்களின் அரசாங்கம், செல்வந்தர்களால், செல்வந்தர்களுக்காக நடத்தப்படுகிறது; இது தொழிலாள வர்க்கத்தின் மீது முழு இகழ்வுணர்வைத்தான் கொண்டுள்ளது.

கார்த்தயாரிப்புத் தொழிலில் ஏராளமான பணிநீக்கங்கள் இருந்தாலும், ஹாலண்ட் இதற்கு இன்னும் நிதிய உதவிகள் தருவதற்குத் தயாரிப்புக்களை கொண்டுள்ளார்; இதைத்தவிர பெருவணிகத்திற்கான பரந்த உதவிகளும் தொழிலாளர்களின் இழப்பில் கொடுக்கப்படுகின்றன. சமூகநலச் செலவுகளில் வணிகர்களின் அளிப்புக்கள் பெரும் வெட்டுக்களை காணத் திட்டங்கள் உள்ளன; இதைத்தவிர நீண்டகால வெட்டுக்களும் குறைந்தப்பட்ச ஊதியத்தின் வாங்கும் திறனில் செய்யப்பட உள்ளது; அதிகரிக்கப்படும் தொழிலாளர் வளைந்து கொடுக்கும் தன்மையும் செயல்படுத்தப்பட உள்ளது. (பார்க்க: “பிரான்ஸ்: தொழிலாள வர்க்கத்தின் மீதான பாரிய தாக்குதல்களை சமூக மாநாடு கோடிட்டுக் காட்டுகிறது”).

ஜூலை 25ல் காபினெட்டிற்கு அளிக்கப்பட இருக்கும் ஹாலண்டின் கார்த்துறை திட்டத்தின் விவரங்களைக் கொடுக்க மறுத்த Pierre Moscovici “இது ஒரு Peugeot திட்டமாக’ இருக்காது, முழுத் தொழிலுக்குமாக, PSA, Renault மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்போர் அனைத்திற்குமாக இருக்கும்.” என்றார்.

PSA நிர்வாகத்துடன் வெட்டுக்கள் குறித்துப் பேச்சுக்கள் நடத்துகையில் தொழிற்சங்கங்கள் தொழிலாள வர்க்கத்திற்கு வெட்டுக்களுக்கான எதிர்ப்பை தடுப்பதில் முக்கிய பங்கைக் கொண்டுள்ளன. PS அரசாங்கம் PSA இன் மறுகட்டுமானத் திட்டத்திற்கு ஆதரவளிக்கையில், அவர்கள் இழிந்த முறையில் திவால் தன்மை உடைய முறையீடுகளை அரசாங்கத்திற்கு மூடல்களை நிறுத்துமாறு முறையீடுகளையும் கொடுக்கின்றனர; ஹாலண்டின் திட்டத்தை “போதுமானவை அல்ல” என விவரிக்கின்றன.

CGT இன் (பொதுத் தொழிலாளர் கூட்டமைப்பு) ஓல்நே ஆலையிலுள்ள தொழிற்சங்க பிரதிநிதி Jean-Pierre Mercier கூறினார்: “பிரான்சுவா ஹாலண்டுடன் நாங்கள் கொண்டுள்ள ஒரே உடன்பாடு, Peugeot 12 மாதங்களாக பொது மக்களிடம் மாற்றுப் பொய்யைக் கூறியது. நிர்வாகம் ஔல்நே ஆலையை மூடும் முடிவை 2010லேயே எடுத்துவிட்டது; 2012ல் விற்பனைக் குறைவுடன் ஆலை முடல் எத்தொடர்பையும் கொண்டிருக்கவில்லை” என்றார்.

இது அப்பட்டமான பொய்களின் தொகுப்பு ஆகும். ஹாலண்ட் அரசாங்கம் PSA நிர்வாகத்தின் நடத்தைக்கு எந்த எதிர்ப்புக்களையும் கொள்ளவில்லை; அவற்றை இது ஆதரிக்கிறது; இதற்குக் காரணம் PSA உலகப் பொருளாதார நெருக்கடிக்கு விடையிறுக்கிறது; அதுவோ கார் விற்பனைச் சரிவின் காரணத்திற்கு தளத்தில் உள்ளது; இதை தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதலை தொடுத்து சமாளிக்க விரும்புகிறது. இந்தக் கொள்கைக்கு ஆதரவு கொடுக்கப்பட்டுள்ளது, பேச்சுக்கள் மூலம் முடிவு காணப்பட்டுள்ளது, PS அரசாங்கத்தால் தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் துணையுடன் செயல்படுத்தப்படுகிறது; பிந்தையது PS திட்டங்களை எதிர்ப்பதற்கு தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்ட ஏதும் செய்யவில்லை.

2011ல் CGT, ஔல்நே (3,600 வேலைகள்), வடக்கு பிரான்ஸில் செவல்நோர்ட் (2,800 வேலைகள்) மற்றும் மாட்ரிட்டில் (31,00 வேலைகள்) தகர்த்தல் குறித்த ஆலை மூடல்கள் கோடிடப்பட்ட உள் ஆவணம் ஒன்றைக் கசிய விட்டது. ஆயினும்கூட இதை அவர்கள் 2012 ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தில் ஒரு பிரச்சினையாக்க முடிவு செய்யவில்லை; ஆனால் CGT, பிற தொழிற்சங்கக் கூட்டமைப்புக்கள், குட்டி முதலாளித்துவ “இடது” கட்சிகளான புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி, தொழிலாளர் போராட்டம் போன்றவை ஹாலண்டிற்கு ஆதரவு கொடுத்தன.

பிரெஞ்சு கார்த்தொழிலின் உலகப்போட்டித்தன்மைக்கு ஏற்றம் கொடுக்க அவை முற்படுகையில், ஹாலண்டும் CGT யும் ஒபாமா நிர்வாகமும் UAW எனப்படும் ஐக்கிய கார்த்தொழிலாளர் சங்கமும் 2009ல் அமெரிக்காவில் செய்த பங்கைப்போல்தான் செய்கின்றனர். ஒபாமா, GM மற்றும் கிறைஸ்லர் ஆகிய நிறுவனங்களை திவாலில் வைத்து செலவு குறைக்கும் நடவடிக்கைகளுக்குப் பாதை அமைத்தார்—ஆலைமுடல்கள், புதிதாக நியமிக்கப்படும் தொழிலாளர்களுக்கு 50% ஊதியம், சுகாதாரப் பாதுகாப்பு, ஓய்வூதியங்களில் வெட்டுக்கள் ஆகியவை கொண்டுவரப்பட்டன. UAW இன் தலைவர் பாப் கிங் இப்பொழுது ஜேர்மனியக் கார்த்தயாரிப்பாளர் ஓப்பலுடன் இணைந்து செயல்பட்டு தொழிலாளர் செலவினங்களைக் குறைப்பவர், வெளிப்படையாக UAW ஜெனரல் மோட்டார்ஸின் இலாபங்களை அதிகரிப்பதில் கொண்ட பங்கைப் பாராட்டியுள்ளார்.

PSA திட்டத்திற்கு PS இன் ஆதரவு, இலாபங்கள், போட்டித்தன்மையை அதிகரிப்பதற்கு என்ற பெயரில் கொடுக்கப்படுவது, குட்டி முதலாளித்துவ “இடது” கடசிகளின் தொழிலாள வர்க்க விரோதக் கொள்கைகள் குறித்த பேரழிவு தரும் அம்பலப்படுத்துதல் ஆகும். தொழிலாள வர்க்கத்திற்குள் சீற்றம் வெளிப்படுகையில், அவர்கள் தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் இரும்புப் பிடியை தொழிலாள வர்க்கம் மீது தக்க வைக்க அனைத்து முயற்சிகளையும் செய்வதுடன், ஹாலண்ட் குறித்து போலித்தோற்றங்களையும் வளர்க்கின்றன. (பார்க்க: “பிரான்சில் PSA வேலை வெட்டுக்களுக்கு எதிரான போராட்டத்தை LO வும் NPA ம் தடுக்கின்றன”)

LO வின் முக்கிய உறுப்பினரான Jean-Pierre Mercier பகிரங்கமாக செப்டம்பர் வரை வெட்டுக்களுக்கு எதிராகப் போராட்டம் நடத்த காத்திருக்க வேண்டும் என்ற கருத்தை முன்வைத்துள்ளார்.

PS மற்றும் அதன் குட்டி முதலாளித்துவ இடது அமைப்புக்களுடைய தொழிலாள வர்க்க விரோதக் கொள்கைகள் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு 2012 ஜனாதிபதித் தேர்தல் பற்றிய பகுப்பாய்வைமுற்றிலும் உறுதிபடுத்துகின்றன. WSWS அப்பொழுது தொழிலாள வர்க்கத்திடம் ஹாலண்ட் மற்றும் அவருடைய ஆதரவாளர்களின் பிற்போக்குத்தனக் கொள்கைகள் குறித்து எச்சரித்தது. பிரெஞ்சு முதலாளித்துவ அரச அமைப்புமுறைக்கு எதிரான போராட்டத்திற்கு தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன அரசியல் அணிதிரள்வு தேவை என்றும் முன்மொழிந்தது.

பிரெஞ்சு ஜனாதிபதி தேர்தல் 2012