சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

LO, NPA block struggle against PSA job cuts in France

பிரான்சில் PSA வேலை வெட்டுக்களுக்கு எதிரான போராட்டத்தை LO வும் NPA ம் தடுக்கின்றன

By Kumaran Ira
14 July 2012

use this version to print | Send feedback

குட்டி முதலாளித்துவ NPA (புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி), LO (தொழிலாளர்கள் போராட்டம்), இரண்டும் பிரெஞ்சுக் கார்த்தயாரிப்பு நிறுவனம் PSA 8,000 வேலைகளை நீக்குவது குறித்த அறிவிப்பை எதிர்கொள்ளும் வகையில், வெட்டுக்களுக்கு எதிரான தொழிலாள வர்க்கப் போராட்டத்தை தடுத்து, மக்கள் எதிர்ப்பை திவாலாக்கிவிட்ட தொழிற்சங்க அதிகாரத்துவத்துடன் பிணைக்க முற்படுகின்றன. அவற்றின் நோக்கம், மக்களுடைய எதிர்ப்பை பயனற்ற எதிர்ப்புத் திசைகளில் திருப்புதல், PSA நிர்வாகத்திற்கு வெட்டுக்களை சுமத்த சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்துதல் என்பதாகும்.

CGT (தொழிலாளர் பொதுக் கூட்டமைப்பு) இன் PSA ஒல்நே ஆலையின் பிரதிநிதியாக Jean Pierre Mercier இருக்கிறார்; இதுதான் மூடலுக்குக் குறி வைக்கப்பட்டுள்ளது; இவர் LO ஜனாதிபதி வேட்பாளர் Nathalie Arthaud வின் பிரச்சாரச் செய்தித் தொடர்பாளராகவும் இருந்தார். இழிந்த முறையில் அவர் குறிப்பிட்டதாவது: “PSA இன் தலைமை நிர்வாகி பிலிப் வாரன் நம் மீது போரை அறிவித்துள்ளார், நாமும் அவர் மீது போர் தொடுப்போம்.”

இருந்தபோதிலும், அவர் தொழிலாளர்கள் “செப்டம்பர் மாதம் தொடங்கும் ஒரு போராட்டத்தை ஏற்பாடு செய்யவேண்டும்” என வலியுறுத்தியுள்ளார். இந்த ஆழ்ந்த செல்வாக்கற்ற வெட்டுக்களுக்கு எதிரான தாக்குதலை தொடக்க எதற்காக தொழிலாள வர்க்கம் இரண்டு மாதங்கள் காத்திருக்க வேண்டும் என்று அவர் விளக்கவில்லை; இந்த வெட்டுக்களோ தொழிற்சங்கங்கள், PSA நிர்வாகிகள் மற்றும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சோசலிஸ்ட் கட்சி ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்டின் பிரதிநிதிகள் அடங்கிய கூட்டு விவாதங்களில் திட்டமிடப்பட்டன.

LO வெட்டுக்களுக்கு எதிராக காணப்படக்கூடிய நடவடிக்கை எதையும் எடுப்பதற்கு இரண்டு மாத தாமதம் வேண்டும் என்று கூறுகையில், அவர்கள் ஒன்றும் பிறரை வியப்பில் ஆழ்த்தவில்லை. LO, NPA, மற்றும் தொழிற்சங்கங்கள் ஆகியவை வெட்டுக்கள் பற்றி ஓராண்டிற்கு முன்பே அறிந்திருந்தன. கடந்த ஆண்டு CGT ஒரு கசியப்பட்ட PSA உள் ஆவணத்தை வெளியிட்டது; அது Aulnay-souls Bois ஆலை மூடப்படல் (3,600 வேலைகள் நீக்கப்படுதல்), வடக்கு பிரான்ஸில் ஹோர்டானில் உள்ள செவல்நோர்ட் ஆலை மூடப்படுதல் (2,800 வேலைகள்), மற்றும் மாட்ரிட்டில் (3,100) ஆலை ஒன்று மூடப்படல் ஆகியவற்றை பற்றிக் கோடிட்டுக் காட்டியிருந்தது.

ஒல்நே ஆலைத் தொழிலாளர்கள் ஆலை படிப்படியாக மூடப்பட உள்ளது என்றும் அதன் இருப்புக்கள் மூடலுக்காகக் குறைக்கப்படுகின்றன என்றும் கூறினர். (பார்க்க: “பிரான்ஸின் ஒல்னேயிலுள்ள கார் ஆலையில் தொழிற்சங்க ஒன்றுகூடலினுள்”)

 “PSA-Citroen: தொழிலாளர்களுக்கு எதிரான ஒரு போர் அறிவிப்பு” என்ற ஜூன் 12ம் திகதிக் கட்டுரையில் LO, PSA இன் வெட்டுக்களுக்கான திட்டங்கள் குறித்து கூறியது: “ஒரு வெளிப்படையான இரகசியம் முடிந்துவிட்டது. இது ஓர் உண்மையான குற்றம், தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான ஒரு சமூகக் குற்றம்.”

தன்னுடைய பங்கிற்கு NPA அறிவித்தது: “வீணாக ஓராண்டு காலம் பேசிய பின்னர், PSA நிர்வாகம் அனைவருக்கும் தெரிந்ததை உறுதிபடுத்தியுள்ளது: ஒல்நே ஆலை 2014ல் மூடப்படும் என்பதே அது.”

இக்கருத்துக்கள் எழுப்பும் வினா இதுதான்: CGT, LO, மற்றும் NPA ஆகியவை அனைத்தும் இந்த வெட்டுக்கள் திட்டமிடப்பட்டவை என்று அறிந்திருந்தால், அவை ஏன் முன்னதாக ஒரு போராட்டத்திற்குத் தயாரிக்கவில்லை, 2012 ஜனாதிபதித் தேர்தலில் இதை ஒர் அரசியல் பிரச்சினையாக ஆக்கவில்லை? இதற்கு விடை PSA நிர்வாகம் மற்றும் ஹாலண்டிற்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை திரட்டும் போராட்டத்தை அவர்கள் எதிர்த்தனர்; ஹாலண்ட் தேர்ந்தெடுக்கப்படுவதை LO, NPA இரண்டுமே ஆதரித்திருந்தன, வலதுசாரி ஜனாதிபதியாக இருக்கும் நிக்கோலோ சார்க்கோசியின் ஆட்சியை விட அவருடையது குறைந்த தீமை உடையதாக இருக்கும் என சித்தரித்திருந்தன.

LO, NPA இரண்டுமே செப்டம்பர் வரை வெட்டுக்களுக்கு எதிரான நடவடிக்கையை தள்ளிவைக்க முயல்கின்றன; ஏனெனில் அவை தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் கட்டுப்பாட்டின்கீழ் தொழிலாளர்களின் சீற்றத்தை கட்டுப்படுத்தி வைக்க முயல்கின்றன; அதிகாரத்துவமோ ஹாலண்டுடன் சமூக வெட்டுக்கள், வேலை வெட்டுக்கள் குறித்து பேச்சுக்களை நடத்துகின்றது. தொழிலாள வர்க்கத்திடம் இருந்து பிரிந்து, அரசியலில் PS சார்பு வசதி படைத்த மத்தியதரவர்க்க அடுக்கை பிரதிபலிக்கும் இவை ஹாலண்ட் வெட்டுக்களை சுமத்துவதற்கு உதவ முயல்கின்றன.

LO வும்  தொழிற்சங்கங்களும் ஹாலண்ட் தொழிலாளர்களுக்கு உதவ முயல்வார் என்னும் போலித்தோற்றத்தை வளர்த்து தொழிலாள வர்க்கத்தை நிராயுதபாணிகளாக ஆக்க முயற்சிக்கின்றன. பிரான்ஸ் 2 தொலைக்காட்சியிடம் Arthaud கூறினார்: “அரசாங்கம் PSA விவகாரத்தில் உடந்தை என்பதைத்தான் நிரூபித்துள்ளது; ஏனெனில் அது செயலற்று உள்ளது.” ஹாலண்ட் PSA உடைய வெட்டுக்கள் “செல்லத்தக்கவை அல்ல” என அறிவிப்பார் எனத் தான் நம்புவதாக இப்பெண்மணி கூறினார்.

இது ஒரு பகல் கனவு ஆகும். உண்மையில் பிரான்ஸில் வேலைகளை நீக்கவும், சமூகநலச் செலவுகளை குறைக்கவும் சோசலிஸ்ட் கட்சி (PS) பெருவணிகங்கள் மற்றும் தொழிற்சங்கங்களுடன் நெருக்கமான முறையில் உழைக்கின்றன; இதற்கு காரணம் அவை பிரெஞ்சு பெரு வணிகத்தின் போட்டித் தன்மையை அதிகரிக்க வேண்டும் என்பதுதான்.

PSA பரந்த அளவிலான பணிநீக்கங்களை அறிவிக்கையிலேயே, ஹாலண்ட் இன்னும் அதிக பொதுநிதியை கார் பெருநிறுவனங்களுக்கு அளிக்கத் தயார் செய்கிறார். பணிநீக்கங்களைப் பற்றிப் பேசுகையில்,  ஹாலண்ட்: “எப்படி விடையிறுக்க வேண்டுமோ, அப்படித்தான் அரசாங்கம் விடையிறுக்கிறது. அதாவது ஒரு வல்லுனரை எது வழங்கப்பட இருக்கிறது என்பதை பரிந்துரை செய்வதற்கும், கார்த்தொழிலுக்காக ஒரு திட்டத்தை இயற்றுவதற்கும் நியமித்தல்; அவருடைய அறிக்கை ஜூலை மாதம் அளிக்கப்படும்.” எனக் கூறினார்

NPA, LO இரண்டுமே PS தொழிலாளர் விரோதக் கொள்கைகளை கடைப்பிடிக்க உறுதியாக உள்ளது என்பதை நன்கு அறியும்; ஆயினும்கூட அவை நிபந்தனையற்ற முறையில் மே 6ம் தேதி ஜனாதிபதித் தேர்தலில் இரண்டாம் சுற்றில் நிபந்தனையற்று வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டன.

இப்பொழுது அவை ஹாலண்டையும் தொழிற்சங்கங்களின் தொழிலாளர் விரோத “சமூக உரையாடலையும்” நல்ல முறையில் தொடர்ந்து சித்தரித்துக் காட்டுகின்றன. ஜூலை 12 கட்டுரையில், NPA எழுதியது: “சமூக உச்சிமாநாடு, சமூக உரையாடல் போல் இல்லாமல், PSA உண்மையிலேயே ஒரு சமூகப் போரைத்தான் பிரகடனப்படுத்தியுள்ளது.”

உண்மையில் PSA யில் நடக்கும் பரந்த பணிநீக்கங்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் முதலாளிகள் கூட்டமைப்புடன் ஹாலண்ட் நடத்திய சமூக மாநாட்டு கருத்துக்களுடன் இணைந்துதான் உள்ளது—அதில் ஆழ்ந்த வெட்டுக்கள், குறைந்த பட்ச ஊதியத்திற்கு உட்பட, சமூக நலச் செலவுக்கு நிதி பின்னர் தொழிலாளர் “வளைந்து கொடுத்தல்” ஆகியவை குறித்து உடன்பாடுகள் இருந்தன. (பார்க்க: “பிரான்ஸ்: தொழிலாள வர்க்கத்தின் மீதான பாரிய தாக்குதல்களை சமூக மாநாடு கோடிட்டுக் காட்டுகிறது”).

இதேபோல் தொழிற்சங்கங்கள் பலமுறையும் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசியுடன் அவர் தொழிலாளர்களின் ஓய்வூதியங்களைக் குறைத்து, பொதுத்துறையில் வேலை வெட்டுக்கள், ஆலை மூடல்கள், கல்வித்துறைமீது தாக்குதல்கள் ஆகியவற்றைச் சுமத்தியபோதும் “சமூக உரையாடலில்” ஈடுபட்டன. தொழிற்சங்கங்களும் குட்டிமுதலாளித்துவ “இடது” குழுக்களான LO, NPA போன்றவை சார்க்கோசிக்கு எதிராக அரசியல் போராட்டமும் இருக்காது என வலியுறுத்தின; தொழிற்சங்கங்கள் குறுகிய எதிர்ப்புக்களை மட்டுமே நடத்தின.

அவை இப்பொழுது, அமெரிக்க ஐக்கிய கார்த் தொழிலாளர் சங்கம் (UAW) இதைவிட ஆழ்ந்த வெட்டுக்கள் டெட்ரோயிட்டில் 2009ல் கார்த் துறை பிணையெடுப்பின் போது சுமத்தப்பட்ட போது காட்டிய மௌனத்தைப் போலவே ஓசையின்றி உள்ளன—அப்பொழுது ஆலை மூடல்கள், புதிய தொழிலாளிகளுக்கு 50 சதவிகித ஊதிய வெட்டுக்கள், சுகாதார பாதுகாப்பு, ஓய்வூதியங்களில் வெட்டுக்கள் ஆகியவை கொண்டுவரப்பட்டன. UAW இப்பொழுது ஐரோப்பா முழுவதும் ஜெனரல் மோட்டார்ஸுடன் இணைந்த கார்த்தயாரிப்பு நிறுவனங்களான ஓப்பல் வாக்ஸ்ஹால், PSA ஆகியவற்றுடனும் ஒத்துழைத்துவருகிறது.

தொழிற்சங்கங்கள் PSA இற்கு தொழிலாளர்களுடைய நலன்களை விற்றுவிடத் தயாரிக்கையில், NPA, LO ஆகியவை மீண்டும் தொழிற்சங்க அதிகாரத்தவத்திற்கு தொழிலாளர்களை கீழ்படுத்தி வைக்க முயல்கின்றன. ஜூலை 12ம் திகதிக் கட்டுரையில் NPA எழுதியது. “PSA நிறுவனம் அல்லது கார்த்தொழில் தொழிலாளர்கள் திரட்டு என்று மட்டுமில்லாமல் அனைத்து தொழிலாளர்கள் திரட்டும் தீவிரப்படுத்தப்பட வேண்டும். அனைத்துத் தொழிற்சங்கங்கள், சமூக இயக்கங்கள் மற்றும் அரசியல் அமைப்புக்கள் அதைத் திறம்படச் செய்ய வேண்டும்.”

அதாவது தொழிலாளர்கள் அரசாங்கத்துடன் இணைந்து செயல்பட்டு தங்களுக்கு எதிராக ஆழ்ந்த வெட்டுக்களைக் கொண்டுவரும் அமைப்புக்களின் அரசியல் கட்டுப்பாட்டின்கீழ் இருக்க வேண்டும்.

கார் தயாரிப்புத் தொழிலாளர்கள் PSA க்கு எதிராக மட்டும் இல்லாமல், தொழிற்சங்கங்கள் அவற்றின் குட்டிமுதலாளித்துவ “காவலர்களான” NPA, LO ஆகியவற்றிற்கும் எதிராகப் போராட வேண்டும்; இவைதான் தொழிலாளர்களை வழிதடுமாறச் செய்து வர்க்கப் போராட்டங்களின் வெடிப்பை தாமதப்படுத்துகின்றன. கார் தயாரிப்பு தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் அவசர பணி, சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான அரசியல் போராட்டத்தில் ஹாலண்ட் அரசாங்கத்திற்கும் அதன் குட்டி முதலாளித்துவ ஆதரவாளர்களுக்கும் எதிராக அணிதிரண்டு போராட வேண்டும்.