WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் :
முன்னோக்கு
Quebec student strike at the crossroads
கியூபெக்
மாணவர்
போராட்டம்
முட்டுச்சந்தியில்
Keith Jones
13 July 2012
பல்கலைக்கழக
கல்விக்
கட்டண
உயர்வுக்கு
எதிராக
கியூபெக்
மாணவர்கள்
நடத்தி
வருகின்ற
ஐந்து
மாத
கால
வேலைநிறுத்தப்
போராட்டமும்
வேலைநிறுத்தங்களை
குற்றச்செயலாக்குவதுடன்
ஆர்ப்பாட்டம்
செய்யும்
உரிமையை
கட்டுப்படுத்தும்
78வது
மசோதாவிற்கு அவர்கள்
காட்டியிருக்கும்
தீரம்மிக்க
எதிர்ப்பும்
மாகாணத்தின்
லிபரல்
அரசாங்கத்தையும்
கனடாவின்
முழுஆளும்
வர்க்கத்தையும்
உலுக்கியிருக்கிறது.
இருந்தபோதிலும்,
இந்தப்
போராட்டத்தின்
தலைவிதி
இன்னும்
அந்தரத்தில்
தான்
தொங்கிக்
கொண்டிருக்கிறது.
போராட்டங்களால்
நிரம்பிய
பல்கலைக்கழகங்களும்
CEGEPகளும்
(முன்-
பல்கலைக்கழகங்களும்
மற்றும்
தொழில்நுட்பக்
கல்லூரிகள்)
ஆகஸ்டு
மாத
மத்தியில்
மீண்டும்
திறக்கின்ற
சமயத்தில்
78
ஆம்
மசோதாவின்
கீழ்
திணிக்கப்பட்ட
மூன்று
மாத
குளிர்பருவகால
இடைநிறுத்தக்
காலத்தை
அரசாங்கம்
பயன்படுத்தி
வரலாறுகாணாத
அளவில்
போலிசாரை
அணிதிரட்டி
வைத்திருக்கிறது.
தொழிற்சங்கங்கள்
போராட்டத்தை
திட்டமிட்டுத்
தனிமைப்படுத்தி
வருவதோடு
அதன்
தோல்விக்காக
தயாரிப்புசெய்து
வருகின்றன.
78 ஆம்
மசோதா
நிறைவேற்றப்பட்டவுடன்
வேலைநிறுத்தத்தை
உடைப்பதில்
ஆசிரியர்களும்
மற்ற
பல்கலைக்கழக
மற்றும்
CEGEP
ஊழியர்களும்
அரசாங்கத்திற்கு
உதவுவதை
உறுதி
செய்வதற்காக
தங்கள்
சக்திக்குட்பட்ட
அனைத்தையும்
செய்வதற்கு
அவர்களை
சட்டரீதியாக
நிர்ப்பந்தப்படுத்தும்
ஷரத்துகள்
உட்பட
அம்மசோதாவுக்கு
கியூபெக்கின்
தொழிற்சங்கக்
கூட்டமைப்புகள்
அனைத்தும்
தாங்கள்
கீழ்ப்படிந்து
நடக்கவிருப்பதை
அறிவித்தன.
கனடாவின்
ஆங்கிலம்
பேசும்
பகுதியிலுள்ள
தொழிற்சங்கங்களின்
கட்சியான
புதிய
ஜனநாயகக்
கட்சி
(NDP)
இவையெல்லாம்
“மாகாண
விவகாரங்கள்”
என்ற
போலிக்காரணத்தை
காட்டி
மாணவர்களை
சாதாரணமாக
ஆதரிப்பதற்கோ
அல்லது
78 ஆம்
மசோதாவை
எதிர்ப்பதற்கோ
கூட
மறுத்து
விட்டது.
கியூபெக்கின்
தொழிற்சங்கங்களும்
அவற்றின்
மிக
நேரடி
செல்வாக்கில்
இருக்கின்ற
மாணவர்
அமைப்புகளும்
இந்தப்
போராட்டத்தையும்
78 ஆம்
மசோதாவுக்கு
எதிராகக்
கிளம்பியிருக்கும்
எதிர்ப்பு
இயக்கத்தையும்
Parti Quebecois
என்கின்ற
பெருவணிகக்
கட்சியை
தேர்ந்தெடுப்பதை
நோக்கி
திசைதிருப்ப
முனைகின்றன.
மாகாணத்தின்
மிகப்பெரும்
தொழிற்சங்க
அமைப்பான
கியூபெக்
தொழிலாளர்
கூட்டமைப்பு
(QFL) “வீதிகளுக்குப்
பின்,
வாக்குப்
பெட்டிகளுக்கு”
என்று
முழங்குகின்றது.
கியூபெக்கிலும்,
கனடா முழுவதும்
மற்றும்
உலகெங்கிலும்
இருக்கின்ற
மாணவர்களும்
தொழிலாளர்களும்
கடந்த
ஐந்து
மாத
காலத்தின்
படிப்பினைகளை
எடுத்துக்
கொள்ள
வேண்டும்.
கல்வி
ஒரு
சமூக
உரிமையாக
அங்கீகரிக்கப்பட
வேண்டும்
என்கின்ற
மாணவர்களின்
கோரிக்கை
அவர்களை
கியூபெக்கின்
லிபரல்
அரசாங்கத்துடன்
மட்டுமல்ல,
ஒட்டுமொத்த
கனடாவின்
ஆளும்
வர்க்கம்,
அதன்
நீதிமன்றங்கள்
மற்றும்
போலிசுடன்
நேருக்குநேர்
மோதலில்
கொண்டுவந்து
நிறுத்தியிருக்கிறது.
காரணம்
என்னவென்றால்
இந்தப்
போராட்டமானது
இப்போதுவரை
மறைமுகமாக
மட்டுமே
என்றாலும்
கூட
கனடாவிலும்
மற்றும்
உலகெங்கிலும்
இருக்கக்
கூடிய
ஆளும்
வர்க்கத்தின்
அடிப்படையான
மூலோபாயத்தையே
சவால்
செய்துள்ளது.
பெருமந்தநிலைக்குப்
பிந்தைய
உலக
முதலாளித்துவத்தின்
மிக
ஆழமான
நெருக்கடிக்கு
பொதுச்
சேவைகளை
அழிப்பதன்
மூலமும்
வேலைகளிலும்
ஊதியங்களிலும்
பெரும்
வெட்டுகளை
செய்வதன்
மூலமும்
தொழிலாள
வர்க்கத்தை
பொறுப்பெடுக்க
செய்வதற்கு
எல்லா
இடங்களிலுமே
பெரு
வணிகங்களும்
அதன்
அரசியல்
பிரதிநிதிகளும்
தீர்மானகரமாக
செயல்படுகின்றனர்.
மாணவர்கள்
தங்களது
போராட்டத்தில்
வெற்றிபெற
வேண்டுமானால்,
அவர்கள்
ஆளும்
வர்க்கத்தின்
சிக்கன
நடவடிக்கைத்
திட்டத்திற்கு
எதிரான
அவர்களது
சவாலை
வெளிப்படுத்த
வேண்டும்.
கியூபெக்கிலும்
மற்றும்
வட
அமெரிக்கா முழுவதும்
அனைத்து
வேலைகளையும்
பொதுச்
சேவைகளையும்
பாதுகாத்து
தொழிலாள
வர்க்கம்
நடத்துகின்ற
பதில்தாக்குதலுக்கும்,
அத்துடன்
தொழிலாளர்
அரசாங்கங்களை
அதிகாரத்திற்குக்
கொண்டுவருவதை
நோக்கி
செலுத்தப்படுகின்ற
தொழிலாள
வர்க்கத்தின்
ஒரு
சுயாதீனமான
அரசியல்
இயக்கத்தை
அபிவிருத்தி
செய்வதற்குமான
ஒரு
ஊக்கியாக
அவர்களது
போராட்டத்தை
அரசியல்ரீதியாகவும்
பூகோளரீதியாகவும்
விரிவுபடுத்த
வேண்டும்.
சமூகப்
பொருளாதார
வாழ்வின்
இயக்கும்
கோட்பாடாக
தனியார்
இலாபங்களைக்
கொள்ளாமல்
சமூகத்தின்
தேவைகளே
இருக்கின்ற
வகையில்
பொருளாதாரத்தை
தீவிரமாய்
மறுஒழுங்கமைப்பு
செய்வதன்
மூலமாக,
பெருவணிகத்தின்
பிடியில்
இருந்து
சமூகப்பொருளாதார
வாழ்வை
விடுவிக்க
தொழிலாள
வர்க்கத்தால்
மட்டுமே
முடியும்.
இப்போராட்டத்திற்கு
முன்னெடுத்த
மற்றும்
78
ஆம்
மசோதாவின்
எதிர்ப்புக்கும்
தலைமை
கொடுத்த
CLASSE
உட்பட்ட
மாணவர்
அமைப்புகளின்
முன்னோக்கு
வெளிப்படையாக
தோல்விகண்டுள்ளது.
கியூபெக்கின்
லிபரல்
அரசாங்கம்
மற்றும்
மத்திய
அரசின்
கன்சர்வேடிவ்
அரசாங்கங்களது
சிக்கன
நடவடிக்கை
திட்டங்களுக்கான
எந்த
பரந்த
எதிர்ப்பில்
இருந்தும்
மாணவர்களது
போராட்டத்தைப்
பிரித்து
ஒரு
தனிவிடயமான
ஆர்ப்பாட்டப்
பிரச்சாரங்களை
நடத்துவதன்
மூலமாக
கல்விக்
கட்டண
உயர்வை
கைவிடுவதற்கு
அரசாங்கத்திற்கு
நெருக்குதலளித்து
விட
முடியும்
என்று
மாணவர்
அமைப்புகள்
வலியுறுத்தின.
ஆனால்
கியூபெக்கின்
லிபரல்
அரசாங்கம்
ஆர்ப்பாட்டங்களுக்கு
வளைந்து
கொடுக்காதது
மட்டுமின்றி
78
ஆம்
மசோதா
நிறைவேற்றப்பட்டதன்
உச்சகட்டமாக
வரலாறு
காணாத
போலிஸ்
அடக்குமுறையிலும்
இறங்கியது.
78
ஆம்
மசோதாவிற்கான
பதிலாக
போராட்டத்தை
விரிவுபடுத்த
வேண்டும்
என்று
பல
மாணவர்களும்
நெருக்குதலளித்த
நிலையில்,
CLASSE
ஒரு
“சமூக
வேலைநிறுத்த”த்திற்கு
அழைப்புவிட்டது.
ஆயினும்
இந்த
அழைப்பு
CLASSE
இன்
நடுத்தர-வர்க்க
ஆர்ப்பாட்ட
நோக்குநிலையின்
தொடர்ச்சியையே
குறித்ததே ஒழிய,
அதனுடனான
முறிவைக்
குறிக்கவில்லை.
முதலாளித்துவ-எதிர்ப்புப்
போராட்டங்களின்
குவியம்
(Convergence of Anti-Capitalist Struggles)
மற்றும்
பிற
அரசுநிராகரிப்புவாத
குழுக்களால்
ஊக்குவிக்கப்படும்
ஒரு
கருத்தான
இந்த
“சமூக
வேலைநிறுத்தம்”
என்பது
தொழிலாளர்களின்
மட்டுப்படுத்தப்பட்ட
வேலைநிறுத்த
நடவடிக்கைகள்
உட்பட்ட
ஒரு
பரந்த
ஆர்ப்பாட்டத்தைக்
குறிக்கிறது.
எவ்வாறாயினும்
இது,
சாரஸ்ட்டின்
லிபரல்
அரசாங்கத்தைக்
கீழிறக்குவதையோ
மற்றும்
சோசலிசக்
கொள்கைகளை
நடைமுறைப்படுத்தும்
தொழிலாளர்’
அரசாங்கங்களுக்கான
போராட்டத்தை
அபிவிருத்தி
செய்வதையோ
நோக்கமாகக்
கொண்ட
ஒரு
அரசியல்
பொது
வேலைநிறுத்தத்திற்கு
நேர்
எதிரான
ஒன்றாகும்.
தொழிற்சங்கங்களைப்
பொறுத்தவரை,
ஒரு
அரசியல்
வேலைநிறுத்த
நடவடிக்கையை
ஒத்த
எதுவொன்றுமே,
அது
ஒருநாளைக்கு
மட்டுமே
என்றாலும்
கூட,
அது
எட்டிக்காயாகத்
தான்
கசக்கிறது.
சென்ற
மே
மாத
இறுதியில்,
ஒரு
சமூக
வேலைநிறுத்தத்தை
“தீவிரவாத
குழுவினர்”
ஊக்குவித்து
வருவது
குறித்து
எச்சரிப்பதற்கும்
ஆங்கிலப்
பேசும்
கனடாவில்
இருக்கும்
தொழிற்சங்கங்கள்
மாணவர்களுக்கு
ஆதரவை
மறுக்க
வேண்டும்
எனக்
கோருவதற்கும்
QFL
தலைவரான
மைக்கேல்
ஆர்சினால்ட்
கனடா
தொழிலாளர்
காங்கிரசுக்கு
கடிதம்
எழுதினார்.
கியூபெக்கின்
இரண்டாவது
பெரும்
தொழிற்சங்கக்
கூட்டமைப்பான
தேசிய
தொழிற்சங்கங்களின்
கூட்டமைப்பின்
(Confederation of National Trade Unions)
தலைவரான
லூயிஸ்
ரோய்,
அவரும்
CLASSE
இன்
செய்தித்தொடர்பாளர்
ஒருவரும்
உரையாற்றிய
ஒரு
அரங்கில்,
அந்த
செய்தித்தொடர்பாளர்
ஒரு
சமூக
வேலைநிறுத்தத்திற்கு
ஆதரவாகப்
பேசியதை
வெளிப்படையாகக்
கண்டித்துப்
பேசினார்.
இந்த
எதிர்ப்பினால்
CLASSE
ஒரு
சமூக
வேலைநிறுத்தம்
குறித்து
பேசுவதையே
மொத்தமாய்
நிறுத்தி
விட்டது.
ஜூன்
22 அன்று
மொன்றியாலிலும்
கியூபெக்
நரத்திலும்
நடந்த
பெருந்திரளான
ஆர்ப்பாட்டங்களில்
CLASSE
தலைவர்கள்
அது
குறித்து
வாயே
திறக்கவில்லை
என்பதோடு
போராட்டத்தை
அடுத்த
மூன்று
வாரங்களிலும் இந்த
வேலைநிறுத்தம்
குறித்து
வெளிப்படையாக
எதுவுமே
கூறவில்லை.
வியாழனன்று
தான்
இந்த
மௌனம்
கலைந்தது.
CLASSE
விநியோகித்த
ஒரு
“அறிக்கை”
அதன்
தலைவர்கள்
கடந்த
ஐந்து
மாதங்களில்
எதனையும்
கற்றிருக்கவில்லை
என்பதையும்
அவர்கள்
போராட்டத்தை
காட்டிக்கொடுப்பதில்
தொழிற்சங்கங்களின்
தொங்குசதைகளாக
வேகமாக
மாறிக்கொண்டிருக்கின்றனர்
என்பதையும்
காட்டுகிறது.
மாணவர்
போராட்டம்
கல்விக்
கட்டண
அதிகரிப்பு
விவகாரத்தைக்
கடந்து
விரிந்து
சென்று
விட்டது
என்று
ஒப்புக்
கொள்ளும்
இந்த
அறிக்கை
இப்போராட்டம்
கியூபெக்கை
ஜனநாயகமயப்படுத்துவதற்கான
ஒரு
“மக்கள்
போராட்ட”மாகியிருப்பதாக
கூறுகிறது.
முழுக்க
“மக்கள்”
குறித்த
பேச்சு
தான்
அதில்
இருக்கிறதே
அன்றி
ஒடுக்கப்பட்ட
மற்றும்
“ஒதுக்கப்பட்ட”
குழுக்களின்
ஒரு
நீண்ட
பட்டியலில்
தொழிலாள
வர்க்கமும்
ஒன்றே
என்று
அது
நிராகரிக்கிறது.
முதலாளித்துவம்
என்ற
வார்த்தையே
அதில்
இல்லாததோடு,
உலக
முதலாளித்துவ
நெருக்கடி
பற்றியோ
அல்லது
கிரீஸ்
தொடங்கி
ஸ்பெயின்
ஊடாக
எகிப்து
வரையிலும்
அது
தூண்டிக்
கொண்டிருக்கும்
தொழிலாள
வர்க்க
எதிர்ப்பு
பற்றி
எதுமே
இல்லை.
உண்மையில்,
கியூபெக்கின்
எல்லைகளைக்
கடந்த
எந்த
அபிவிருத்திகளுமே
CLASSE
அறிக்கையில்
இடம்பிடிக்கத்
தகுதி
பெறவில்லை.
இத்தனைக்கும்
அவர்கள்
தங்களின்
போராட்டத்திற்கான
காரணங்களில்
ஒன்றாக
அடிக்கடிக்
குறிப்பிட்டுக்
காட்டும்
அமெரிக்க
மாணவர்கள்
முகம்
கொடுக்கும்
பெரும்
கடன்
சுமைகள்
குறித்து
கியூபெக்
மாணவர்களுக்கு
நன்கு
தெரிந்தபோதிலும்.
கியூபெக்கிற்குள்ளேயே
மொத்த
கவனமும்
செலுத்தப்பட்டிருந்த
போதிலும்
கூட,
இந்த
எட்டு
பக்க
அறிக்கையானது,
Parti Quebecois
உம்
மற்றும்
தொழிற்சங்கங்களும்
இந்த
போராட்டத்தைக்
கலைத்து
அதனை
கியூபெக்
வரலாற்றில்
மிகப்பெரும்
சமூகச்
செலவின
வெட்டுகளை
நடத்திய
PQஐ
திரும்ப
ஆட்சிக்குக்
கொண்டுவருவதற்கான
பிரச்சாரமாக
மாற்ற
முனைவது
குறித்து
ஒரு
வார்த்தையும்
கூட
குறிப்பிடத்
தவறுகிறது.
இறுதி
பத்தியில்தான் சமூக
வேலைநிறுத்தம்
பற்றிய
குறிப்பே
இருக்கிறது.
அதுவும்
கூட
அதனை
ஒரு
விரிந்த
போராட்டத்திற்கான
நோக்கம்
என்பதைக்
காட்டிலும்
நம்பிக்கை
என்று
தொனிக்கின்ற
வகையிலே
தான்
குறிப்பிடப்பட்டிருக்கிறது.
யார்
அதை
நடத்துவார்கள்,
எப்போது,
அல்லது
எதை
நோக்கி
என்பதையெல்லாம்
குறித்து
அதில்
ஒரு
வார்த்தையும்
கூட
இல்லை.
CLASSE
அது
தொடர்ந்து
உண்மையான
தொழிலாளர்’
அமைப்புகளாகவும்
மாணவர்களின்
கூட்டாளிகளாகவும்
தம்மை
காட்டிக்கொள்கின்ற
தொழிற்சங்கங்களின்
அழுத்தத்திற்கு
மீண்டுமொரு
முறை
அடிபணிந்திருக்கிறது.
அவர்கள்
அறிக்கையை
விநியோகிப்பதற்கு
முந்தைய
நாள்,
CLASSE
தலைவர்கள்
பலரும்
போராடும்
மாணவர்களைத்
தனிமைப்படுத்தக்
கோரி
CLCக்கு
எழுதிய
கடிதம்
குறித்து
விவாதிப்பதற்கு
எனக்கூறி
QFL
தலைவரான
ஆர்சினால்டை
சந்தித்தனர்.
சந்திப்பு
முடிந்ததும்,
CLASSE
தகவல்தொடர்புச்
செயலரான
லுத்விக்
மோகின்
பீத்ரி
கூறுகையில்,
போராட்டத்திற்கான
ஆதரவை
QFL மீண்டும்
மறுவலியுறுத்தியிருப்பதாகக்
கூறினார்.
“அவர்கள்
உண்மையாக
இருப்பதாக
தாம்
நம்புவதாக”என்று
அவர்
மேலும்
சேர்த்துக்
கொண்டார்.
தூக்கிலிட்ட
ஒரு
மனிதனுக்கு
கயிறு
ஆதரவழிப்பது
போலத்
தான்
மாணவர்
வேலைநிறுத்தத்திற்கு
QFL அளிக்கும்
“ஆதரவு”
அமைந்துள்ளது.
கியூபெக்கில்
இருக்கும்
தொழிற்சங்கங்கள்
உலகெங்கும்
இருக்கும்
சங்கங்களைப்
போலவே
தொழிலாளர்
அமைப்புகளாக
இல்லாமல்,
மாறாக
தொழிலாள
வர்க்கத்தை
ஒடுக்குவதில்
பெருவணிகம்
மற்றும்
அரசுக்கான
துணை அமைப்புகளாகவே
இருக்கின்றன.
தொழிலாள
வர்க்கத்தை
அணிதிரட்டுவதென்பது
இந்த
முதலாளித்துவ
ஆதரவு
அமைப்புகளின்
வழியாக
நடைபெற
இயலாது,
மாறாக
அவற்றுடன்
அரசியல்ரீதியாகவும்
அமைப்புரீதியாகவும்
முறித்துக்
கொண்டு
தொழிலாள-வர்க்கப்
போராட்டத்தின்
புதிய
அமைப்புகளை
அபிவிருத்தி
செய்வதன்
மூலமாகத்
தான்
இயலும்.
கியூபெக்
மாணவர்
போராட்டம்
ஒரு
சோசலிச
முன்னோக்கின்
அடிப்படையில்
மீண்டும்
ஆரம்பிக்கப்பட
வேண்டும்.
மாணவர்கள்,
அவர்களது
போராட்டம்
மட்டுப்படுத்தப்பட்டிருக்கின்ற
குறுகிய
கியூபெக்
வட்டத்திலிருந்து
விடுவித்துக்
கொண்டு
தொழிலாள
வர்க்கத்தின்
பரந்த
அடுக்குகளை
நோக்கித்
திரும்புவதன்
மூலமும்,
அத்துடன்
ஒரு
சோசலிச
மற்றும்
சர்வதேசிய
வேலைத்திட்டத்தினால்
ஆயுபாணியாக்கப்பட்ட
தொழிலாள
வர்க்கத்தின்
ஒரு
சுயாதீனமான
அரசியல்
இயக்கத்தை
அபிவிருத்தி
செய்வதற்காய்
போராடுவதன்
மூலமும்
மட்டுமே
அவர்களுக்கு
எதிராக
செலுத்தப்படுகின்ற
அரசு
ஒடுக்குமுறைப்
பிரச்சாரத்துக்கு
பதிலடி
கொடுக்கவும்,
கல்வியை
ஒரு
சமூக
உரிமையாக
அங்கீகரிக்க
வேண்டும்
என்கின்ற
அவர்களது
நியாயமான
கோரிக்கையை
வெற்றிபெறவும்
முடியும். |