WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் :
முன்னோக்கு
The real
significance of Libya’s elections
லிபியத்
தேர்தல்களின் உண்மையான முக்கியத்துவம்
Jean
Shaoul and Chris Marsden
11 July 2012
லிபியாவில்
ஒரு புதிய பொதுத் தேசியக் காங்கிரஸிற்கான
(General
National Congress- GNC)
தேர்தல்கள்
முக்கிய மேலைச் சக்திகள், பெருநிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் நலன்களுக்குத்
தாழ்ந்து நடக்கும் சர்வாதிகார, ஜனநாயகமற்ற அரசாங்கத்திற்கு ஒரு “ஜனநாயக” மூடுதிரையை
வழங்கும் முயற்சி ஆகும்.
நேட்டோ
நிறுவியிருந்த தேசிய இடைக்காலக்குழு(NTC),
வேட்பாளர் தன்மை ஒப்பீட்டளவில் தேர்தல் ஆணையம் ஒப்புதல் கொடுக்கும்
ஒரு சிறிய அடுக்குடன் கட்டுப்படுத்தப்படுவதை உறுதி செய்தது.
மஹ்முத்
ஜிப்ரில் இன்
Alliance
of National Forces-
ANC
மிக அதிக இடங்களை புதிய 200 பேர் கொண்ட காங்கிரஸில் வெற்றி
பெற்றுள்ளது என்ற குறிப்புக்கள் வந்துள்ளன; வாக்குப் பதிவு செய்த 80% லிபியர்களில்
60%
தேர்தல்களில் வாக்களித்தனர். இது எப்படி உண்மையான இடங்களில் பிரதிபலிக்கப்போகிறது
என்பது முடிவுகள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டபின்தான் தெளிவாகத் தெரியவரும்.
ஜிப்ரில்,
நேட்டோத் தலைமையில் முயம்மர் கடாபியின் ஆட்சியை அகற்றுவதற்கு நடந்த
இராணுவத் தாக்குதலின் போது நிறுவப்பட்ட
NTC
க்கு மாற்றாக ஒரு கூட்டணி அமைக்க முற்படுவார். ஆனால் நாட்டில்
அரசியல் பிளவுகள் இருக்கும் நிலைமையில், அதில் வெற்றிகாண்பார் என உறுதி கூறுவதற்கு
இல்லை.
“தாராளவாதக்காரர்” எனக் கருத்படும் ஜிப்ரில் வெற்றி குறித்துக் குறிப்பிட்த்தக்க
திருப்தியோடு உத்தியோகபூர்வ பாசாங்குத்தனம் ஒரு கோஷ்டியாக தேர்தலை வரவேற்றதில்
வெளிப்படுத்தப்பட்டது. அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா,
“ஜனநாயக மாற்றத்திற்கான இந்நாட்டு வரலாற்றில் இது இன்னுமொரு மைல்கல் ஆகும்”
என்றார். ஐரோப்பிய ஒன்றியம் “லிபியாவின் முதல் சுதந்திரத் தேர்தல்கள்” “ஒரு புதிய
சகாப்தத்தின் விடியல்” என்று பாராட்டியுள்ளது.
ஐ.நா.வின்
பொதுச் செயலாளர் பான் கீ-மூன், “லிபிய மக்கள் மனித கௌரவம், சட்டத்தின் ஆட்சி என்ற
அடிப்படையில் ஒரு புதிய நாடு கட்டமைப்பதற்கு உரிமை பெறுவதற்காக கடந்த ஆண்டு
ஆயிரக்கணக்கான லிபியர்கள் தங்கள் உயிர்களைத் தியாகம் செய்தனர், அல்லது நீடித்த
காயங்களுக்கு உடன்பட்டனர்” என்றார்; ஏதோ இது இப்பொழுது உண்மையாகிவிட்டது போல்.
வளைந்து
கொடுக்கும் செய்தி ஊடகம் முடிவுகளைப் பற்றிக் களிப்புற்று, அதன் உண்மைத் தன்மையை
மறைத்துள்ளது. “ஜனநாயகத்திற்கான மாற்றங்கள் தவிர்க்க முடியாமல் நீடித்த்தாகவும்
குழப்பமாகவும் இருக்கும்” என்று நியூ யோர்க் டைம்ஸ் எழுதியது.
இருந்தபோதிலும் “இத்தேர்தல் கடாபி ஆட்சி என்னும் தீய கனாவில் இருந்து ஒரு மிகப்
பெரிய அடி தூரம் தள்ளித்தான் உள்ளது.” எனத் தொடர்ந்தது.
“அக்காலத்திய
குறைபாடுகளை” கடப்பதற்கு, “அறிவொளிமிக்க, சகிப்புத்தன்மை நிறைந்த அரசியல்
தலைவர்கள், சட்டத்தின் ஆட்சி, அனைத்து லிபியர்களுக்கும் பொறுப்பு மற்றும் நியாயமான
பிரதிநிதித்துவம்” தேவை என்று விந்தையின்றிக் கூறிய
டைம்ஸ்,
ஜிப்ரில் ஒரு பெரும் கூட்டணி அமைக்கத் தயார் எனக் கூறியிருப்பது
“அனைத்தையும் அரவணைத்துச் செல்ல வேண்டும் என்னும் ஊக்கம் கொடுக்கும் திறனுடைய
அடையாளம்” என்றும் உறுதியாகத் தெரிவித்துள்ளது.
இத்தகைய
அனைத்து தகவல்களும், வர்ணனைகளும், “அரபு வசந்தத்தை” குறித்துத் தவிர்க்கமுடியாமல்
மேலாடை போர்த்தல் ஆகியவை லிபியாவில் ஆட்சி மாற்றம் என்பது அமெரிக்க மற்றும்
ஐரோப்பிய சக்திகள் துனிசியா, எகிப்து என்னும் லிபியாவின் எல்லையில் இருக்கும்
நாடுகளில் ஏற்பட்ட புரட்சி எழுச்சிகளுக்கு அரசியல்/இராணுவ வழிவகையில் எதிர்கொண்ட
தன்மை என்பதை மூடிமறைப்பதாகும்
விடுதலை,
ஜனநாயகம் இவற்றை கோருவதற்கு முற்றிலும் அப்பால், நேட்டோ சக்திகள் தங்கள்
கோரிக்கைகளுக்கு இன்னும் நேரடியாகப் பதில் கூறும் ஆட்சியை நிறுவ முற்பட்டனர்.
அவர்களுடைய நோக்கம் பிராந்தியத்தின் கணக்கிலடங்கா ஊழல் ஆட்சிகளுக்கு எதிராக
நடக்கும் அனைத்து எதிர்ப்பு இயக்கங்களையும் கட்டுப்படுத்த வேண்டும் அல்லது தீவிரமாக
நசுக்க வேண்டும்; லிபியாவின் எண்ணெய் இருப்புக்களுக்குப் பாதுகாப்பான அணுகும்
வாய்ப்பு வேண்டும் என்பதாகும். ஆபிரிக்காவிலேயே அதிக எண்ணெய் இருப்புக்கள்
இங்குதான் உள்ளன; இதைத்தவிர மத்திய கிழக்கு, வட ஆபிரிக்கா ஆகியவற்றின் எண்ணெய்
இருப்புக்களுக்கும் அணுகும் வாய்ப்பு தேவை.
மத்தியதரைக்கடல் பகுதி நேட்டோ கட்டுப்பாட்டின்கீழ் இருக்கும் ஏரியாக மாற்றப்பட
வேண்டும்; இது சிரியா, லெபனான் ஆகியவற்றில் ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவந்தபின்
ஏற்படும்; அதே நேரத்தில் லிபியா ஆபிரிக்காவில் வருங்காலத் தலையீடுகளுக்கு முதலில்
இறங்குமிடமாக இருக்கும்.
ஜிப்ரில்
இக்கொள்கையின் உயிர்த்த உருவகம் ஆவார். அமெரிக்கப் பயிற்சி கொண்ட இவர், லிபியத்
தலைவரான கடாபியின் மைந்தர் சைப் அல்-இஸ்ராத் கடாபிக்கு மிகவும் உகந்தவர்.
மேலைச்சக்திகளுக்குத் தன்னையே இவர் பரிந்துரை செய்தது, தன்னுடைய முந்தைய
நண்பர்களைக் கைவிடத் தயாராக இருந்து அரசாங்கத்திற்குச் சொந்தமான நிறுவனங்களைத்
தனியார் மயமாக்கும் பொறுப்பைக் கொண்ட தேசியப் பொருளாதார வளர்ச்சிக் குழுவின்
முன்னாள் தலைவர் என்ற பங்கை அவர் கொண்டிருந்ததுதான். தடையற்ற வெறுப்பு
மனப்பான்மையுடன் பிரித்தானியாவின் கார்டியன் ஜிப்ரில் “அனுபவம் என்னும்
அனுகூலத்தை கொண்டுள்ளார்” என்று கூறியது.
நேட்டோ போர்
லிபியா மீது இயக்கப்படுகையில் ஓர் இடைக்கால அரசாங்கமாக மார்ச் மாதத் தொடக்கத்தில்
NTC
அமைக்கப்பட்டபோது, ஜிப்ரில் அதன் தலைவராக நியமிக்கப்பட்டார். ஆகஸ்ட் மாதம்
குறைந்தப் பட்சம் 50,000 பேரைக் கொன்று மற்றும் ஒரு 50,000 பேரைக்காயப்படுத்திய
போருக்குப்பின் அவர் பிரதம மந்திரியாக இருத்தப்பட்டார்.
NTC
உடைய அரசியலமைப்பு பிரிவுகளில்ள்—முன்னாள்
கடாபி ஆட்சித் தலைவர்கள், இஸ்லாமிய வாதிகள்,
CIA
ஆதரவாளர்கள் மற்றும் பழங்குடித் தலைவர்கள்—எந்தப்
புதிய ஆட்சியிலும் கணிசமான பங்கைப் பெறும்.
லிபியா
இனவழிப் பூசல்களாலும், பழங்குடி மக்கள் மோதல்களினாலும், போராளிகளுக்கு இடையே
சண்டைகள் ஆகியவற்றாலும் சிதைக்கப்படுகிறது; இவற்றால் நூற்றுக்கணக்கான, ஏன்
ஆயிரக்கணக்கான மக்கள் நேட்டோ தலையீட்டுப் போருக்குப் பின்னரும் கொல்லப்பட்டுள்ளனர்.
நாடு பிளவுற்றுவிடலாம் என்னும் வாய்ப்பும் தெளிவாகத் தெரிகிறது.
லிபிய
எண்ணெய் உற்பத்தியின் மையத்தானமும், புரட்சியின் தொட்டில் என அழைக்கப்படும் நகரான
பெங்காசி,
சிரேனைக்காவிற்கு
(Cyrenaica)
தன்னாட்சி கோரி, எண்ணெய் வளத்தின்மீது கூடுதல் கட்டுப்பாட்டையும்
கோரியுள்ளது. இத்தேர்தல்கள் வன்முறையின் பாதிப்பை அதிகம் கொண்டன. இடைக்கால
அரசாங்கம் கிட்டத்தட்ட 30,000 முதல் 40,000 வரை படையினர்களை சுமுகமான தேர்தல்
நடைபெற நிலைநிறுத்தியது. பெங்காசியில் 48 மணி நேரம் எண்ணெய் உற்பத்தி நிறுத்தி
வைக்கப்பட்டது; புதிய காங்கிரஸில் இடப் பங்கீட்டை எதிர்த்து தேர்தல் அதிகாரிகளுக்கு
எதிரான பல தாக்குதல்கள் நடைபெற்றன. இவை திரிப்போலிக்குக் கூடுதல் அதிகாரத்தைக்
கொடுப்பதாகக் கருதுகின்றன.
ஏராளமான
போலி இடது கட்சிகள், அறிவுஜீவிகள் மற்றும் பேராசிரியர் ஜுவான் கோல் போன்ற
உயர்கல்விக்கூடத்தினர், லிபியாவில் பிரதான சக்திகள் தலையிடுவதற்காக கூறப்பட்ட போலி
மனித உரிமைகள் காரணத்திற்கு இசைவு கொடுத்தனர். இதனால் காலனித்துவவகை ஆக்கிரமிப்பு
போருக்கு ஆதரவு கிடைத்தது.
இது அரசியல்
கபடமற்ற தன்மை அல்ல; ஏகாதிபத்தியத்திற்கு ஆதரவாக உறுதியாக, முழு உணர்வுடன் நிற்பது
ஆகும். இவர்கள் நேட்டோவை ஆதரித்த காரணம், உண்மையான தொழிலாள வர்க்க இயக்கம் மத்திய
கிழக்கில் வளர்ச்சி அடைவதைத் தடுக்கும் பகிர்ந்து கொள்ளப்பட்ட நோக்கம்தான்—இத்தகைய
நிலை வரக்கூடும் என்பதை அவர்கள் மறைக்கமுடியாத இகழ்வுடன் சித்தரித்து அதை
நடைமுறைக்கு வரமுடியாத கனவு என்றனர். பெங்காசி இயக்கம் அதன் ஆரம்ப கட்டத்தில்
இருந்தே அமெரிக்காவினால் ஒரு கூட்டாக ஏற்றுக் கொள்ளப்பட்டது என்பதற்கான
மறுக்கமுடியாத ஆதாரத்தை முகங்கொடுக்கையில் இந்த குட்டி முதலாளித்துவக் பிரிவுகள்
ஒரு முதலாளித்துவ சார்பு மற்றும் பூர்ஷ்வா இயக்கமான
NTC
க்கு, அதுவும் நேட்டோ மின்னல் தாக்குதலின் ஆதரவுடன்,
இதன் வெற்றி இப்பிராந்தியத்தைத் தவிர்க்கமுடியாமல் பிரதான சக்திகள்
மற்றும் உலகளாவிய பெருநிறுவனங்களின் ஆணைகளுக்கு உட்படுத்தும் என்று அறிந்தும்கூட
ஆதரவு கொடுக்க முன்வந்தன.
தேர்தலுக்குப் பின்பு வக்காலத்து வாங்கியதில் பேராசிரியர் கோல் தன்னையே மிஞ்சும்
வகையில், செய்திகளைப் பற்றித் தகவல் கொடுப்பது தற்பொழுது “என்னுடைய பார்வையின்
தீவிர அவநம்பிக்கைத்தனம் மற்றும் பரபரப்புத்தன்மை இணைந்த வகையில் மாசுபட்டுவிட்டது”
என்றார். “தேர்தல்கள் மிக நன்றாக நடந்தன” என்று வலியுறுத்திய அவர் “இதற்குக் காரணம்
இத்தலைமை லிபிய மக்களிடையே ஜனநாயகம் உண்மையிலேயே, மிக உண்மையிலேயே பெரும்
செல்வாக்கைக் கொண்டுள்ளது” என்றார்.
இன்று
இந்தத் தட்டுக்கள் இதே அரசியல் நியாயப்படுத்துதல்களை ஈரானைத் தனிமைப்படுத்தும்
நோக்கத்துடன் சிரியாவில் நடக்கும் ஆட்சிமாற்றத்திற்கான நடவடிக்கைகளுக்கு ஆதரவு தர
மறுக்கும் சிரிய எதிர்ப்பிற்கும் பயன்படுத்துகின்றன. அப்பிராந்தியத்தில் இருந்து
ரஷ்யா மற்றும் சீனாவை விரட்டவும், வாஷிங்டனின் மேலாதிக்கத்தை நிறுவவும்
முயல்கின்றன.
லிபியாவில்
இருந்து பற்றி எடுக்க வேண்டிய மிக முக்கியமான படிப்பினை,
பிராந்தியத்தின் முதலாளித்துவத்தின் எந்தப் பிரிவிடமும் ஜனநாயக,
சமூகப் புதுப்பித்தலுக்கான பணிகளை விட்டுக் கொடுத்துவிடுதல் கூடாது என்பதுதான்.
அவ்வாறு செய்வது தொழிலாள வர்க்கத்தை நிராயுதபாணிகளாக்கிவிடுதல், பொதுமக்களை
நசுக்குதல் என்பவற்றிற்கு ஒப்பாக்கி, ஏகாதிபத்தியவாதிகள் இப்பிரிவுகளைத் தங்கள்
பதிலிகளாகச் செயல்படுத்த அனுமதித்துவிடும் என்பதுதான்.
பிராந்தியத்தின் ஊழல் மிகுந்த ஆட்சிகளை அகற்றி அவற்றிற்குப் பதிலாக சோசலிச,
ஏகாதிபத்திய எதிர்ப்பு, உண்மையான ஜனநாயக அரசாங்கங்களைக் கொண்டுவருவது தொழிலாள
வர்க்கத்தின் பணியே. அது மத்திய கிழக்கு ஐக்கிய சோசலிச அரசுகள் என்ற வடிவத்தில்
தொழிலாளர்களாலேயே ஆளப்படும்.
அமெரிக்கா,
ஐரோப்பா மற்றும் உலகின் பிற பகுதிகளில் உள்ள தொழிலாளர்கள்,
உலகத்தையும் மற்றும் அதன் மூலோபாய வளங்கள், சந்தைகள் ஆகியவற்றின்
மீது கட்டுப்பாட்டை கொண்டுவர மீண்டும் ஏகாதிபத்திய சக்திகளின் புதுப்பிக்கப்படும்
உந்துதலின் அடையாளம்தான் லிபியாவின் குருதி கொட்டும் பேரழிவு விளைவுகளுக்கு
முன்னோடி என்றுதான் காணவேண்டும். ஒரு புதிய போர் எதிர்ப்பு இயக்கம் தேவைப்படுகிறது—இது,
தொழிலாள வர்க்கம் மற்றும் இளைய தலைமுறையினர்மீது உறுதியாக
அடித்தளத்தை கொண்டிருக்க வேண்டும். இது மத்திய கிழக்கிலும், ஆபிரிக்காவிலும் ஆளும்
உயரடுக்குகளின் கொள்ளை நோக்கங்களை சவால் விட்டு எதிர்ப்பதற்கு மனிதாபிமானப்
போருக்கு வாதிடும் குட்டி முதலாளித்துவ பிரிவினரின் அரசியல் செல்வாக்கில் இருந்து
விடுபடவேண்டும். |