WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஆசியா :
இந்தியா
இந்தியா:
NLC
காட்டிக் கொடுப்பின் படிப்பினைகள்
By the Socialist Equality Party (Sri Lanka)
11 July 2012
use
this version to print | Send
feedback
தென்னிந்திய
மாநிலமான
தமிழகத்தில்
அமைந்திருக்கும்
நெய்வேலி
லிக்னைட்
கார்பரேஷன்
(NLC) நிறுவனத்தில்
14,000 ஒப்பந்தத்
தொழிலாளர்கள்
போர்க்குணத்துடன்
நடத்திய
44 நாள்
வேலைநிறுத்தப்
போராட்டம்
காட்டிக்
கொடுக்கப்பட்டதானது
இந்தியா
முழுவதிலுமான
தொழிலாள
வர்க்கத்திற்கு
முக்கியமான
அரசியல்
படிப்பினைகளைக்
கொண்டுள்ளது.
எத்தனையோ
இன்னல்களைச்
சகித்துக்
கொண்டு,
NLC
தொழிலாளர்கள்,
தங்கள்
வேலைநிறுத்தத்தை
தொடர்ந்து
நடத்தி,
மிதமிஞ்சிய
இலாபங்களை
ஈட்டும்
பொருட்டு
இந்தியா
முழுவதிலும்
அரசு
மற்றும்
தனியார்
நிறுவனங்கள்
செயல்படுத்தி
வரக்
கூடிய
ஒப்பந்த
வேலை
அமைப்புமுறையை
சவால்
செய்தனர்.
NLC
இந்தியாவின்
மத்திய
அரசாங்கத்திற்குச்
சொந்தமானதாகும்.
நிரந்தரத்
தொழிலாளர்களுக்கு
நிகரான
ஊதியம்
மற்றும்
வேலையை
“நிரந்தர”மாக்குவது
ஆகியவை
உட்பட்ட
தொழிலாளர்களின்
கோரிக்கைகளில்
எதுவுமே
பூர்த்தியாகாத
நிலையிலேயே
ஸ்ராலினிச
இந்திய
கம்யூனிஸ்ட்
கட்சி
(CPI) உடன்
இணைந்ததான
அனைத்திந்திய
தொழிற்சங்க
காங்கிரஸ்
(AITUC)ஜூன்
3 அன்று
போராட்டத்தை
விலைபேசும்
ஒரு
ஒப்பந்தத்தில்
NLC
நிர்வாகத்துடன்
கையெழுத்திட்டு
வேலைநிறுத்தத்தை
முடிவுக்குக்
கொண்டு
வந்தது.
வேலைக்குத்
திரும்புவதற்கு
சங்கம்
அளித்த
உத்தரவை
ஏற்க
வேலைநிறுத்தம்
செய்த
தொழிலாளர்களில்
அநேகம்
பேர்
பல
நாட்களுக்கு
மறுத்தனர்.
நூற்றுக்கணக்கானோர்
நெய்வேலியில்
இருக்கும்
உள்ளூர்
AITUC
அலுவலகத்திற்கு
வெளியே
ஆர்ப்பாட்டம்
நடத்தினர்,
அடுத்த
நாளில்
அத்தொழிற்சங்க
வளாகத்தையும்
சூறையாடினர்.
ஆயினும்
ஒரு
மாற்று
அரசியல்
முன்னோக்கும்
தலைமையும்
இல்லாத
நிலையில்,
அவர்களால்
தங்களது
கிளர்ச்சியைத்
தொடர்வதற்கு
முடியாமல்
போனது.
புறநிலையாகப்
பார்த்தால்,
வேலைநிறுத்தம்
செய்த
தொழிலாளர்கள்
போராடியது
NLC
நிர்வாகத்திற்கு
எதிராக
மட்டுமன்றி,
தேசிய
அளவில்
காங்கிரஸ்
தலைமையிலான
கூட்டணி
அரசாங்கத்தை
எதிர்த்தும்
தமிழ்நாட்டில்
அனைத்திந்திய
அண்ணா
திராவிட
முன்னேற்றக்
கழக
அரசாங்கத்தை
எதிர்த்தும்
தான்.
தொழிலாளர்களின்
கோரிக்கைகளை
தோற்கடிப்பதில்
இரண்டு
அரசாங்கங்களுமே
மிக
முக்கியமான
கருவிகளாக
இருந்தன.
ஆயினும்,
தொழிற்சங்கங்கள்
மாநில
மற்றும்
மத்திய
அரசாங்கங்களுக்கு
எதிரான
எந்த
ஒரு
அரசியல்
போராட்டத்தையும்
மற்றும்
அதன்
அடிப்படையில்
தொழிலாளர்களின்
மற்ற
பிரிவுகளை
நோக்கித்
திரும்புவதையும்
நடக்கவிடாமல்
திட்டமிட்டுத்
தடுத்து
விட்டன.
வேலைநிறுத்தம்
செய்த
தொழிலாளர்களைத்
தனிமைப்படுத்துவதற்கு
AITUCம்
மற்றும்
இந்திய
மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட்
கட்சி
(CPM) உடன்
இணைந்ததான
இந்திய
தொழிற்
சங்கங்களின்
மையமும்
(CITU)தங்களால்
இயன்ற
அனைத்தையும்
செய்தன.
NLC
இன்
நிரந்தரத்
தொழிலாளர்களையும்
வேலைநிறுத்தத்தில்
இணைவதற்கு
அழைப்பதற்கும்
கூட
அவை
மறுத்தன.
வேலைநிறுத்த
காலம்
முழுவதிலும்,
AITUC
மற்றும்
CPI
தலைவர்கள்,
தொழிலாளர்களுக்கு
சாதகமான
வகையில்
“வேலைநிறுத்தப்
பிரச்சினையை
தீர்த்து
வைக்கும்படி”மாநிலத்தின்
அஇஅதிமுக
அரசாங்கத்திற்கு
விண்ணப்பம்
செய்து
கொண்டிருந்தனர்.
போராட்டம்
விலைபோவதற்கு
சில
நாட்களுக்கு
முன்னர்,
CPI மாநிலச்
செயலரான
தா.பாண்டியன்
“மக்களின்
நலனுக்காக
நல்ல
பல
திட்டங்களை”
உருவாக்கித்
தந்ததற்காக
முதலமைச்சர்
ஜெயலலிதாவைப்
புகழ்ந்தார்.
இந்த
அரசியல்
கேலிக்கூத்திற்கு
CPM
மற்றும்
CITU ஆட்சேபம்
செய்யவில்லை.
முதலமைச்சர்
ஜெயலலிதாவும்
அவரது
வலதுசாரி
அஇஅதிமுக
அரசாங்கமும்
தொழிலாள
வர்க்க
விரோதமான
வரலாற்றுக்காய்
இழிபுகழ்
பெற்றவர்களாவர்.
மாநிலத்தின்
மக்கள்
நலப்
பணியாளர்கள்
13,000 பேரை
மொத்தமாய்
வேலையிலிருந்து
அகற்றியது,
2003 இல்
வேலைநிறுத்தம்
செய்த
அரசுத்
துறை
ஊழியர்கள்
சுமார்
200,000 பேரை
வேலைநீக்கம்
செய்தது
ஆகியவை
இதில்
அடங்கும்.
NLC
வேலைநிறுத்தத்தின்
போது,
வேலைநிறுத்தம்
செய்தவர்களை
அடக்கி
ஒடுக்குவதற்கு
போலிசாருக்கு
மாநில
அரசாங்கம்
பச்சைக்
கொடி
காட்டியிருந்தது.
AITUC
மற்றும்
CITU தலைவர்கள்
ஜெயலலிதாவை
நோக்கி
நெடுஞ்சாண்
கிடையாக
விழுந்தது
என்பது
நேரடியாக
சென்ற
ஆண்டில்
நடந்த
தமிழ்நாட்டு
சட்டமன்றத்
தேர்தலில்
அஇஅதிமுகவுடன்
CPI
மற்றும்
CPM வைத்துக்
கொண்ட
சந்தர்ப்பவாதக்
கூட்டணிகளில்
இருந்து
எழுவதாகும்.
இந்த
இற்றுப்
போன
அரசியல்
உறவுகளைத்
தொந்தரவு
செய்ய
தொழிற்சங்க
நிர்வாகிகளுக்கு
விருப்பமில்லை.
அதேபோல
வேலைநிறுத்தம்
செய்த
தொழிலாளர்களுக்கு
சலுகைகள்
அளிக்க
NLC மறுத்ததை
ஆதரித்த
காங்கிரஸ்
தலைமையிலான
மத்திய
அரசாங்கத்துக்கு
எதிரான
எந்த
போராட்டத்தையும்
தொழிற்சங்கத்
தலைவர்கள்
எதிர்த்தனர்.
ஸ்ராலினிசக்
கட்சிகள்
நெடுங்காலமாய்
காங்கிரஸை
நேரடியாகவும்
மறைமுகமாகவும்
ஆதரித்து
வந்திருக்கின்றன.
2004 முதல்
2008 வரையான
காலத்தில்
ஆளும்
காங்கிரஸ்
தலைமையிலான
ஐக்கிய
முற்போக்குக்
கூட்டணிக்கு
முட்டுக்
கொடுப்பதில்
முக்கிய
கருவிகளாய்
செயல்பட்ட
CPI
மற்றும்
CPM, அக்கூட்டணியின்
சந்தை
ஆதரவு
மறுசீரமைப்புக்கான
அரசியல்
பொறுப்பைத்
தாங்கி
நிற்கின்றன.
ஸ்ராலினிசத்
தொழிற்சங்கங்களின்
காட்டிக்கொடுப்பானது
தமிழ்
இனவாதத்தை
ஊக்குவிப்பது
என்கிற
ஒரு
ஆபத்தான
அரசியல்
அபிவிருத்திக்கு
கதவு
திறந்து
விட்டிருக்கிறது.
ஆரம்பத்தில்
இருந்தே
AITUC, “NLC
இல்
உற்பத்தி
செய்யப்படும்
அனைத்து
மின்சாரமும்
தமிழ்நாட்டிற்கே
விநியோகிக்கப்பட
வேண்டும்”
என்கிற
சுலோகத்துடனான
குறுகிய
பார்வையுடனான
அரசியலை
ஊக்குவித்தது.
நாம்
தமிழர்
கட்சி(NTK)என்கின்ற
தமிழ்நாட்டின்
ஒரு
அரசியல்
கட்சியின்
தலைவரான
சீமான்
ஜூன்
3 அன்று
NLC
ஒப்பந்தத்
தொழிலாளர்களிடையே
பேசுகையில்
இந்தக்
கருப்பொருளையே
கொண்டு
பேசினார்.
தமிழகத்
தொழிலாளர்களுக்கு
எதிராக
“தமிழரல்லாத
நிர்வாகம்”
கொண்டிருக்கின்ற
இளக்கார
மனோநிலை
தான்
வேலைநிறுத்தம்
செய்கின்ற
தொழிலாளர்கள்
முகம்
கொடுக்கின்ற
பிரச்சினை
என்று
அவர்
அறிவித்தார்.
தமிழ்நாட்டில்
கடுமையான
மின்
பற்றாக்குறை
நிலவுகின்ற
ஒரு
சமயத்தில்
மற்ற
இந்திய
மாநிலங்களில்
NLC
முதலீடு
செய்வதையும்
அவர்
தாக்கினார்.
வேலைநிறுத்தம்
செய்தவர்களின்
நலன்கள்
NLC நிர்வாகத்தின்
- அவர்கள்
தமிழர்களாய்
இருந்தாலும்
சரி
அல்லது
தமிழரல்லாதவராய்
இருந்தாலும்
சரி
- நலன்களுக்கு
அடிப்படையான
விரோதமானவை
ஆகும்.
தமிழ்
இனவாதத்தைக்
கிளறிவிடுவது
தமிழகத்
தொழிலாளர்களை
இந்தியா
முழுவதிலும்
மற்றும்
சர்வதேசமெங்கிலும்
இருக்கக்கூடிய
அவர்களது
வர்க்க
சகோதர
சகோதரிகளிடம்
இருந்து
துண்டிப்பதை
மட்டுமே
செய்கிறது.
தேசியவாதம்
மற்றும்
பேரினவாதத்தின்
அத்தனை
வடிவங்களையும்
நிராகரிப்பதே
எந்தவொரு
அரசியல்
போராட்டத்தையும்
நிலைநிறுத்துவதற்கான
முதல்
படி
ஆகும்.
NLC
போராட்டம்
சமீப
வருடங்களில்
இந்தியாவில்
தொழிலாளர்கள்
நடத்தி
வருகின்ற
தொடர்ச்சியான
போராட்டங்களில்
ஒன்றாகும்.
சென்ற
ஆண்டில்
ஹரியானாவில்
மாருதி
சுசுகி
தொழிலாளர்கள்
நடத்திய
ஆலை
உள்ளிருப்புப்
போராட்டங்களைத்
தொடர்ந்து
ஃபாக்ஸ்கான்,
BYD எலெக்ட்ரானிக்ஸ்,
சான்மினா
மற்றும்
ஹூண்டாயில்
வேலைநிறுத்தங்கள்
நடந்தன.
இந்த
ஆண்டின்
பிப்ரவரி
மாதத்தில்
விலைவாசி
உயர்வு,
தனியார்மயமாக்கம்
மற்றும்
ஒப்பந்தத்
தொழிலாளர்
முறை
ஆகியவற்றுக்கு
எதிராய்
நடைபெற்ற
ஒரு
தேசிய
அளவிலான
வேலைநிறுத்தப்
போராட்டத்தில்
இலட்சக்கணக்கிலான
தொழிலாளர்கள்
பங்கேற்றனர்.
மே
மாதத்தில்
எரிபொருள்
விலை
உயர்த்தப்பட்டதற்கு
எதிராக
ஒரு
பொது
வேலைநிறுத்தம்
நடைபெற்றதோடு,
தொழிலாளர்கள்,
இளைஞர்கள்,
கிராமப்புற
ஏழை
மக்கள்
மற்றும்
சிறு
வணிகர்கள்
பங்கேற்ற
ஆர்ப்பாட்டங்களும்
நடந்தன.
இந்த
ஒவ்வொரு
சந்தர்ப்பத்திலும்,
இந்தப்
போராட்டங்களை
மட்டுப்படுத்துவதும்
தனிமைப்படுத்துவதுமே
தொழிற்சங்கங்களின்,
குறிப்பாக
CPI
மற்றும்
CPM உடன்
இணைந்த
தொழிற்சங்கங்களின்
பாத்திரமாக
இருந்து
வந்திருக்கிறது.
தேசிய
அளவிலான
ஆர்ப்பாட்டங்கள்
எல்லாம்
இந்திய
அரசாங்கத்துடன்
ஸ்ராலினிஸ்டுகள்
கொண்டிருக்கும்
அரசியல்
உறவுகளைத்
தொந்தரவு
செய்யாத
வகையில்
தணிந்து
போகச்
செய்கின்ற
விதமான
ஒருநாள்
விவகாரங்களாக
மட்டும்
மட்டுப்படுத்தப்பட்டு
வந்திருக்கின்றன.
சந்தை
ஆதரவு
மறுசீரமைப்பையும்
தனியார்மயமாக்கத்தையும்
எதிர்ப்பதாக
CPI
மற்றும்
CPM காட்டிக்
கொள்கின்றன
என்கிற
அதேசமயத்தில்,
மேற்கு
வங்கம்
மற்றும்
கேரளாவில்
இருந்த
CPM
தலைமையிலான
அரசாங்கங்கள்
வெளிநாட்டு
மற்றும்
உள்நாட்டு
முதலீட்டாளர்களுக்கு
இலாபமளிக்கும்
விதமான
இதேபோன்ற
தொழிலாள
வர்க்க
விரோதமான
கொள்கைகளையே
கடைப்பிடித்து
வந்திருக்கின்றன.
NLC
போராட்டம்
காட்டிக்
கொடுக்கப்பட்டதில்
இருந்து
கிடைத்திருக்கும்
முதல்
படிப்பினை
என்னவென்றால்
தொழிலாளர்கள்
தொழிற்சங்கங்களிடம்
இருந்து
முழுமையாக
முறித்துக்
கொண்டு
’சாமானியத்
தொழிலாளர்களின்
நடவடிக்கைக்
குழுக்கள்’
போன்ற
தமது
சொந்த
சுயாதீனமான
அமைப்புகளை
உருவாக்காத
வரை
ஒரு
அடி
கூட
முன்னால்
எடுத்து
வைக்க
முடியாது
என்பது
தான்.
ஆயினும்,
போர்க்குண
நடவடிக்கை
மட்டும்
போதாது.
தொழிலாள
வர்க்கம்
ஒரு
புரட்சிகர
சோசலிச
முன்னோக்கினை
அடித்தளமாகக்
கொண்டு
இலாப
அமைப்புமுறைக்கும்
அதன்
அத்தனை
அரசியல்
ஆதரவாளர்களுக்கும்
எதிராக
தொழிலாளர்களை
இந்தியாவிலும்
சர்வதேசியரீதியாகவும்
ஒன்றுதிரட்ட
வேண்டும்.
உலகிங்கிலுமான
தொழிலாளர்கள்
இதே
அடிப்படைப்
பிரச்சினையையே
எதிர்கொள்கின்றனர்.
ஐரோப்பாவிலும்
சரி,
அமெரிக்காவிலும்
சரி
அல்லது
ஆசியாவிலும்
சரி
அத்தனை
அரசியல்
வர்ணத்தைச்
சேர்ந்த
அரசாங்கங்களுமே
1930கள்
முதலாகவே
முதலாளித்துவத்தின்
ஆழமான
நெருக்கடியின்
சுமைகளை
தொழிலாள
வர்க்கத்தின்
மீது
சுமத்துவதற்கே
முனைகின்றன.
இத்தகையதொரு
அரசியல்
போராட்டத்திற்கு
தொழிலாள
வர்க்கத்தின்
ஒரு
வெகுஜனப்
புரட்சிகரக்
கட்சியைக்
கட்டியெழுப்புவது
அவசியமாக
இருக்கிறது.
இந்தியாவைப்
பொறுத்த
மட்டில்,
இதன்
அர்த்தம்,
அனைத்திற்கும்
மேலாய்
ஸ்ராலினிஸ்டுகளின்
காட்டிக்
கொடுப்புகளின்
ஒரு
நெடிய
வரலாற்றில்
இருந்து
அவசியமான
அரசியல்
முடிவுகளை
வரைவது
என்பதாகும்.
கடந்த
காலத்தில்
CPI
மற்றும்
CPM கட்சிகள்
சோசலிசக்
கட்சிகள்
என்றும்
1917 அக்டோபரின்
ரஷ்யப்
புரட்சியின்
பாரம்பரியத்தைப்
பிரதிநிதித்துவப்படுத்துபவை
என்றும்
மோசடியாகக்
கூறி
வந்தன.
இப்போது
அக்கட்சிகள்
இந்திய
அரசியல்
ஸ்தாபகத்தில்
முழுமையாக
ஒன்றுகலந்து
விட்டன
என்பதோடு
முதலாளித்துவ
ஆட்சியைப்
பகிரங்கமாய்
ஆதரித்து
நிற்கின்றன.
ஸ்ராலினிசத்திற்கும்
அதன்
பல்வேறு
அரசியல்
வக்காலத்துவாதிகளுக்கும்
எதிராக
ட்ரொட்ஸ்கிச
இயக்கம்
- நான்காம்
அகிலத்தின்
அனைத்துலகக்
குழு
- நடத்திய
கடினமானதும்
நெடியதுமான
போராட்டத்தின்
படிப்பினைகளின்
அடிப்படையில்
மட்டுமே
ஒரு
புதிய
புரட்சிகரத்
தலைமையானது
கட்டியெழுப்பப்பட
முடியும்.
ICFI
இன்
வேலைத்திட்டத்தை
தீவிரத்துடன்
ஆராய்வதை
நோக்கி
திரும்புவதற்கும்
இந்தியாவில்
கட்சியின்
ஒரு
பிரிவினைக்
கட்டுவது
என்கிற
அவசரப்
பணியை
கையிலெடுப்பதற்கும்
நாங்கள்
NLC
தொழிலாளர்களை
வலியுறுத்துகிறோம். |