சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Fukushima: A disaster produced by capitalism

புகுஷிமா: முதலாளித்துவம் தோற்றுவித்த ஒரு பேரழிவு

Peter Symonds
10 July 2012

use this version to print | Send feedback

ஒரு சுயாதீன பாராளுமன்ற ஆணைக்குழு தயாரித்துள்ள கண்டனத்திற்குரிய அறிக்கை, கடந்த ஆண்டு புகுஷிமாப் பேரழிவை உருவாக்கிய பாதுகாப்பு நடவடிக்கைகள் போதுமானதாக இல்லாதது பற்றி பட்டியலிட்டுள்ளது. மார்ச் 11 நிலநடுக்கம் மற்றும் சுனாமி கட்டவிழ்த்து விட்ட இயற்கைச்சக்திகள் கட்டுப்படுத்த முடியாதவை என்றாலும், அவற்றின் பேரழிவு தரக்கூடிய பாதிப்பு முன்கூட்டியே எதிர்பார்க்கக்கூடியதும் மற்றும் பெருமளவு குறைக்கப்பட்டிருக்க கூடியதுமாகும்.

புகுஷிமா டை-இச்சி ஆலையை நிர்வகித்துவந்த மிகப்பெரிய TEPCO எனப்படும் டோக்கியோ மின்சக்தி நிறுவனம், அதன் கதிரியக்க உலைக்கூடங்கள் தேவையான நிலஅதிர்ச்சியை எதிர்த்து நிற்கும் தரங்களைக் நடைமுறைப்படுத்தவில்லை. கட்டுப்பாட்டு அதிகார நிலையமான NISA எனப்படும் அணுச்சக்தி மற்றும் தொழில்துறைப் பாதுகாப்பு நிறுவனம் நில அதிர்விற்கான தரங்களை செயல்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நிறுவனமும், கட்டுப்பாட்டு அமைப்புக்களும் ஆலை சுனாமிகளின் பாதிப்பிற்கு உட்படக்கூடும் என்பதை அறிந்திருந்தன, ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் உலைக்கூடத்தில், டெப்கோ தலைமையகத்தில், NISA மற்றும் பிரதம மந்திரி அலுவலகத்தில் என ஒவ்வொரு மட்டத்திலும் பேரழிவு குறித்த திட்டமிடல் போதுமானதாக இல்லை அல்லது சிறிதளவுகூட இல்லை.

இதன் விளைவு நில அதிர்ச்சி மற்றும் சுனாமி தாக்கியபோது பெருங்குழப்பம் நிலவியதுதான். உலைக்கூடம் அதன் மின்சாரசக்தி அனைத்தையும் இழந்துவிட்டதுடன், அவசரகால பின்னணி விநியோகமும் செயற்படவில்லை. பொறியியலாளர்களும் தொழிலாளர்களும், இந்த அளவுப் பேரழிவைச் சமாளிக்க பயிற்சியளிக்கப்படாத நிலையில், நிலைமையை இருக்கும் குறைந்த கருவிகள், செயற்பாட்டுக் குறிப்பேடுகள் இவற்றைக் கொண்டு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப் போராடினர். 1, 2, 3 உலைக்கூடப் பிரிவுகள் பகுதி கரைப்புக்களுக்கு உட்பட்டன. மிக அதிகளவு கதிரியக்கம் கடலிலும் காற்றிலும் கசிந்துவிட்டன. உலைக்கூடங்களைக் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவருவதற்குப் பல மாதங்கள் ஆயின. சேதத்தின் முழுப்பரப்பும் இன்னமும் அறியப்படவில்லை. ஆலையை முற்றிலும் தகர்த்துவிட்டு சுற்றியுள்ள பகுதிகளைத் தூய்மைப்படுத்துவது என்பதற்குப் பல தசாப்தங்கள் தேவைப்படும்.

அரசாங்கம், NISA மற்றும் TEPCO ஆகியவை திட்டமிட்டரீதியாக இதை எதிர்கொள்ள முடியாமல் நின்றது, பேரழிவைக் காட்டி, அறிக்கை சற்றே உட்குறிப்பாகக் கூறுவது போல், “இன்னும் பயங்கரக் காட்சியை” அச்சுறுத்தியது. உள்ளூர் மக்கள் வெளியேற்றப்படுதல் என்பது முற்றிலும் ஒழுங்குற அமைக்கப்படவில்லை: பல ஆயிரக்கணக்கான மக்களுக்குப் போதுமான தகவல்கள் கொடுக்கப்படாததுடன், பல முறை வெளியேற்றத்திற்கு உட்பட்டனர். இவற்றில் மிகஅதிக கதிரியக்கம் உள்ள பகுதிகளுக்கும் கொண்டுசெல்லப்பட்டனர். ஏனெனில் அவ்வப்பொழுது வெளியேற்றப்பட வேண்டிய பகுதி என்பது விரிவாக்கப்பட்டது. பேரழிவு மக்களின் சுகாதாரம், சுற்றுச்சூழலில் விளைவிக்கக் கூடிய நீண்டகால பாதிப்பு இன்னும் அறியப்படவில்லை.

1986 இல் உக்ரைனில் செர்னோபைல் கரைப்பிற்குப் பின் மிக மோசமான இந்த அணுச்சக்திப் பேரழிவு பல தசாப்தங்கள் அரசாங்கங்கள், அணுச்சக்தி கட்டுப்பாட்டு அதிகாரிகள் மற்றும் அணுச்சக்தி தொழில்துறை ஆகியவை கூட்டாகச் செயல்படாததின் விளைவுதான். இந்த அறிக்கை “கட்டுப்பாட்டு கைப்பற்றல்” என்னும் சொற்றொடரை NISA, அணுச்சக்தி பாதுகாப்பு ஆணையம் மற்றும் அணுச்சக்தித் தொழில் இவற்றிற்கு இடையே இருந்த உறவுகளை விளக்கப் பயன்படுத்தியுள்ளது. வேறுவிதமாகக் கூறினால், NISA மற்றும் அணுச்சக்தி பாதுகாப்பு ஆணையம் ஆகியவை பொது மக்களுடைய பாதுகாப்பிற்கு என்று இல்லாமல் TEPCO போன்ற நிறுவனங்களின் நலன்களைக் பாதுகாப்பதற்குத்தான் செயல்பட்டன.

NAIIC எனப்படும் அணுச்சக்தி விபத்து குறித்த சுயாதீன விசாரணை ஆணையத்தின் அறிக்கை கடந்த வாரம் வெளியிடப்பட்டது. அது வழமைக்குமாறான முறையில் நேர்மையானதாக இருந்தது. இது அணுச்சக்தித் தொழில்துறை குறித்து பரந்த பொதுமக்களுடைய சந்தேகம், நம்பிக்கையற்ற தன்மை மற்றும் எதிர்ப்பை அகற்றுவதைத்தான் நோக்கமாக கொண்டிருந்தது என்பது தெளிவு. பேரழிவு “மனிதனால் உருவாக்கப்பட்டது” என்று முடிவிற்கு ஆணையம் வந்தபோதிலும், அதாவது புறக்கணிப்பு மற்றும் வேண்டுமென்றே அடிப்படைப் பாதுகாப்பு நடவடிக்கைகள் ஒதுக்கப்பட்டதின் விளைவு என்றாலும், குறிப்பிட்ட எவரையும் இது பொறுப்புக் கூறவில்லை. தனி நபர்கள் அல்லது TEPCO உட்பட நிறுவனங்களுக்கு எதிராக அது எந்த சட்டபூர்வ நடவடிக்கையும் தேவை என்ற கருத்தை முன்வைக்கவில்லை. தன் பரிந்துரைகளை பொதுவான கட்டுப்பாட்டுச் சீர்திருத்தங்களுக்கு முன்வைப்பவை என்பதுடன் மட்டுப்படுத்திக்கொண்டது.

NAIIC தலைவர் கியோஷி குரோகவா பேரழிவிற்கான பொறுப்பை பொதுவாக ஜப்பானிய மக்கள் மீது திருப்ப முயன்றார். அறிக்கையின் அறிமுக உரையில் அவர் தெரிவிக்கிறார்: “இதன் அடிப்படைக் காரணங்கள் ஜப்பானிய கலாச்சாரத்தில் உள்ளார்ந்து நிற்கும் பின்வரும் மரபுகளில் காணப்படலாம். எப்பொழுதும் இயல்பாக நாம் பணிவைக் காட்டுதல்; அதிகாரத்தைக் கேள்விக்கு உட்படுத்துவதில் நாம் காட்டும் தயக்கம்; “திட்டத்துடன் கட்டுப்பட்டு நின்றுவிடுதல்” என்ற எமது பொறுப்புணர்மை ஒப்படைப்பு; நம் குழு முறை; நம் தனிப்பட்டு நிற்கும் தன்மை.”

இந்தக் கருத்துக்கள் உண்மையை பெரிதும் குழப்புவதுடன் தொடர்புடையவை. ஜப்பான் குறித்த வல்லுனர்கள் பல ஆண்டுகளாக அணுசக்தி உலைக்கூடங்கள் குறிப்பிட்ட பகுதிகளில் இருப்பவை நில அதிர்ச்சிக்கள், சுனாமிகளின் பாதிப்பிற்கு உட்படக்கூடிய ஆபத்து பற்றி எச்சரித்து, கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கும் எரிசக்தி தொழிலுக்கும் இடையே உள்ள தகாத உறவு பற்றியும் எடுத்துக் காட்டியுள்ளன. இலாபங்களை பாதுகாக்க விரும்பும் சக்தி வாய்ந்த, நல்ல நிதியுடைய அணுச்சக்தி செல்வாக்குக் குழுக்களை அவை எதிர்கொள்ள வேண்டும். TEPCO இன்னும் பிற எரிசக்தி நிறுவனங்களுக்குள்ளேயே “குழுமுறையானது” ஒன்றும் தொழிலாளர்களை மௌனப்படுத்திவிடவில்லை. மாறாக, அச்சுறுத்தல் மற்றும் பணியச்செய்தல் என்ற நிர்வாக கலாச்சாரம்தான் மௌனப்படுத்தின.

புகுஷிமாப் பேரழிவிற்கான பொறுப்பு சாதாரண ஜப்பானிய மக்களிடம் இல்லை¨, ஆனால் பொதுப் பாதுகாப்பைவிட பெரும் எரிசக்தி நிறுவனங்களின் இலாபங்களுக்கு முன்னுரிமை கொடுத்த ஆளும் வர்க்கத்திடம்தான் உள்ளது. அணுச்சக்தி தொழில்துறையின் விரிவாக்கமும் ஜப்பானிய ஏகாதிபத்தியத்தின் ஒரு மூலோபாயப் பிரச்சினையாக இருந்துள்ளது. இது இறக்குமதி செய்யப்படும் எண்ணெய், எரிவாயுவின் மீது தங்கியிருக்கும் தன்மையைக் குறைப்பதோடு மட்டும் இல்லாமல், தேவையானால் அணுவாயுதங்களையும் விரைவில் உற்பத்தி செய்ய ஒரு பாதையையும் கொடுக்கும்.

பெருவணிகம், அரசாங்கம் மற்றும் தொழில்துறை ஆகியவற்றிற்கு இடையே உள்ள கூட்டாளித்தன்மை ஜப்பானில் மட்டும் நின்றுவிடவில்லை. ஒவ்வொரு நாட்டிலும் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு என்று தொழிலாளர்களுடைய பணியிட உரிமைகள், அச்சமூகத்தின் நிலைமை ஆகியவை வாடிக்கையாக இலாபமுறையின் ஆணைகளுக்குத் தாழ்த்தப்படுகின்றன. மேலும், கடந்த மூன்று தசாப்தங்களாக நடக்கும் சந்தை மறுகட்டமைப்பு முன்பு இருந்த குறைந்தப்பட்ச கட்டுப்பாடுகளையும் முறையாக இல்லாதொழிப்பதற்கு வழிவகுத்துள்ளது. பல நிகழ்வுகளில், கட்டுப்பாட்டு அமைப்புகள் குறைக்கப்பட்டுவிட்டன அல்லது பெருநிறுவனங்களின் “சுய கட்டுப்பாட்டினால்” பிரதியீடு செய்யப்பட்டுள்ளது.

முதலாளித்துவத்தின் குற்றம் சார்ந்த தன்மையை அம்பலப்படுத்தியுள்ள பெரிய பேரழிவுகளின் ஒன்றுதான் புகுஷிமா. ஓராண்டிற்கு முன்பு, BP பிரிட்டிஷ் பெட்ரோலியம் நடத்தும் மெக்சிகோ வளைகுடாவிலுள்ள டீப்வாட்டர் ஹொரைசனில் உள்ள எண்ணெய் தோண்டும் அமைப்பில் ஏற்பட்ட வெடிப்பு அமெரிக்க வரலாற்றிலேயே மோசமான சுற்றுச்சூழல் பேரழிவை ஏற்படுத்தியது. புஷ் மற்றும் ஒபாமா நிர்வாகங்கள் திட்டத்தை விரைவில் செயல்படுத்த அனுமதித்தன; இவை முறையான சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்த ஆய்வு இல்லாமல், பொதுமக்களுடைய கவலைகளையும் எதிர்ப்பையும் மீறி நடைமுறைக்கு வந்தன. எண்ணெய்க் கசிவிற்குப் பின்னும், ஒபாமா நிர்வாகம் BP யின் வக்கீல் போல் செயல்பட்டு, எரிசக்தி நிறுவனம் பொருளாதார, அரசியல் பின்னடைவு அதிகம் அடையாமல் பாதுகாத்தது. ஆரம்பத்தில் இருந்தே வெள்ளை மாளிகை BP இனது உட்பட, இப்பேரழிவு இன்னும் கூடுதலான கடலுக்கடியில் எண்ணெய் எடுக்கும் திட்டங்களுக்குத் தடையாக இருக்காது என்று கூறியது.

ஜப்பானிய அரசாங்கம், முதலில் பிரதம மந்திரி நாவோடோ கானின் கீழும் இப்பொழுது பிரதம மந்திரி யோஷிகோ நோடா ஆகியோரின் கீழ், நிறுவனத்திற்கு பெரிய பிணையெடுப்புக் கொடுத்து, பேரழிவிற்குட்பட்ட சிறு வணிகங்களுக்கும் தனிநபர்களுக்கும் கொடுக்க வேண்டிய இழப்பீடுகளைக் குறைத்தல் என்னும் வகையில் இதே போன்ற பணியைத்தான் TEPCOவிற்குச் செய்துள்ளது. கடந்த மாதம் நோடா மிகக்குறைந்த பாதுகாப்பு சோதனைகளுடன் மீண்டும் ஜப்பான் அணுச்சக்தி உலைக்கூடங்கள் ஒன்று மறுபடியும் திறப்பதற்கு அனுமதி கொடுத்தார். NAIIC அறிக்கை வெளியான தினத்தன்றே, ஓய் அணுச்சக்தி ஆலையில் மூன்றும் எண் உலைக்கூடம் அதன் செயற்பாடுகளைத் ஆரம்பித்தது. அந்த இடமோ நில அதிரச்சிகளுக்குப் பெரும் பாதிப்பைக் கொண்ட இடம் ஆகும்.

இந்த அறிக்கை வெளியிட்டுள்ள தகவல்களில் இருந்து எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய உண்மையான படிப்பினை முதலாளித்துவத்திற்கும் மனிதகுலத்தின் மிக அடிப்படைத் தேவைகளுக்கு வேண்டிய சுகாதார, பாதுகாப்பான சூழ்நிலை இரண்டிற்கும் இயைந்திராத தன்மை என்பதுதான். புகுஷிமாப் பேரழிவு போன்றவற்றை தடுப்பதற்கு ஒரே வழி சர்வதேச தொழிலாள வர்க்கம் இலாப முறையை அகற்றி, ஒரு திட்டமிட்ட உலக சோசலிசப் பொருளாதாரத்தை நிறுவுதல்தான்.