சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Further US demands for espionage charges against Assange

அசாஞ்ச்க்கு எதிரான ஒற்றுக் குற்றச்சாட்டுகளுக்கு மேலதிக விசாரணைகளை அமெரிக்கா கோருகின்றது

By Richard Phillips
9 July 2012

use this version to print | Send feedback

ஒபாமா நிர்வாகத்தின் செய்தித்தொடர்பாளர்களும் ஆஸ்திரேலிய அரசாங்கமும் விக்கிலீக்ஸ் ஆசிரியர் ஜூலியன் அசாஞ்ச் மீது குற்றச்சாட்டுக்களை கொண்டுவருவதில் வாஷிங்டனுக்கு “ஆர்வம் இல்லை” என தொடர்ந்து வலியுறுத்தியிருக்கையில், அமெரிக்க செனட் சிறப்பு உளவுத்துறைக் குழுவின் தலைவர் டியான் வைன்ஸ்ரைன்  ஆஸ்திரேலிய குடிமகன் மீது விசாரணை நடத்த வேண்டும் என்று மற்றொரு அழைப்பு விடுத்துள்ளார்.

 “1917ம் ஆண்டு ஒற்று நடவடிக்கைச் சட்டத்தின் கீழ் திரு.அசாஞ்ச்மீது குற்றவிசாரணை நடத்தப்பட வேண்டும்” என்று வைன்ஸ்ரைன் மெல்போர்னை தளமாக்கொண்ட ஏஜ் பத்திரிகையிடம் கடந்த வாரம் கூறினார். “திரு. அசாஞ்ச் அமெரிக்காவிற்கு தீங்கு விளைவிக்கும் இரகசியத் தகவலை வேண்டுமேன்றே பெற்றுப் பரப்பினார் என்றுதான் நான் நினைக்கிறேன். அமெரிக்க தேசியப் பாதுகாப்பிற்கு அவர் தீவிர பாதிப்பை விளைவித்துள்ளார். இதனால் அவர்மீது இதற்காக குற்றவிசாரணை நடத்தப்பட வேண்டும்.”

அமெரிக்க நீதித்துறைச் செய்தித் தொடர்பாளர் டீன் போய்ட் செய்தித்தாளிடம் “விக்கிலீக்ஸ் விவகாரம் குறித்து விசாரணை தொடர்கிறது” என்று கூறினார்.

அசாஞ்ச் இப்பொழுது லண்டனில் உள்ள ஈக்குவடோர் நாட்டுத் தூதரகத்தினுள், அவருடைய ஜூன் 19ம் திகதி அந்நாட்டிடம் கோரிய அரசியல் தஞ்சம் விண்ணப்பத்திற்கான பதிலுக்கு காத்திருக்கிறார். அமெரிக்கா, பிரித்தானியா ஆகியவற்றினுள் இருக்கும் ஈக்வடோர் தூதரகங்கள் கடந்த வாரம் அவருடைய விண்ணப்பத்திற்கு ஆதரவு கொடுத்து 10,000க்கும் மேற்பட்ட மின்னஞ்சல் தகவல்களைப் பெற்றுள்ளதாகக் கூறியுள்ளன.

சமீபத்தில் பிரித்தானிய தலைமை நீதிமன்றம் ஸ்வீடனுக்கு அவர் அனுப்பப்பட வேண்டும் என்று வழங்கிய தீர்ப்பிற்கு எதிரான சட்டப்பூர்வ மேல்முறையீடுகளை நிராகரித்ததை அடுத்து அசாஞ்ச் தஞ்சம் நாடியுள்ள முடிவு வந்துள்ளது. ஸ்வீடனுக்கு அகற்றப்பட்டால், வாஷிங்டன் குறுக்கிட்டு அவரை அமெரிக்காவிற்கு நாடுகடத்திவிடும் என்று விக்கிலீக்ஸின் ஆசிரியர் அஞ்சுகிறார். அங்கு அவர் வாஷிங்டனின் போர்க்குற்றங்கள் குறித்த நூறாயிரக்கணக்கான ஆவணங்களை அம்பலப்படுத்தியது மற்றும் பெரும் சக்திகளின் சதித்திட்டங்கள் குறித்த ஆவணங்களை அம்பலப்படுத்தியது என்ற “குற்றத்திற்காக” தயாரிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்காக வழக்கு விசாரணையை எதிர்கொள்ள நேரிடும்.

வைன்ஸ்ரைனினதும், அமெரிக்க நீதித்துறையின் சமீபத்திய அறிக்கைகள் மற்றும் விக்கிலீக்ஸிற்கும் அதன் ஊழியர்களுக்கு எதிரான பெரும் நடுவர் மன்றத்தின் செயல்கள் பற்றிய மற்ற சான்றுகளுடன் சேர்ந்து அசாஞ்ச் இன் எச்சரிக்கைகளை உறுதி செய்கின்றன. வைன்ஸ்ரைன் தலைமையில் மேற்பார்வையிடும் செனட் குழு முக்கிய அமெரிக்க உளவுத்துறை அமைப்புக்களான CIA, தேசியப் பாதுகாப்பு அமைப்பு, பாதுகாப்புத் துறை உளவுப் பிரிவு ஆகியவற்றையும் அடக்கியுள்ளது.

அமெரிக்க இராணுவத்தினரான பிராட்லி மானிங் மீது சுமத்தப்பட்டுள்ள நாட்டுத் துரோகக் குற்றத்தில் உதவி, உடந்தையாக இருந்ததற்கும் அசாஞ்ச் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படலாம். விக்கிலீக்ஸிற்கு இரகசிய ஆவணங்களை வழங்கினார் என்ற சந்தேகத்தின் பேரில் மானிங் ஈராக்கில் மே 2010ல் கைது செய்யப்பட்டார். இராணுவ நீதித்துறை சட்டம், உளவுபார்த்தல் சட்டம் ஆகியவற்றை மீறியுள்ளார் என்றும் அவர்மீது குற்றச்சாட்டுக்கள் உள்ளன. மிக முக்கிய குற்றச்சாட்டு அல் குவைடாவிற்கு உதவியது என்பதாகும். இதற்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்.

கடந்த வாரம் பிரித்தானியப் பொலிஸ் உத்தியோகபூர்வ கடிதம் ஒன்றை ஈக்குவடோர் தூதரகத்திற்குக் கொடுத்து உடனடியாக விக்கிலீக்ஸ் ஆசிரியர் உள்ளூர் பொலிஸ் நிலயைம் ஒன்றிற்கு வரவேண்டும் என உத்தரவிட்டுள்ளது. ஒரு ஸ்காட்லாந்து யார்ட் செய்தித்தொடர்பாளர், “நாட்டை விட்டு அனுப்பும் வழக்குகளில் வாடிக்கையான செயற்பாடு, முதல்படிதான் இது....சரணடைய மறுத்தல் என்பது அசாஞ்ச் இன் பிணையெடுப்பு நிபந்தனைகளை இன்னும் மீறுவது போல் ஆகும், அவர் கைது செய்யப்படக்கூடும்.” என்று கூறினார்.

இதற்கு விடையிறுக்கையில் அசாஞ்ச் இன் வக்கீல்கள் சர்வதேச சட்டம் மற்றும் பிரித்தானியச் சட்டம் இரண்டின்படியும் தஞ்சக் கோரும் விண்ணப்பம், நாடுகடத்தும் கோரிக்கையைவிட முன்னுரிமை பெற்றது என்று கூறினர்.

முக்கிய செய்தி ஊடகங்கள் தொடர்ந்து விக்கிலீக்ஸ் ஆசிரியர் ஸ்வீடனில் பாலியல் தாக்குதலுக்கு குற்றச்சாட்டப்பட்டுள்ளார் என்று தவறாகக் கூறுவதுடன், ஸ்வீடனின் அரசாங்க வக்கீல் மரைன் நை பிரித்தானியாவில் அல்லது வீடியோத் தொடர்பு மூலம் அசாஞ்ச்சை பேட்டி காண முன்னொருபோதுமில்லாதவாறு மறுப்பதையும் புறக்கணித்துள்ளன. ஒரு சில செய்தித்தாட்கள்தான் ஸ்வீடனுக்கு அனுப்பப்பட்டால் அசாஞ்ச் எதிர்கொள்ளும் அடக்குமுறை நிலைமைகளை விளக்கியுள்ளன.

கார்டியன்  செய்தித்தாள் ஜூலை 2 பதிப்பில் அசாஞ்ச் இன் ஸ்வீடன் நாட்டு வக்கீல் பெர் சாமுவல்சன் வெளியிட்டுள்ள கட்டுரையில் அவருடைய கட்சிக்காரர் ஸ்வீடனில் நியாயமான விசாரணையைப் பெற முடியாது என்று விளக்கினார். நாட்டில் நுழைந்தவுடனேயே விக்கிலீக்ஸ் ஆசிரியர் உடனே கைது செய்யப்பட்டு, தனி அறையில் வைக்கப்பட்டுவிடுவார். அங்கேயே வழக்கிற்கு முந்தைய விசாரணைக் காலம் முழுவதும் பாலியல் தாக்குதல் குற்றச்சாட்டுக்கள் என அழைக்கப்படுவதற்காக வைக்கப்படுவார். வேறு எந்த நாட்டிலும் அரசியல் தஞ்சத்திற்கு அசாஞ்ச் விண்ணப்பிக்கவும் முடியாது என்றார்.

“அசாஞ்ச் மீது எந்தக் குற்றச்சாட்டும் இன்னமும் சுமத்தப்படவில்லை. இந்த நிலைமை அவர் தன்னைக் காத்துக்கொள்ளுவதற்கான தயாரிப்பைக் கடினமாக்குகிறது. பாதுகாத்துக் கொள்ள வேண்டியவர் தனிமைச் சிறையில் வைக்கப்பட்டால், அவர்கள் தங்கள் பாதுகாப்பு வக்கீல் ஒருவரோடுதான் தொடர்பு கொள்ள முடியும். ஆனால் அரசாங்க வக்கீலும், குற்றம் சாட்டியவர்களும் சாட்சிகளோடு நீண்ட நேரம் விவாதிக்க முடியும், தங்கள் மூலோபாயங்களை சீராக்க முடியும்.” என்று சாமுவல்சன் கூறினார்.

ஸ்வீடன் காவல் கைதிகளை “கூடுதல் காலம் காவலிலும், தனிமையிலும் வைப்பது” என்பதை அதிகம் பயன்படுத்துவதற்காகப் பரந்த முறையில் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது என்று சாமுவல்சன் சுட்டிக்காட்டினார். “சித்திரவதைக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபை 2008ல் ஸ்வீடனின் காவல் கைதிகளுடைய சிறை, ஸ்வீடன் நாட்டு நீதிமன்றங்கள் சிறைத் தடைகளான தனிமை போன்றவை சந்தேகத்தின் பேரில் காவலில் இருக்கும் 42% இனர் மீது சுமத்தப்படும் நிலைமை குறித்து பலமாக குற்றம்சாட்டியுள்ளது” என்றார் அவர்.

 “அசாஞ்ச் தனிமைபடுத்தப்படவில்லை என்றாலும்கூட, ஸ்வீடனில் காவல் கைதிகளுடைய நிலைமை சந்தேகத்திற்கு உட்பட்டவர் ஒருவர் வெளியுலகுடன் முறையான தொடர்பு கொள்ளுவதை இயலாது செய்துள்ளது. போதுமான தரைவழித் தொலைப்பேசிகள் இல்லை, கைத்தொலைபேசிகள் தடைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன, கடிதங்கள் பல நேரமும் தணிக்கைக்கு உட்படுகின்றன, மக்களைக் சந்திப்பதற்கு விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்யும் வழிவகைகளை முடிக்கப் பலவாரங்கள் பிடிக்கும்”

பிரித்தானியாவில் 2010 கடைசியில் கைதுசெய்யப்படு முன்னரும் அதற்குப் பின்பும், அசாஞ்ச் தொலைப்பேசி மூலம் அல்லது நேரடியாக ஸ்வீடன் வக்கீல் விசாரிக்கலாம் என்று கூறினார். லண்டனில் ஈக்வடோர் தூதரகத்திலும் இதைப் பல முறை தொடர்ந்து கூறியுள்ளார்.

ஸ்வீடனின் வெளியுறவு மந்திரி கார்ல பில்ட் மற்றும் அரசாங்க வக்கீல் நை இருவரும் ஸ்வீடன் சட்டப்படி அசாஞ்ச்சை வேறு நாட்டில் விசாரிப்பது சட்டவிரோதம் என்று கூறுகின்றனர். ஆனால் அதற்கான சட்டப்பூர்வ ஆதாரத்தை அவர்கள் முன்வைக்கவில்லை.

தற்பொழுது அசாஞ்ச், மானிங், விக்கீலீக்ஸிற்கு எதிரான நடத்தப்படும் அமெரிக்க வெறிச்செயல் “பயங்கரவாதத்தின் மீதான போர்” என்ற பதைகையின் கீழ் இன்னும் பேச்சு சுதந்திரம் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீது பரந்தளவில் நடக்கும் சர்வதேசத் தாக்குதலின் ஒரு பகுதிதான். உலகெங்கிலும் இருக்கும் அரசாங்கங்கள் இராஜதந்திரச் சதிகள், சூழ்ச்சிகள் இவற்றிற்குப் பின்புறம் அடித்தளத்தில் இருக்கும் பொருளாதார, அரசியல் நோக்கங்களை சாதாரண மக்கள் அறிவதை பெருமுயற்சியுடன் தடைக்குட்படுத்துகின்றன.

கட்டுரையாளர் கீழ்க்கண்டதையும் பரிந்துரைக்கிறார்.

அசாஞ்சை பாதுகார்