World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

French Socialist Party government works with auto companies to attack workers

பிரெஞ்சு சோசலிஸ்ட் கட்சி அரசாங்கம் கார்த்தயாரிப்பு நிறுவனங்களுடன் செயல்பட்டுத் தொழிலாளர்களைத் தாக்குகிறது

By Antoine Lerougetel
5 July 2012
Back to screen version

பிரெஞ்சுக் கார்த்தயாரிப்பு நிறுவனம் PSA/Peugeot-Citroën இன் ஐரோப்பிய செயற்பாடுகள் அமைப்பில் தற்பொழுது நடைபெறும் மறு கட்டமைப்பு  இந்த ஆண்டு 1 பில்லியன் யூரோக்கள் வெட்டுக்களை ஏற்படுத்திவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது; இதற்குக் காரணம் இதன் ஜெனரல் மோட்டார்ஸுடனான மற்றும் அதன் துணை நிறுவனமான ஓப்பலுடனான பங்காளித்துவம் பரந்த முறையில் விரிவுபடுத்தப்படுவதின் விளைவு ஆகும். நிறுவனத்தின் மத்திய குழுக் கூட்டம் ஒன்று ஜூலை 25 ல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது; அதில் எங்கு பணிநீக்கங்கள் என்பது நிர்ணயிக்கப்படும். கோடை விடுமுறை காலத்துடன் இந்த மத்திய குழுக் கூட்டம் (CCE) நடத்தப்படுவது தொழிலாளர்களிடம் இருந்து வரும் பெரும் எதிர்ப்புக்களுக்கான வாய்ப்புக்கள் குறைக்கப்பட வேண்டும் என்பதற்காகத்தான்.

செவ்வாயன்று தொழிற்சங்க அதிகாரிகள், PSA/Peugeot-Citroën உடைய தலைமை நிர்வாக அதிகாரி பிலிப் வாரன் உடைய தூதர்கள் போல் செயல்பட்டு அவருடைய திட்டங்களான 2012ல் வேலை வெட்டுக்களை 4,000 த்தில் இருந்து 10,000 த்திற்கு உயர்த்தப்படும் என்பதை அறிவித்தனர்; இது நிறுவனத்தில் பிரெஞ்சுத் தொழிலாளர் தொகுப்பில் 10%க்கு சமம் ஆகும்; தொழிற்சங்கங்கள் வெட்டுக்களை எதிர்க்கும் திட்டங்கள் எதையும் அளிக்கவில்லை.

இதில் மிக உடனடியாக அச்சுறுத்தலுக்கு உட்படுவது பாரிஸ் புறநகர் பகுதியான Aulnay-sous-Bois ல் இருக்கும் ஆலையின் 3,300 தொழிலாளர்கள் ஆவர்.

ஐரோப்பாவின் ஆழ்ந்த மந்தநிலை, உலகில் பொருளாதாரச் சரிவு ஆகியவற்றால் தாக்கப்பட்டுள்ள நிலையில் PSA பயணிகள் கார்கள் ஐரோப்பிய ஒன்றியத்திலும் ஐரோப்பிய தடையற்ற வணிகப் பகுதியிலும் (EU, European Free Trade Area) 14.9 % குறைந்து விட்டது என்று தொழில்துறை நிறுவனத்தில் ACEA தெரிவிக்கிறது. இது தொழில்கள் வகையில் ஏற்பட்டுள்ள 7.3% உடன் ஒப்பிடத்தக்கது. பல PSA ஆலைகள் குறுகிய காலத்தில் மூடப்பட்டன.

ஐரோப்பாவில் கார்கள் விற்பனை திறன் 20.6 என்பதிலிருந்து 13.6 மில்லியன் எனக் குறைந்துவிட்ட நிலையில், வங்கிகள் 5 முதல் 12 ஐரோப்பிய ஆலைகள் மூடப்படக்கூடும் எனக் கணித்துள்ளன என்று Le Monde தகவல் கொடுத்துள்ளது. Alix Partners உடைய குறிப்பை அது மேற்கோளிட்டு, “2008-09 நிதிய நெருக்கடியை எதிர்கொண்டுள்ள கார் சந்தையில், பெரிய அமெரிக்கக் கார்த்தயாரிப்பு நிறுவனங்கள் 15 ஆலைகளை மூடிவிட்டன.” என்று குறிப்பிட்டுள்ளது. ஆனால் தொழிற்சங்கங்கள், நிறுவனங்கள் மற்றும் ஒபாமா நிர்வாகத்திற்கு தொழிலாளர் மீது சுமத்தப்பட்டுள்ள தாக்குதல்களில் கொடுத்த ஒத்துழைப்பு பற்றி அது ஏதும் குறிப்பிடவில்லை.

அமெரிக்கத் தொழிலாளர்கள் மீதான தாக்குதல் இப்பொழுது முழு ஐரோப்பிய கார்த்தயாரிப்பு தொழிலிலும் போட்டியிடும் ஓர் அடையாளச் சின்னம் ஆகிவிட்டது.

ஒரு தொழிற்சங்க அதிகாரியின் கூற்றுப்படி, PSA Sevel Nordல் நிலவும் சூழ்நிலை, “வருங்கால KO வாகனம் தொழிலாளர்கள் தங்கள் பணி நேரத்தை அதிகப்படுத்தவதற்கும், கூடுதலான வளைந்து கொடுக்கும் தன்மை, ஊதியத் தேக்கம் ஆகியவற்றிற்கு ஒப்புக் கொண்டால்தான் ஆலைக்குக் கொடுக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பாரிய மறு கட்டுமானம் தொழிலாளர்களுடைய முதுகுகளுக்குப் பின்னால் தயாரிக்கப்படுகின்றன.

Les Echos  அதன் ஜூன் 28 பதிப்பில், “இந்த வாரம் PSA இன் தலைமை நிர்வாக அதிகாரி பிலிப் வாரிஸ் பெரிய தொழிற்சங்கக் கூட்டமைப்புக்களின் தலைவர்களுடன் பேச்சுக்களை நடத்த தயாரிப்புக் கொண்டுள்ளார்; இதில் CFE-CGC உடைய Bernard Van Craeynest, Forest Ouvriere FO உடைய Jean-Claude Mailly, ஆகியோரும் அடங்குவர். அவர்களுக்கு B பிரிவு சிறிய கார்களை தயாரிப்பதில் உள்ள அதிக தொழிலாளர் செலவுகளின் பின்னணியில் இருக்கும் பொருளாதாரப் பிரச்சினைகள் குறித்து விளக்க உள்ளார்.” என எழுதியுள்ளது.

தொழிலாளர் துறை மந்திரி மிசேல் சப்பான், தொழில்துறை புதுப்பித்தல் மந்திரி ஆர்னோ மொந்தபோர்க் ஆகியோர் தொடர்ந்து PSA நிர்வாகத்துடனும் தொழிற்சங்கங்களுடனும் எப்படி மாபெரும் வேலை வெட்டுக்கள் சுமத்தப்படுதல், ஆலைகள் மூடப்படல் மற்றும் பணி நிலைமைகள் அழிக்கப்படுதல் என்று பிரெஞ்சு நிறுவனத்தைப் போட்டித் தன்மை உடையதாகவும், இலாபம் தரக்கூடியதாகவும் மாற்றுவதற்காகப் பேச்சுக்களை நடத்துகின்றனர்.

PS மந்திரிகளும் நிர்வாகமும் தங்கள் விவாதங்களின் பொருளுரையை வெளிக்கூற மறுத்து விட்டனர். Mariannne2.fire அதன் ஜூன் 20 பதிப்பில், “ஓர் அறிக்கை கூட வரவில்லை... ஒரு பீதிதரும் மௌனம்தான் உள்ளது.” ஜூலை 10, 11 திகதிகளில் நடக்கவிருக்கும் “சமூக மாநாட்டில்”, தொழிற்சங்கங்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் அரசாங்கம் ஆகியவை தொழிலாள வர்க்கத்தின்மீது பாரிய தாக்குதல்களை சுமத்தும் திட்டங்களைத் தயாரிக்கும்; இவை EU/IMF உந்துதலின் பேரில் தயாரிக்கப்பட்ட சிக்கன நடவடிக்கைகள் ஆகும், இவை கிரேக்க மக்களின் பெரும்பாலானவர்களுடைய வாழ்க்கைத் தரங்களை அழித்துவிட்டன.

சோசலிஸ்ட் கட்சி அரசாங்கம், கார்த்தயாரிப்புத் தொழிலாளர்களின் மீதான தாக்குதல்களைக் கண்காணிப்பதில் முக்கிய பங்கைக் கொண்டுள்ளது; தொழிற்சங்கங்கள் மற்றும் ஏராளமான “இடது” கட்சிகள் என பிரெஞ்சு அரசியலில் இருப்பவற்றின் ஆதரவை இதற்குப் பயன்படுத்துகிறது.

பிரெஞ்சுக் கம்யூனிஸட் கட்சியின் பிரதிநிதியும் முன்னாள் கட்சித் தலைவருமான Marie-George Buffet, மொந்தபோர்க் “தொழிற்சங்கங்களின் பக்கம் இருக்க வேண்டும், நிர்வாகத்தை எதிர்கொள்ளும் வகையில்; அப்பொழுதுதான் ஒரு சமூக உரையாடல் “தொழில்துறை மாற்றீடுகள்” “நடைபெறும் இடர்களைத் தீர்ப்பதற்குத்” தொடக்கப்படமுடியும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார். பாராளுமன்றத்தில் இடது முன்னணிக் குழுவின் ஒரு பகுதியாவார் Buffet. இக்கட்சி PS க்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் எதற்கும் ஆதரவு கொடுத்து வாக்களிப்பதில்லை என்ற உறுதிமொழியைக் கொடுத்துள்ளது.

பிரதம மந்திரி Jean-Marc Ayrault, ஜனாதிபதி Francois Hollande ஆகியோரின் சிக்கன நடவடிக்கைச் சார்பு சோசலிஸ்ட் கட்சி (PS) அரசாங்கத்திற்கு கொடுக்கப்படும் இத்தகைய முறையீடுகள் முதலாளித்துவ PS வங்கிகளிடம் இருந்து தொழிலாளர்களைக் காப்பாற்றும் என்று அவர்களை ஏமாற்றுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. செவ்வாயன்று, Ayrault  இந்த ஆண்டு வெட்டுக்களில் 10 பில்லியன் யூரோக்கள் வரை அடைய இருப்பதாகவும், 2013ம் ஆண்டில் 38 பில்லியன் யூரோக்கள் அடையப்படும் என்றும் உறுதியளித்தார்.

“தீவிர இடது” அமைப்புக்களின் நிலைப்பாடு ஒன்றும் அதிகம் மாறவில்லை. முன்னாள் ட்ரொட்ஸ்கிசவாதி பியர் லம்பேர்ட்டின் கட்சியான POI உடைய அறிக்கை கூறுவதாவது: “இந்த அரசாங்கத்தின் பணி, PSA இன் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் அவர்களுடைய குடும்பத்தினருடைய வாழ்வு தியாகம் செய்யப்பட்டுவிடுவதைத் தடை செய்வதுதான்.” என்று கூறுகிறது.

ஒல்நேயில் CGT யின் தலைவர் மற்றும் Lutte ouvrière இன் முக்கிய உறுப்பினர் ஒருவருமான Jean-Pierre Mercier, அனைத்து PSA தொழிலாளர்களும் அனைத்துப் பணிகளையும் காப்பதற்கு ஒரு கூட்டுப் போராட்டம் தேவை என்ற கருத்தை ஒரு பொழுதும் முன்வைக்கவில்லை. ஆனால் இத்தகைய நிலைப்பாடு அவரை L’Humanite இடம் “எங்கள் முதலாளிகளுக்கு நாங்கள் ஒரு தகவல் அனுப்ப விரும்புகிறோம்; தங்களுக்குள் அவர்கள் உடன்பாடுகளை ஏற்படுத்திக் கொள்ளலாம். தொழிலாளர்களாகிய நாங்களும் எங்களுக்குள் உடன்பாடு செய்துகொள்ள முடியும்” என்று டம்பமாகப் பேசுவதைத் தடுத்துவிடவில்லை.

முன்னாள் ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசிக்கு கடந்த ஆண்டு டிசம்பர் 15 அன்று அவருடைய கூட்டுத் தொழிற்சங்க குழு எழுதிய பகிரங்கமான கடிதம் அவருடைய ஆலைக்கு சிறப்பு விதிகள் தேவை என மன்றாடியது. “திரு.ஜனாதிபதி அவர்களே, இதில் நீங்கள் தலையிட வேண்டும், இதையொட்டி அரசாங்கம்-PSA-தொழிற்சங்கங்கள் ஆகியவற்றிற்கு இடையே உடன்பாட்டைக் காண்பதற்கு ஒரு முத்தரப்பு பேச்சு நடத்த முடியும். அதற்கு அரசாங்க உத்தரவாதம் இருக்கும், ஒல்நே ஆலையில் அனைத்து வேலைகளும் குறைந்தப்பட்சம் 2016 வரை தக்க வைக்கப்படுவது உறுதிப்படுத்தப்பட வேண்டும்.” என்று அதில் கூறப்பட்டது. இச்சலுகைகளை தொழிற்சங்கங்கள் கொடுப்பதற்குக் காரணம் பிற ஆலைகள் அவ்வாறு கூறுவதற்கு முன் தாம் அதை அளிக்க வேண்டும் என்பதுதான்.

ஹாலண்ட் மற்றும் சோசலிஸ்ட் கட்சி சார்க்கோசிக்கு ஒரு மாற்றீடாகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு அனைத்துப் போலி இடது கட்சிகளும் தொழிற்சங்கங்களும் ஆதரவு கொடுத்தன. உண்மையில் பிரெஞ்சு முதலாளித்துவத்திற்கு விசுவாசமான ஆதரவு அமைப்பான சோசலிஸ்ட் கட்சி, வங்கிகள் தீவிரப்படுத்தும் சிக்கனக் கோரிக்கைகளைக் கவனிப்பதற்கு சார்க்கோசியை விட ஒரு படி மேலே செல்லும்.