World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

French Socialist Party government presents initial austerity budget

பிரெஞ்சு சோசலிஸ்ட் கட்சி அரசாங்கம் ஆரம்ப சிக்கன வரவு-செலவுத் திட்டத்தை வரவு-செலவுத் திட்ட அளிக்கிறது

By Antoine Lerougetel and Alex Lantier
7 July 2012
Back to screen version

ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்டின் சோசலிஸ்ட் கட்சி அரசாங்கம் அதன் 2012ற்கான வரவு-செலவுத் திட்ட, ஆரம்ப  பொருளாதாரத் திட்டங்களை இந்த வாரம் அளித்தது; அது ஜூன் 27-28 ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டைத் தொடர்ந்து வந்துள்ளது. PS செல்வந்தர்களுக்குப் பெயரளவு வரிவிதிப்பை அதிகரித்து அறிவித்துள்ளதுடன், ஊதிய முடக்கங்கள், செலவுக் குறைப்புக்கள் ஆகியவற்றையும் அறிவித்துள்ளது; இதையொட்டி பிரான்ஸின் வரவு-செலவுத் திட்ட பற்றாக்குறை ஐரோப்பிய ஒன்றியத்தின் வழிகாட்டி நெறிகளுக்கு இணங்க இருக்க வேண்டும் என்பதற்காக இது கையாளப்பட்டுள்ளது.

பிரதம மந்திரி Jean-Marc Aurault வியாழக்கிழமை வரவு-செலவுத் திட்டத்தை அளித்தார்; தேசியசட்ட மன்றத்திற்கு அவருடைய அரசாங்கத்தின் கொள்கையை உத்தியோகபூர்வமாக ஓர் உரையின் மூலம் அளித்த இரண்டு நாட்களுக்குப் பின்னர் வரவு-செலவுத் திட்டத்தை அளித்தார். ஹாலண்ட் உத்தரவிட்டிருந்து, திங்களன்று வெளிவந்த ஆய்வாளர் நீதிமன்றத்தின் (Court of Auditors) அறிக்கை ஒன்றை Aurault செல்வந்தர்கள்மீது குறைந்தப்பட்ச வரி உயர்வு, தொழிலாள வர்க்கத்தின் மீது பெரும் தாக்குதல்கள் இவற்றை நியாப்படுத்தப் பயன்படுத்தினார். அந்த அறிக்கை PS ன் பொருளாதார வளர்ச்சி பற்றிய தேர்தல் பிரச்சாரக் கணிப்புக்கள் கூடுதலான நம்பிக்கைத் தன்மையைக் கொண்டிருந்தன என்று குறிப்பிட்டுள்ளது. GDP எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2012ம் ஆண்டு 0.5% என்பதற்குப் பதிலாக 0.3%தான் வளர்ச்சி அடையும் என்றும் 2013ல் 1.7% என்பதற்குப் பதிலாக 1.2 சதவிகிதம்தான் வளர்ச்சி அடையும் என்று அறிக்கை கூறுகிறது.

ஹாலண்ட் தேர்ந்தெடுக்கப்பட்ட நேரத்தில் PS இந்த அறிக்கையைப் பயன்படுத்தி தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான வெட்டுக்களை நியாயப்படுத்துவார் என்று பரந்த அளவில் கூறப்பட்டது. .

2007 க்கும் 2011க்கும் இடையே பிரான்ஸின் கடன் 600 பில்லியன் யூரோக்களில் இருந்து ($738 பில்லியன்) “கிட்டத்தட்ட இன்று 1,800 பில்லியன் யூரோக்கள் வளர்ந்துவிட்டன, அதாவது பிரான்ஸில் ஒவ்வொரு ஆண்டும் உற்பத்தி செய்யப்படும் செல்வத்தில் 90%” என்று Ayrault கூறினார். சிக்கன நடவடிக்களின் எதிரிகளிடம், “அரசாங்கம் கிட்டத்தட்ட 50 பில்லியன் யூரோக்களை அதற்குக் கடன் கொடுத்தவர்களுக்குத் திருப்பிக் கொடுக்கப் பயன்படுத்துகிறது” என்று எச்சரித்த அவர், இந்தக் கடன்கள் சமூகநல அமைப்புமுறை, பொதுப்பணிகள் ஆகியவற்றை அச்சுறுத்தியுள்ளன என்றும் அறிவித்தார்.

இவ்வகையில் அவர் பிரான்ஸ் ஆழ்ந்த சமூகநலச் செலவுக் குறைப்புக்களை மேற்கொள்ளாவிட்டால், பிரான்ஸின் கடன்களை அரசாங்கம் திருப்பித்தர தாங்கள் நிதி அளிக்க மாட்டோம் என்று நிதியச் சந்தைகளில் இருந்து வந்த அச்சுறுத்தல்களைத்தான் எதிரொலித்துள்ளார். Der Spiegel  கூறுகிறது: “திருத்தப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்திப் புள்ளிவிரங்கள் பிரான்ஸும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிணை எடுப்பை நாடும் அரசாங்கமாக மாறலாம் என்ற அச்சங்களை அதிகரித்துள்ளது—போதிய நிதிகளை கடன்களைத் திருப்பிக் கொடுக்க அது பெறாவிட்டால்.” பிரான்சும் கிரேக்கம், ஸ்பெயின், இத்தாலி, போர்த்துக்கல், அயர்லாந்து ஆகியவற்றுடன் சேரும்; வங்கிகளின் ஆணைகளின்பேரில் ஐரோப்பிய ஒன்றியம் சுமத்தியுள்ள சிக்கன நடவடிக்கைகள் அந்நாடுகளின் பொருளாதாரங்களைப் பேரழிவிற்கு உட்படுத்தி, தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரங்களையும் அழித்துவிட்டன.

Ayrault “சிக்கனத்திற்கு திரும்புதல்” என்று இல்லாமல், “நீதியுடன் மீட்புதான்” நடைமுறைக்கு வரும், அது “நசுக்கும்” கடன் நெருக்கடியைச் சமாளிக்கும் என்று கூறினார்; மேலும் அவருடைய கொள்கை செல்வந்தர்களையும் பெருவணிகத்தையும் வரிவிதிப்பு அதிகரிப்பிற்கு உட்படுத்துதல், அதே நேரத்தில் “தொழிலாள வர்க்கத்தையும் மத்தியதர வகுப்பையும்” பாதிக்காமல் இருத்தல் என்றார்.

Ayrault, வரவு-செலவுத் திட்டத்துடன் வெளியிட்டுள்ள வரிகள், செலவுகள் பற்றிய விவரங்கள் இத்தகைய இழிந்த கூற்றுக்களைத் தவறாக்குகின்றன. ஹாலண்ட், ஆரம்ப இலக்குகளாக இந்த ஆண்டு 10 பில்லியன் யூரோக்களையும் அடுத்த ஆண்டு 33 பில்லியன் யூரோக்களையும் வரவு-செலவுத் திட்டத்தில் குறைக்கப்படும் என நிர்ணயித்திருந்தார். Ayrault கணிக்கும் ஒப்புமையில் சிறு வரிவிதிப்பு அதிகரிப்புக்கள், வரவு-செலவுத் திட்ட பற்றாக்குறை குறைப்புத் திட்டத்தில் ஏற்படுவது பெரும்பாலான வேதனை, தொழிலாள வர்க்கத்தின் முதுகுகளில்தான் வேலை வெட்டுக்கள், பொதுப்பணி ஊழியக் குறைப்புக்கள் என்ற வடிவத்தில் விழும் என தெளிவாகக் காட்டுகின்றன.

வரவு-செலவுத் திட்டம் வரிவிதிப்புக்களில் 7.2 பில்லியன் யூரோக்களைத்தான் காட்டுகின்றது; இதில் 1.1 பில்லியன் யூரோக்கள் வங்கிகள், எண்ணெய் நிறுவனங்கள் மீதான சிறப்பு வரிகள் என்றும், உயர்வருமான வீடுகளுக்கு ஒரே ஒரு முறை 2.3 பில்லியன் யூரோக்கள் வரிவிதிப்பு எனவும் உள்ளன. ஆண்டிற்கு 1 மில்லியன் சம்பாதிக்கும் இல்லங்களுக்கு 75% வரிவிதிக்க இருப்பதாக PS உறுதியளித்துள்ளது; ஆனால் உண்மை என்னவென்றால், அது ஒரு சில பில்லியன் யூரோக்களைத்தான் இந்த நடவடிக்கை மூலம் வரி வருவாய்களில் பெறமுடியும் என்பது, PS  இந்த வரி தவிர்க்கப்படும் என்று எதிர்பார்க்கிறது என்பதைக் காட்டுகிறது.

இந்த வரவு-செலவுத் திட்ட தொழிலாள வர்க்கத்தின் மீது வரவிருக்கும் அலைபோன்ற தாக்குதல்களின் ஆரம்பத்தைக் காட்டுகிறது. வணிக நாளேடு Les Echos உடைய கூற்றின்படி Ayrault  தன்னுடைய காபினெட் அமைச்சர்களுக்கு நடைமுறைச் செலவுகளில் 7% வெட்டுக்கள், பொதுத் துறை ஊழியர்களுக்கு ஊதியத் தேக்கம் ஆகியவை செயல்படுத்தப்பட வேண்டும் எனக் கூறியுள்ளார்.

ஓய்வு பெறும் பொதுத் துறை ஊழியர்களில் மூன்றில் இருவருக்குப் பதிலாகப் புதிய நியமனங்கள் செய்யப்பட மாட்டாது. இது ஹாலண்டிற்கு முன்னால் இருந்த ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசியின் வலதுசாரி UMP கொண்டுவந்த இரண்டில் ஒருவருக்கு மேல் நியமனங்கள் கூடாது என்பதுடன் ஒப்பிடத்தக்கது. இதன் பொருள் 2015 வரை ஒவ்வொரு ஆண்டும் 60,000 பணிநீக்கங்கள் நடைபெறும் என்பதாகும்; இது நூறாயிரக்கணக்கான இளைஞர்களை வேலையின்மையில் தள்ளும். ஆனால் பொலிசாரின் எண்ணிக்கை 5,000 கூடுதலாக்கப்படும்.

அதே நேரத்தில் PS அரசாங்கம் அலையென வந்துள்ள ஏராளமான பணிநீக்கங்களை நிறுத்துவதற்கு ஏதும் செய்யவில்லை; அத்தகைய பணிநீக்கங்கள் தொழில்துறைகள் பலவற்றிலும், விமானப் போக்குவரத்து, தொலைத் தொடர்பு, எண்ணெய் சுத்திகரிப்பு, சில்லரை விற்பனை ஆகியவற்றில் ஏற்படும். ஆராய்ச்சி நிறுவனம் Trendo வைச் சேர்ந்த David Cousquer 2012 மே-ஜூன்மாதங்களில் 22,000  வேலைகள் இழக்கப்பட்டன, இது சென்ற ஆண்டு இருந்ததைவிட 120% அதிகம் என்று கூறியுள்ளார். CGT எனப்படும் தொழிலாளர் பொதுக் கூட்டமைப்பு கிட்டத்தட்ட 75,000 வேலைகள் இழக்கப்படும் என்று கணித்துள்ளது. வேலையின்மை இக்கோடையில் 10% விட உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், இத்தகைய பிற்போக்குத்தனக் கொள்கைகள், ஏற்கனவே ஹாலண்ட் அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ளமை முதல் நடவடிக்கைதான் என்று ஆளும் வர்க்கம் கருதுகிறது. வருங்காலத்தில் தொழிலாள வர்க்கத்தின்மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு இவை முதல் கட்டம் எனக் கருதுகிறது; இதையொட்டி சமூகநலச் செலவுகளும் ஊதியங்களும் உலகச் சந்தையில் பிரெஞ்சு வணிகர்கள் மீண்டும் போட்டித்தன்மையை நிறுவிக் கொள்ள வகைசெய்யும் முறையில் குறைக்கப்பட உள்ளன.

தன் ஜூலை 4 தலையங்கத்தில், Le Monde எழுதியது: “திரு Ayrault  “கடுமையான”, “சிக்கனம்” போன்ற எரிச்சலூட்டும் சொற்களைத் தவிர்த்துள்ளார். ஆனால்... கட்டாயம் செய்யவேண்டிய பொதுச் செலவுகள் பற்றிய விவரங்களை வெளிப்படுத்துவதில் பிரதம மந்திரி தவிர்த்தாலும், அனைவரும், குறிப்பாக அவரே, உண்மையை நீண்ட காலம் உரைக்கமால் இருக்க முடியாது என்பதை ஒப்புக் கொண்டே தீரவேண்டும்.”

2013 க்கான வரவு-செலவுத் திட்டம், இந்த இலையுதிர்காலத்தில் வாக்களிக்கப்பட உள்ளது, அது இன்னும் தீவிர சமூகத் தாக்குதல்களை கொண்டிருக்கும் எனப் பரந்த முறையில் எதிர்பார்க்கப்படுகிறது. இதுதான் ஜூலை 9-10 திகதிகளில் நடைபெற உள்ள சமூக மாநாட்டின் பொருளுரையாக இருக்கும்; அதில் தொழிற்சங்க அதிகாரத்துவம் அரசாங்க அதிகாரிகளுடனும் முதலாளிகள் கூட்டுமைப்புக்களுடன் உடன்பாடுகள் குறித்துப் பேச்சுக்களை நடத்தும்.

ஹாலண்ட் நிர்வாகத்தின் முதல் வாரங்கள் Jean-Luc Mélenchon உடைய இடது முன்னணி, புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி போன்ற குட்டி முதலாளித்துவ இடது குழுக்களை பேரழிவிற்குட்படும் வகையில் அம்பலப்படுத்தியுள்ளன. இக்கட்சிகள்தான் நிபந்தனையற்ற முறையில் ஹாலண்டிற்கு வாக்களிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்தன. இந்த தொழிலாள வர்க்க விரோத அரசாங்கம் செயல்படுத்தும் வெட்டுக்களுக்கு அவை நேரடி அரசியல் பொறுப்பை ஏற்கவேண்டும்.

ஜூன் மாதம் நடைபெற்ற ஐரோப்பிய உச்சிமாநாட்டிற்குப்பின், ஹாலண்ட் “நன்னெறி ஆட்சி” சமச்சீர் வரவு-செலவுத் திட்ட விதியைச் சட்டமாக்குதலுக்கு உறுதி கொடுத்துள்ளார்; ஏன் ஒருவேளை இதை பிரான்ஸின் அரசியலமைப்பில்கூட பொறிக்கக்கூடும்

பிரெஞ்சு சமூகத்தின் உயர்மட்ட ஒரு சதவிகிதத்தின் ஏகபோக உரிமை டிரில்லியன் கணக்கான செல்வத்தின் மீது இருப்பதைக் காப்பதற்கும் நிதியச் சிக்கன முறைகளைச் செயல்படுத்துவதற்கும் அவர் கொண்டுள்ள உறுதிப்பாட்டிற்கு இதைவிடத் தெளிவான சான்றுகளைக் காண்பதற்கில்லை.