தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை Sri Lankan unions betray university workers’ strike
இலங்கை
தொழிற்சங்கங்கள்
பல்கலைக்கழக
ஊழியர்களின்
வேலைநிறுத்தத்தை காட்டிக் கொடுத்தது அனைத்துப் பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டுக் குழு (IUTUJC), அதன் கோரிக்கைகள் எதனையும் வெற்றிகொள்ளாமல் இலங்கை பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் வேலை நிறுத்தத்தை முடித்துக்கொண்டது. 25 சதவீத உடனடி சம்பள உயர்வு கோரியும் சம்பள முரண்பாட்டை தீர்க்கக் கோரியும் ஜூன் 5 தொடங்கிய வேலை நிறுத்தம், மூன்று வாரங்களுக்கு மேல் தொடர்ந்து, ஜூன் 26 அன்று முடிவுக்கு வந்தது. எதிர் கட்சிகளான மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.), ஐக்கிய தேசிய கட்சி (யூ.என்.பீ.), ஆகியவற்றைச் சேர்ந்த தொழிற்சங்கங்களும், அதே போல் சுயாதீனம் என்று சொல்லிக்கொள்ளும் பல தொழிற்சங்கங்களும் இந்த தொழிற்சங்க கூட்டுக் குழுவில் உள்ளன. ஆளும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி (ஸ்ரீ.ல.சு.க.) சார்ந்த தொழிற்சங்கம் இந்த கூட்டுக் குழுவின் ஒரு பகுதியாக இருக்கும் அதேவேளை, வேலை நிறுத்தத்தில் பங்கேற்கவில்லை. கூட்டு குழு தலைவர்கள், தாம் அரசாங்கத்துடனும் பல்கலைக்கழக அதிகாரிகளுடனும் எந்தவொரு சமரசமும் செய்யப் போவதில்லை என வேலைநிறுத்தத்தின் ஆரம்பத்தில் பெரிதாகக் கூறிக்கொண்டன. கோரிக்கைகள் நிறைவேறும் வரை "காலவரையற்ற வேலைநிறுத்தம்" செய்வதாக அவர்கள் தெரிவித்தனர். இவை வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்களை ஏமாற்றுவதற்கு சொல்லப்பட்ட ஏமாற்று வார்த்தைகளாகும். ஆரம்பத்தில் இருந்தே, தொழிற்சங்கங்கள், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுடனும் (UGC) அரசாங்க அதிகாரிகளுடனும் கொடுக்கல் வாங்கலுக்குச் செல்வதற்கான விருப்பத்தை சமிக்ஞை செய்திருந்தன. தொழிற்சங்கங்கள் யு.ஜி.சி.யுடனும் திரைசேறியுடனும் இரு சுற்று கலந்துரையாடல்களும், அதே போல் தொழில் திணைக்கள அதிகாரிகளுடன் மேலும் மூன்று சுற்று பேச்சுவார்த்தைகளும் நடத்தியிருந்தன. உண்மைக்கு மாறாக, தொழிற்சங்க தலைவர்களால் வேலை நிறுத்தக்காரர்களுக்கு சொல்லப்பட்ட செய்தி, சாதகமான பதில் கிடைக்கும் என்பதே ஆகும். விவாதங்கள் தொடர்ந்துகொண்டிருந்த அதே சமயம், உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க, வேலை நிறுத்தம் செய்பவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தான் தயாரில்லை என்று திமிர்த்தனமாக அறிவித்ததோடு உடனடியாக வேலைக்கு திரும்புமாறும் அவர்களுக்கு கட்டளையிட்டார். அவர் வேலைநிறுத்தம் செய்த காலத்துக்கான தொழிலாளர்களின் சம்பளத்தை நிறுத்திவைப்பதாகவும் அச்சுறுத்தினார்.
தொழிற்சங்கங்கள் ஒரு வியாபாரத்துக்கான சமிக்ஞையை காட்டத் தொடங்கின. கூட்டுக்
குழுவின் தலைவர்
இணை
தலைவர் ஆர்.எம். சந்திரபால, தொழில் திணைக்களத்தில் நடந்த இரண்டாவது
கலந்துரையாடலின் முடிவில், தொழிற்சங்கங்கள் 25 சதவிகித சம்பள அதிகரிப்புக்கான
கோரிக்கையை "மறுபரிசீலனை" செய்யத் தயார் என்று ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
சர்வதேச
நாணய நிதியம் (IMF)
வகுத்த
பரந்த சிக்கன திட்டத்தின் ஒரு பகுதியாகவே அரசாங்கம் கல்விசாரா ஊழியர்களின்
சம்பளத்தை அதிகரிக்க மறுக்கின்றது. அரசாங்கம் எரிபொருள்,
உணவு மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களின் விலைகளை உயர்த்தி,
சமூக செலவுகளை வெட்டிக் குறைத்துள்ள நிலையிலும் கூட ஊதிய உயர்வை
கட்டுப்படுத்திவருகின்றது.
2007
மேயில்,
"நாட்டில் நிலவும் சூழ்நிலையின்" காரணமாக கூட்டுக் குழு இன்னொரு வேலை நிறுத்தத்தை
முடிவுக்குக் கொண்டு வந்தது. வேறு வார்த்தைகளில் சொன்னால், தொழிலாளர்கள்
புலிகளுக்கு எதிரான ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் புதுப்பிக்கப்பட்ட யுத்தத்துக்காக
தங்கள் நலன்களை விட்டுக்கொடுக்க வேண்டும் என்பதாகும். மொரட்டுவை பல்கலைக்கழகத்தில், அனைத்து அமைப்புகளையும் சேர்ந்த தொழிற்சங்க தலைவர்கள், இக்கட்டுரையின் ஆசிரியர் மீது சரீரத் தாக்குதல் நடத்த ஒன்றிணைந்தனர். அவர் பல தடவை அச்சுறுத்தல்களை உடைத்தெறிந்து கூட்டங்களில் தொழிலாளர்கள் முன் பேசினார். ஒட்டுமொத்த தொழிலாளர்களும் இந்த காட்டிக்கொடுப்பில் இருந்து படிப்பினைகளைப் பெற வேண்டும். தொழிற்சங்க கருவிகளில் இருந்து முழுமையாக பிரியாமல் மற்றும் ஒரு சோசலிச முன்னோக்கின் பக்கம் திரும்பாமல், தொழிலாள வர்க்கம் ஒரு அடியேனும் முன்னெடுத்து வைப்பது சாத்தியமற்றது. நாம் சோசலிச சமத்துவ கட்சியின் வேலைத் திட்டத்தை முழுமையாக படிக்குமாறும், அதை தொழிலாள வர்க்கத்தின் புதிய வெகுஜன புரட்சிகர கட்சியாக கட்டியெழுப்ப அதில் இணையுமாறும் சகல கல்விசாரா ஊழியர்களுக்கும் ஏனைய தொழிலாளர் தட்டினருக்கும் அழைப்பு விடுக்கின்றோம். |
|
|