ஐரோப்பிய ஒன்றிய மாநாட்டு நடவடிக்கைகள் தொழிலாள வர்க்கத்தின் மீது ஆழ்ந்த
தாக்குதல்களைக் குறிக்கின்றன
Stefan Steinberg and Nick Beams
2 July 2012
use this version to print | Send
feedback
வெள்ளியன்று ஐரோப்பிய ஒன்றிய மாநாட்டில் எட்டப்பட்ட உடன்படிக்கையானது,
வங்கியியல்
அமைப்புமுறை சிதைந்து போவதற்கான உடனடிச் சாத்தியப்பாட்டை திசை திருப்பியது.
எவ்வாறிருந்தபோதினும்,
அக்கண்டம்
முழுவதிலும் தொழிலாள வர்க்கத்தின் சமூக நிலைமைகளின் மீது நடத்தப்படும்
தாக்குதல்களை அது இன்னும் தீவிரப்படுத்தும் நடவடிக்கைகளை உள்ளடக்கி உள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய பிணையெடுப்பு நிதியை அரசாங்கங்களுக்கு வழங்குவதற்கு மாறாக
அவற்றை வங்கிகளுக்கு வழங்கும் விதமாக ஸ்பெயின் மற்றும் இத்தாலிய வங்கிகளுக்குள்
நேரடியாக பணத்தை பாய்ச்ச அனுமதிக்கும் ஒரு முன்மொழிவிற்கு,
பிரான்சின்
ஆதரவுடன் ஸ்பெயின் மற்றும் இத்தாலியிலிருந்து அளிக்கப்பட்ட அழுத்தங்களின் கீழ்,
ஜேர்மன்
ஒப்புக்கொண்டது.
இந்த
விட்டுகொடுப்பிற்கு கைமாறாக,
தற்போதிருக்கும்
தேசிய நெறிமுறை வலையமைப்பை
(network of
national regulators)
யூரோ மண்டலத்திற்கான
ஒரு கூட்டு வங்கி மேற்பார்வையாளரைக்
(a joint bank
supervisor)
கொண்டு பிரதியீடு செய்வதென்று அம்மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டது.
அரசாங்கத்
தலைவர்கள் இதுபோன்றவொரு உடன்படிக்கையை இந்த ஆண்டு இறுதிக்குள் எட்ட
உறுதியளித்தனர்.
ஓர்
உடன்படிக்கையை எட்ட முடியாமல் போவதும் மற்றும் ஒரு வெளிப்படையான பிளவும்
ஐரோப்பிய வங்கிகளைச் சார்ந்திருக்கும் உலக பங்குச்சந்தைகளின் பொறிவிற்கு
இட்டுச் செல்லக்கூடும் என்பதோடு யூரோ மீது ஓர் ஊகவணிக தாக்குதல் நிகழ்வதற்கு
இட்டுச்செல்லும் என்ற எச்சரிக்கைகளுக்குப் பின்னர்,
ஜேர்மன்
சான்சிலர் அங்கேலா மேர்க்கெல் அவருடைய முந்தைய நிலைப்பாட்டிலிருந்து
பின்வாங்கினார்.
ஐரோப்பிய ஒன்றியமும்,
அதில்
உள்ளடங்கியுள்ள அரசாங்கங்களும் அவற்றின் சிக்கன திட்டங்களை முன்னெடுக்க
அழுத்தம் அளித்து வரும் நிலையில்,
சாரத்தில்,
இந்த மாநாடு
போதிய கால அவகாசத்தை ஏற்படுத்தி கொள்ள அவசர அவசரமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
வேலைகள்,
கூலிகள் மற்றும்
சமூக சேவைகளுக்கு எதிரான தொழிலாளர் வர்க்க விரோத தாக்குதல்களிலிருந்து
பின்வாங்க போவதில்லை என்பது தான் முதன்மை தகவலாக இருந்தது.
இது யூரோ மண்டல
வங்கியியல் நெறிமுறையை மத்தியத்துவப்படுத்தும் அந்த உடன்படிக்கையால்,
அதாவது
வங்கிகளின் அதிகாரத்தை இன்னும் கூடுதலாக மத்தியப்படுத்தும் மற்றும் பொருளாதார,
சமூக
கொள்கைகளின் மீது அவற்றின் கட்டுப்பாட்டை வைத்திருக்கும் ஒரு நகர்வால்
அடிக்கோடிடப்பட்டது.
வங்கி
பிணையெடுப்பு விதிமுறைகளில் மாற்றத்தைக் கொண்டு வருவதில் தலைமை வகித்த இத்தாலிய
பிரதம மந்திரி மாரியோ மொன்டி மற்றும் மெர்கேலுக்கு இடையில் நடந்த
பேச்சுவார்த்தைகளின் தகவல்கள் கிடைக்கவில்லை.
ஆனால் ஓர்
உடன்படிக்கை எட்டப்படவில்லை என்றால்,
இந்த நெருக்கடி
மிக வேகமாக இத்தாலி மற்றும் ஸ்பெயினின் வங்கியியல் முறைகளிலிருந்து தொடங்கி
ஜேர்மன் வங்கியியல் அமைப்புமுறை வரையில் பரவும் என்பதை இத்தாலிய தலைவர்
தெளிவுபடுத்தியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இது பழைய பனிப்போர் காலக்கட்ட
“உறுதியான ஒருவரை ஒருவர் அழிக்கும்"
கோட்பாட்டிற்கு இணையான நிதியியல் நிலைமை யூரோ மண்டலத்தின்
இதயதானத்தில் அமர்த்தப்படும் என்பதையே அர்த்தப்படுத்துகின்றது.
வங்கிகளுக்கு பொது நிதியைப் பாய்ச்சுவதை வேகப்படுத்தும் சட்ட மாற்றங்களுக்கு
இணங்க வைப்பதில் வாஷிங்டனும் ஜேர்மனிக்கு பலமாக அழுத்தம் அளித்தது.
ஐரோப்பாவில்
பின்னடைவும்,
நிதியியல்
கொந்தளிப்பும் இணைந்து பரவி வருவது,
அமெரிக்க
மற்றும் உலக பொருளாதாரத்தில் அதிகளவில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
ஓர்
அரசு உத்தரவாதமே ஜேர்மன் நிதிய நலன்களை
பாதுகாப்பதற்கான சிறந்த வழியாகும் என்ற அடித்தளத்தில் ஐரோப்பிய ஒன்றிய
பிணையெடுப்பு நிதிகளை வங்கிகளுக்குள் நேரடியாக பாய்ச்சுவதை முதலில் மேர்க்கெல்
எதிர்த்து வந்தார்.
இருந்தபோதினும்,
இது ஒட்டுமொத்த
நிதியியல் அமைப்புமுறையில் அதிகப்படியாக நிலைகுலைவை உருவாக்கி,
மிகவும்
கடன்பட்ட அரசாங்கங்களை பலவீனமான வங்கிகளுக்கு நெருக்கமாக இன்னும் அதிகமாக
பிணைத்துவிடும் ஒரு நிலைமைக்கு இட்டு சென்றது.
மாநாட்டிற்குப் பிந்தைய அறிவிப்பால் இந்த பிரச்சினையின் முக்கியத்துவம்
அடிக்கோடிடப்பட்டது.
அது பின்வருமாறு
தொடங்கியது:
“வங்கிகள்
மற்றும் நாடுகளின் இறையாண்மைகளுக்கு இடையில் நிலவும் நச்சு வட்டத்தை உடைப்பது
தவிர்க்கவியலாததாக உள்ளது என்பதில் நாங்கள் உடன்படுகிறோம்.”
ஜேர்மன்
விட்டுக்கொடுத்து இருந்தது என்பதோடு சிக்கன முறைமைகளைச் சற்றே இலகுவாக்கவும்
அது கோரியிருக்கக்கூடும் என்ற உடனடி பத்திரிகை விடையிறுப்புகள் இருந்த போதினும்,
அனைத்து-ஐரோப்பிய
மேற்பார்வைகளின்
(all-European
supervisor)
மூலமாக சமூக செலவினங்களின் மீது தாக்குதல்களை இன்னும் கூடுதலாக திணிப்பதே
உடன்படிக்கையின் இறுதி விளைவாக இருக்கக்கூடும்.
நடைமுறையில் இது
வெறுமனே நெருக்கமான வங்கி நெறிமுறை ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பதை மட்டும்
குறிக்காது,
அதற்கு
அப்பாற்பட்டு அரசு நிதி கொள்கைகள் மீதான இறுக்கமான கட்டுப்பாடுகளைக்
குறிக்கிறது.
இந்த
மதிப்பீடே,
சந்தைகளின்
உடனடி பிரதிபலிப்பின் பின்னால் இருந்ததுபோல் காணக்கூடியதாக உள்ளது.
ஐரோப்பிய சந்தைகளில் வெள்ளியன்று எழுந்த மீளுயர்வு,
அரசு
பத்திரங்களுக்குள் போகும் பணத்தோடு சேர்ந்து,
முக்கிய
பங்குகளின்
(blue-chip stocks)
மீது இந்த ஆண்டில்
இதுவரையில் கிடைத்த ஒரு நாள் ஆதாயங்களிலேயே மிகப்பெரியளவாக இருந்தது.
அமெரிக்க
சந்தைகளிலும்
2
மற்றும்
3
சதவீத இலாபங்கள்
பதிவாகின.
ஒரு ஒட்டுமொத்த
கண்காணிப்பாளரை நியமிப்பதற்கு நிதியியல் சந்தைகளின் நேர்மறையான விடையிறுப்பை
பத்திரிக்கை செய்திகள் குறிப்பிட்டு காட்டின.
ஐரோப்பா
முழுவதிலும் செலவின வெட்டுக்களைத் திணிக்கும் நோக்கம் கொண்ட ஐரோப்பிய ஒன்றிய
நிதி உடன்படிக்கையை ஆதரிப்பதில்,
எதிர்தரப்பு
சமூக ஜனநாயகவாதிகள்
மேர்க்கெலுக்கு
அளித்த ஆதரவோடு சேர்ந்து,
வெள்ளியன்று
ஜேர்மன் நாடாளுமன்றத்தில் கிடைத்த பெரும்பான்மையான வாக்களிப்பு,
சிக்கன
கொள்கைகளுக்கு மறு-உத்தரவாதம்
அளிக்கப்பட்டதை அடிகோடிட்டன.
கிரேக்க
சிக்கனத் திட்டத்தின் மீது நிகழ்ந்த ஒருவித நீண்டகால பேச்சுவார்த்தைகளின்
மூலமாக இதுபோன்ற முறைமைகள் திணிக்கப்பட்டன என்பதற்கு மாறாக,
அந்த
உடன்படிக்கை செலவின வெட்டுக்களைத் திணிப்பதற்கான ஒரு நிரந்தர செயல்முறையாக
அமைக்கப்பட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது.
ஸ்பெயினும்,
இத்தாலியும்
அவற்றின் வங்கியியல் அமைப்புமுறைகளுக்குரிய நிதிகளைப் பெறுவதற்கு கைமாறாக புதிய
சிக்கன முறைமைகளை திணிக்க ஏன் நிர்பந்திக்கப்படவில்லை என்பதற்கு இது தான்
முக்கிய காரணமாகும்.
வெட்டுக்கள்
மீது தற்காலிக பேரம்பேசல்களுக்கு பதிலாக,
இந்த நிதியியல்
உடன்படிக்கையானது ஒரு தொடர்ச்சியான நிகழ்முறையாக நடைமுறைப்படுத்த ஒரு
காட்டுமிராண்டித்தனமான சிக்கன முறைமைகளை அளிக்கின்றது.
“கடுமையான
நிபந்தனைகளோடு"—அதாவது,
வேலைகளின்
அழிப்பு,
வேகப்படுத்தல்
மற்றும் தனியார்மயமாக்கல் ஆகிய நோக்கத்தோடு கூலிகள் மற்றும் ஓய்வூதியங்களில்
வெட்டுகள் மற்றும்
"கட்டமைப்பு
சீர்திருத்தங்கள்"
ஆகியவற்றின்
கடுமையான நிபந்தனைகளோடு—நிதிகள் வழங்கப்படும் என்று மேர்க்கெல் மற்றும்
ஐரோப்பிய மத்திய வங்கி தலைவர் மாரியோ திராஹி இருவரும் மாநாட்டிற்குப் பின்னர்
எச்சரித்தனர்.
நிதியியல் சந்தைகள் அந்த அறிவிப்பால் ஒரு குறுகிய-கால
ஊக்கத்தைப் பெற்றன என்ற போதினும் அல்லது அந்த உடன்படிக்கையால் அவை எப்போதும்
ஊக்கம் பெற்றிருந்தாலும் கூட,
ஒரு நீண்டகால
தீர்வு எட்டப்பட்டுவிட்டது என்று எவரும் நம்பவில்லை.
500 பில்லியன்
யூரோ வைத்திருக்கும் ஐரோப்பிய ஸ்திரப்பாடு செயல்முறை
(European Stability
Mechanism – ESM)
ஸ்பெயின் மற்றும்
இத்தாலி இரண்டின் கடன்களையும் அடைக்க தேவைப்படும் போதிய நிதியை
கொண்டிருக்கவில்லை என குறிப்பிடத்தக்க ஐயுறவு உள்ளது.
முக்கியமாக,
சிறிதும்
விட்டுக்கொடுக்காத ஜேர்மன் எதிர்ப்பை முகங்கொடுப்பதால்
ESM
நிதியை அதிகரிப்பதற்கு
அங்கே எந்தவொரு நகர்வும் இல்லை.
பைனான்சியல்
டைம்ஸின்
விமர்சகர் வோல்ஃப்கேன்ங் முன்சாவ் இன்றைய ஒரு கட்டுரையில் எழுதியதைப் போல,
ESMஇன் கீழ்
ஜேர்மனியின் பொறுப்புணர்வு வெள்ளியன்று ஏற்பட்ட உடன்படிக்கைக்கு முன்னர்
எவ்வாறு இருந்ததோ அவ்வாறே உள்ளது.
அவர்
எழுதுகிறார்,
“எப்படி
ஜேர்மனியின் மொத்த பொறுப்பில் எவ்வித மாற்றமுமில்லாது அல்லது ஐரோப்பிய மத்திய
வங்கியின் கொள்கைகளும் மாற்றப்படாமல்,
ஒரு வாரத்திற்கு
முன்னர் பாதுகாப்பாக இல்லாத ஸ்பெயினும் இத்தாலியும் இப்போது எவ்வாறு
பாதுகாப்பாக இருக்க முடியும் என்பதை யாராவது எனக்கு விளங்க வைக்க வேண்டும்,”
என்றார்.
“நான்
வாழும் வரையில்"
இங்கே யூரோ
மண்டல பங்கு பத்திரங்கள் கொண்டு வரப்படாது என்று கடந்த வாரம் மேர்க்கெல்
நாடாளுமன்றத்தில் கூறிய போது,
கூடுதல் ஜேர்மன்
நிதிகளை வழங்குவதன் மீது அவருடைய எதிர்ப்பை வலியுறுத்தி இருந்தார்.
இதுபோன்ற முறைமைகளுக்கு யூரோ மண்டலத்தின் ஏனைய பிரதான உறுப்பினர்களிடையே பரந்த
ஆதரவு இருந்த நிலையில் செய்யப்பட்ட இத்தகைய அறிவிப்புகள்,
வெள்ளி
மாநாட்டில் உடன்படிக்கை எட்டப்பட்ட போதினும்,
பிரதான
சக்திகளுக்கு இடையில் பிளவுகள் விரிவடைகின்றன என்ற உண்மையையே குறிக்கின்றன.
தொழிலாள
வர்க்கத்தின் சமூக நிலைமைகளின் மீது தாக்குதல்களை ஆழப்படுத்துவதைத் தவிர,
இந்த
நெருக்கடிக்கு அவர்களிடம் ஒரு தீர்வு இல்லையென்றாலும் கூட,
ஓர்
ஒருங்கிணைந்த விடையிறுப்பும் கூட கிடையாது.