சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு

US and EU impose crippling sanctions on Iran

அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் ஈரான்மீது முடக்கும் பொருளாதாரத் தடைகளைச் சுமத்துகின்றன

By Peter Symonds
2 July 2012

use this version to print | Send feedback

ஈரானிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தடைவிதித்துள்ளது, நேற்றில் இருந்து நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது, தெஹ்ரானுடன் ஆபத்து மிகுந்த அமெரிக்கத் தலைமையிலான மோதலின் தீவிர விரிவாக்கத்தைக் குறிக்கிறது. புதிய அமெரிக்க அபராதங்களுடன் இணைந்து, ஐரோப்பிய ஒன்றியத் தடை பேர்சிய வளைகுடாவில் அழுத்தங்களை அதிகரிக்கும், இராணுவ மோதல் என்னும் ஆபத்தை உயர்த்தும்.

ஐரோப்பிய ஒன்றிய பொருளாதாரத் தடைகளை வரவேற்ற அமெரிக்க வெளிவிவகாரச் செயலர் கிளின்டன் ப்ளூம்பெர்க் வானொலி நிலையத்திற்கு சனிக்கிழமை அன்று கூறினார்: அழுத்தம் கொடுத்தல் என்பதுதான் இப்பொழுது நம்முடைய முக்கிய குவிப்பு, பொருளாதாரத் தடைகள் ஈரானை [பேச்சுவார்த்தைகளுக்காக] மேசைக்கு கொண்டுவரும் என நாங்கள் நம்புகிறோம். என்றார். அவர் மேலும் கூறினார்: அவை [பொருளாதாரத் தடைகள்] அவர்களுக்கு [ஈரானியர்களுக்கு] கூடுதல் பொருளாதார இடர்களை அதிகரிக்கும் வகையில் தொடரும்.

உண்மையில் ஒபாமா நிர்வாகம் ஈரானிய ஆட்சியுடன் அதன் அணுசக்தித் திட்டம் குறித்து உண்மையான விவாதங்களில் ஈடுபடுவதற்கு விருப்பம் எதையும் கொண்டிருக்கவில்லை. வாஷிங்டன் தெஹ்ரானை தன் இறுதி எச்சரிக்கையை ஏற்குமாறு வலுவான திட்டங்கள் மூலம் முயல்கிறது; அந்த எச்சரிக்கை ஈரானுக்கும் P5+1 குழுஅமெரிக்கா, பிரித்தானியா, ரஷ்யா, சீனா மற்றும் ஜேர்மனிஆகியவற்றிற்கும் ஏபரல் மாதம் இஸ்தான்புல்லில் நடத்த பேச்சுக்கள் போது கூறப்பட்டது.

அமெரிக்கா ஈரான் யுரேனிய அடர்த்தியை 20%த்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும், அதன் இருப்புக்களை நாட்டை விட்டு வெளியேற்றவேண்டும், போர்டௌவில் இருக்கும் அதன் யுரேனிய அடர்த்தி ஆலையை மூடவேண்டும் என்று கோரியுள்ளது. இதற்குப் பதிலாக தெஹ்ரானுக்கு கிட்டத்தட்ட ஏதும் கிடைக்கவில்லைஅதன் வணிக விமானத்திற்கு உதிரிபாகங்கள் பெறுதல், தெஹ்ரானில் இருக்கும் அதன் அணு ஆலைக்கு எரிபொருள் தட்டுக்கள் அல்லது அறிவிக்கப்பட்டுள்ளதற்கு மேல் பொருளாதாரத் தடைகளைச் செயல்படுத்தப்படப்போவதில்லை என்றோ கூறப்படவில்லை.

ஜூன் 18-20 ல் மாஸ்கோவில் நடக்கும் பேச்சுக்கள், அமெரிக்காவும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகளும் இக்கோரிக்கைகளை சிறிதும் குறைக்கத் தயாராக இல்லை என்ற நிலையில் கிட்டத்தட்ட முறிந்து போயின; அவற்றுள் சமீபத்திய அமெரிக்க, ஐரோப்பிய ஒன்றிய பொருளாதாரத் தடைகள் சுமத்தப்படுதலும் அடங்கும். திட்டமிடப்பட்ட மற்றும் ஒரே ஒரு கூட்டம், குறைந்த தரத்தில் உள்ள தொழில்நுட்பப் பேச்சுக்கள், இஸ்தான்புல்லில் நாளை நடக்க இருப்பவை, பேச்சுக்கள் முற்றிலும் சரிந்துவிடுவதைத் தடுக்கும் முயற்சியைத் தவிர வேறு ஏதும் இல்லை.

ஐ.நா.விற்கான ஈரானின் தூதர் மகம்மத காஜயீ, கடந்த வாரம் புதிய பொருளாதாரத் தடைகளை கண்டித்தார். இதுவே அவர்கள் எங்களுடன் பொருளார்ந்த உரையாடல் நடத்த விரும்பவில்லை என்பதைத்தான் குறிக்கிறது.... பேச்சுக்கள் முறையாக நடக்கவில்லை என்றால், பேச்சுக்களில் மற்றொரு தேக்கத்தை நாம் காண்போம்.

ஐரோப்பிய ஒன்றியம் ஜனவரி மாதத்தில் இருந்து ஈரானில் இருந்து பெறும் எண்ணெய் இறக்குமதிகள் மீது தடை என முடிவு எடுத்தது; ஆனால் இருக்கும் ஒப்பந்தங்கள்படி உறுப்பு நாடுகள் மாற்றீட்டு அளிப்புக்களைப் பெறுவதற்காக ஐந்து மாத இடைக்காலத் தொடர்பு நீடிக்க அனுமதித்தது. ஒரு பொருளாதார நெருக்கடியை ஏற்கனவே எதிர்கொண்டுள்ள இத்தாலியும் கிரேக்கமும் குறிப்பிடத் தக்க வகையில் பாதிப்பிற்கு உட்படும். குறிப்பாக, கிரேக்கம் பாதிக்கப்பட்டுள்ளது, ஏனெனில் அது அதன் ஈரானில் இருந்து பெறப்படும் கச்சா எண்ணெய்க்கு ஆதரவான நலன்களைப் பெற்று வந்தது; பிற அளிப்பாளர்கள் அத்தகைய ஆதாயங்களைக் கொடுக்க இயலாது என்று Chatham House பகுப்பாய்வாளர் போல் ஸ்டீவன்ஸ் BBC  இடம் கூறினார்.

கடல்வணிகக் காப்பீட்டை ஈரானிய எண்ணெயை எடுத்துச் செல்லும் கப்பல்களுக்கு அளிப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம் விதிக்கும் தடை ஒன்றும் நேற்றில் இருந்து செயலுக்கு வந்தது. லண்டனைத் தளமாகக் கொண்ட International Group P&I குழுக்கள் உலகின் எண்ணெய்க் கப்பல்களில் 95%க்கு காப்பீடு அளிக்கின்றன. கடந்த வாரம் சியோல் அது ஈரானிய கச்சா எண்ணெய் வாங்குவது அனைத்தையும் காப்பீடு இல்லாததால் நிறுத்தப்போவதாக அறிவித்தபின் தென் கொரியாவுடன் உடன்பாட்டிற்காகப் பெருந்திகைப்புடன் பேச்சுக்களை நாடியுள்ளது. தென் கொரியா ஈரானிய எண்ணெய் வாங்கும் நாடுகளில் நான்காம் பெரிய நாடு ஆகும்.

அமெரிக்க சட்டம் ஒன்று, ஈரானிய மத்திய வங்கியுடன் வணிகம் நடத்தும் வெளிநாட்டு நிறுவனங்கள் தொடர்புடையது கடந்த வியாழன் முதல் நடைமுறைக்கு வந்தது. இந்த நடவடிக்கை ஏற்கனவே ஈரானிய எண்ணெய் ஏற்றுமதிகள்,குறிப்பாக, ஆசியாவிற்குச் செல்லுவதில் பாதிப்பை ஏற்படுத்திவிட்டது; ஏனெனில் ஜனாதிபதி ஒபாமா அளிக்க இருக்கும் ஆறு மாத கால விலக்கிற்காக நாடுகள் குறைந்த கச்சா எண்ணைய் வாங்குவதில் பரபரப்புக் காட்டின. இந்தியா, ஜப்பான், தென் கொரியா, ஸ்ரீலங்கா உட்பட 20 நாடுகள் தற்காலிக விலக்குகள் அளிக்கப்பட்டுள்ளன.

கடைசி நிமிடத்தில்தான் சீனாவிற்கும் ஒபாமா விதிவிலக்கு அளித்தார்; இது இரு நாடுகளுக்கும் இடையே உள்ள உறவுகளின் சரிவில் பெரும் சரிவை ஏற்பட்டிருக்கக் கூடியதைத் தவிர்த்துள்ளது. அமெரிக்கச் சட்டத்தின்படி, ஈரானுடன் வணிகம் செய்யும் நிறுவனங்கள் அமெரிக்க வங்கி, நிதிய முறைகளுடன் தொடர்பு கொள்ள முடியாது. சீன வெளியுறவு அமைச்சரகச் செய்தித் தொடர்பாளர் ஹோங் லீ கடந்த வாரம் ஈரான்மீது எந்தவித ஒருதலைப்பட்சப் பொருளாதாரத் தடைகளுக்கும் தன் அரசாங்கத்தின் எதிர்ப்பை மீண்டும் வலியுறுத்தினார்: இன்னும் குறைந்த வகையில்தான் பெய்ஜிங் இத்தகைய ஒருதலைப்பட்ச பொருளாதாரத் தடைகள் மூன்றாம் நாடுகளின்மீது சுமத்தப்படுவதை எற்கும்.

புதிய அபராதங்களின் பாதிப்பை ஈரானிய அதிகாரிகள் உதறித்தள்ளனிர். ஈரானின் மத்திய வங்கியின் கவர்னர் மகம்மது பஹமனி தன் நாடு வெறுமே உட்கார்ந்திராது வெளிநாட்டு நாணய இருப்புக்கள் வகையில் $150  பில்லியனை இத்தீய கொள்கைகளுக்கு எதிராகப் போரிட உதவக் கொண்டுள்ளது என்று கூறினார்.

ஆனால், ஐரோப்பிய ஒன்றியத் தடை ஏற்கனவே தீவிர பொருளாதார இடர்களைக் கொண்டுள்ள ஈரானுக்கும், அதன் தொழிலாள வர்க்கத்திற்கும் கடுமையான பாதிப்பைக் கொடுக்கும். ஐரோபிய நாடுகள் ஓராண்டிற்கு முன் ஈரானின் எண்ணெய் ஏற்றுமதிகளில் 18% இறக்குமதியைக் கொண்டிருந்தன; ஆனால் அந்த எண்ணிக்கை ஏற்கனவே மிகவும் சரிந்துவிட்டது; இப்பொழுது இன்னும் குறைந்துவிடும். மொத்தத்தில் ஈரானின் எண்ணெய் ஏற்றுமதிகள் கிட்டத்தட்ட 40% சரிந்துவிட்டன; நாள் ஒன்றிற்கு 1.5 பில்லியன் பீப்பாய்கள்தான், கடந்த ஆண்டில் இருந்த 2.5 பீப்பாய்களுக்குப் பதிலாக ஏற்றுமதி ஆகின்றன.

எண்ணெய், அதில் இருந்து பெறப்படும் பொருட்கள் ஈரானின் ஏற்றுமதிகளில் கிட்டத்தட்ட 80% உள்ளன; அரசாங்க வருவாயில் கிட்டத்தட்ட பாதி அவற்றில் இருந்துதான் வருகிறது. ஏற்கனவே நடைமுறையில் உள்ள தடைகளால் நாட்டு நாணயத்தின் மதிப்பு அமெரிக் டாலருக்கு எதிராகக் கடந்த சில ஆண்டுகளில் 40% குறைந்துவிட்டது. ரியல் கடந்த இரு வாரங்களில் மட்டும் 15% சரிந்துவிட்டது; இது பணவீக்கம் பெருத்துள்ளதற்குக் காரணம் ஆகும்.

ஈரானின் மத்திய வங்கி கொடுத்துள்ள உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்கள் ஆண்டு பணவீக்க விகிதம் குறைந்த பட்சம் 25% எனக் காட்டியுள்ளன. கடந்த ஆண்டு அடிப்படை உணவுப் பொருட்களின் விலை பெரிதும் உயர்ந்துவிட்டது: கோழி இறைச்சி 95% அதிகரித்துவிட்டது, மற்ற இறைச்சிப் பொருட்கள் 32.5%, தானியங்கள் 56%, பழவகைகள் 81.7%, கறிகாய்கள் 92.3% என உயர்ந்துவிட்டன. வாழ்க்கைத் தரத்திற்குத் தேவையான செலவுகளின் உண்மை அதிகரிப்பு இன்னும் கூடுதலாக இருக்கும்; இதையொட்டி தொழிலாள வர்க்கத்திற்கு பெரும் இடர்கள் ஏற்பட்டுள்ளன; அதேபோல் நகர்ப்புற, கிராமப்புற ஏழைகளும் பெரிதும் அவதியுற்றுள்ளனர்.

பொருளாதாரத் தடைகள் சுமத்தப்படுவதற்கு முன்பு, அரசாங்கம் வெளிநாடுகளில் இருந்து நிறைய அளவில் பொருட்களை வாங்கியது: அதையொட்டி உள்ளூரில் இருந்து தேவைகள் வரவில்லை, ஆலைகள் மூடப்பட்டன. இப்போக்கு ஊகவணிகத்தாலும் அதிகமாயிற்று; வணிகங்கள் சொத்துக்களை உற்பத்தியில் இருந்து நிலங்களை வாங்குவதற்கு மாற்றினர், வெளிநாட்டு நாணயங்களைப் பெறுவதற்கு மாற்றினர். ஆலை மூடல்கள், வேலை இழப்புக்கள் ஆகியவை நாட்டின் ஏற்கனவே உயர்ந்துவிட்ட வேலையின்மை விகிதங்கள், குறைந்தவேலைகளில் ஈடுபடுதல் ஆகியவற்றை மோசமாக்கிவிட்டன; குறிப்பாக இளைஞர்களிடையே.

முடக்கும் பொருளாதாரத் தடைகள் ஈரானிய ஆட்சியை வாஷிங்டன் விதிகளுக்கு உட்பட்டு பேச்சுவார்த்தை மேசைக்கு வரும் கட்டாயத்தைக் கொடுக்கும் வடிவமைப்பைக் கொண்டுள்ளன என்பதுடன் பொருளாதார யுத்தங்களும் ஆகும்; இவை நாட்டில் பெரும் குழப்பத்தை தோற்றுவிக்கும் நோக்கத்தை உடையவை, ஈரான்மீது இராணுவத் தாக்குதல்களுக்கு வழிவகுக்கும். அமெரிக்காவும் இஸ்ரேலும் பல முறை அனைத்து விருப்புரிமைகளும்இராணுவத் தாக்குதல் உட்படமேசைமீது உள்ளன என்று எச்சரித்துள்ளன. இரு நாடுகளும் ஒருதலைப்பட்ச, சட்டவிரோத ஈரான் மீதான தாக்குதல்கள் பற்றி தயாரிப்பில் அதிக அளவைக் கொண்டுள்ளன.

ஈரான் ஏற்கனவே பல முறை ஆதாரமற்ற அமெரிக்கக் கூற்றான அது அணுவாயுதங்களைத் தயாரித்து வருகிறது என்பதை மறுத்து, அதன் அணு சக்தி திட்டங்கள் சமாதான நோக்கத்திற்குத்தான் என வலியுறுத்தியுள்ளது. அணு சக்தி பிரச்சினை ஒபாமா நிர்வாகத்தால் தெஹ்ரானில் அமெரிக்கப் பொருளாதார, மூலோபாய நலன்களுக்கு இணங்க நடக்கும் ஆட்சி ஒன்றை நிறுவும் அதன் பொறுப்பற்ற முயற்சிக்கு ஒரு போலிக்காரணமாகப் பயன்படுத்திவருகிறது. புதிய தடைகள் சுமத்தப்படுவது முழுப் பிராந்தியத்தையும் மற்றய சக்திகளையும் மோதலில் ஈடுபடுத்தும் அச்சுறுத்தலை நோக்கிய இன்னுமொரு படியாகும்.