சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பிய ஒன்றியம்

EU summit averts split with deal to bail out Spanish, Italian banks

ஸ்பெயின், இத்தாலிய வங்கிகளுக்கு பிணை கொடுப்பதற்கான உடன்பாட்டுடன் ஐரோப்பிய உச்சிமாநாடு பிளவைத் தவிர்க்கிறது

By Stefan Steinberg and Barry Grey
30 June 2012

use this version to print | Send feedback

இரண்டு நாள் ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாடு, வியாழன் அன்று 14 மணி நேரம் கடுமையான பேச்சுக்களுக்குப் பின் ஓர் உடன்பாட்டை அடைந்து, பாதிக்கப்பட்டிருக்கும் ஸ்பெயின், இத்தாலிய வங்கிகளுக்கு குறுகிய கால உதவி வழங்குதல் என்பதில் முடிந்துள்ளது. இதனால் ஐரோப்பிய ஒன்றிய பிணையெடுப்பு நேரடியாக யூரோப்பகுதி வங்கிகளிடம் கொடுக்க அனுமதிக்கப்படும். முன்பு, 500 பில்லியன் யூரோக்கள் ஐரோப்பிய உறுதிப்பாட்டு அமைப்புமுறையான ESM அடுத்த மாதம் நடைமுறைக்கு வரவுள்ளது. இது ஐரோப்பிய ஒன்றியம் தேசிய அரசாங்கங்களுக்குத்தான் கடன் கொடுக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டை  கொண்டிருந்தது.

பொது ஐரோப்பிய நாணயத்தைப் பயன்படுத்தும் நான்காம், மூன்றாம் மிகப் பெரிய பொருளாதாரங்களான ஸ்பெயின், இத்தாலியின் வங்கி முறைகள், பெருகிய முறையில் நிதியச் சந்தைகளிடம் இருந்தும், கடன்தரம் நிர்ணயிக்கும் நிறுவனங்களில் இருந்து அதிக அழுத்தத்தில் இருக்கையில், இரு நாடுகளின் அரசாங்கப் பத்திரங்களின் ஏற்கமுடியாத தரங்களை எட்டியுள்ள வட்டி விகித நிலையில், ஸ்பெயின், இத்தாலி மற்றும் பிரான்ஸ் ஆகியவற்றின் அரசாங்கத் தலைவர்கள், வாஷிங்டன் மற்றும் சர்வதேச நாணய நிதியின் ஆதரவைப் பெற்று, வங்கிகள் உயர்ச்சி பெற உடனடி நடவடிக்கைகளின் தேவைகளைப் பற்றி வலியுறுத்தினர். கிரேக்கம், அயர்லாந்து, போர்த்துக்கல் ஆகியவற்றில் நடைபெற்றது போல் உத்தியோகபூர்வ அரசாங்கப் பிணையெடுப்புக்களில் தொடர்புடைய நீடித்த பேச்சுக்கள், அதிகாரத்துவ தாமதங்கள் ஆகியவற்றிற்கு நேரமில்லை என அவர்கள் வாதிட்டனர்.

உச்சிமாநாட்டு நிகழ்வைக் காண்கையில், ஜேர்மனி உடன்பாடு முதலில் அடையப்படும் வரை, யூரோப்பகுதியில் ஒரு புதிய அரசியல் கட்டமைப்பு குறித்து அடையப்படும் வரை, எத்தகைய குறுகிய கால நடவடிக்கைகளுக்கும் தன் எதிர்ப்பை மீண்டும் வலியுறுத்தியது. அத்தகைய உடன்பாட்டில் தேசிய அரசாங்கங்கள் தங்கள் வரவு-செலவுத்திட்ட மற்றும் வரிவிதிக்கும் அதிகாரங்களை செல்வாக்குப் படர்ந்துவிட்ட பிரஸ்ஸல்ஸிடம் அடிபணிய செய்ய வேண்டும் என்றும், பிரஸ்ஸல்ஸ்தான் யூரோப்பகுதி உறுப்பு நாடுகள் வரவு-செலவுத்திட்ட பற்றாக்குறைகள், தேசியக் கடன்கள் ஆகியவற்றில் கடுமையான மட்டுப்படுத்தலை செயல்படுத்த மேற்பார்வையிடும் அதிகாரங்களைக் கொண்டது என்றும் அது கூறியது.

நடைமுறை வழக்கத்தில் வலுவான பொருளாதாரத்தைக் கொண்டுள்ளது, பிராந்திய பிணையெடுப்பு நிதிகளுக்கு உதவி மிகஅதிகம் வழங்குகிறது என்னும் முறையில், புதிய நிதிய மற்றும் அரசியல் ஒன்றியத்தில் ஜேர்மனி மேலாதிக்கம் செலுத்தும்; ஜேர்மனிக்குப் பின் முக்கிய சர்வதேச வங்கிகள் தங்கள் செல்வாக்கை முன் எப்பொழுதைக் காட்டிலும் அதிகம் செலுத்தும்.

ஜேர்மனிய சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெல், பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்ட் அவருடைய தெற்கு ஐரோப்பிய நட்பு நாடுகள் யூரோப்பத்திரங்கள் இன்னும் பிற நடவடிக்கைகள் யூரோப்பகுதி முழுவதும் கடன்களைத் தீர்க்கப் பயன்படுத்த வேண்டும் என்பதற்குத் தன் எதிர்ப்பை மீண்டும் கூறி, ஜேர்மனிய பாராளுமன்றத்தில், ஐரோப்பியக் குழுத் தலைவர் ஹெர்மன் வான் ரொம்பே யூரோப்பத்திரங்கள் மற்றும் வங்கிகள் ஒன்றியம், மத்தியப்படுத்தப்பட்ட நிதிய அதிகாரம் ஆகியவற்றின் வழியே நகரவேண்டும் என்று உச்சிமாட்டிற்குத் தெரிவிக்கப்பட்ட கருத்தையும் முற்றிலும் கண்டித்தார்.

ஆனால் தகவல்களின்படி, ஸ்பெயினின் பிரதம மந்திரி மரியனோ ரஜோய் மற்றும் இத்தாலியப் பிரதம மந்திரி மரியோ மொன்டி ஆகியோர் முன்பு ஒப்புக் கொள்ளப்பட்ட 120 பில்லியன் யூரோ வளர்ச்சி உடன்பாட்டை தடைக்கு உட்படுத்துவதாக அச்சுறுத்தி, மேர்க்கெல் பின் வாங்கி ESM நேரடியாக யூரோப்பகுதி வங்கிகளுக்கு நிதியளிக்க அனுமதி கொடுத்தால் ஒழிய உச்சிமாநாட்டில் வெளிப்படையான பிளவு முன்கூட்டியே வரும் என்றனர். அத்தகைய விளைவு ஒரு நிதியப் பீதியை ஏற்படுத்தும், அதன் தாக்கம் ஸ்பெயின், இத்தாலியில் மட்டுமின்றி, ஐரோப்பா, உலகம் முழுவதும் வரும் என்பதை, தொடர்புடைய அனைவரும் அறிவர். யூரோ நீடித்திருப்பதே சந்தேகத்திற்கு உள்ளாகிவிடும்.

இறுதியில் உச்சிமாநாட்டில் அறிவிக்கப்பட்ட திட்டம், ESM பிணையெடுப்புக்கள் நேரடியாக வங்கிகளுக்கு பிணையெடுப்பதை கொடுப்பதை ஓர் உடன்பாடாக மாற்றியது. இதில் யூரோப்பகுதிக்கு தற்பொழுது இருக்கும் தேசியக் கட்டுப்பாட்டு கண்காணிப்பாளர்களின் வலைப்பின்னல் என்பதற்குப் பதிலாக கூட்டு வங்கி மேற்பார்வையாளர் இருப்பார். அரசாங்கத் தலைவர்கள் ஆண்டு இறுதிக்குள் அத்தகைய உடன்பாட்டிற்கு தயாராக இருப்பதாக உறுதிமொழி கொடுத்தனர்.

நிதியச் சந்தைளை மற்றும் திருப்திப்படுத்தும் நடவடிக்கையில், ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் ஐரோப்பிய மீட்பு நிதி ஸ்பெயின் கடன் பத்திரதாரர்களுக்கு, பணம் வருவதில் பிழை ஏற்பட்டால் முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் என்ற கருத்தைக் கைவிட்டனர்.

கூட்டத்திற்குப்பின், மேர்க்கெல் ஐரோப்பிய ஒன்றிய வங்கிகள் பிணையெடுப்பு குறித்த அவருடைய உடன்பாடு சில நிபந்தனைகளுடன் கூடியது என்றார். அவரும் ஐரோப்பிய மத்திய வங்கித் தலைவர் மரியோ ட்ராகியும் வெள்ளியன்று ஐரோப்பிய ஒன்றிய மீட்பு நிதியத்தில் உள்ள புதிய வளைந்து கொடுக்கும் தன்மை தடையற்ற நிதிக்கு ஒரு வழிவகை எனக் காணப்படக்கூடாது என்றனர். ட்ராகி நிதிகள் பெறுவது என்பது கடுமையான நிபந்தனைகளுக்கு உட்பட்டுத்தான் இருக்கும் என்றார்.

இவை இன்னும் கடுமையான நடவடிக்கைகளான வரவு-செலவுத் திட்ட குறைப்புக்கள், பணிநீக்கங்கள், ஊதியக் குறைப்புக்கள், ஓய்வூதிய வெட்டுக்கள் ஆகியவை தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக இயக்கப்படும். இவை கட்டுமானச் சீர்திருத்தங்கள் எனக் கூறப்படுபவற்றுடன் வரும் என்பதற்கான சங்கேதச் சொற்கள் ஆகும். இதன் பொருள் வேலைப் பாதுகாப்பு விதிகள் அகற்றப்படும், பெருநிறுவனங்கள் மீதான கட்டுப்பாடுகள் அகற்றப்படும், அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த நிறுவனங்கள் முற்றிலும் தனியார்மயமாக்கப்படும் என்பதாகும்.

உச்சிமாநாட்டில் அறிவிக்கப்பட்டுள்ள உடன்பாடு யூரோ நாணயம், ஐரோப்பிய ஒன்றியம் இவற்றின் அடித்தளத்தில் உள்ள நெருக்கடிக்கு நீண்ட காலக் கொள்கைகள்மூலம் தீர்வு என்பதை இப்பொழுது ஒதுக்கியுள்ளது. வான் ரொம்பே முன்வைத்த திட்டம், விவாதிக்கப்படக்கூட இல்லை என்பது தெளிவு. இத்திட்டம் அடுத்த ஐரோப்பிய உச்சிமாநாடு அக்டோபரில் நடக்கும்போது கருத்திற் கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

உச்சிமாநாட்டில் இருந்து வந்த அறிக்கை குறிப்பான கருத்துக்கள் ஏதும் இன்றி இருந்தன. 500 பில்லியன் யூரோ மீட்பு நிதி எப்படி ஐரோப்பாவில் பூசலுக்குட்பட்ட வங்கிகள் பிணையெடுப்புக்களுக்குப் போதும் என்பது குறித்தும் விளக்கம் ஏதும் இல்லை. வற்றின் மொத்தச் சொத்துக்களோ டிரில்லியன்களில் உள்ளன. இவை கிரேக்கத்தில் இருந்து ஐரோப்பிய மத்திய பொருளாதாரங்ளுக்கு அரசாங்கத் திவால் பரவுவதைத் தவிர்க்கும் தடைச்சுவராக உள்ளன.

உச்சிமாநாட்டு அறிவிப்பை ஐரோப்பாவிலும் உலகெங்கிலும் உள்ள பங்குகள் மற்றும் பத்திரச் சந்தைகள் நிம்மதியுடன் வரவேற்றன. வெள்ளியன்று விலைகள் உயர்ந்தன. ஸ்பெயின் மற்றும் இத்தாலியின் கடனுக்கான வட்டி விகிதங்கள் சரிந்தன; நாணயச் சந்தைளில் யூரோவின் மதிப்பு எழுச்சி பெற்றது. ஆனால் இந்த ஏற்றம் மூன்று வாரங்களுக்கு முன்பு ஸ்பெயினின் வங்கிகளுக்கு 100 பில்லியன் யூரோக்கள் உட்செலுத்தப்படும் என்னும் உடன்பாட்டைத் தொடர்ந்து ஏற்பட்ட ஏற்றத்தை விட அதிக நாள் நீடிக்கும் என நம்புவதற்கில்லை. அதே போல் ஒரு வாரம் கழித்து கிரேக்கத் தேர்தலில் பழமைவாத புதிய ஜனநாயகக் கட்சி வெற்றிக்குப் பின் வந்த ஏற்றம் நீடித்த கால அளவுதான் நீடிக்கும்.

ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் பெருகியுள்ள அழுத்தங்களின் மிகக் கணிசமான அரசியல் கூறுபாடு ஜேர்மனிக்கும் பிரான்ஸிற்கும் இடையே ஏற்பட்டுள்ள வெளிப்படையான பிளவுதான். 2010ல் இருந்து நடந்துவரும் இத்தகைய உச்சாமாநாடுகளில் 19வது மாநாடு, சமீப காலத்தில் மிகக் கசப்பான, விவாதங்களைக் கொண்டிருந்தது என அரசியல் விமர்சகர்கள் ஒப்புக் கொண்டனர்.

....ஜேர்மனிய அதிகாரிகளின் கூற்றுக்களில் இருந்து, மனது ஒத்துப்போகவில்லை என்பது {மிகவும் தெளிவு}: பாரிஸ் மற்றும் பேர்லின் இரண்டும் உச்சிமாநாட்டில் நெருக்கடிக்குப்பின் முதல் தடவையாக தீவிரமாகப் பிளவுற்றன. என்று கார்டியன் தன் அறிக்கையை முடிக்கிறது.

மேர்க்கெல் பிரஸ்ஸல்ஸில் சலுகைகளைக் கொடுக்கக் கட்டாயப்படுத்தப்பட்ட அன்றே, அவருடைய நிதி மந்திரி வொல்ப்காங் ஷொய்பிள, வோல் ஸ்ட்ரிட் ஜேர்னலிடம் ஜேர்மனி ESM இற்கு கொடுக்கும் நிதியை அதிகப்படுத்தக்கூடாது என்று உறுதியாக எதிர்க்கிறது என்றார்.