சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு : சிரியா

SYRIZA backs Greek government’s capitulation to the EU  

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு கிரேக்க அரசாங்க சரணடைதலுக்கு சிரிசா ஆதரவு

By Christoph Dreier
23 July 2012

use this version to print | Send feedback

ஒரு மாதத்திற்கு முன்பு அலெக்சிஸ் சிப்ரஸ் தான் கிரேக்கத்தின் ஐரோப்பிய ஒன்றியத்துடனான உடன்பாட்டை இயல்பிலேயே செல்லாது என அறிவிக்கப்போவதாகக் கூறி, தன்னுடைய கட்சி தேசியத் தேர்தலில் வெற்றி பெற்றால் அனைத்து சமுகநலச் செலவுக் குறைப்புக்களும் அகற்றப்படும் என்றும் கூறினார்.  இவர் தலைமை தாங்கும் கட்சியான சிரிசா (இடது மாற்றீட்டுக் கட்சிகளின் கூட்டணி) இப்பொழுது ஐரோப்பிய ஒன்றியத்துடன் செய்து கொள்ளப்பட்ட அனைத்து கடன் உடன்பாடுகளுக்கும் ஆதரவளிப்பதாகக் கூறுவதுடன் ஒரு பொறுப்பான எதிர்க்கட்சியாக நடந்து கொள்ள இருப்பதாகவும் அரசாங்கத்திற்கு உறுதியளித்துள்ளது.

கடந்த திங்களன்று ஒரு வானொலிப் பேட்டியில் சிரிசாவின் செய்தித்தொடர்பாளர் பனஜியோடிஸ் ஸ்கௌர்லெடிஸ் அவருடைய கட்சிப் பாராளுமன்ற பிரிவில் பெரும்பாலனவர்கள், “முக்கூட்டுனான”—ஐரோப்பிய ஆணையம், சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கிஅனைத்து உடன்பாடுகளும் முறிக்கப்பட வேண்டும் எனக் கூறும் கம்யூனிஸ்ட் கட்சியின் (KKE) வரைவுச் சட்டத்தை எதிர்க்கிறது என்று கூறினார்.

உலக சோசலிச வலைத் தளத்திடம்  ஸ்கௌர்லெடிஸ் சிரிசா உண்மையில் உடன்பாட்டு விதிகள் குறித்து மறு பேச்சுக்களுக்கு ஆதரவு கொடுப்பதாகவும், ஆனால் கிரேக்கம் முற்றிலும் உடன்பாட்டை நிராகரித்தால், அது ஐரோப்பிய ஒன்றியத்திடம் இருந்து தொடர்புடைய கடன்கள் பெறுவதைக் கைவிட நேரிடும் என்றார். சட்டவரைவின் அப்பகுதிகளுக்கு நாங்கள் ஆதரவு கொடுப்பதற்கில்லை என்றார் அவர்; ஆனால் சிரிசாவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அதன் பொருளுரையில் சில பகுதிகளை ஏற்கின்றனர் என்றாலும்கூட.

முக்கூட்டுடனான கடன் ஒப்பந்தங்கள் கிரேக்கத்தில் ஏற்கனவே பரந்துவிட்ட வறிய நிலை, இழி நிலை இவற்றிற்குப் பொறுப்பான விரிவான சிக்கன நடவடிக்கைகளை அடக்கியுள்ளன. இந்தப் பேரழிவிற்கு ஈடாகப் பெறப்படும் கடன்கள் நாட்டிற்குக் கடன் கொடுத்தவர்களுக்குத்தான் அதிகமாகச் செல்லுகின்றன; அவர்கள் உயர்ந்த வட்டி விகிதத்தின் காரணமாக மிக அதிக இலாபங்களை ஈட்டுகின்றனர்.

இதை எதிர்க்க சிரிசா மறுக்கிறது. ஸ்கௌர்லெடிஸ் அவருடைய பிரிவும் குறைந்தப்பட்ச ஊதியத்தில் கொண்டுவரப்பட்டுள்ள வெட்டை அகற்றுவதற்கு ஒரு சட்டவரைவைக் கொண்டுவருவதாகக் கூறியுள்ளார். ஆனால் சமீப ஆண்டுகளில் வந்துள்ள விரிவான வெட்டுக்களைக் காணும்போது, இந்த நடவடிக்கை மட்டும் கிரேக்க சமுதாயத்திற்கு செய்யப்பட்டுள்ள சேதத்தை சீராக்காதுஅது இயற்றப்பட்டாலும் கூட; சிரிசாவிற்கு அவ்வாறு செய்யும் விருப்பமும் இல்லை.

ஜூன் 17 பாராளுமன்றத் தேர்தல்களில் சிரிசா பதிவான வாக்குகளில் 27%ஐப் பெற்றது; ஏனெனில் அது குறைந்தப்பட்சம் கிரேக்கத்திலேனும் பிரச்சாரத்தில் ஒப்பந்தங்களுக்கு எதிராகப் பேசியுள்ளது. குறிப்பாக இளைஞர்கள், இக் கட்சி சிக்கன நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்று நம்பியதால் அது 2009 தேர்தலில் பெற்றதை விட 6மடங்கு வாக்குகள் அதிகம் பெற்றது.

ஐந்து வாரங்களுக்குப் பின் உத்தியோகபூர்வ எதிர்ப்பில் பங்கு பெற்றுள்ள சிரிசா இப்பொழுது வெளிப்படையாக ஒப்பந்தத்தை ஏற்பதாகவும் அதன் நோக்கம் அதை ஏற்பதற்கு சில வண்ணப்பூச்சு மாற்றங்களைச் செய்வதுதான் என்பதையும் ஒப்புக் கொண்டுள்ளது. தேர்தல் முடிந்தவுடன், சிப்ரஸ் தன் கட்சி ஒரு பொறுப்பான எதிர்க்கட்சியின் பணிகள் அனைத்தையும் நிறைவேற்றும் என்றும், வேலைநிறுத்தங்கள், ஆர்ப்பாட்டங்களுக்கு அழைப்பு விடுவதில்லை என்றும் வலியுறுத்தினார்.

ஒப்பந்தத்திற்கு அவர் இப்பொழுது கொடுக்கும் ஆதரவு, அரசாங்கம் கன்சர்வேடிவ் புதிய ஜனநாயகம், சமூக ஜனநாயக PASOK  மற்றும் ஜனநாயக இடதுக் கூட்டணி11.6 பில்லியன் யூரோக்களக்குப் புதிய சமூகச் செலவுக் குறைப்புக்கள், இன்னும் அதிக அரசாங்க நிறுவனங்களைத் தனியார்மயமாக்கல் மற்றும் பாக்கியிருக்கும் வெட்டுக்கள் அனைத்தையும் செயல்படுத்துவது என்பது குறித்து அறிவித்தவுடன் வந்துள்ளது; இவ்வாறு செய்தால்தான் முக்கூட்டில் இருந்து கடன்கள் வாங்குவதற்குப் பாதிப்பு ஏதும் இராது.

உத்தியோகபூர்வமாக சிப்ரஸ் இத்திட்டங்களை நிராகரித்து, அரசாங்கத்தின் உறுப்பினர்கள் பொய் பேசுபவர்கள், ஏனெனில் தேர்தல் பிரச்சாரத்தில் அவர்கள் உடன்பாடு குறித்து மறு பேச்சுக்கள் நடத்த விரும்புவதாகக் கூறிவிட்டு இப்பொழுது அவற்றைச் செயல்படுத்துகின்றனர் என்றார்.

பேரழிவு தரும் திட்டத்தை இறுக்கப்பிடித்துக் கொண்டு, முந்தைய பிரதமர் லூக்காஸ் பாபடெமோஸ் விட்ட இடத்தில் இருந்து நீங்கள் தொடர்கிறீர்கள்என்றார் அவர்; மேலும், அரசாங்கம் கடன் ஒப்பந்தம் குறித்து மறு பேச்சுக்கள் நடத்துவதற்கு வலுவற்று உள்ளது, முக்கூட்டிற்கு முற்றிலும் நிபந்தனையற்றுச் சரண் அடைந்துவிட்டது என்றும் கூறினார்.

சிரிசாவின் திட்டங்களைப் பார்த்தால் அவையும் வெறும் வெற்றுத்தனச் சொற்கள் என்று விளங்கும். சிரிசாவின் திட்டங்களுக்கும் அரசாங்கத்தின் கொள்கைகளுக்கும் இடையே அடிப்படை வேறுபாடுகள் ஏதும் இல்லை.

அரசாங்கத்தின் தனியார்மய திட்டத்தையும் சிரிசா இழிந்த முறையில் எதிர்த்து, தன்னுடைய சொந்தக் கருத்து ஆய்வான ஒத்துழைப்புஎன்பதைக் கூறுகிறது. அதாவது அரசாங்க மின்சார ஆலைகள் மற்றும் பொதுப் போக்குவரத்து வசதிகள் முற்றிலும் விற்கப்படக்கூடாது, முதலீட்டாளர்களின்  ஒத்துழைப்புடன் செயல்படுத்தப்பட வேண்டும் எனக் கூறுகிறது.

சிரிசாவின் பொருளாதாரப் பிரிவுச் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரோஸ் பாப்படிமௌலிஸ், தன்னுடைய கட்சியின் கருத்தாய்வை கீழ்க்கண்டவாறு விளக்கினார்: அரசாங்கம் அத்தகைய ஒத்துழைப்பில் பங்கு பெறலாம்; உதாரணமாக நிலச் சொத்துக்களை சுற்றுலாத் துறையில் இருந்து எடுத்துக் கிடைக்குமாறு செய்யலாம். இதையொட்டி மறுதிறத்தார் முதலீட்டை அளிப்பர். இவ்வகையில் இரு திறத்தாருக்கும் நலன்களும் இலாபங்களும் நீண்டக்கால அளவில் கிடைக்கும்; பொதுத்துறை அதன் சொத்துக்களை இழக்க வேண்டிய தேவையில்லை.

சாராம்சத்தில் இத்திட்டங்களின் பொருள் ரயில்வேக்கள் அல்லது மின்சார உள்கட்டுமானம் போன்றவை விற்கப்பட மாட்டாது, தனியார் முதலீட்டாளர்களுக்கு குத்தகைக்கு விடுதல் என்பதாகும். தொழிலாளர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் விளைவு முன்போல்தான் இருக்கும், ஆனால் அரசாங்கம் செயல்படுத்துதல், பராமரிப்பு ஆகியவற்றிற்குப் பொறுப்புக் கொள்ளும். மேலும் பாப்படிமௌலிஸ் வருங்காலத் தனியார்மயமாக்குதலை நடக்காது எனக் கூறவில்லை; அத்தகைய விற்பனையை நியாயப்படுத்த குறிப்பிட்ட அரசாங்கச் சொத்துக்களின் தற்போதைய சந்தைமதிப்பு மிகவும் குறைவு என்கிறார்.

வரவிருக்கும் வாரங்களில் சிரிசா இதேபோன்ற கருத்துக்களை, எப்படி மற்ற நடவடிக்கைகளும் நல்ல முறையில் செயல்படுத்தப்படலாம் என்பதற்கு ஆலோசனைகளைத் தெரிவிக்கும். இந்த மாதம் முன்னதாக அது ஒரு நிழல் அமைச்சரவையை இப்பணிக்காக நியமித்துள்ளது. அக்குழுவின் உறுப்பினர்கள் ஏற்கனவே எத்துறைகள் இலக்கு கொள்ளப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனர்.

இக்குழுவில் முன்னாள் ஆளும் PASOK கட்சியின் பிரதிநிதிகள், நீண்ட காலமாக சிரிசாவில் பணியாற்றும் அதிகாரிகள் அல்லது சிரிசா உறுப்பினர்கள் அல்லது பல ஆண்டுகள் சிரிசாவுடன் தம்மை ஈடுபடுத்திக் கொண்ட பல அறிவியல் வல்லுனர்கள் உள்ளனர்.

உள்துறை அமைச்சரகத்திற்கு முன்னாள் விளையாட்டு வீரர் சோபியா சகோரபா தலைமை தாங்குகிறார்; இவர் PASOK  சார்பில் பாராளுமன்ற உறுப்பினராக 2010 வரை இருந்தவர், முதல் சுற்று வெட்டுக்களுக்கு ஆதரவு கொடுத்திருந்தார். மற்றும் ஒரு முக்கிய PASOK  உறுப்பினர் அலெக்சிஸ் மிட்ரோபௌலோஸ்; அவர் நிர்வாசகச் சீர்திருத்தத்திற்காக நிழல் அமைச்சரவையில் பொறுப்புக் கொண்டுள்ளார்இத்துறை சிப்ரஸால் தேர்தல் பிரச்சாரத்தின் போது வெட்டுக்களுக்காக தனியே பயன்படுத்துப்பட்டது.

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி என்னும் முறையில், சிரிசா ஏற்றுள்ள வலதுசாரிக் கொள்கைகள் தேர்தல் பிரச்சாரத்தின்போது அது முன்வைத்த முன்னோக்கின் திவால்தன்மையைத்தான் நிரூபிக்கிறது. கட்சிப் பிரதிநிதிகள் பலமுறையும் ஐரோப்பிய நிறுவனங்கள் சீர்திருத்தப்படலாம், கடன் உடன்பாடுகள்  மாற்றப்பட்டுவிடலாம் என அறிவித்து வந்தனர்.

பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்ட்நம்பிக்கையின் ஒளிவிளக்கு என சிப்ரஸால் அழைக்கப்பட்டவர்மற்றும் ஜேர்மனிய சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெல் உடன்பாடு குறித்து மறு பேச்சுவார்த்தைகள் இராது என உறுதியாகக் கூறியுள்ளனர். பல ஐரோப்பிய அரசியல் வாதிகள் பெருகிய முறையில் கிரேக்கம் யூரோப்பகுதியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்று கோரினாலும்,  சிரிசா ஐரோப்பிய ஒன்றியம் குறித்த போலித் தோற்றங்களுக்குத் தொடர்ந்து ஊக்கம் கொடுக்கிறது.

சிரிசாவின் முன்னணியில் இருக்கும் பொருளாதார வல்லுனர் யானிஸ் மைலோஸ் ஜூலை 7ம் திகதி கூட, கிரேக்கம் யூரோப்பகுதியில் இருந்து வெளியேற்றப்படுவது என்பது கிட்டத்தட்ட நடைபெறாதுஎன்றார். ஆனால் ஐரோப்பாவில் ஆளும் உயரடுக்குகள் கண்டத்தில் இருந்து நலன்புரி அரசு என்னும் கருத்தை அகற்றிவிட்டு சீனத் தரங்களை அறிமுகப்படுத்த விரும்புகிறது என்பதை அவர் ஒப்புக் கொண்டார். யூரோப்பகுதியைத் தடைக்கு உட்படுத்த சிரிசா விரும்பவில்லை என்றார் அவர்.

இந்த நிலைப்பாட்டை ஒட்டி நாம் எமது பேச்சுக்களுக்குத் தளம் அமைக்கலாம் என அவர் அறிவித்தார்.

தேர்தல் முடிந்த பின் சிரிசா முன்வைக்கும் கொள்கைகள், இக்கருத்துக்கள் ஐரோப்பிய ஒன்றிய நிறுவனங்களையும், தொழிலாளர்கள் மீது சீனத் தரங்களை சுமத்த விரும்பும் உயரடுக்குகளின் சிக்கன நடவடிக்கைகளையும் பாதுகாக்கும் நோக்கத்திற்குத்தான் உதவுகின்றன என்பதைக் காட்டுகின்றன.