சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

Totally drug-resistant tuberculosis reported in Mumbai

மும்பையில் முற்றிலும் மருந்தை எதிர்க்கும் சக்தியுடைய காசநோய் அறியப்பட்டுள்ளது

By Debra Watson 
27 January 2012

use this version to print | Send feedback

கடந்த டிசம்பர் மாதம் மருத்துவ இதழான Clinical Infectious Diseases, (தொற்று நோய்களைப் பற்றிய மருத்துவ ஆய்வு) இந்தியாவின் மிகப் பெரிய நகரமான மும்பையிலுள்ள பி.டி. ஹிந்துஜா தேசிய மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் எழுதிய கடிதத்தில், அவர்கள் மருத்துவ மனையில் நான்கு (Totally Drug Resistant Tuberculosis -TDR-TB) முற்றிலும் காச நோய் (க்ஷயரோகம்) மருந்தை எதிர்க்கும் சக்தியுடைய நோயாளிகள் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

சில காலமாக  தங்கள் மருத்துவமனையில் மருந்தை எதிர்க்கும் சக்தியுடைய க்ஷய ரோக நோய்கள் குறித்து மருத்துவர்கள் ஜாஹிர் உத்வாடியாவும் அவருடைய குழுவினரும் போராடி வருகின்றனர். 2010ம் ஆண்டில் தனியார்துறை சுகாதாரப் பிரிவில் பணிபுரியும் மருத்துவர்கள் தவறாக எழுதிக் கொடுக்கும் மருந்துகளினால் நாட்டில் முதல், இரண்டாம் வகை காசநோய்க்கான மருத்துகளில் மருந்து எதிர்ப்புச் சக்தி தோன்றியிருப்பது பெரிய காரணியாக உள்ளது என்று அவர்கள் வெளியிட்ட ஆய்வில் கூறியுள்ளனர்.

காசநோயைக் கட்டுப்படுத்தும் நுண்ணுயிர் எதிரிகள் அரை நூற்றாண்டிற்கும் மேலாகக் கிடைக்கின்றன. ஆனால் காசநோய் பாக்டீரியாக்கள் (நுண்ணுயிர் எதிரிகள்) எதிர்க்கும் திறனை வளர்த்து மருந்துச் சக்தியை எதிர்ப்பதில் பல வகைகளைக் கொண்டுள்ளன. தீவிரமான காசநோய்க்கு வெற்றிகரமான சிகிச்சை அளிப்பதற்கு பல மாதங்கள் மருத்துகள் கொடுப்பதுடன், ஒன்றிற்கும் மேற்பட்ட நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளும் தேவையாகும். சிகிச்சை, அனைத்து பாக்டீரியாக்களும் அகற்றப்படுவதற்கு முன் தடைக்கு உட்பட்டால், மிக எதிர்ப்புச் சக்தியுடைய பாக்டீரியாக்கள் மற்றவர்களுக்கும் தொற்றக்கூடிய அபாயம் உள்ளதுடன், விரைவில் வளர்ச்சியுறும் அபாயமும் உள்ளது.

சமூகத்தில் உள்ள ஏழ்மைநிலை புதிய, இன்னும் ஆபத்துவிளைவிக்கக்கூடிய காசநோய் வகைகளுக்கு அது ஒரு சர்வதேச நிகழ்வாக மாற்றும் வகையில் செயல்படுகிறது. 1990களில் ஒரு தொலைக்காட்சி ஆவணப்படமான The Coming Plague  எப்படி 1990களின் ஆரம்பத்தில் ஏற்பட்ட சோவியத் ஒன்றியத்தின் சரிவு பொது சுகாதார திட்டத்தில் வீழ்ச்சிக்கும் வழிவகுத்தது என்பது பற்றி அம்பலப்படுத்தியுள்ளது. ஐரோப்பாவில் அந்த நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட  MDR-TB எனப்படும் காசநோயின் கூட்டு மருந்து எதிர்ப்பு கலங்களை கொண்டவை முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் இருந்து தோன்றியதாகக் கருதப்பட்டன.

உலகெங்கிலும் தற்பொழுதுள்ள தொற்றுக்களில் இருபது சதவிகிதம் MDR-TB யின் தொடர்புடையதாகும். இவை பொதுவாக முதல் பிரிவு  நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளுக்கு எதிர்ப்புசக்தி கொண்டவை ஆகும். இரு சதவிகிதம் XDR-TB எனப்படும் பரந்த மருந்து எதிர்ப்புசக்தி கொண்ட காசநோய் இரண்டாம் பிரிவு நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளையும் எதிர்ப்பவை ஆகும்.

இந்தியாவும், சீனாவும் இணைந்த வகையில் உலகம் முழுவதும் பதியப்பட்டுள்ள 9 மில்லியன் காசநோய் நோயாளிகளில் 40% ஐக் கொண்டுள்ளன. 2008 ஐ விடவும் அதிகமாக இருக்கலாம் என்று கூறியுள்ள மற்றொரு பெரிய பொருளாதார வீழ்ச்சி குறித்து உலக வங்கி எச்சரித்திருக்கையில், காசநோய் என்னும் பெருந்தீமையைக் கட்டுப்படுத்தும் செலவு இன்னும் கட்டுக்கு அடங்காத செலவைக் கொடுத்துவிடும்.

உலகில் காசநோய் குறித்த மிக அதிக சுமையை இந்தியா கொண்டுள்ளது. 2010ல் கிட்டத்தட்ட இரு மில்லியன் நோயாளிகள் இருந்தனர். இது உலக மொத்தத்தில் ஐந்தில் ஒரு பகுதி ஆகும். ஐக்கிய நாடுகள் சபையின் உலக சுகாதார அமைப்பு என்னும் WHO, இந்தியாவில் இந்நிகழ்வு விகிதம் மிக அதிகம் என்றாலும், ஆபிரிக்க துணைச் சகாரா பகுதியில் இந்நிகழ்வு விகிதம் கிட்டத்தட்ட தென்கிழக்கு ஆசியப் பகுதியைப் போல் இருமடங்காக உள்ளது, அதாவது 100,000 மக்களில் 350 பேருக்கும் மேல் காசநோயைக் கொண்டுள்ளனர் என்று மதிப்பிட்டுள்ளது.

மும்பையில் காணப்பட்ட அபாயம் நிறைந்த காசநோய் வகை  ஆய்விற்கு உட்படுத்தப்பட்டு முதல்பிரிவு மற்றும் இரண்டாம் பிரிவு மருந்துகளுக்கு எதிர்ப்புசக்தியை காட்டுகின்றன எனக் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் இந்திய அதிகாரிகளும்,  உலக சுகாதார அமைப்பின் அதிகாரிகளும், தேசிய மற்றும் சர்வதேச செய்தி ஊடக அறிக்கை பற்றி தகவல் அறிந்து எழுப்பிய வினாவிற்கு விடையிறுக்கையில் மருத்துவர்களின் ஆய்வு முடிவு மற்றும் அவர்கள் TDR-TB என்னும் முத்திரையைப் பயன்படுத்தியது குறித்தும் கேள்வி எழுப்பினர்.

மருத்துவ மனையில் TDR-TB. இருக்கும் 12 நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டபின், மத்திய அரசாங்கம் அனுப்பியிருந்த மருத்துவர்கள் குழு ஒன்று மருத்துவமனையில் மூன்று நோயாளிகள் இதனால் இறந்திருந்தாலும் இது பரந்த முறையில் மருந்து எதிர்ப்புச் சக்தி கொண்டது அதாவது XDR-TB என்றுதான் அழைக்க வேண்டும் என்று வலியுறுத்திவிட்டனர். XDR-TB என்பது முதலில் ஐரோப்பாவில் 2006ம் ஆண்டு அரிதாக ஒருசிலருக்கு இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. 2009ல் ஈரானில் 15 நோயாளிகள் பற்றி வந்த அறிக்கைகளில் TDR-TB. என்னும் சொல் பயன்படுத்தப்பட்டது என்று இந்த வாரம் ஹிந்து பத்திரிகை எழுதியுள்ளது.

இந்தியாவில் இருந்து வந்த அறிக்கை குறித்த உலகளாவிய செய்தி ஊடகப் பரபரப்பிற்கு உலக சுகாதார அமைப்பு முகங்கொடுக்கையில், ஜனவரி 12, 2012 அன்று TDR-TB. என்னும் சொற்றொடர் பயன்படுத்தப்பட்டுள்ளது குறித்து எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அந்த அதிகாரிகள் இச்சொற்றொடர் காசநோய் மருந்தை முற்றிலும் எதிர்க்கும் தன்மையுடையதுஎன்பது இன்னும் உலக சுகாதார அமைப்பின் அங்கீகாரம் பெறவில்லை என்று கூறினர். தற்போதைக்கு இந்நோய்கள் பரந்த அளவில் மருந்தை எதிர்க்கும் சக்தி உடையவை, (XDR-TB), என்றுதான் உலக சுகாதார அமைப்பு வரையறுத்துள்ளது என அவர்கள் தெரிவித்தனர்.

இந்தியா மற்றும் பெரும்பாலான அதிக வளர்ச்சியுறாத நாடுகளுக்கு காசநோய் என்பது அன்றாட கவலையளிப்பதாகும். உலக மக்களில் மூன்றில் ஒரு பகுதியினரிடம் காசநோய் விளைவிக்கும் பாக்டீரியா இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது காற்றின் இருப்பதால் சுவாசத்தின் மூலம் உடலிற்குள் செல்லுகிறது. இந்தியாவில் சமத்துவமின்மை, வறுமை, போதிய சுகாதாரப் பாதுகாப்பு இல்லாத்து மற்றும் மருந்துகளுக்கு எதிர்ப்பு உள்ளதால் ஒவ்வொரு நாளும் ஆயிரம் பேர் இறந்து போகின்றனர்.

காசநோய் என்பது காற்றின் மூலம் பரவும் ஒரு தொற்றுநோய் ஆகும். காசநோய் தொற்று உடையவர்கள் நோயினால் உடனே வியாதியில் படுத்துவிடுவதில்லை. காசநோய் உண்டாக்கும் பாக்டீரியாக்களை உடலின் தடுப்புமுறை சுவர் போல் நின்று தடுத்துவிடுகிறது. அந்த பாக்டீரியாக்கள் ஒரு தடித்த மெழுகு போன்ற வெளிப்பூச்சைக் கொண்டிருப்பதால் பல ஆண்டுகாலம் மறைவில் இருக்கும்.

காச நோய் கொடுக்கும் பாக்டீரியாவினால் தொற்று உடையவர்களில் ஐந்தில் இருந்து 10 சதவிகிதம் பேர் (ஆனால் அவர்கள் எயிட்ஸ்-HIV- தொற்றைக் கொண்டிருக்கக் கூடாது), தங்கள் வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் நோயுறுகின்றர் அல்லது தொற்றுதலுக்குள்ளாகின்றனர். எயிட்ஸ் மற்றும் காச நோய் தொற்றைக் கொண்டிருப்பவர்களில் காசநோய் விருத்தியடைவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உண்டு.

 

இந்த நோய் உலகெங்கிலும் தனிநபர்கள், குடும்பங்கள் மற்றும் சமூகங்கள் மீது ஏற்றும் சுமை கொடூரமானது ஆகும். சுப்ரியா டவாரே என்னும் 20 வயதுப் பெண்ணின் கதையை  India Times  கூறியுள்ளது; நோயின் மருந்திற்கு எதிராக மிகஅதிக எதிர்ப்புச் சக்தியைக் கொண்ட நோயாளிகளில் இவரும் ஒருவர் என்று நம்பப்படுகிறது. இவர் ஜனவரி தொடக்கத்தில் பல காலம் அவதியுற்றபின் இறந்து போனார்.

இவருடைய தாயார் அனிதா செய்தித்தாளிடம் தன் மகளின் உடல் எடை 42 கிலோவில் இருந்து 18 ஆகக் குறைந்தது. பல மாதங்கள் அவருடைய நோயக்காக நான்கு வெவ்வேறு மருத்துவமனைகளில் அளித்த சிகிச்சை பலன் இல்லை என்றார். இறந்துபோன வேறு இருவர் மும்பையில் ஆட்டோ ரிக்க்ஷா சாரதிக்கள் என்று கூறப்படுகிறது.

அடையாளம் காணப்பட்ட நோயாளிகளைத் தனிமைப்படுத்த வேண்டாம் என்னும் மருத்துவர்கள் முடிவு உட்பட, டிசம்பர் மாதம் வந்த அறிக்கைக்கு உத்தியோகபூர்வ எதிர்கொள்ளல் இருந்தாலும், மற்ற அறிக்கைகள் இப்பிரச்சினை நாட்டின் மற்ற பகுதியிலும் இருக்கலாம் என்ற குறிப்பைக் காட்டுகின்றன. பெங்களூரில் செயின்ட் ஜோன் ஆய்வுக்கூடம் 100 காச நோயாளிகளை அங்கொன்று இங்கொன்றாக தேர்ந்தெடுத்து, ஆறு பேருக்கு TDR-TB, 30 பேருக்கு MDR-TB, 13 பேருக்கு XDR-TB உள்ளது என்று கண்டறிந்தது. இந்த ஆய்வுக்கூடத்தின் தொற்றுநோய்ப் பிரிவின் தலைவரான டாக்டர் ஜோன் கென்னத் இந்திய செய்தி ஊடகத்திடம் இதுபற்றிய தகவல்கள் வெளியிடப்பட உள்ளன என்றார்.

50 ஆண்டுகளுக்கும் மேலாக காசநோய் என்பது எதிர்ப்புமருந்துகளால் மாற்றக்கூடிய ஒன்றாகவே இருப்பதுடன், ஒவ்வொரு ஆண்டும் இந்நோயாளிகள் எண்ணிக்கை குறைந்து வருவதாக, குறிப்பாக சீனாவில் என்றும்  உலக சுகாதார அமைப்பு தகவல் கொடுத்துள்ளது. ஆனால் (XDR-TB) உடைய தாக்கங்கள் பெரும் ஆபத்தானவை. மருத்துவர் உத்வீடியாவின் தகவல் பறிமாற்றம் வெளியிடப்பட்ட அதே மருத்துவ இதழில், ஐந்து ஆண்டுகளுக்கு முன் மற்றொரு அமெரிக்க ஆய்வுக்குழு இது குறித்து நடவடிக்கை வேண்டும் என்று எழுதியுள்ளது. மூத்த ஆய்வாளர், ட்யூக் மருத்துவப் பல்கலைக்கழக மருத்துவ மையத்தைச் சேர்ந்த, மருத்துவர் கரோல் ட்யூக்ஸ் ஹாமில்டன் இப்பிரச்சினை சிக்கல் வாய்ந்தது, உடனடியாக கவனம் செலுத்தவேண்டியது என்று அப்பொழுதே கூறியிருந்தார்.

“(XDR-TB) எனப்படும் பரந்த அளவு மருந்துச் சக்திக்கு எதிர்ப்புடைய தன்மை வெளிப்பட்டுள்ளது, காச நோய் சிகிச்சையை ஆன்டிபயாடிக் -antibiotic- சகாப்தத்திற்கு முந்தைய காலத்திற்கு எடுத்துச் செல்லுகிறது. அப்பொழுது நோயாளிகளில் 50% இறந்து போயினர்என்று ட்யூக்கின் ஆய்வு எச்சரித்தது. “(XDR-TB) உடைய திருத்தப்பட்ட வரையறுப்பு, முதல் பிரிவு காசநோய் மருந்துகளான குறைந்தபட்சம் isoniazid மற்றும் rifampin போன்ற மருந்துகளுக்கு எதிர்ப்புக்காட்டும் பாக்டீரியாவால் ஏற்படுத்தப்படுவது  எனவும் எத்தகைய fluoroquinolones மருத்துக்கும் குறைந்தபட்சம் இரண்டாம் பிரிவு ஊசிமருந்தான amikacin, capreomycin, அல்லது kanamycin இவற்றிற்கு எதிர்ப்புக்காட்டும் (MDR-TB) என்று வரையறை செய்யப்பட்டுள்ளது.

ஏன் வட அமெரிக்க மற்றும் ஐரோப்பிய மருத்துவர்கள், விஞ்ஞானிகள், குடிமக்கள் மற்றும் கொள்கை இயற்றுபவர்கள் வெளிநாட்டில் காசநோய் மருந்து எதிர்ப்புச் சக்தி வளர்ந்துள்ளது குறித்து ஏன் கவலைப்பட வேண்டும்? காசநோய்க்கான மருந்துச் சக்தியை எதிர்ப்பவற்றின் பெருகும் விகிதங்கள் என்பது போதுமான காசநோய் கட்டுப்பாட்டுத் திட்டங்கள் முறிந்துவிட்டதைத்தான் குறிக்கின்றன. இத்தகைய முறிவு உள்ளூர், பிராந்திய, தேசிய அளவில் ஏற்படலாம்; பிந்தையதற்கு ஓர் உதாரணம் (MDR-TB) முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் சரிவிற்குப் பின் வந்ததில் காணப்படலாம். இவ்வகையில் நாம் உலகெங்கிலும் காசநோய்க்கட்டுப்பாடுகளில் செய்திருக்கும் முதலீடுகள் குறித்துக் கவலை கொள்கிறோம். அவை எமக்கு ஆதாயத்தை கொடுத்தவை. பல நாடுகளில் காச நோய் விகிதங்கள் உறுதியாகக் குறைந்த அளவில், இது காற்றில் கரைந்துவிடும் போல் உள்ளது.”  என அவர் கூறியிருந்தார்.

ஜனவரி மாதம் ஒரு உலக சுகாதார அமைப்பின் செய்தி அறிவிப்பு செயற்கை முறையான (vitro) சோதனைகளின் தகமை பற்றி வினாவை எழுப்பியது. அது கூறியது: இவ்வகையில் காசநோய் வகை ஒன்று செயற்கைமுறையான வழக்கத்திலுள்ள திரவங்களை ஆராய்ந்த –DST- முடிவுகளில், இவ்வகை மருந்துகளுக்கு நோயாளியிடம் எதிர்ப்பைக் காட்டுவது என்பது உண்மையில் இருக்கலாம்.

இதைச் செய்தி ஊடகத்திற்கு தெரிவிக்க வேண்டும் என்ற அவர்களின் முடிவிற்கு முக்கிய காரணங்களில் ஒன்று புதிய மருந்துகள் தயாரிப்பில் உள்ளன என்பதாகும். அதே நேரத்தில் உலக சுகாதார அமைப்புடைய செய்தி வெளியீடு பன்முக (MDR-TB) எதிர்ப்பை 2010ல் கொண்டிருந்தவர்களில் கால் பகுதியினர்தான் சர்வதேச வழிகாட்டி நெறிகள் பரிந்துரைத்த முறையில் சிகிச்சைக்கு உள்ளாயினர் என்று கூறுகிறது.

மீண்டும் இதே செய்தி அறிக்கையில் ஐ.நா. அமைப்பு XDR-TB பேராபத்தைக் கொடுக்கும் என்பதை ஒப்புக் கொள்கிறது. அதிகாரிகள் கூறுவது: உலக சுகாதார அமைப்பினால் சேகரிக்கப்பட்ட வெளியிடப்படாத  தகவல்கள், MDR-TB நோயாளிகளில் பாதிக்கும் மேலானவர்கள் சமீப காலத்தில் இப்பெரும் குடும்பத் தொகுப்பில் இருப்பவர்கள் வெற்றிகரமாக சிகிச்சை பெற்றனர் என்பதைக் காட்டுகின்றன. XDR-TB இருக்கும் நோயாளிகளில் சிகிச்சை வெற்றி என்பதை விட இறப்புதான் அதிகமாக உள்ளது. சிகிச்சையற்ற, சிகிச்சை கொடுத்தும் தோல்வி விகிதங்கள் அனைத்துமே அதிகமாகத்தான் உள்ளன.

மருந்துகளை எதிர்க்கும் தன்மை வெளிப்படுவதைத் தடுப்பதற்கு உலக சுகாதார அமைப்பு நேரடியாக பார்வைக்குட்பட்ட குறுகிய கால சிகிச்சை DOTS என்பதை காசநோயிற்கு பரிந்துரைக்கிறது. DOTSகளின் சாராம்சம் சிகிச்சைக் காலத்தில் ஒரு சுகாதாரப் பாதுகாப்புப் பணியாளர் வாடிக்கையாக மேற்பார்வையிட்டு, சிகிச்சை முடிவு பெறும் வரை மருந்துகள் கொடுப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்பதாகும்.

நாட்டின் RNTCP என்னும் திருத்தப்பட்ட தேசிய காசநோய் கட்டுப்பாட்டுத் திட்டம் MDR-TB நோயாளிகளை உள்ளடக்கவில்லை. இது அவதியுறும் நோயாளிகளை தனியார் சுகாதார முறைக்குத் தள்ளவிடுகிறது என்று மருத்துவர் உத்வாடியா குறிப்பிட்டுள்ளார். நெஞ்சு நோய்களை கவனிக்கும் மருத்துவரும் அவருடைய சக மருத்துவர்களும் MDR-TB க்கான சிகிச்சை அரசாங்கம் அனுமதித்துள்ள DOTS உடன் வரம்பிற்கு உட்பட வேண்டும் என்றும், தனியார் சுகாதாரமளிக்கும் முறைகளின் தோல்விகளை எதிர்கொள்ளும் திட்டங்களுடன் நின்றுவிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். போதுமானது என இல்லாமல் இருக்கும் தேசிய சுகாதார முறை பெரும்பாலான இந்திய காச நோயாளிகளை சிகிச்சை பெறுவதற்குத் தனியார் மருத்துவமனை மருத்துவர்களிடம் இட்டுச் சென்று விடுகின்றன.

இந்தியக் குழு மிக விரிவாக காசநோய் குறித்தும், நாட்டின் சுகாதார முறையில் இருக்கும் பிரச்சினைகள் குறித்தும் எழுதியுள்ளது. 2010 ம் ஆண்டு தனியார்பிரிவு மருத்துவர்கள் மும்பை இந்தியாவில் காசநோயை நிர்வகித்தல்: இரு தசாப்தங்களில் ஏதேனும் மாறியுள்ளதா என்ற தலைப்பில் அவர்கள் பல அதிர்ச்சிதரும் தகவல்களை கொடுத்துள்ளனர்

20 ஆண்டுகளுக்கு முன் இதேபோன்ற அளவையில் கண்டறியப்பட்ட முடிவுகளைப் போன்றே தங்கள் வினாவிற்கும் வெளிப்படையாக கிடைக்கும் விடை இல்லைஎன்பதை அவர்கள் கண்டனர். இன்னும் எச்சரிக்கை கொடுக்கும் வகையில், மருத்துவமனையில் தொடர்கல்வி மாநாடு ஒன்றில் நடைபெற்ற அளவைப்படி, இந்த ஆய்வு தாராவி என்னும் பகுதியில் தனியார்துறையில் உள்ள மருத்துவர்கள் 106 பேரில் 5 பேர்தான் MDR-TB க்கு சிகிச்சைக்குரிய சரியான மருந்துகளை எழுதமுடியும் என்பதையும் கண்டறிந்துள்ளது.

காசநோய் குறித்த நெருக்கடி சமூகத்தில் உள்ள குற்றம் சார்ந்த சமத்துவமின்மையின் ஒரு விளைவு ஆகும். இருபது மில்லியன் மக்களைக் கொண்ட மும்பை, இந்தியாவின் நிதியத் தலைநகர், இந்தியாவிலேயே அதிக செல்வம் கொண்டது ஆகும். ஆயினும் நகரத்து மக்களில் பாதி பேர் ஏழைகளாள உள்ளனர், நெரிசல் மிகுந்த, ஏழ்மையான குடியிருப்பு பகுதிகளான தாராவி போன்றவற்றில் வாழ்கின்றனர்.

போர்பஸ் இதழ் கருத்துப்படி, மும்பை என்பது உலகின் நான்காம் பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் தாயகமும் ஆகும். அவருடைய சொத்துக்களின் நிகர மதிப்பு $29 பில்லியன் ஆகும். ரிலையன்ஸ் தொழில் துறைகள், எண்ணெய், சில்லறை விற்பனை, உயிரி தொழில்நுட்பம் என்று இந்தியாவிலேயே தனியார் துறையில் மிகப் பெரியவை எனக்கூடிய பெருநிறுவனங்களைக் கொண்டுள்ளார். சமீபத்தில் அவர் நகரத்தில் $1 பில்லியன் மதிப்பு உடைய 37,000 சதுர மீட்டர் இல்லம் ஒன்றைக் கட்டியுள்ளார்.

தன் 2011 அறிக்கையான உலக காசநோய் கட்டுப்பாடு -Global Tuberculosis Control- என்பதில் உலக சுகாதார அமைப்பு காசநோய் கட்டுப்பாட்டிற்கான நிதிய உதவியில் 86 சதவிகிதம் உள்நாட்டு நிதியளிப்பு எனக் கருதப்படுகிறது. ஏனெனில் இவை நோயை உள்நாட்டிலேயை எதிர்த்துபோராடும் நாடுகளில் இருந்து வருகின்றன என்று தெரிவிக்கிறது. இந்த நிதியுதவி 1990 இல் இருந்த நோய்வாய்ப்படல் மற்றும் 2015 இல் இறப்பு விகிதங்களை  பாதியாக்க வேண்டும் என்ற மட்டுப்படுத்தப்பட்ட இலக்கை கொண்ட என்ற ஐ.நா. அமைப்பிற்கு கிடைக்கின்றது. இந்நிதிக்கான 2011ம் ஆண்டிற்கான உள்நாட்டு பற்றாக்குறை $1 பில்லியன் ஆகும்.