சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு

Israel prepares for war against Iran

ஈரானுக்கு எதிராகப் போருக்கு இஸ்ரேல் தயாரிப்புக்களை நடத்துகிறது

By Peter Symonds         
27 January 2012

use this version to print | Send feedback

இந்த வாரம் நியூ யோர்க் டைம்ஸில்  வெளிவந்த இஸ்ரேல் ஈரானைத் தாக்குமாஎன்றும் நீண்ட கட்டுரை ஈரான்மீது இராணுவத் தாக்குதல்கள் நடத்துவதற்கும் முன்னேற்றமான தயாரிப்புக்களைச் செய்துள்ளது என்பதை உறுதிபடுத்துகிறது. இஸ்ரேலிய செய்தித்தாளான Yedioth Ahronoth உடன் நல்ல தொடர்புடைய அரசியல் ஆய்வாளரும், கட்டுரை ஆசிரியருமான, ரோனென் பேர்க்மன் முடிவுரையாகக் கூறுகிறார்: பல மூத்த இஸ்ரேலியத் தலைவர்கள் மற்றும் இராணுவ, உளவுத்துறைத் தலைவர்களிடம் பேசிய பின், இஸ்ரேல் உண்மையில் 2012ல் ஈரானைத் தாக்கும் என்று நான் நம்பத் தொடங்கிவிட்டேன்.

பிரதம மந்திரி பெஞ்சமின் நெத்தென்யாகுவும், பாதுகாப்பு மந்திரி எகுட் பாரக்கும் நாட்டின் பாதுகாப்புக் குழு ஈரான் மீதான தாக்குதலுக்கு ஒப்புதல் கொடுக்க வேண்டும் என்று இஸ்ரேலியச் செய்தி ஊடகங்கள் முந்தைய கட்டுரைகளில் கொடுத்த தகவல்களை ஏற்கும் வகையில் பேர்க்மன் எழுதியுள்ளார். துணைப் பிரதம மந்திரி மோஷே யாலோன் கடந்த வாரம் பேர்க்மனிடம்  பின்வருமாறு கூறினார்: இராணுவரீதியான அணுச்சக்தியை அடைவதற்கு ஈரானியர்களுக்குப் இன்னும் சில மாதங்கள் ஆகும்...நாங்கள் எது உரியது என்று நினைக்கிறோமா அதை எப்படியும், எங்கேயும் பாதுகாப்பதற்கு நாங்கள் தயாராக உள்ளோம்.

ஈரான் ஒரு அணுகுண்டை தயாரிக்கும் கட்டத்தில் உள்ளது என்னும் கூற்றுக்கள் உண்மை நிலையினால் ஆதரவு பெறவில்லை. சமீபத்திய சர்வதேச அணுசக்தி அமைப்பு -IAEA- சமீபத்திய அமெரிக்க மற்றும் ஐரோப்பியப் பொருளாதாரத் தடைகள் ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி சுமத்தப்பட்டிருப்பதை நியாயப்படுத்தும் வடிவைமைப்புக் கொண்ட ஓர் அரசியல் ஆவணமாக தயாரித்துள்ள ஓர் அறிக்கை அணுகுண்டு ஒன்றை ஈரான் தயாரிப்பது குறித்த விபரங்கள் பற்றி குறைந்த சான்றுகளைத்தான் அளித்துள்ளது. இச்சான்றுகளில் பலவும் அமெரிக்க, ஐரோப்பிய, இஸ்ரேலிய உளவுத்துறை ஆதாரங்களில் இருந்து வந்தவை. 2003க்குப் பின் பெரும்பாலான ஆய்வுத் திட்டங்கள் நிறுத்தப்பட்டு விட்டன. அணுவாயுதத் தயாரிப்பு ஏதும் இல்லை என்பதை ஈரான் தொடர்ந்து மறுத்து வருகிறது.

இஸ்ரேலியக் கூற்றுக்களின் போலித்தன்மையை எடுத்துக்காட்டும் வகையில், மூத்த செய்தியாளரான ரோபர்ட் பிஸ்க், இண்டிபென்டென் பத்திரிகையில் கூறியுள்ள கருத்தாவது: இஸ்ரேலிய ஜனாதிபதி [பெரெஸ்] ஈரான் ஒரு அணுவாயுதத்தை தயாரித்து முடிக்கும் கட்டத்தில் உள்ளதாக நமக்கு எச்சரிக்கை கொடுத்துள்ளார்... ஆனாலும் கூட நிருபர்கள் ஒரு இஸ்ரேலியப் பிரதம மந்திரியாக சைமன் பெரஸ் இருக்கையில் இதையேதான் 1996லும் கூறினார் என்பதைக் குறிப்பிடுவதில்லை. .. தற்பொழுதைய இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெத்தென்யாகுவும் 1992 இல் ஈரான் 1999 அளவில் ஒரு அணுகுண்டைத் தயாரித்துவிடும் என்று கூறினார்.

நியூ யோர்க் டைம்ஸ்  கட்டுரைக்குக் கொடுக்கப்பட்டுள்ள முக்கியத்துவம் ஒபாமா நிர்வாகத்திற்கும் இன்னும் பரந்த முறையில் அமெரிக்க ஆளும் உயரடுக்குகளுக்கும் இன்னும் ஆக்கிரோஷமான நிலைப்பாட்டை ஈரானுக்கு எதிராக எடுக்க வேண்டும் என்று இஸ்ரேலிய ஆளும்தட்டு அழுத்தம் கொடுக்கும் தகவல் பேர்க்மன் மூலமாகச் செல்லுகிறது என்பதைத்தான் தெரிவிக்கிறது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை ஈரானிய எண்ணெய் ஏற்றுமதிகள் மீதும் நாட்டின் மத்திய வங்கி மீதும் ஜூலை மாதத்தில் இருந்து செயல்பட தொடங்கும் ஒரு தடையைச் உண்மையில் சுமத்தியுள்ளன.

ஏராளமாக வெளியிடப்பட்டுள்ள கருத்துக்களில் மூத்த இஸ்ரேலியப் புள்ளிகள் இந்த வாரம் கடுமையான நடவடிக்கைகள் தேவை என அழைப்பு விடுத்துள்ளனர். பாதுகாப்பு மந்திரி பாரக், ஒரு வலுவான, விரைவான அழுத்தம் ஈரான்மீது வரவேண்டும்என்று கோரியுள்ளார். இதைத்தவிர ஈரான் தடையின்றி அணுவாயுதங்களைத் தயாரித்து வருகிறதுஎன்ற பொய்யையும் மீண்டும் கூறியுள்ளார். நிதி மந்திரி யுவல் ஸ்டீனிட்ஸ் அமெரிக்க, ஐரோப்பியத் தடைகள் போதுமா என்ற வினாவை எழுப்பி ஈரான் மீது பாரிய தடை கடல் மற்றும் வான்மூலமும் கொண்டுவரப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்இதுவே சர்வதேசச் சட்டத்தின்படி ஒரு போர்ச் செயலாகும். நேற்று  இஸ்ரேலிய பாதுகாப்புப் படையின் முன்னாள் தலைவர் கபி அஸ்கென்ஜாய் இஸ்ரேல் மேசை மீது நம்பகமான இராணுவ நடவடிக்கை வைத்திருக்க வேண்டும், தேவையானால் அதைப் பயன்படுத்தும் விருப்பத்தையும் கொண்டிருக்க வேண்டும். என்று வலியுறுத்தினார்.

செவ்வாய் நிகழ்த்திய நாட்டு உரையில் ஜனாதிபதி பாரக் ஒபாமா தன் நிர்வாகம் முன் எப்பொழுதையும்விட ஈரான் தனிமைப்படுத்தப்பட்டு விட்டது, முடக்கிவிடக்கூடிய பொருளாதார நடவடிக்கைளை எதிர்கொள்ளுகிறதுஎன்பவற்றை உறுதியாக்கியுள்ளது என்று பெருமை பேசிக்கோண்டார்.  இதில் சந்தேகம் ஏதும் வேண்டாம்: அமெரிக்கா ஈரான் அணுவாயுதம் பெறுவதைத் தடுக்க உறுதி கொண்டுள்ளது, அந்த இலக்கை அடைவதற்கு நான் மேசையில் இருந்து எந்த விருப்பத் தேர்வையும் ஒதுக்கிவிடமாட்டேன். வேறுவிதமாகக் கூறினால், அமெரிக்கா ஈரான் மீது அதன் அணுவாயுதத் திட்டங்களை நிறுத்துவதாகப் போலிக் காரணம் கூறி போரைத் தொடக்கத் தயார் என்பது தெளிவு.

அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையே உள்ள நெருக்கமான ஒத்துழைப்பைத்தான் பேர்க்மனின் கட்டுரை எடுத்துக்காட்டியுள்ளது. மேலும் ஈரான்மீதான தாக்குதலுக்கு ஒருவேளை கால அட்டவணை இடப்பட்டிருக்கலாம் என்பதையும் சுட்டிக்காட்டுகிறது. ஈரான் அணுவாயுதம் தயாரிப்பதை நிறுத்துவதற்கு ஓராண்டுகூட இல்லைஎன்று பாரக் செய்தியாளர்களிடம் கூறினார். ஒரு மூத்த இஸ்ரேலியப் பாதுகாப்புத் துறை ஆதாரம் அறிவித்தது: அமெரிக்கர்கள் எங்களிடம் இன்னும் அவகாசம் உள்ளது என்கின்றனர், நாங்கள் அவர்களிடம் இன்னும் ஆறில் இருந்து ஒன்பது மாதங்கள்தான் உள்ளன. எனவே பொருளாதாரத் தடைகள் இப்பொழுது உச்சக்கட்டத்திற்குக் கொண்டுவரப்பட வேண்டும், இதையொட்டி அந்நாடு களைப்படைந்துவிடும்.

இஸ்ரேலிய இராணுவம், குறிப்பாக பாரக் பாதுகாப்பு மந்திரியானதில் இருந்து முன்னோடியில்லாத வகைகளில் ஈரானுக்கு எதிரான தாக்குதலுக்குத் தயாரிப்பை நடத்தியுள்ளதுஎன்று பேர்க்மன் விளக்கியுள்ளார். இஸ்ரேலிய விமானப்படை, ஈரானில் உள்ள இலக்குகள் மீது குண்டுத்தாக்குதல்களைக் கொண்ட தொலைத்தூரத் திறனுடைய விமானங்களைக் கொண்டுள்ளது. மேலும் அந்த இலக்குகளுக்கு இயக்கப்படக்கூடிய ஆளில்லா விமானங்களையும் கொண்டுள்ளது. இவை அனைத்துமே 48 மணி நேரம் வானில் பறக்க்ககூடிய திறன் உடையவை. இஸ்ரேலிய பாதுகாப்பு படை ஈரான் பதிலடி ஏதேனும் கொடுத்தால் அதைச் சமாளிப்பதற்கும் தயாராக உள்ளது.

இக்கட்டுரை இரகசியக் குற்றம் சார்ந்த படுகொலை மற்றும் சேதங்கள் என்று இஸ்ரேலிய உளவுத்துறை அமைப்பு மொசாட் 2004ல் இருந்து ஈரானுக்குள் நடத்தியவற்றைக் குறித்த விவரங்களையும் கொடுத்துள்ளது. பிரதம மந்திரி ஏரியல் ஷரோனின் கீழ் மொசாட் ஒரு ஐந்துமுகத் திட்டத்திற்காக கிட்டத்தட்ட வரம்பற்ற நிதிகளையும் அதிகாரங்களையும் பெற்றது; அதில் அரசியல் அழுத்தம், இரகசிய நடவடிக்கைள், ஆயுதப் பெருக்கம், பொருளாதாரத் தடைகள், ஆட்சி மாற்றும் என்பவை இருந்தன. மொசாட்டின் தலைவரான மெயிர் டாகன் வாஷிங்டனுக்கு ஆகஸ்ட் 2007ல் ஒரு இரகசியத் தகவல் தந்தியை அனுப்பினார். இதில் அமெரிக்கா, இஸ்ரேல், இன்னும் இதேபோன்ற உணர்வுடைய பிற நாடுகள் அனைத்து ஐந்து முனைகளிலும் ஒரே கூட்டு முயற்சியாக செயல்படவேண்டும். என்று கூறப்பட்டிருந்தது.

இப்படிக் கொள்ளையடிக்கும் கும்பலின் செயற்பாடுகளைப் போல் கொண்டுள்ள மொசாட், அமெரிக்காவின் உடந்தை அல்லது தொடர்புடன் நடத்தும் செயல்களில் நிதியச் சேதங்கள், கணினி தொற்றுக்கிருமிகள், தவறான உதிரிப்பாகம் மற்றும் மூலப்பொருட்கள் விநியோகம், காரணம் காணமுடியாத விமான விபத்துக்கள், ஈரானிய நிலையங்களில் வெடிகுண்டுத் தகர்ப்புக்கள், ஈரானிய விஞ்ஞானிகளைப் படுகொலை செய்தல்சமீபத்தில் பேராசிரியர் முஸ்தபா அஹ்மதி ரோஷன் ஜனவரி 11 அன்று படுகொலை செய்யப்பட்டார்ஆகியவை அடங்கியுள்ளன.

பேர்க்மன் கட்டுரையில் இவை பற்றி அதிகம் மறைக்கப்படாத பெருமையடித்துக் கொள்ளுதல்தான் உள்ளது. அதே போல் இஸ்ரேலியத் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளும் கொண்டுள்ள நிலைப்பாடு அவர்களின் உண்மைய நோக்கத்தைச் சுட்டிக் காட்டுகிறது. அதாவது  ஈரானைத் தூண்டிவிட வேண்டும். அது இன்னும் செய்தி ஊடகம் அந்நாட்டின் ஆட்சியை அரக்கத்தனமாகச் சித்தரிப்பதற்கும் போருக்கு ஒரு போலிக் காரணத்தையும் கொடுக்கும். இத்தகைய கொள்ளைமுறை மத்திய கிழக்கில் மிகப் பெரிய ஆபத்து என்பது இஸ்ரேலிடம் இருந்து வெளியாகிறது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இஸ்ரேலிடம் 300 அணுகுண்டுகள் உள்ளன என்று மதிப்பிடப்பட்டுள்து. மேலும் அது தன்னுடைய மற்றும் அதன் ஆதரவு நாடான அமெரிக்காவின் மேலாதிக்கத்தைத் தக்க வைத்துக்கொள்ள பல முறை ஆக்கிரமிப்புப் போர்களில் ஈடுபட்டுள்ளது. அமெரிக்காவோ ஏற்கெனவே ஆப்கானிஸ்தானம், பின்னர் ஈராக் மீது படையெடுத்துள்ளது, இப்பொழுது ஈரானை அச்சுறுத்துகின்றது.

ஒபாமா நிர்வாகம் பகிரங்கமான ஈரான்மீதான முடக்கிவிடும் பொருளாதாரத் தடைகள் குறித்துக் குவிப்புக் காட்டுகையில், இராணுவ நடவடிக்கைக்கும் தயாரிப்புக்களை நடத்தி வருகிறது. இப்பொருள் வெளிப்படையாக அமெரிக்க நாளேடுகளிலும் இதழ்களிலும் விவாதிக்கப்படுகின்றன. இம்மாதம் பென்டகன் பாரசீக வளைகுடா அருகே நிறுத்தியிருக்கும் விமானந்தாங்கி போர்க்கப்பல் குழுக்களை இரு மடங்காக ஆக்கியுள்ளது. இதையொட்டி ஈரானுக்கு எதிராக வான் மற்றும் கடல்வழிப் போரை நடத்தும் திறன் அதற்கு அதிகமாகிவிட்டது.

ஐரோப்பாவிலுள்ள வாஷிங்டனின் நட்பு நாடுகளும் போருக்குத் தயாராகின்றன. பிரெஞ்சு மற்றும் பிரித்தானிய போர்க்கப்பல்கள், USS Abraham Lincoln எட்டு விமானந்தாங்கி போர்க்கப்பலுடன் இணைந்து கடந்த ஞாயிறன்று வளைகுடாப் பகுதிக்குள் நுழைந்தன. பிரித்தானிய பாதுகாப்பு மந்திரி பிலிப் ஹாமண்ட், திங்களன்று அறிவித்தார்: பிரித்தானியாவிடம் இப்பிராந்தியத்தில் தன் நிலைப்பாட்டை வலுப்படுத்தக்கூடிய செயல்திறனை கொண்டுள்ளது. எந்நேரம் தேவைப்பட்டாலும், அது செயல்படுத்தப்பட முடியும்.

பொருளாதாரத் தடைகள் மற்றும் இராணுவ அச்சுறுத்தல்களை ஈரானுக்கு எதிராக பொறுப்பற்ற முறையில் விரிவாக்கிய பின், அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஐரோப்பிய சக்திகள் பிராந்தியம் போரில் மூழ்கும் ஆபத்தை அதிகரித்துவிட்டன. இது இப்பிராந்தியம் முழுவதும் சூழ்ந்து கொள்வதுடன் சர்வதேச அளவிலும் பரந்து விரியும்.