WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள் :
ஆசியா :
இலங்கை
இலங்கை: அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி
சோ.ச.க./ஐ.எஸ்.எஸ்.இ. பொதுக் கூட்டம்
By the Socialist Equality Party
24 January 2012
சோசலிச சமத்துவக் கட்சியும் (சோ.ச.க.) சமூக சமத்துவத்துக்கான
அனைத்துலக மாணவர்கள் (ஐ.எஸ்.எஸ்.இ.) அமைப்பும் சகல அரசியல்
கைதிகளையும் உடனடியாகவும் நிபந்தனையின்றியும் விடுதலை செய்யக்
கோரி ஜனவரி 29 அன்று வடக்கில் யாழ்ப்பாண நகரில் பகிரங்கக்
கூட்டமொன்றை நடத்தவுள்ளன.
பிரதானமாக ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள்
“பயங்கரவாத
சந்தேக நபர்களாக”
குற்றச்சாட்டுக்களோ விசாரணைகளோ இன்றி தடுத்து
வைக்கப்பட்டுள்ளனர். அநேகமானவர்கள் 2009ல் பிரிவினைவாத தமிழீழ
விடுதலைப் புலிகளுக்கு எதிரான அரசாங்கத்தின் இனவாத யுத்தத்தின்
முடிவில் கைது செய்யப்பட்ட 11,000 பேரில் அடங்குவர்.
ஏனையவர்கள் ஏழு வருடங்களுக்கும் மேலாக அடைத்து
வைக்கப்பட்டுள்ளனர்.
யுத்தத்தால் நாசமாக்கப்பட்ட யாழ்ப்பாணக் குடாநாடு தற்போது
இறுக்கமான இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ளது. யுத்தத்தின் போது
நூற்றுக்கணக்கானவர்கள் கைதுசெய்யப்பட்டதோடு அரசாங்க சார்பு
கொலைப் படைகளால் கடத்தப்பட்டனர் மற்றும் சில சம்பவங்களில்
படுகொலை செய்யப்பட்டனர்.
“காணாமல்
போனவர்களின்”
மற்றும் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் உறவினர்கள்
அண்மையில் நடத்தவிருந்த ஆர்ப்பாட்டத்தை தடுப்பதற்காக இராணுவம்
தலையிட்டது.
ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கும் பரந்த போராட்டத்தின் பாகமாக
அரசியல் கைதிகள் சார்பில் ஒரு அரசியல் பிரச்சாரத்தை
முன்னெடுத்துள்ள ஒரே கட்சி சோசலிச சமத்துவக் கட்சி
மட்டுமேயாகும். ஏனைய கட்சிகளும் கைதிகளை விடுதலை செய்யுமாறு
கோரிக்கை விடுத்திருந்தாலும், அது நிபந்தனைக்குட்பட்டதாகும்.
“விடுதலை
செய் அல்லது குற்றஞ்சாட்டு”
என்ற அவர்களது சுலோகம் எதேச்சதிகாரமான தடுத்துவைப்புக்களை
சட்டப்பூர்வமானதாக ஏற்றுக்கொள்வதாகும்.
தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்துக்கான
போராட்டத்தின் பாகமாக ஜனநாயக உரிமைகளைக் காப்பதன் பேரில்
தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் தொழிலாள வர்க்கத்தை
ஐக்கியப்படுத்தும் சோசலிச முன்நோக்கின் அடிப்படையில் சோ.ச.க.
ஆரம்பத்தில் இருந்தே யுத்தத்தை எதிர்த்து வந்துள்ளது. நாம்
தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் புத்திஜீவிகளையும் எமது
கூட்டத்துக்கு வருமாறும் எமது பிரச்சாரத்துக்கு
ஆதரவளிக்குமாறும் அழைப்பு விடுக்கின்றோம்.
இடம்: வீரசிங்கம் மண்டபம், யாழ்ப்பாணம்.
திகதியும் நேரமும்: ஜனவரி 29, ஞாயிறு, பி.ப. 2.00 மணி |